முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்திருந்தது அன்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் இருந்து பானுவுடைய தேவைகள் அனைத்தையும் கதிர் பார்த்து கொண்டான். அடுத்த நாளே வீட்டிற்கு புதிதாக கார் ஒன்றை வாங்கி இருந்தார் மாணிக்கம்.
அவசரத்துக்கு யாரையோ கூப்பிட்டு வர்றவரைக்கும் காத்திருக்க வேண்டாம்ல்ல. நமக்குன்னு இருந்தா சட்ன்னு போய் இருக்கலாம். அந்த ஐந்து நிமிடம் கூட காத்து இருக்க தேவையில்லையே…
கதிருக்கு நன்றாக கார் ஓட்ட தெரியும் அதனால் டிரைவர் தேடும் சிரமம் இருக்கவில்லை. இந்த இரண்டு நாட்களுமே மொத்த குடும்பமும் அவளை விட்டு நகர வில்லை. மூன்று வேளை உணவையும் பானுவுக்கு ஊட்டுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு இருந்தான் கதிர்.
இப்போது காலில் லேசாக காயம் இருந்தது. கைகளில் சருமம் லேசாக கறுமை பூசி இருந்தது பழைய நிறம் வர என மூலிகை எண்ணெய் தினமும் பூசி விட்டு கொண்டிருந்தான். பானுவுக்குல்லும் நிறைய மாற்றம் நடந்து கொண்டு இருந்தது. கதிர் இவளுக்கு உருகுவது போய் இப்போது கதிருக்காக உருகிக் கொண்டு இருந்தாள்.
அவனின் மேல் ஒவ்வொரு நாளும் நேசம் வளர்ந்து கொண்டே இருந்தது. கண்மூடினாள் கண் திறந்தாள் என எங்கு நோக்கினும் அவனது பிம்பமே அவளை ஆட்க்கொண்டு இருந்தது.ஆனால் இதை அவனுக்கு உணர்த்த தான் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.
அவனை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவளது அன்பை கண்களின் வழியே அணுப்பிக் கொண்டு இருக்க இதை உணராமல் திருமண வேலையில் பிஸியாக இருந்தான் கதிர்.
உமாதான் என்ன அண்ணி இப்படி ஆகிடுச்சி… அன்றைக்கு நீங்க கத்தும்போது பயந்துட்டேன் தெரியுமா…
இவளை பார்க்க என்ன தேவன் அவனது குடும்பத்தில் அனைவரும் வந்து சென்றிருந்தனர். உமாவோ தேவனோடு பேசுவதையே முழு நேர பணியாக செய்து கொண்டிருந்தாள். அவனும் ஒரு நிமிடம் கூட விடாமல் ஏதாவது பேசியபடி ஷாட் செய்தபடி இருந்தனர். நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.
திருமண வைபகத்திற்கு தேவையான அணைத்தும் பார்த்து பார்த்து வாக்கி கொண்டிருந்தனர். திருமணத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
பானுவும் திவ்யாவை அழைத்து பேசியிருந்தாள்… திவ்யா கல்யாணத்துக்கு முதல் நாளே வந்திடு… நீ கூட இருந்தா எனக்கு உதவியா இருக்கும்.
திவ்யாவோ எனக்கும் ஊங்க ஊர்ல நிறைய வேலை இருக்கு கட்டாயம் வந்திடறேன் என்றவளின் மனம் ஈஸ்வரையே சுற்றிக்கொண்டு இருந்தது.
அன்று கோபத்தோடு போனவன் இன்று வரை அவளை பார்க்க வரவில்லை. போன் செய்தால் அட்டென் செய்வதில்லை..
திவ்யா உச்சபட்ஷ கோபத்தில் இருந்தாள் ஈஸ்வர் மீது கையில் கிடைத்தால் சட்டையை பிடித்து உழுக்கி விடும் ஆத்திரம் இருந்தது.
எத்தனை நாள் இப்படியே சுற்றுவான். அவளுமே தீர்மானம் எடுத்திருந்தாள் உமாவின் திருமணத்திற்கு முன்பாக பேசி விட்டால் போனால் போகுது என்ன விட்டு விடலாம். அதுவரை பேசவில்லை எனில் இவனை விடுவதாக இல்லை. இவள் இப்படி நினைத்திரூக்க அங்கே ஈஸ்வர் வேறு நினைத்து கொண்டு இருந்தான்.
ஈஸ்வருக்கு அன்றைய கோபம் வெகுவாக குறைந்து இருந்தது . தனது தவறும் ஓரளவு புரிந்து இருந்தது. ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் சம்மதிக்கவில்லை.
நாம இறங்கி போகணுமா என்ற கேள்வியோடு சுற்றி கொண்டு இருந்தான்.
அப்படி நினைத்ததாலோ என்னவோ அவளது கால்ஸை கட் செய்து கொண்டிருந்தான். இவனது ஒவ்வொரு
செயலும் அங்கே ஒருத்தியை கோபத்தின் எல்லைக்கு அழைத்து செல்வதை அவன் உணரவில்லை.
திருமணத்திற்கு கட்டாயம் வருவாள் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை தான். இங்கு வந்த பிறகு அவளை சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்தான். அவள் இல்லாத வாழ்க்கையை அவனாள் நினைக்க முடிய வில்லை. கொஞ்சம் சுத்த விடலாம் என நினைக்க அது எவ்வளவு தவறு என்பதை அப்போது அவன் உணரவில்லை.
அவள் அவனை காணும் போது பட்டாசு போல பொறிய போவதை அவன் உணரவில்லை . இரண்டு நாட்கள் கோபமாக இருந்தவன் மூன்றாவது நாளில் இருந்தே அவளை தொலைவில் பார்த்து விட்டு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தான்.
அவரவர் உணர்வில் இருக்க அவர்கள் எதிர் பார்த்த திருமணமும் நெருங்கி இருந்தது.
காதலை கண்களில் சுமந்தபடி ஒருத்தியும். கனவுகளோடு திருமணத்தை எதிர் நோக்கி ஓருத்தியும் கொஞ்சம் கோபத்தோடு ஒருத்தியும் எதிர் நோக்கி இருந்தனர அந்த நாளுக்காய்…
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…