காயத்தை விடாது பார்க்க அப்பா இது லேசான காயம் தான்பா. சரி ஆகிடிச்சு.
வேகமாக கழட்டிய சட்டையை அணிந்து கொண்டான் கதிர். குற்ற உணர்ச்சி தலைதூக்க தலைகுனிந்தபடி நிற்க….
முடிஞ்சத பேசி ஆக போறது இல்ல. நீ வேலைய பாரு. நான் உள்ளே போய் மத்த வேலைய பார்க்கிறேன் . பேசியபடி உள் செல்ல… கதிரோ ஷப்பா இனிமே ஊருக்கு போற வரை சட்டையை கழட்டவே கூடாது.
தனது வேலையை தொடர்ந்தான்.
மாலை வரை விடாது வேலை தொடர்ந்திருக்க இரவு இருவரையும் கதிரின் அறைக்கு தூங்க அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட அறையை பாதி மறைத்தபடி பெரிய கட்டில் போட்டிருக்க
பானுவோ கதிரை பார்த்தாள்.
ஸாரி….வேற வழி இல்ல. இங்கேதான் தங்கி ஆகணும். இன்றைக்கு மட்டும் தான் நாளை நைட் நாம கிளம்பிடலாம். சரியா…
எனக்கு உன்கிட்ட பயம் எல்லாம் இல்ல. இந்த கட்டில் இவ்லோ பெருசா இருக்கு. அத தான் பார்த்தேன். இத மாதிரி எங்கேயும் பார்த்ததில்ல….
இது எங்க தாத்தாவோடது. பரம்பரை கட்டில். தாத்தா இருக்கறவரைக்கும் தாத்தா கிட்ட கேட்டு சண்டை போடுவேன். இப்ப இங்கே கொண்டு வந்து போட்டு இருக்கறாங்க. நானே இன்றைக்கு தான் தூங்க போறேன் இதுல. சரி நீ தூங்கு. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு . முடிச்சிட்டு வரேன். ரூம்பை விட்டு வெளியேறியவன் திரும்ப வரும் போது இரவு பதினொன்றை தாண்டி இருந்தது.
பானுவை பார்க்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். எந்த சஞ்சலமும் இல்லாமல் குழந்தையை போல்…. சில நிமிடம் அவளையே பார்த்தவன் அருகில் படுத்து கண் மூடினான். கண்களுக்குள் திருமணத்திற்கு காரணமான அந்த நாள் அவன் கண் முன்பு நிழலாடியது.
அந்த தனியார் பேருந்து அத்தனை ஆரவாரத்தோடு மலை ஏறிக்கொண்டு இருந்தது. ஓட்டு மொத்த நண்பர்களும் அன்றைய. சுற்றுலாவிற்கு கிளம்பி இருக்க ஆட்டம் பாட்டம் என பஸ்ஸிற்குல் மாணவர்கள் மானவிகள் கூச்சலிட்டபடி
ஓலித்த பாடலுக்கு ஏற்ற வாரு ஆடிக்கொண்டு வந்தனர்.
முன்பு இருக்கலயில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் கதிர். ஈஸ்வர் பணம் கட்டி கடைசி நேரத்தில் தகப்பனாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக ஊருக்கு கிளம்பி இருந்தான். கூட
வருவதாக சொன்னவனை இது கடைசி வருஷம் எல்லோடவும் இந்த முறை போ .
நீயும் நானும் தனியா மறுபடியும் இங்கே வரலாம் என கூறி அனுப்பி இருந்தான்.
மத்திய இருக்கையில் பானு இதை எதையும் பார்க்காமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். திவ்யா ஊருக்கு சென்றவள் திரும்பி இருக்கவில்லை. சற்று நேரம் வெளியே வேடிக்கை பார்க்க சிறிது நேரம் இங்கு பார்க்க என பார்க்கும் போதே குழப்பத்தில்
இருப்பது தெளிவாய் தெரிந்தது.
சுற்றிலும் பார்த்தவன் கூடவே இவளையும் பார்க்க…. ப்ரெண்ட் வரலை போல அதுதான் வருத்தமா இருக்கிறா. கூட நாலு பேர் கிட்ட பழகினாதான. திவ்யா மட்டும் தான் ப்ரெண்டா என்ன. இப்ப பாரு வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி போஸ் குடுக்கறத. கூடவே நீ மட்டும் என்ன செய்யற. நீயும் அப்படி தான் இருக்கற. அவனது மனசாட்சி அவனை கேள்வி கேட்க சிரித்தபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
மலை உச்சியில் பேருந்து நிற்க
ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தனர்.
கடைசியாக இறங்கிய பானு சுற்றிலும் பார்க்க… ஸ்டுடண்ஸ் ஒரு மணி நேரம் டைம் பக்கத்தில் சுற்றி பாருங்க. கடைசியாக இந்த இடத்துக்கு வந்துடுங்க. தனியா எங்கேயும் போக வேண்டாம். ப்ரெண்டுங்கோட போங்க. அபாயம் போட்டு இருக்கறபக்கம் போகாதிங்க. கூறியவர் அருகில் இருந்த இடத்தில் அமர மாணவர்கள் கூட்டம் மெள்ள களைந்து
தனது நண்பர்கள் கூட்டததோடு சுற்றி பார்க்க கிளம்பினர்.
முதுகில் சுமந்த சிறு பேக்கோடு தனித்து
சற்றே நகர்ந்து உயரமான பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பானு. ஓற்றையடி பாதை திரும்பும் கடைசி நொடி இவளை பார்த்தவன் ஏன் இவ தனியாக எங்கே போறா….. என யோசித்தபடி பின் தொடர்ந்தான் கதிர்.
தொடர்ந்தவன் அங்கு கன்டது சற்றும் எதிர்பாராதது. உயரமான இடத்தை அடைந்தவள் எதிரில் தெரிந்த அதலபாதாலத்தை பார்த்தவள் யோசிக்காமல் குதிப்பதற்கு ஆயத்தமாக நின்றிருந்தாள் பானு. கடைசி நொடி பார்த்தவன் அவள் செய்ய போகிற காரியம் புரிந்து வேகமாக அவள் அருகில் போனவன் அவள் கை பற்றி பானு என்ற சத்தத்தோடு இழுக்க இதை சற்றும் எதிர் பாராதவள் இவனோடு சேர்ந்து சிறு சரிவில் உருள ஆரம்பித்தாள்.
தொடரும்.