ஆபீஸ் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நேராக சென்றவன் அர்ச்சனாவின் முன்பு நின்றிருந்தான் ஈஸ்வர். நீ இந்த உதவி செஞ்சு தான் ஆகணும்.
என்ன உதவி.
நீ சாயங்காலம் ரெண்டு பேரும் அண்ணபூர்னாவில மீட் பண்ண போறாங்க. நீயும் போய் பேசற.
யார் கிட்ட.
கதிர் கிட்ட தான். அங்கே பானுவும் இருப்பா. நீ அவள கண்டுக்கவே கூடாது. கதிர தவிர உன் பார்வை வேற எங்கேயும் போக கூடாது.
இப்ப எதுக்கு என்ன வில்லி ஆக்கற. நான் பாவம்டா . ஏதோ நீ என் ப்ரெண்ட் அதுக்காக என் பேர டேமேஜ் பண்ணுவியா. ப்ளீஸ்டா.
என்னால ரொம்ப நேரம் நடிக்கல்லாம் முடியாது. சிரிப்பு வந்துடும். சிரிச்சிடுவேன்டா….
நல்லா யோசிட்டுட்டேன். இதுதான் முடிவு.
இன்றைக்கு ரெண்டுல ஒன்னு தெரியணும். நீ பயப்படாத. நானும் அங்கே தான் இருப்பேன். சரியா. நீ தான கேட்ட உனக்கு என்ன உதவின்னாலும் நான் செய்வேண்ணு. இத செஞ்சு குடு .
டேய் நான் எப்ப சொன்னத இப்போ நீ சொல்லற. காலேஜில் படிக்கும் போது சொன்னதை இப்போது சொல்லிக்கொண்டு இருந்தான். கல்லூரியில் படிக்கும் போது ஒருவன் நீண்ட நாட்களாய் அர்ச்சனாவை காதலிப்பதாய் சொல்லி பின் தொடற ஒரீருமுறை பார்த்து இருந்த ஈஸ்வரிடம் ஒரு நாள் உதவி கேட்டாள் அர்ச்சனா. அன்று ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்ந்தது. இது இன்றுவரை கதிர்க்கு தெரியாது. தெரிந்தவன் என்ன இவள் பார்க்க. … அவனோ இவளை நினைத்து பயந்து கொண்டு இருந்தான் . நேற்று அவன் சொன்னதும் தோன்றிய ஐடியா இது.
டேய் ஈஸ்வர் கோவத்துல தீட்டிட்டா கூட பரவாயில்லை. அடிச்சிட்டா….
அவனுக்கு கோபமே வராது. அப்புறம் எங்கே அடிக்கிறது. நீ பயப்படாத. ஈவினிங் பார்க்கலாம். பை….
இவன் ஏன் என்னை இப்படி மாட்டி விடறான். நீ கொஞ்சம் கவனமாக இரு அர்ச்சனா..தனக்கு தானே கூறியபடி வேலையில் ஆழ்ந்தாள்.
அது ஒரு தனியார் நிறுவனம். ஜெராக்ஸ் மெசின்களை வாங்கி விற்கும் நிறுவனம். கதிர் மேனேஜராக இருக்க இவன் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருந்தான்.. அர்ச்சனா
அந்த ஆபீசில் கஸ்டமர் சர்வீசில் இருந்தாள். அலுவலகம் வருபவர்கள் இவளை தாண்டியே உள் செல்ல முடியும்.
ஈஸ்வர்யை நன்கு தெரிந்திருக்க அவன் மூலமே கதிரின் அறிமுகம் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐம்பது பேர் வரை வேலையில் இருந்தனர்.
மாலை ஐந்து மணிக்கு கதிர் புறப்பட கூடவே சிறிது நேரத்தில் இவள் புறப்பட்டாள். ஏற்கனவே திருமணம் முடிந்து இருவரும் பிரிந்து இருப்பது தெரிந்தாலும் சேர்வதற்கு தன்னால் ஆன உதவி இப்படி தான் அப்போது நினைத்து கிளம்பினாள்.
எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தனர் கதிரும் பானுவும் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த காபியை கைகளில் எடுத்தபடி ஸாரி கதிர் நேற்று அப்படி ஆகும்ன்னு நினைக்கல. இனிமே நைட் நேரம் வெளியில் போக மாட்டோம். ப்ராமிஸ்.
சரி. காபி குடி . வேற ஏதாவது சொல்லணுமா.
இல்ல.
அப்போ கிளம்பறேன். நீ சாப்பிட்டு முடி. அப்புறம் ஏதாவது யோசிச்சயா.
எதை பத்தி….
நம்ம எதிர்காலத்தை பத்தி. இப்படியே இருக்க முடியாது. ஈஸ்வர் கிட்ட பொய்தான் சொல்லி இருக்கிறேன். நாம பிரிஞ்சுட்டதா. வேற மாதிரி பிரச்சனை ஆக கூடாது.
என்ன பிரச்சனை ஆகும்….
அர்ச்சனா் அங்கு செல்லும் போதே ஏற்கனவே வந்திருந்த கதிரும் பானுவும் எதிர்எதிரே அமர்ந்து இருக்க ஒரு நிமிடம் தயங்கியவள் சுற்றிலும் இருந்த ஆட்களை பார்த்து சற்றே பயந்தபடியே அருகில் சென்றாள். மனதிற்குல் அர்ச்சனா கூட்டம் வேற ஜாஸ்தியா இருக்கு. கோபமா கத்தினா நீ தீர்ந்த. சரி சீன் ஆக போகுது.
அருகில் நெருங்கியவள் ஹை கதிர்
இங்கே உட்காரலாமா. பானுவுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தாள்.
இவ எதுக்கு இங்க வரா என்ன கதிரும் யார் புதிதாக என்ன பானுவும் இவளை பார்க்க…
இவளோ கதிர் நான் உங்க கிட்ட தனியாக பேசணும் என ஆரம்பித்தாள்.
இவன் பானு முகம் பார்க்க அர்ச்சனாவோ கதிரையே பார்க்க ஆரம்பித்தாள். பானுவுக்கோ இருப்பதா எழுந்து செல்வதா என ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தவள் எழுந்து சென்று விட நினைத்து எழுந்திருக்க…
நீ உட்காரு பானு . என்றவன் இவள் புறம் திரும்பி எதா இருந்தாலும் இவ முன்னாடியே சொல்லு. எங்களுக்கு நடுவுல எந்த ரகசியமும் கிடையாது.
ஓ… நீங்க ப்ரெண்சா. ஓகே. நான் சொல்லறேன். என்றவள். மனதுக்குள் டேய் ஈஸ்வர் எங்கடா போன கல்யாணம் ஆனவன விருப்பறேன்னு சொல்ல வைப்பியாடா… சீக்கிரம் வாடா… நான் உங்க காலேஜில்தான் படிச்சேன். பக்கத்து டிப்பாட்மெண்ட். அப்ப இருந்தே உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அதுக்கு….
அது வந்து….மனதிற்குள்
டேய் ஈஸ்வர் வாடா. ….அவளுடைய குரல் அவனுக்கு கேட்டு விட்டதோ இயல்பாக வந்தவன் இவளை பார்த்து வெளியில் வேலை இருக்குன்னு வந்த இதுதான் அந்த வேலையா….
இல்ல. ஸாரி… கிளம்பறேன். கதிர் இன்னொரு நாள் பேசலாம். பை என்றவள் எழுந்து விலகி நடந்தாள். இருவருக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க
இவர்கள் திட்டமிட இனிவரும் நாட்களில் அது இயல்பாய் நடக்க இருப்பதை இருவரும் அறியவில்லை.
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…