நீயே என் உலகமடி_24

0
1192

கொஞ்சம் ஏக்கத்தோடு கேட்டவனை பார்த்தவளுக்கு இனிமேல் உனை விட்டு நொடி கூட பிரியமாட்டேன் என கூற ஆசை தான் ஆனாலும் அந்த நிமிடத்தில் கூட கதிரிடம் விளையாடத்தான் தோன்றியது பானுவிற்கு…

முகத்தை பார்த்தா என்ன அர்த்தமாம்
வண்டியை எடுங்க … ரொம்பவும் சாதாரணமாக கேட்டவளை பார்க்கையில் கோபம் தான் வந்தது கதிருக்கு…

ஆக எப்பவும் என்னை இப்படிதான் தவிக்க விட போற… இத்தனை நாள் அங்கே நடந்துகிட்டது எல்லாமே பொய் அப்படி தானே…என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. உன்னோட கையில் இருக்கற பொம்மை மாதிரியாக.. தேவையின்னா விளையாடவும் முடிஞ்சதும் தூக்கி விசறதுக்கு… சொல்லு பானு.. கொஞ்சம் வார்த்தைகள் கூட கோபமாக வந்து விழுந்தது.

கதிருக்கு கூட இந்த பானுகிட்ட கோபம் வருமா.. நானும் கேட்கலாம்ல.. இத்தனைீ நாள் எனக்கு எல்லாமுமா இருந்துட்டு இங்கே வரவும் இப்படி கேட்டா.. இப்ப என்ன பதில் சொல்லனும்… எல்லாத்தையும் இந்த ரோட்டில் வண்டியை நிறுத்தி தான் கேட்பாயா… வண்டியை எடு கதிர் நானும் உன்கிட்ட நிறைய பேசணும்.

அவள் பேசியதை கேட்டவனுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. இருதிவரையுலுமே இவளுடனின வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமா என்ற எண்ணம் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.

எதுவும் பேசாமல் அவனது வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இறக்கவேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வீட்டிற்குள் வைத்தான். கூடவே பானுவும் வர என்ன கேட்பது எப்படி ஆரம்பிப்பது எதுவும் தோன்றாமல் வரவேற்பு ஷோபா வில் அமைதியாக அமர்ந்து இருக்க அருகில் வந்தவள்…அவனது நிலை உணர்ந்து மெதுவாக பேச்சு கொடுத்தாள்.

காலையில் ஆபிஸ் இருக்கா… கதிர்.

அவனிடம் பதில் எதுவும் வரவில்லை ஆம் என்பது போல சிறு தலையாட்டல் மட்டும் வந்தது.

அப்படின்னா அங்கே என்னோட ரூம்ல இருக்கற பொருட்களை எப்போ இங்கே எடுத்துட்டு வருவ… இவள் சொன்னதற்கு நிமிர்ந்து அவள் முகத்தை மட்டும் தான் பார்த்தான். இப்போதும் அவள் சொல்ல வருவது புரியவில்லை. வெற்று பார்வையால் மட்டுமே இவளை பார்க்க…

சுத்தம்… பானு இந்த டியூப்லைட்க்கு சத்தியமாக புரிய போறது இல்லை. நீ தான் புரிய வைக்கணும். கதிர் வேகமாக அவன் தோள் தொட்டு உழுக்க…

என்ன சொன்ன…

டேய் கதிர் இனிமேல் நீயே என்னை போக சொன்னா கூட போற ஐடியா இல்லை. இனி இங்கே இருந்து தான் உன்னை தொந்தரவு பண்ண போறேன். இப்பவாவது புரியுதா இன்னும் புரியறமாதிரி சொல்லனுமா.

என்ன சொன்ன…

டேய் எழுந்திரு என வேகமாக அவனை எழுப்பியவள் அவனது பெட்ரூம் கதவை திறந்து அவனோடு உள் நுழைந்து கதவை அடைக்க… அவளது செய்கையை அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தான்.

என்ன பார்வை… தப்பா எதுவும் இல்லை விடிய விடிய வண்டியை ஓட்டி டயர் ஆகிடிங்க என்ன சொன்னாலும் புரிய மாட்டேங்குது அதனால நல்லா தூங்குங்க.. இன்றைக்கு பத்து மணிக்கு மேல எழுந்து ஆபிஸ் போனா போதும்.

அவள் சொன்ன பதில் கேட்டு அவனுக்கும் சிரிப்பு வந்து இருந்தது. அவனுக்கும் அவளிடம் விளையாட ஆசை வர .. நானும் இங்கே இழுத்து வந்ததும் பார்த்து என்னவோன்னு நினைச்சா என்ன நீ ஏமாத்திட்ட…

என்ன பேச்சு எல்லாம் தப்பு தப்பா வருது பிச்சிடுவேன். இனி மேல் நான் சொல்லறததான் கேட்கனும். இப்ப தூங்குங்க…

கட்டிலில் கைகளை தாங்கியபடி அமர்ந்தவன் வேற என்னவெல்லாம் செய்யனும் அதையும் சொல்லிடு…

நிறைய சொல்லனும்… இப்போதைக்கு இது மட்டும் தான். இனிமேல் எனக்குல்ல எத்தனை குழப்பம் வந்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன். அதையும் தாண்டி ஏதாவது தோனினா நேரடியாக உன்னோட அப்பா அம்மா கிட்ட போயிடுவேன். அவங்க கிட்டதான் இனி என்னுடைய ஆலோசனையே…

குழப்பம் எல்லாம் முடிஞ்சுதா…

எல்லாம் முடிஞ்சது… உன்னை கல்யாணம் பண்ணும் போது கூட இவ்வளவு யோசிக்கலை ஆனால் இப்ப என்னோட மனசுல நீ மட்டும் தான் இருக்கற அப்படிங்கறத நீ முழுதாக நம்பணும். நம்பற தானே கதிர்.

இது வரைக்கும் நம்பல ஆனா இன்னும் கொஞ்சம் பக்கமா வந்தா நம்புவேன்.

ஏய்… நீ சரியில்லை. இப்ப தூங்கு எனக்கும் தூக்கம் வருது ஏதா இருந்தாலும் ஆபீஸ் விட்டு வந்ததற்கு பிறகு பேசிக்கலாம். அருகிலேயே படுத்தவள் அப்படியே தூங்கி இருந்தாள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாண்டி இருக்க கதிரை எழுப்பி கொண்டு இருந்தாள். வழக்கம் போல ஈஸ்வர் என்ற ஞாபகத்தில் தூங்குது விடு ஈஸ்வர் புரண்டு படுக்க…இரண்டு நாட்கள் முன்பு ஈஸ்வர் சொன்னது ஞாபகம் வந்தது பானுவிற்கு…

பானு அவன் எவ்வளவு தூக்கினாலும் உன்னோட மொபைல் சத்தம் கேட்டா எவ்வளவு வேகமாக எழுந்திருப்பான் தெரியுமா…

யோசிக்காமல் தனது செல்பேசியில் அழைப்பு விடுத்தாள் பானு அடுத்த நொடி லேகமாக எழுந்தவன் சொல்லு பானு என செல்பேசியை ஆன் செய்து கேட்க…

நான் இங்க தான் இருக்கிறேன். இன்னமும் நீ கூட இருக்கறத நம்ப முடியலைல்ல… இப்ப நம்புவ கையில் இருந்த தண்ணீரை அவன் மேல் லேசாக தெளித்தாள்.

ஸாரி.. இத்தனை நாள் பழக்கம் இன்றைக்கே மாறிடுமா என்ன? ?

குளிச்சிட்டு வா சாப்பிடலாம் பசிக்குது.

நீ தூங்கலையா பானு…கேட்டவன் அவளை பார்க்க குளித்து நார்மலான சுடிதாரில் இருந்தாள். தலை காய்வதற்காக சிறு கிளிப்பில் முடியை எடுத்து பின் செய்திருக்க… அந்த பளிச்சென்று முகத்தை பார்த்தபடி பாத்ரூமை நோக்கி குளிக்க புறப்பட்டான்.

நிறைய எதுவும் செய்யல ரசம் பொறியியல் இவ்வளவு தான் செய்திருக்கிறேன். நான் நாளைக்கு தான் பேங்க்கிற்கு போகணும். பேசியபடி இவனுக்கும் தனக்குமாய் தட்டில் சாதம் போட்டு பேசிக்கொண்டு இருந்த பானுவை மட்டுமே அவனது விழிகள் பார்த்து கொண்டு இருந்தது.

நீ சாப்பிட்டு கிளம்பு கதிர் உன்னோட பார்வையே சரியில்லை…. அவளுக்குமே என்றும் இல்லாமல் மூச்சு அடைப்பது போல தோன்றியது அவனது அருகாமை…
ஒரு வாராக அவன் கிளம்பி செல்லவும்… சற்று நேரம் அமைதியாக இருந்தவள் மாலை நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்ட படி
அமர்ந்திருந்தாள்.

அறைக்கதவை தட்டும் கேட்க… கண்திறக்க… எதிரில் அவனை பார்த்தபடி நின்றிருந்த ஈஸ்வரியை பார்த்தவன். ஐந்து நிமிடம் ஆச்சு உன்னோட முன்னாடி வந்து நின்று… கண்ணை திறந்துட்டே கனவு காணற..ம்… என்ன விஷயம்… அவனது முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்தவன். பெரிசா வித்தியாசம் தெரியலை…

என்னடா வித்தியாசம் தெரியனும்..

அது குடும்பஸ்த்தனுக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. அது முகத்தில் தெரியலை ஆனால் கூடிய சீக்கிரம் தெரியும்ன்னு நினைக்கிறேன். பார்க்காத… உன்னை உடனே அனுப்பி வைக்கணும்மாம் பானுவோட ஆர்டர். நீ கிளம்பு நான் பார்த்துக்கறேன்.

தேங்க்ஸ்டா… என்றவன் அவனை அனைக்க வர…

சரி தான் ஒரு மார்க்கமாதான் இருக்கற… வாழ்த்துக்கள் டா…

இது எதுக்கு. ..

இனிமேல் சீட்ல உட்கார்ந்து அடிக்கடி தூங்க போறியே… நான் அத பார்க்க போறேனே அதுக்கு…

டேய்…அடிக்க போறேன் எடுத்தவன் அவனை அடிக்க துரத்த…

டேய் இது ஆபிஸ் போ…போய் வீட்ல பானு கூட ஓடி பிடித்து விளையாடு..

அவன் அவ்வாறு சொல்லவும் இவன் மறுபடியும் நின்ற இடத்தில் கனவு காண ஆரம்பிக்க…

கதிர் கனவு காண ஆரம்பிச்சுட்டான். நாமலும் அப்படியே ஜகா வாங்கிக்கலாம். இனிமேல் இவங்களோட பர்சலுக்குல்ல நமக்கு வேலையில்லை… அதனால…

அப்போது போன் வர… போனை அட்டென் செய்தவன்… இருமா… உனக்காக தானே பேசிட்டு இருக்கிறேன். கையில் இருந்த மொபைலை ஆப் செய்தவன் அவங்க கொஞ்ச நாளைக்கு அவங்களோட உலகத்தில் சுற்றுவாங்க. நமக்கு வேலையில்லை அதனால இந்த ஸ்டோரிக்கு முற்றும் போட்டுடலாம். ஓகே தான…

முற்றும்.

தொடர்ந்து பயணிந்த நண்பர்களுக்கு நன்றி. மீண்டும் புதிய கைதியுடன் இணைவோம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here