ஆளுக்கு ஒன்றாய் மனதில் நினைத்திருக்க அணைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் நெருங்கி இருந்தது. மாலையே மண்டபத்திற்கு எடுத்து செல்ல தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தனர். பானு உமாவிற்கு தேவையானதை சரி பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
வீட்டின் வாசலில் வாழை மரத்தோரணம் கூடவே வாசலில் இருந்த வீட்டின் முற்றம் வரை அழகாய் பந்தல் அமைத்திருந்தனர். மொத்தத்தில் விழாகோலம் பூண்டிருந்தது.
மண்டபத்தை வாயிலை அடைந்த சில நிமிடத்திலேயே திவ்யா வந்திருந்தாள் அவளுடைய தந்தையோடு ஏற்கனவே அறிந்தவர் ஆதலால் மாணிக்கத்தோடு இணைந்திருக்க இவளோ பானுவோடு இணைந்து அங்கிருக்கும் ஓவ்வொரு வேலையையும் பானுவோடு சேர்த்து செய்து கொண்டிருந்தாள்.
மீனாவோ.. திவ்யாவிடம் திவ்யா மாப்பிள்ளை அழைப்பு ஏழு மணிக்கு வச்சி இருக்கறாங்க.. ஆரத்தி தட்டு இருபத்தி ஒன்னுக்கு சொல்லி இருக்கு… அது சரியாக இருக்கான்னு பாரு… பானுவையும் துணைக்கு கூப்பிட்டுக்கோ… என்றவர் உமாவிடம் திரும்பி உன்னோட ப்ரெண்டுங்க யாரும் வரலையா..
அம்மா இனி தான் வருவாங்க…
வந்தாங்கன்னா கூடவே வச்சிக்கோ… அண்ணிக்கு முன்னாடி வேலை இருக்கும் அவளை தேடிட்டு இருக்காத… ஏதாவது வேணும்னா பாரு… திவ்யாவும் வந்து இருக்கறா இரண்டு பேர்ல் யாராவது ஒருத்தரை கூப்பிட்டு வேணும்ங்கறத கேளு சரியா.. என்றவர் ரூமை விட்டு வெளியேறினார்.
அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு ஆரத்தி தட்டையும் கைகளில் சுமந்தபடி ஒவ்வொன்றாய் எடுத்து மண்டபத்தின் முன் வாசலுக்கு அருகில் எடுத்து வைத்து கொண்டிருந்தாள் திவ்யா. மாடியில் இருந்து இறங்கும் போது தான் பார்த்தான் ஈஸ்வர் திவ்யாவை…
காலையில் வருவாள் என நினைத்திருக்க இப்போதே வந்திருந்தது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தந்திருந்தது. திவ்யா என அழைத்த படி அவள் அருகில் செல்ல…
அவளோட இவனுக்கும் தனக்கும் சம்பந்தம் எதுவுமே இல்லாதது போல் நகர்ந்து சென்றாள். கூடவே யார் நீங்க என கேட்டபடி…
நகர்ந்து சென்றவள் மனதிற்குள் போன் பண்ணினா எடுக்க மாட்ட … நான் யாருன்னே உனக்கு தெரியாதுன்னு நினைக்கற அளவுக்கு கடுப்பேத்துவ ஆனா நான் மட்டும் நீ கூப்பிட்டதும் எதுவும் நடக்காதது போல வரணுமா… சுற்று மகனே நல்லா சுற்று… எனக்கு எவ்வளவு கஷ்டமான இருந்தது. அதுல பாதியாவது நீ அணுபவிக்கணும்ல .. இவள் ஒவ்வொன்றாய் எடுத்து வந்து கொண்டிருக்க…
மீனாவோ.. பானு நம்ம உறவுக்கார பொண்ணுங்கள முன்னாடி ஆரத்தி எடுக்க கூப்பிட்டு வா என அணுப்பி இருந்தார்.
உறவில் பெரியவர்கள் சிலரையும் உமாவின் வயதில் சிலரையும் ஐந்து வயதிற்குலிருந்து பத்து வயதிற்குள் சிலர் என அழைத்து சென்றவள் வாசலில் நின்றிருந்த மீனாவிடம் அத்தை நீங்க சொன்னது போல அழைச்சிட்டு வந்துவிட்டேன் என கூற…
சற்று நேரத்திற்கெல்லாம் மண்டபத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கெட்டி மேள சத்தம் முழங்க மாப்பிள்ளையை அழைத்து வந்து கொண்டு இருந்தனர்.
மண்டபத்தில் வாயிலை நெருங்கவும் கூடி நின்ற பெரியவர்கள் ,மங்கையர் என ஒவ்வொருவராய் ஆரத்தி எடுக்க… மாப்பிள்ளை உள் நுழைந்த சிறிது நேரத்தில் எல்லாம் இரவு ரிஷப்சனிற்கு இருவரையும் அழைத்து ஸ்டேஜில் நிறுத்தி இருந்தனர்.
கோட்சூட் சகிதம் தேவன் நின்றிருக்க அருகில் அழகாய் பட்டுடுத்தி உமா நின்றிருந்தாள். தேவனின் நண்பர்கள் பட்டாளம் முழுவதும் இரவே வந்திருக்க கேளி கிண்டலோடு ரிஷப்சன் நடந்து கொண்டிருந்தது.
ஈஸ்வரோ.. திவ்யா எங்கெல்லாம் செல்கிறாளோ அங்கெல்லாம் அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தான். பலன் தான் பூஜ்யம். அவள் அவனது முகத்தை திரும்பி பார்க்கும் எண்ணம் துளியும் இல்லாமல் சுற்றி கொண்டிருந்தாள்.
அவளை பின் தொடரும் போதே உணர்ந்திருந்தான் மீனா மட்டும் அல்ல வீட்டில் உள்ள எல்லோருமே அவளிடம் சகஜமாக மட்டும் அல்ல வீட்டில் உள்ள ஒருவரை போல் நடந்து கொள்வதை… அவனுக்கே சந்தேகம் துளிர் விட ஆரம்பித்து இருந்தது.
அடுத்த முறை மினா கேட்ட பொருளை எடுத்து வரும் போது வழியிலேயே அவளை மறைத்தவன் உண்மைய சொல்லு நீ இந்த வீட்டுக்கு எந்த விதத்துல உறவு…
நீ நடந்துக்கறத பார்க்கும் போதே தெரியுது. நீ தெரியாத வீட்டு பொண்ணு இல்லைன்னு என்ன உறவு அத சொல்லு முதல்ல…
அத நான் ஏன் சார் உங்களுக்கு சொல்லணும். வழிய விடுங்க… வம்பு செய்திங்கன்னா மாணிக்கம் அப்பா கிட்ட சொல்லிடுவேன் என்றபடி நகர …
பார்டா இவளுக்கு இருக்கற கொளுப்ப எங்க வீட்டு பங்சனுக்கு வந்துவிட்டு என்னையவே சொல்லி தருவாலாம்ல… போ போ நைட்டுக்குல்ல தெரிஞ்சுக்கறேன்.
அப்போதும் சரி இரவு பந்தி முடியும் போதும் சரி எதுவுமே அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
பானுவையும் கதிரையும் இரவு மண்டபத்திற்கு வருபவர்களை வரவேற்க விளாசலில் இருவரையும் நிறுத்தி இருந்தார் மீனா. வந்தவர்கள் உறவினர்களை ஒவ்வொரு வரையும் வரவேற்று பானுவிற்கு அறிமுகம் செய்து வைத்து கொண்டிருந்தான் கதிர்.
உறவினர்கள் வரவர அவர்களை பார்த்து பானுவிற்கு ஆச்சர்யம் தான். இத்தனை சொந்தகாரங்க இருக்கறாங்களா.. கதிர். எனக்கு ஞாபகம் வச்சிக்கவே முடியாது.
அதுக்கெல்லாம் அவசியமே இல்லை உன்னை எப்பவும் யாரும் தனியாக விட மாட்டோம். கவலையே படாத…
இரவு விருந்தும் இனிதாக முடிய காலையில் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் வாத்தியங்கள் முழங்க பெரியவர்களின் ஆசியோடு உமாவின் திருமணம் இனிதாக முடிந்தது. உமாவின் சங்கு கழுத்தில் மணமகனான தேவன் திருமாங்கல்யம் அணிவித்தான்.
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…