அடுத்த நாள் காலை நேரம் எட்டு மணியை தொட்டுக் கொண்டு இருக்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் கதிர். நண்பனின் தூக்கத்தை பார்த்தவன் நைட்டெல்லாம் தூங்கல போல இப்போ தூங்கறான்.
அருகில் வந்தவன் கதிர் எழுந்திரு ஆபீஸ் போகணும்ல….
தட்டி எழுப்ப மெதுவாய் எழுந்து அமர்ந்தான் கதிர் . கைப்பைசியை எடுத்து பார்த்தவன் அதில் வந்திருந்த மெசேஜை பார்த்ததும் லேசான புன்னகையோடு எழுந்து அமர்ந்தான்.
மெசேஜ் வந்தாச்சா. கதிர் எல்லாத்தையும் மறந்துவிட்டு தயவு செஞ்சு கூட வா. நாம அப்பா கிட்ட போகலாம். இனிமே இங்க இருக்க வேண்டாம். டேய் உன் கிட்ட தான் பேசிவிட்டு இருக்கறேன். காது கேட்குதா..
ஈஸ்வர் நான் வாக்கு குடுத்து இருக்கறேன். உன்னை கை விட மாட்டைன்னு. எந்த சூழ்நிலை வந்தாலும் வர மாட்டேன்.
என்ன வாக்கு…. பார்த்த மொத நாளே சொன்னேன்….
என்ன அவ கூட ஆறு மாசம் பேசி இருப்பயா….இது சரி வராதுன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல . யார் பேச்சையும் கேட்காமல் கோவில்ல மேரெஜ் பண்ணிட்டேன்னு மாலையோட வந்து நின்னிங்க . முழுசா ஒரு வருடம் முடியல. டைவர்ஸ் பண்ணியாச்சுன்னு சொல்லற.. ஏன்னு காரணம் கேட்டா நீயும் சொல்லல . அவகிட்டேயும் கேட்க கூடாதுன்னு சொல்லிட்ட….. அத்தனை பேர எதிர்த்து கல்யாணம் பண்ணின. வாழ்ந்திங்களா அதுவும் இல்ல. கேட்டா நான் தோற்க மாட்டேன்னு டயலாக் வேற.
கொஞ்சம் யோசித்து பார்டா… எப்படி இருந்தோம். யாராவது நீ இப்படி மாறிடுவேன்னு சொன்ன நம்புவாங்களா…
நானும் உன் கிட்ட பேசறேன் பாரு என்ன சொல்லணும்.
என்ன என் இஷ்டம் போல இருக்கவிடு ஈஸ்வர். உனக்கு…நீ போறதுன்னா போ. என்ன படுத்தி எடுக்காத.
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல கதிர். இந்த நிமிடம் வரை தன்னுடைய ஒவ்வொரு தேவைக்கும்
உன்னை கூப்பிட்டு தான் பண்ணறா. அப்புறம் ஏன் பிரிஞ்சிங்க.
ஏண்டா காலையில இத்தனை கேள்வி கேட்டு என்ன கடுப்பேத்தற. ஆபீஸ் போற ஐடியா இல்லையா. மணி ஆச்சு பாரு…
பேசியபடி பாத்ரூமில் நுழைந்திருந்தான் கதிர்.
ஏதாவது கேட்டா இப்படி உள்ள நுழைஞ்சிகோ எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறேன். கதிர். …டேய்..கதிர்
பத்து நிமிடம் கழித்து வெளியில் வந்தவன்.ஏன்டா பாத்ரூம் கதவை உடைக்கற. நீ இன்னும் கிளம்பலையா…
இன்றைக்கு அர்ச்சனா உன் கிட்ட பேசணும்ன்னு சொன்னா.
அவ எதுக்கு…என் கிட்ட பேச என்ன இருக்கு.
என் கிட்ட கேட்டா. எனக்கென்ன தெரியும்.
இதப்பாரு. நீயே சொல்லிடு . நான் யார் கூடவும் பேசற ஐடியா இல்ல. அப்புறம் அந்த அர்ச்சனா என் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கறான்னு தோணுது. அது சரி வராது. அப்போது போன் வர அழைத்தது பானு. உடனே அட்டென் செய்தவன் சொல்லு பானு என்ன விஷயம்…
சாயங்காலம் அண்ணபூர்னா வரணுமா.
டயம் என்ன. .. சரி நீ போய்விட்டு கூப்பிடு…
பை…
அவனையே முறைத்து கொண்டு நின்றவன் நான் கிளம்பறேன். பை.
கூடவே மனதுக்குள் அண்ணபூர்னாதான உனக்கு முன்னாடி அவளை அணுப்பி வைக்கறேன். நீ இன்றைக்கு எப்படி பேசாம
போறன்னு பார்க்கிறேன்.
வெளியேறியவன் திவ்யாவின் நம்பருக்கு போன் செய்தான். போன் எடுத்தவுடனே திட்ட ஆரம்பித்தான். உன் ப்ரெண்ட் என்ன தான் நினைச்சிட்டு இருக்கிறா. சேர்ந்தும் இருக்க மாட்டா . இப்ப எதுக்கு தேவையில்லாமல் அவனை வெளியில் கூப்பிடறா.இவன் இப்படியே தான் கடைசி வரை இருக்கணுமா. அவனோட குடும்பம் அவனுக்காக அங்கே காத்துட்டு இருக்கு.இவன் விஷயம் எதுவும் அவங்களுக்கு தெரியாது. ஒரு வேளை
ரெண்டு பேரையும் கூப்பிட்டுட்டு போகலாம்ன்னு வந்தா என்ன சொல்லறது. தினம் தினம் நான் தான் கவலை படறேன்.
நீ என்ன லூசா. எப்ப போன் பண்ணினாலும் என் கிட்ட சண்டை தான் போடுவியா.உன் நம்பர் பார்த்தும் அட்டென் பண்ணறேன் பாரு என்ன சொல்லணும்.
தயவு செஞ்சு என்ன கூப்பிடாத. போனை வைத்தவள் அருகில் இருந்த அறைக்குள் கதவை தட்டினாள்.
பானு போகலாமா. நேரம் ஆச்சு. வெளியே வந்தவளை பார்த்தாள் திவ்யா. பானு பெயருக்கு ஏற்றாற்போல் மஞ்சலும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒரு நிறத்தில் இருந்தாள். அழகான கண்கள் வட்ட முகம் மொத்தத்தில் பார்த்தவுடன் திரும்ப பார்க்க சொல்லும் முகம். அவளோடு வெளியேறியவள் தனது
ஸ்கூட்டியை எடுத்தாள். இருவருமே அருகில் இருந்த ப்ரைவேட் பேங்க்கில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.
சாயங்காலம் வெளிய போறியா.
ஆமாம் ஏன்…
சும்மாதான் கேட்டேன். வேலை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் ஈஸ்வர் அவளுக்கு முன்பு நின்றிருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள். சொல்லுங்க சார். என்ன உதவி வேணும்.
உன் கிட்ட பேசணும் வெளியான வர்றியா.
ஆபீஸ் டைம் அப்படியெல்லாம் வர முடியாது.
இங்கிருந்து நகர மாட்டேன். பரவாயில்லையா.அவனை முறைத்தபடியே வெளியேறினாள்.
வர வர உன்னோட ரோதனையா போச்சு.
என்ன பிரச்சனை. போன்ல திட்டற. இப்ப நேர்ல .என்ன வேணும்.
கதிர சீக்கிரம் அவங்க வீட்டில கூப்பிட்டுகுவாங்க….. உன் ப்ரெண்ட் கிட்டயாவது கேட்கலாம்ல ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு….
நீ இது வரை கதிர் கிட்ட கேட்டியா.
அவன் சொல்லல.
அதே தான் இங்கேயும். சில விஷயத்தை நானும் கேட்க முடியாது புரியுதா.
இதுக்கு என்ன தான் முடிவு.
எனக்கு தெரியல. நீயே யோசி. நான் உள்ள போறேன். கூறியபடி உள்ள செல்ல
ஏற்கெனவே மனதில் யோசித்து வைத்திருந்த ஐடியாவை செயல்படுத்தி பார்த்தால் என்ன… யோசித்தவன் அதற்கான ஆயத்தத்தை செயல்படுத்த முடிவு செய்தான்.
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…