கையில் வைத்திருந்த சாவியோடு கதிரை தேடி செல்ல அங்கே அவனுடைய தந்தையோடு கூடவே ஈஸ்வரும் இருக்க பேசிக்கொண்டு நின்றிருந்தான். இவளை பார்த்ததும் அருகில் வர அத்தை தட்டுக்கு பணம் எடுத்து தர சொன்னாங்க. சாவியை காட்டி கேட்க….
போ கதிர். எடுத்து கொடுத்துவிட்டு வா. இப்போது ஈஸ்வர் இடம் பேச ஆரம்பித்தார்.
ஸ்டோர் ரூம் வரை அழைத்து வந்தவன் அங்கு வரிசையாக அடுக்கி வைத்திரூந்த
வெங்கல பானையை திறந்தவன் பணத்தை எடுக்க….
என்ன இது பீரோவில் வைக்க மாட்டிங்களா… புதுசா இருக்கு…
பானு இது பாட்டன் முப்பாட்டன் பழக்கமாம். நீயும் இப்படி தான் வைக்கணும். ரொம்ப வருசமா இப்படி தான் இங்கே செஞ்சுட்டு வராங்க. நீயும் தெரிஞ்சுக்கோ. பின்னாடி நீயும் இதை தான் ஃபலோ பண்ணனும்.
திருடங்க வந்துட்டாங்கன்னா…
இது கிராமம்மா. புதுசா யார் வந்தாலும் தெரிஞ்சிடும். அப்புறம் பாத்துக்க ஆளுங்க இருக்கறாங்க. பேங்கிலயும் போட்டு வைப்பாங்க. இது இந்த வாரத்தோட வாலைபழம் வித்த காசு. சரி இந்தா இதை எடுத்துட்டு போய் தட்டுல வச்சிடு. உமா கிட்ட சொல்லிடு. இந்தா சாவிய அம்மா கிட்ட கொடுத்திடு சரியா. பூட்டி சாவியை கொடுத்தவன் அவள் கைகளை பிடித்து இந்த சேலையில் ரொம்ப அழகாக இருக்கற பானு .
லேசாக சிரித்து தலையாட்டியபடி முன் நடந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் மணமகன் குடும்பம் மொத்தமும் வர அவர்களை பார்த்த பானுவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேகமாக உள்ளே சென்றவள் உமாவை கட்டி அணைத்து நீ ரொம்ப லக்கி உமா. அவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்க. தேவன் அண்ணா உன்னை நல்லா பாத்துப்பார்.
புரியாமல் பானுவை பார்க்க…
ஸாரி குழப்பறேன்ல. அவங்க தான் என்னோட கார்டியன். அவங்கல நல்லா தெரியும். கதிர கூப்பிட்டுட்டு போய் பார்த்துவிட்டு வந்திடறேன்.
கீழே சென்றவள் கதிரை அழைத்தபடி தேவனின் தகப்பனார் முன் நின்றவள் யோசிக்காது கதிரின் கைகளை பிடித்தபடி அப்பா ஆசீர்வாதம் பண்ணுங்க என காலில் விழுந்திருந்தாள். அவருக்குமே அவ்வளவு அதிர்ச்சி கூடவே மகிழ்ச்சியும்..
சரியான இடத்துக்குதான் வந்து இருக்கற. நல்லா இருமா என ஆசீர்வாதம் செய்தவர்.
சம்பந்தி என அழைத்து கதிரின் தகப்பனாரோடு பேசிக்கொண்டு இருந்தார். முன்பே இருவருக்கும் அறிமுகம் இருக்க… இந்த பொண்ண நினைச்சி ரொம்ப நாள் வருத்தபட்டுட்டு இருந்தேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு. நல்ல நேரம் முடியறதுகுல்ல மேற்கொண்டு பேசலாமா …
சற்று நேரத்திற்கெல்லாம் உமாவை அழைத்து வர தேவனின் தந்தையோ
சம்பந்தி நாம பேசிவிட்டு இருக்கலாம். பொங்கும் பையனும் ஏதாவது பேசறதுன்னா பேசட்டும். சரி என கூறி அடுத்த அறைக்கு அணுப்பி வைக்க…
உள்ளே நுழைந்து ஐந்து நிமிடம் ஆகியும் எதுவுமே பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். தேவனயோ பார்வையாலேயே அவளை சிவக்க வைத்து கொண்டிருந்தான். ஏற்கெனவே பானு கூறியிருந்ததால் தைரியமாக நிமிர்ந்து பார்தாதவள். தனது முதல் கேள்வியை கேட்டாள்…
உங்க பேர் என்ன?
என்னது என் பேர் உனக்கு தெரியாதா…
தெரியாது என்பது போல் தலையாட்டியவள். சொல்லுங்க…என்ன முடிக்க…
இத எப்படி எடுத்துக்க. ஒரு வேளை உனக்கு என்ன பிடிக்கலையா… பேர் கூட தெரிஞ்சுக்கலைன்னா…
உங்க வாயால் கேட்கணும்ன்னு ஆசையா கூட இருக்கலாமே…
நிறைய பேசுவயா..
ஏன் நீங்கள் வக்கீல் தான் . அப்புறம் இந்த அளவு கூட பேசலைன்னா எப்படி….
இவ்வளவு பேசற இந்த வாயை அப்படியே….
அம்மா… என்னது… ஒரு அடி பின் நகர்ந்து நிற்க…
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போதைக்கு இது போதும். வா முன்னாடி போகலாம். அப்போது தொடங்கி நிச்சயம் முடிந்து செல்லும் வரை ஏதோ ஒரு வகையில் அவளை சிறு சிறு தீண்டலால்
வெட்கத்தில் சிவக்க வைத்து கொண்டிருந்தான். .
நடந்து முடிந்த நிச்சயம் நிறைவாய் முடிந்திருக்க பானுவை பற்றிய அனைத்தும் தெரிந்ததால் கதிரின் தாய் தந்தைக்கும் கூட இருந்த கொஞ்ச கோபமும் காணாமல் போய் இருந்தது. பானு கதிரின் பிரச்சனை மட்டும் எந்த ஒரு தீர்வும் தெரியாமல் அப்படியே இருந்தது
தொடரும். .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…