அடுத்த நாள் எழுந்து வரும் போதே சமையல் அறையில் உமா பானுவின் சத்தம் கேட்க அங்கே சென்றான். இவன் வந்தது கூட தெரியாமல் இருவருக்கும் வாக்கு வாதம் சமையலறை பற்றி நடந்து கொண்டு இருந்தது.
உமா இங்கே பாரு யுடுப்ல இப்படி தான் போட்டு இருக்கு. இது போட்டால்தான் நல்லா இருக்கும்.
அண்ணி காமினெசன் சரியா வராது. கேவலமா இருக்க போகுது. வேண்டாம்.
எப்படியும் உங்க அண்ணனுக்கு தானே குடுத்து டெஸ்ட் பண்ண போறோம். நீ ஏன் கவலை படற…
அடப்பாவிகளா… காலையிலேயே என்ன ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண ரெண்டு பேரும் பிளான் பண்ணறிங்களா…
ஏய்… நான் தான் ஜெயிச்சேன். உமா காச எடு…
அண்ணா உன்னை எவ்வளவு நம்பினேன். இப்படி ஏமாத்திட்ட… அண்ணி அப்பவே சொன்னாங்க… என்ன சமையற்கட்டுல பார்த்தா ஜெர்க் ஆவாங்கன்னு அத மாதிரியே சொல்லற…
ஏற்கனவே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது மீனாளோ… உமா காலையிலேயே அண்ணா கிட்ட விளையாடாதிங்க…… போ போய் குளிர்ச்சி ரெடி ஆகு… மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தாலும் வருவாங்க…கதிர் நீயும் கிளம்பு. அப்பா கூப்பிட்டாங்க பாரு….
அனைவரும் நகர்ந்து போக… உமா எதுக்குமா வர்றாங்க…
இன்றைக்கு திருநெல்வேலி போய் முகூர்த்த சேலை எடுக்க போறாங்க. அப்படியே அவங்க அடிச்ச பத்திரிக்கையை தர வர்றாங்கன்னு நினைக்கிறேன்.
சரிம்மா…
நீயும் போய் உமா கூட இரும்மா பானு. வேலைய நான் பார்த்துக்கறேன்… தலையாட்டியபடி நகர்ந்தாள் பானு.
பத்து மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வர வந்தவர்கள் திருமண உடை வாங்க இவர்களையும் அழைப்பு விடுத்தார்கள் .
தேவனோடு அவனது அம்மா அப்பா அவனது உறவில் ஒருவர் வந்திருக்க கொண்டு வந்த திருமண பத்திரிக்கையை கொடுத்தவன். நலம் விசாரித்தபடி பேசிக்கொண்டு இருக்க …
கதிர் வந்தவர்களை வரவேற்று வந்தவர்களோடு பேசிக்கொண்டு இருந்தான்.
கதிர் அப்பா டிரஸ் எடுக்க இங்கே எல்லோரையும் அழைச்சிட்டு வர சொன்னாங்க. உங்கள் அப்பா கிட்ட பேசிட்டாங்க…
வந்தவர்களை பானு வரவேற்க காலை உணவை பேசியபடி பறிமாறினர். அனைவரும் உணவு உண்டுமுடிக்க தேவன் கிடைத்த இடைவேளையில் உமாவை பார்த்தவன்… உமா உன்னோட போன் நம்பர் கொடு… ஏதாவது பேசணும்னா கூப்படறேன்.
இல்ல. .. அப்பா கல்யாணத்துக்கு முன்னாடி பேச கூடாதுன்னு சொல்லி இருக்கறாங்க… நம்பர் எல்லாம் தரமாட்டேன்…
ஓ… நீ தரலைன்னா… எனக்கு கிடைக்காதா என்ன… இரு ஒரு நிமிடம்… கையில் இருந்த மொபைலில் மெசெஜ் செய்தவன்.. தனது கையில் இருந்த அடுத்த மொபைலில் அழைப்பு விடுத்தபடி…
உமா இது தானே உன் நம்பர் பார்த்து சொல்லு… உமா உம்மா என பதிவாகி இருக்க…
என்ன இப்படி எழுதி வச்சி இருக்கறிங்க…
மொதல்ல மாத்துங்க… யாராவது பார்த்தா…
அது நான் கேட்கும்போதே நீயே கொடுத்து இருக்கணும். இனிமே ஒன்னும் பண்ண முடியாது…
யாராவது பார்த்தா என்ன சொல்வாங்க…
அது என் பிரச்சனைமா … நீ கிளம்பு…. அப்போது மட்டும் அல்ல. உடை வாங்கிய போது ஆகட்டும். திரும்ப வரும் போது என ஏதோ ஒரு வகையில் உமாவை முகம் சிவக்க வைத்து கொண்டு இருந்தான்.
சரியான குறும்புகாரங்க போல…அன்றைய நாளில் நடந்தது ஒவ்வொன்றையும் நினைகையில் இரவில் இம்சையான புது புது கனவுகளுடன் கண் உறங்கினாள் உமா.
தொடரும்.