திவ்யா அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க ஈஸ்வரோ… எதுக்காக இத்தனை ஷாக் என்பது போல பார்த்து நிற்க.. பின்புறந்தில் நெருங்கி இருந்தார் திவ்யாவின் தகப்பனார் பழநி..என்ன மாப்பிள்ளை இங்கே நிக்கறிங்க….சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணூங்க இப்பவே பேசணுமா என்ன. .
இவர் இப்படி கேட்கவும் பதில் எதுவும் சொல்லவில்லை … கூடவே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் அவனுக்கு புரியவில்லை. முதலில் அவர் திவ்யாவின் தகப்பனார் என்பதே அவனுக்கு தெரியவில்லை தந்தையின் நண்பர் என்பது தெரியும் ஆனால் மற்ற விவரங்களை அவனுக்கு தெரியவில்லை. ஏன் அவன் தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.
அங்கிள் வாங்க அங்கே உட்கார்ந்து பேசலாம் என அழைத்து வந்தவன் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தான். நீங்க மட்டும் தான் வந்து இருக்கறிங்களா வீட்டில் வேறு யாரும் வரலையா…
நானும் பொண்ணும் உமா கல்யாணத்துக்கு வந்தோம் வந்த இடத்தில் சந்தோஷமான விஷயம் அவங்க அம்மா இன்னும் கொஞ்ச உறவுக்காரங்க டிரைன்ல வந்திட்டு இருக்கறாங்க… நல்ல விஷயம் நடக்கும் போது அவளோட அம்மாவும் இருக்கணும்ல.. ஈஸ்வருக்கு சுத்தமாகவே புரியவில்லை. எல்லாவற்றுக்கும் தலையிட்டியவன் கதிர் அழைக்கவும் எழுந்து சென்றிருந்தான்.
திருமணம் நல்ல படியாக முடியவும் நேரம் மாலை மூன்று மணியை தொட்டிருக்க திருமண மண்டபத்தை காலி செய்யும் பணி ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மணமக்களை மறு வீட்டு அழைப்பு என பிஸியாக இருந்தனர். நான்கு மணியை தாண்டவும் கதிர் ஈஸ்வரிடம் வந்தவன்… வாழ்த்துக்கள் டா என இருக்கி அணைத்து விட்டு வீட்டுக்கு போ… இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் பானுவும் வரோம்.
அப்போதும் அவனுக்கு அவ்வளவாக புரியவில்லை வீட்டுக்கு சென்றவனை அவனது தகப்பனார் … ஈஸ்வர் சீக்கிரம் கிளம்பு… அங்கே மண்டபத்தில் வேலை இருந்ததால்தான் இவ்வளவு நேரம் கூப்பிடலை நல்லதா ஏதாவது துணியை எடுத்து போட்டுவிட்டு வா நாம போய் பார்த்துட்டு வந்துவிடலாம். வேற யாரையும் கூப்பிடல நாம மூன்று பேரும்…கதிரும் அவனோட பெண்சாதியும் வரேன்னு சொல்லி இருக்கறாங்க…
எங்கபா போறோம்…
டேய் உனக்கு பொண்ணு பார்க்கடா…
யாரை கேட்டு பார்க்க போறிஙக எனக்கு இஷ்டம் இல்லை நான் எங்கேயும் வரல…
என்ன வர வர கூட கூட பேசற… பொண்ணு கூட பேசுவ ஆனா கல்யாணம் பண்ண சொன்னா கட்டிக்க மாட்டேன்னு சொல்வியா.. அப்பவே சொன்னா என்னுடைய மருமக… நீங்கள் வேணும்னா பாருங்க அங்கிள் கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிப்பார் அப்படின்னு சொன்னா அத மாதிரி தான் நீ நடந்துக்கற.. கிளம்புடா இன்னும் பத்து நிமிடம் தான் உனக்கு டைம் லேட் ஆச்சு பையன் சம்மதம்ன்னு சொல்லி நானே போய் நிச்சயம் பண்ணிட்டு வந்திடுவேன்.
இன்னும் நைட்டுக்கு மறுபடியும் கதிரோட வீட்டுக்கு போகணும் அவங்க பொண்ணு மாப்பிள்ளை வீட்ல கொண்டு போய் விட கூப்பிட்டு இருக்கறாங்க…இங்கே லேட் பண்ண கூடாது. புரியுதா…
எங்கே ஈஸ்வரனுக்கு புரிய… அங்கே போனால்லாவது பொண்ணு கிட்ட உன்னை எனக்கு பிடிக்கலைன்னு பார்த்தாவது சொல்லலாம் இங்கே இருந்தா அதுவும் முடியாது என நினைத்தவன் தந்தை தாயோடு புறப்பட்டான்.
அங்கே திவ்யாவை அலங்கரிக்க பானு
ஏற்கனவே வந்திருந்தாள். திவ்யா ஈஸ்வர் பார்த்து இன்றைக்கு ஸாக் ஆக போறான்.
யாரு அவனா யாரோன்னு நினைச்சு என்னுடைய முகத்தை பார்க்க மாட்டான் எவ்வளவு பெட் கட்டற…
ஏய்… என்ன சொல்லற…
பார் பானு அதுதான் நடக்க போகுது…
உன்னோட முகத்தை பார்த்திட்டா அப்புறம் என்ன நடக்குன்னு பார்க்க தானே போறேன்… இரு வந்துட்டாங்க…
உள்ளே வந்தவர்களை வரவேற்று உபசரிக்க உள் நுழையவும் நேராக திவ்யாவின் தகப்பனாரிடம் போனவன் பொண்ண இங்கே கூப்பிட்டுட்டு வர்றதுக்கு முன்னாடி ரெண்டு வார்த்தை பேசணும் அங்கிள். சுற்றிலும் பார்க்க வந்து இருந்தது இருவீட்டார் மட்டுமே சரி அந்த ரூம்ல இருக்கறா… ரொம்ப நேரம் வேண்டாம் ரெண்டு வார்த்தை பேசிட்டு உடனே வந்திடுங்க…நல்ல நேரம் முடியறதுக்குல்ல பார்மாலிட்டிஸ் முடிச்சிடலாம்.
சரி அங்கிள் என்ன கூறி அறைக்கு முன்னால் நிற்க இவனது முகம் பார்த்து விட்டு திவ்யாவை பார்த்து சிரித்து விட்டு வெளியேறினாள் பானு.
உள்நுழைந்தவன் இவளை தவிர மொத்தமாக அறையை பார்த்தவன் இதோ பாருங்க நான் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பறேன் அவளை தான் திருமணம் பண்ணிப்பேன். அதனால தேவை இல்லாம உங்க மனசுல ஆசையை வளர்த்துக்காதிங்க இப்படி சொல்லி விட்டு திரும்ப…
ஈஸ்வர்.. அப்போ நானும் பிடிக்கலைன்னு சொல்லிடவா.. திவ்யாவின் குரலை கேட்டு வேகமாக திரும்ப…
ஏய்.. நீயா…
என்ன நீயே… பிடிக்கலைன்னு சொல்லிட்டல… போ… போ நானும் அதையே சொல்லறேன்.
ஏய் சத்தியமாக நீதான்னு தெரியாதுடி அப்படி எதுவும் செஞ்சிடாத… இப்பவே இருபது நாள் ஆகுது உன்கூட பேசி… இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.
இல்லை நான் சொல்லதான் போறேன்… உன்னை தாண்டி போன பானு கூட உன்னோட கண்ணுக்கு தெரியலை இல்ல.
நீ என்ன சொல்லறது… நானே சொல்லறேன் வா… என இவளது கையை பிடித்தபடி சென்றவன் அப்பா அங்கிள் எனக்கு இந்த பொண்ணு பிடிச்சிருக்கு சீக்கிரமே பேசி முடிங்க… என்றவன் சொல்லியாச்சு நீ இப்ப போய்க்கலாம்.
அடப்பாவி அங்கே வச்சி அத்தனை கத்திட்டு இங்கே வந்ததும் இப்படி விழுந்துட்டியேடா…சரிடா இனி பேச என்ன இருக்கு இப்போதைக்கு மாணிக்கம் வீட்டுல நிறைய வேலை இருக்கு அத பார்க்கலாம். நல்ல நாளா பார்த்துவிட்டு நிச்சயம் பண்ணிடலாம். மூன்று மாதத்தில் இவங்க கல்யாணத்தை முடிச்சிடலாம். நிச்சயித்த முடிச்சிட்டு நீ பொண்ண கூப்பிட்டுட்டு ஊருக்கு போவியாம் இப்போது கிளம்பறோம். ஏற்கனவே வந்த உடனே காபி ,பழம் என்ன வந்தவர்களுக்கு வழங்கி இருக்க மகிழ்ச்சியாக புறப்பட்டனர்.
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…