நிழல் போல் தொடர்வேனடி பகுதி 3

பகுதி 3

ஶ்ரீ யின் பிரகாசமான முகத்தை கண்டு கௌஷிக்கும் சௌந்தரும் என்னவென்று யூகித்துவாறு ஒருவருக்கு ஒருவர் நமட்டு சிரிப்புடன்.

“நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் மண்டபத்துல இருக்கனும் டா…..ஆமா உன் போன் எங்க ? ஒன் ஹவரா டிரை பண்றேன் என்கேஜிடுன்னு வருது” என்று சௌந்தர் ஒற்றை புருவம் உயர்த்தினான் கண்களில் குறும்புடன்.

ஓ மை காட் இவனுங்க கிட்ட என்ன சொல்றது ? . ஏதாவது யோசியேன்டா ஶ்ரீ… ஆங்ங் ஐடியா “அது…அது ஆபிஸ் மேனேஜர் தான்டா பேசினார் ஒரு இம்பார்டன்ட் ஃபைல் பற்றி சொல்லிட்டு இருந்தேன் “.என்று கூறி மனதினில் இவனுங்க நம்பினாங்களா ,நம்பலையா…கேட்டா அடிச்சி விடுவோம் என்று நினைத்திருந்தான் .
ஶ்ரீ யின் மனதில் இருப்பதை படித்தவர்கள் போல் சௌந்தரும் ,கௌஷிக்கும் கோரசாக “நம்பிட்டோம், நம்பிட்டோம் ” என்று சிரித்தனர்.

இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த ஶ்ரீயின் தாய் போதும்... போதும்... புள்ளைய விடுங்கப்பா அவனும் எவ்வளவு நேரம் தான் பொய்  சொல்லி சமாளிப்பான்" என்று சிவகாமி தன் பங்குக்கு ஶ்ரீயை வாரினார்.

ஶ்ரீ தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி “அம்மா …நீயுமா ? .. போதும் முடியல…என்று கும்பிட்டான்.

ஹாலில் உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருந்த  ராஜசேகருக்கு இவர்களின் சம்பாஷனை காதில் விழுந்தது. மனைவி மகன்களின் கவனத்தை களைக்கும் பொருட்டு " ஹிக்கும் "என்று தொண்டையை செறுமினார்.

இதனை கவனித்த சிவகாமி
” ம்…ஶ்ரீ , பேசினது போதும் சும்மா நின்னுகிட்டு இருக்காம ரெண்டுபேரும் போய் நலங்குக்கு ரெடியாகி வாங்க உறவுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க”. என்று பரப்பரப்புடன் மகன்களை அங்கிருந்து அனுப்பினார்.

என்னதான் ராஜசேகர் ஶ்ரீயின்  திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாலும் முழு மனதுடன் இதை ஏற்கவில்லை என்று அறிந்திருந்தார் சிவகாமி.

மகன்கள் இருவரும் நலங்கிற்கு தயாராகி மனையில் அமர்ந்தனர் அத்தை உறவுமுறையில் இருப்பவர்களும் பெரியவர்களும் நலங்கு வைத்து ஆசி வழங்கினர்

ராஜசேகரின் தங்கை பானுமதி தன் மகள் நித்யாவை ஶ்ரீக்கு திருமணம் முடிக்க  ஆசைப்பட்டார். ஶ்ரீ திருமணத்திற்கு பிடிவாதமாக  மறுத்தான் .செளந்தரை விட நித்யா 2 வருடம் மூத்தவள். ஆகவே  நித்யாவிற்கு வெளியே மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார். என்னதான் இருந்தாலும் தன்  சொந்த அண்ணன் வீட்டிற்கு  தன் மகள் மருமகள் ஆக முடியவில்லை என்ற ஆதங்கம்  வார்த்தைகளாக வெளிப்பட்டது.                                                                                                 " ஊர் உலகத்தில் இல்லாத பேரழகிக்காக  இத்தனை வருஷம் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கற  ம்... என்று  சலிப்பாக பெறுமூச்செடுத்து  உன் வயசுல அவனவன் குழந்தை குட்டின்னு குடும்பஸ்தனுங்க  ஆகிட்டாங்க என்று வார்த்தைகளால் சாடினார்.

அதுவரை இளவட்டங்களின் கிண்டல் கேளிகளில் சிரித்துக் கொண்டு சிவந்திருந்த ஶ்ரீயின் முகம் வாடியது .

நிலமையினை சகஜமாக்கும் விதமாக சிவகாமி , பானுமதியை பார்த்து”நாத்தி(பேச்சிவழக்கில் அழைப்பது) நாளைக்கு நிங்கதான் அவங்களுக்கு முன்னாடி நின்னு எல்லாம் செய்யனும் நீங்க பார்த்து வளர்ந்த புள்ளைங்க நீங்களே இப்படி பேசலாமா “.என்று பானுமதியை முன்னிருத்தி பேசி அவரின் கோபத்தை குறைக்க வழி தேடினார்.
மகனின் வாடிய முகத்தை கண்ட ராஜசேகர் தங்கையிடம் விடுமா பானு பழைய பேச்சு எதற்கு? வாழ போறது அவன்…அவன் இஷ்டப்படியே நடக்கட்டும். என்று மகனிற்கு ஆதரவு கரம் அளித்தார்.
பானுமதி மிகவும் மோசமான ரகமல்ல தன் மனதாங்களை வார்த்தைகளாக வெளிபடுத்தி விட்டாரே தவிர தன் அண்ணன் மகன்களின் மீது மிகுந்த பாசம் உடையவர். அண்ணன் மகனின் மனது காயப்பட்டிருக்கும் என்பதனை உணர்ந்து ஶ்ரீயிடம் “ஒரு வேகத்துல வார்த்தைய விட்டுட்டேன் ஶ்ரீ மனசுல வச்சிக்காதப்பா . இந்த அத்தைய மன்னிச்சிடு ராஜா ” என்று ஶ்ரீயின் தலையை ஆதுரமாக வருடினார். அந்த சூழலின் இறுக்கம் தளர்ந்து மீண்டும் கேளி, கிண்டல்களுடன் மகிழ்ச்சி நிறைந்தது.

நண்பனின் மன வேதனையைக் கண்டு வருத்த முற்றிருந்த கௌஷிக் நிலைமை சீரானதும் சற்று ஆறுதலடைந்தான்.
அனைத்து சடங்களும் நிறைவடைந்து இரவு உணவினை முடித்துக்கொண்டு அவரவர் அறைகளுக்கு உறங்க சென்றனர். கௌஷிக்குடன் சிரித்து பேசி அறைக்கு வந்த ஶ்ரீ கௌஷிக்கிடம் “மச்சி திரும்பவும் சொல்றேனேன்னு கோச்சிக்காதடா சிஸ்டர். உன்கிட்ட வரலைன்னா வேற வாழ்க்கைய நீ ஏன் அமைச்சிக்க கூடாது? என்று கூறி அவன் தரும் அறைக்கு பயந்தவன் போல் ஒரு அடி எட்டி நின்று இரண்டு கைகளையும் இரண்டு கன்னங்களில் வைத்து மறைத்து பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

அவன் பேச்சில் கோபம் கொண்டவன் அவனுடைய செய்கைகளில் புன்னகைத்து விட்டான். கௌஷிக் தன்மையாக ” இன்னும் கொஞ்ச நாள்ல அவளே வருவான்னு என் மனசுல தோனுதுடா…” என்றவன் முகத்தில் இறுக்கம் குடியேற “நான் இங்க வந்ததுல இருந்து எந்த தொந்தரவு இல்லாம இருந்தேன் நீயும் ஆரம்பிச்சிட்டியா ?” என்றான் .நண்பனின் முகம் மாற்றத்தை கவனித்த கௌஷிக் இதழில் வரவைத்த புன்னகையுடன் “கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா போடா… போய் துங்கு மண்டபத்துக்கு காலைல சீக்கிரம் போகனுமில்ல. என்று அவனை அனுப்பி வைத்தான்.

கண்களை மூடி படுக்கையில் சாய்ந்தவன் மனது நித்திரையின் பிடியில் சிக்க பிடிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு தன்னவளின் நினைவு அலைகளில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்தது .

அன்று
முதல்நாள் தான் கண்ட பெண்ணின் நினைவு தன்னை இவ்வளவு பாதிக்குமா தான் ஒன்றும் பெண்கள் என்றலே மயங்கும் ரகமும்மல்ல எப்படி இவளிடம் விழுந்தேன் . கல்லூரியிலும் சரி தொழில் முறையிலும் சரி பல பெண்களை பார்வையாலேயே தள்ளி நிறுத்தி இருக்கிறேன். இவளை பார்த்தில் இருந்து என்ன ஆனது எனக்கு ? என்று சுய அலசலில் ஈடுபட்டிருந்த கௌஷிக்கிற்கு அது தூங்கா இரவாக கழிந்தது.
மறுநாள் காலையில் மெல்லிய கொலுசொலியும் ,கைவளையும் சலசலத்தது . மயில்கழுத்து நிறத்தில் பட்டு புடவையில் பிறையென இருந்த நெற்றியில் வட்ட பொட்டு வைத்து நேர்வகிட்டில் குங்குமமிட்டு வெண்சங்கு கழுத்தில் பொன்னிற தாலி மின்ன தலையில் சூடிய மல்லிகையின் மணம் வீச அவன் அறையில் நுழைந்து அவனை பார்த்து குங்குமமாய் முகம் சிவக்க “மாமு… எந்திரிங்க மாமு” என்று எழப்புகிறேன் என்றபேரில் கொஞ்சி கொண்டிருந்த அவளை அரை தூக்கத்திலும் கண் திறவாமல் கைபிடித்து இழுத்து வெண்பஞ்சு பொதியென தன் நெஞ்சில் மேல் சாய்த்து இதழ்களை சுவைக்க போனநேரம் தொ(ல்)லைபேசி ஒலித்தது.
உறக்கம் கலைந்து கண் திறந்து பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவன் .தொலைபேசியை காதுக்கு கொடுத்து தாய் பேசியதும் சுயநினைவை அடைந்தான் . தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு தாயிடம் நலம் விசாரித்து திருமணத்திற்கு கிளம்புவதாக கூறி தொலைபேசியை வைத்தான் .

மனதில் .”சே எல்லாம் கனவா!!!… ஒரே நாள்ல என்னை இப்படி புலம்ப விட்டுடாலே … மை டியர் ஸ்வீட் ஏஞ்சல் நீ யார்?? எங்கே ? இருக்கன்னு தெரியாது! நீ எனக்குள்ள எப்படி வந்த எனக்கே ஆச்சரியமா இருக்கு பட் ஐ ஸ்டில் லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் …”தலைமுடியை அழுந்தகோதி தனக்குள்ளே சிரித்துக்கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்துக்கொண்டான் .

பெண்ணவளின் கண்ணை கண்டானே இவன் யாரும் அறியார்….
கனவில் வந்து அவனை கைதாக்கி கள்ளி அவள் யாரென்று அவனும் அறியான்…
மனம் முழுதும் காதல் கடல் அலையாய் ஆர்பறிக்க…
மனதை பறித்திட்ட அவளின் பிம்பத்தில் தான் இவனின் கனவுகள்…
கனவுகளுக்கு சொந்தமவள் இவனின் வாழ்க்கைக்கும் சொந்தமாவாளா????
இங்கு இவன் இப்படி இருக்க தன் எண்ணத்தின் நாயகியையே இன்று பார்க்க நேரும் என்று அறியாமல் திருமணத்திற்கு தயாராகினான்.

இன்று
அவளின் எண்ணங்களை அடக்க அரும்பாடுபட்டு கொண்டிருந்தவனின் எண்ணங்கள் மேலேழுந்து சோகத்திலும் அவளை நினைப்பதுவே சுகம் என்று விழிகள் உறக்கத்தை தத்தெடுத்தது .
மறுநாள் அதிகாலையில் தயாராகி அனைவரும் மண்டபத்தை அடைந்தார்கள் . ஶ்ரீதரனும்,சௌந்தரும் பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் மணவரையில் அமர்ந்திருந்தனர் .

மணமகள்கள் இருவரும் மேடையை நோக்கி அன்னநடையிட்டு அழகு மயிலென அவரவர் இணையுடன் வந்து அமர்ந்தனர் . இத்தனை வருட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த வரமாக திருமண வாழ்வை எதிர் நோக்கி காத்திருந்த காதல் ஜோடிகள் மங்கள நாணை பூண சில நிமிடங்களே இருக்கையில் அதுவுமே அவர்களுக்கு பேரவஸ்தையாக பட்டது ஶ்ரீதரன் ஷோபனா ஜோடிகளுக்கு .

ராகவி கல்யாண பெண்ணிற்கே உறிய நாணத்தைக்கொண்டு சௌந்தர் அணிவிக்கும் தாலியினை பெற்று கணவன் மனைவி எனும் திருமண பந்தத்தில் இணைய காத்திருந்தாள் .
அவர்கள் எதிர் பார்த்த வாழ்வில் மிக முக்கியமான தருணமும் வந்தது சொந்த பந்தங்கள் வாழ்த்துக்கள் ஒலிக்க,மங்கள மேளம் ஒலி எழுப்ப, இனிய நாதஸ்வரத்தின் ஓசை எங்கும் ஒலிகள் நிறப்ப அக்கினியை சாட்சி வைத்து வாழ்க்கை என்னும் கடலுக்குள் குடும்பம் என்னும் படகை செலுத்த தயாராகினர் இரு ஜோடிகள் .
திருமணம் முடிந்த கையோடு அன்றே கௌஷிக் தான் கட்டவிருக்கும் ஹோட்டலின் டென்டர் விஷயமாக மும்பை புறப்பட்டான் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Madhumathi Bharath

Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

Share
Published by
Madhumathi Bharath

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago