“அங்கே ஒரு மனுஷன் சந்தோசத்தை தொலைச்சுட்டு நிற்கிறார்.இங்கே நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களா?
உள்ளே வாம்மா . நீ மாப்பிள்ளைக்கு என்ன உறவு முறை????
என்னை பற்றிக் கூட தெரியாது ஆனால் அவசர அவசரமாக மாப்பிள்ளையை மிரட்டிக் கல்யாணம் செய்து கொள்ள மட்டும் தெரியுமா?
மிதுலா துணுக்குற்றாள். அவள் கண் முன்னே அவளது தெய்வாவை ஒருத்தி் இப்படி பேசுவதா???
மன்னிக்கணும் இளவரசி. கடல் கடந்து பரவி உள்ள தங்களின் பெருமைகளை அறியாதது எங்கள் தவறு.பிழை பொறுத்தருளுங்கள்.
நீ என்ன பெரிய இளவரசியா? உன்னை நாங்கள் தெரிந்து வைத்துக் கொள்வதற்கு என்ற மிதுலாவின் சீண்டலில் அவளது முகம் பயங்கரமாக மாறியது.
“அம்மா!!!!! என்ற அவளது அலறலில் அடுத்த நிமிடம் காவேரி உள்ளே நுழைந்தாள்.
“ஏண்டி ராஜேஸ்வரி ஏன் இப்படி கத்துற??? இது என்ன நம்ம வீடா??? வெளியிடத்திற்கு வந்து இப்படித்தான் கத்துவாயா??? எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்.இப்படி ஊரே அதிரும்படி கத்தாதே என்று .
“அம்மா உன்னுடைய அட்வைஸ் எல்லாம் நான் வீட்டிற்க்கு வந்து கேட்டுக் கொள்ளுகிறேன்.இப்போ நான் யாருன்னு இவங்களுக்கு கொஞ்சம் சொல்லு.”
அப்பாடா இதுக்கு தான் இப்படி அலறினாயா? சம்மந்தி இவள் எனக்கு ஒரே மகள். ரொம்ப செல்லம். வசீகரனுக்கும் இவள் மீது கொள்ளை பிரியம்.இவள் கேட்டு அவன் எதையும் மறுத்தது இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இவள் எங்கள் வீட்டு இளவரசி.
அதுவரை தனது தாயின் ஒவ்வொரு வார்த்தைகளையும் அகந்தையுடன் கேட்டுக் கொண்டாயா என்பது போல பார்த்துக் கொண்டு இருந்த அவள் இளவரசி என்ற வார்த்தையில் முகம் சுருங்கினாள்.
அவளை நமட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே ,” கரெக்ட் அத்தை நான் கூட இப்ப உங்க பொண்ணை இளவரசி னு தான் சொன்னேன்” என்று எடுத்துக் கொடுத்தாள் மிதுலா.
என் பொண்ணு ராஜேஸ்வரி எனக்கு எப்பவுமே இளவரசி தான் மிதுலா என்றார் காவேரி.
“அம்மா என் பேர் ஒன்றும் ராஜேஸ்வரி இல்லை வர்ஷினி….
“ஆரம்பிச்சுட்டியா!!!! நீங்களே சொல்லுங்க சம்மந்தி இவளுக்கு பார்த்து பார்த்து எங்கள் குல தெய்வ பெயரை நானும் இவங்க அப்பாவும் ஆசையாக வைத்தால் அது பாட்டி காலத்து பெயர் என்று ஜோசியம் பார்த்து பெயரை மாற்றிக் கொண்டு விட்டாள். “
“அம்மா அது நியூமராலஜி.என்று பல்லை கடித்தாள்.
“எனக்கு இரண்டும் ஒன்று தான் ராஜேஸ்வரி.எப்பொழுதாவது ஆசையாக கூப்பிட்டாள் இப்படி சடைத்துக் கொள்கிறாள் சம்மந்தி.என்னை தவிர வேறு யாரும் இவளை இந்த பெயர் சொல்லி அழைப்பதே இல்லை.எவ்வளவு ஆசையாக வைத்த பெயர் தெரியுமா? ஆனால் யாருமே கூப்பிடுவது கிடையாது என்றார் சற்றே வருத்தத்துடன்.
அதற்கு என்ன அத்தை இனி நான் ராஜேஸ்வரி என்றே கூப்பிடுகிறேன். உங்களது மகிழ்ச்சிக்காக இதை கூட செய்ய மாட்டேனா??? என்று வர்ஷினியை வெறுப்பேற்ற வேண்டும் என்று கூறினாள் மிதுலா
நீ அப்படி என்னை கூப்பிடாதே!!!
“ராஜேஸ்வரி அண்ணியை நீ வா போ என்று ஒருமையில் பேசக் கூடாது .வாங்க போங்க னு பேசி பழகு.”
“இவளையா??? முடியாது.
“பரவாயில்லை அத்தை நானும் ராஜேஸ்வரியும் ஒரே வயது தான் இருப்போம்.அதனால் ஒன்றும் இல்ல.
” நல்லா வளர்த்து இருக்கீங்க சம்மந்தி பொண்ணை.ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாம.இவளும் இருக்கிறாளே எது சொன்னாலும் கேட்க மாட்டாள்.ரொம்பவும் சொன்னால் உடனே சப்போர்ட்டுக்கு அவளோட அண்ணனை அழைத்து பஞ்சாயத்து வைத்து விடுவாள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை சம்மந்தி.இவளும் சில நேரங்களில் அப்படி தான்.பிடிவாதம் பிடித்தால் உடும்பு பிடிதான். இந்த காலத்து பிள்ளைகள் இப்படி தான் இருக்கிறார்கள் சம்மந்தி நாம் தான் அவர்களுக்கு ஏற்ப மாற வேண்டி இருக்கிறது.
மிதுலா நீ போய் குளித்து விட்டு வாம்மா.நம்முடைய சொந்தங்கள் சில பேரால் திருமணத்திற்கு வர முடியவில்லை.எனவே இப்பொழுது உங்கள் இருவரையும் பார்க்க வந்து இருக்கிறார்கள்.
திருட்டுத் தனமா திடீர்ன்னு கல்யாணம் செஞ்சு வைச்சா அப்படித் தான் நாடாகும்.
ராஜேஸ்வரி!!!!! காவேரி அதட்டினார்.
என் பேரு வர்ஷினி….. உச்சஸ்தாயில் கத்தினாள்.
“ஆமாமடி நான் சொல்கின்ற எதையும் கவனிக்காதே. பேரை மாற்றி சொன்னால் மட்டும் இவ்வளவு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
ஏன் நான் என்ன இல்லாததையா சொன்னேன்???
காவேரி சங்கடமாக உணர்ந்தார்.தெய்வானையும் மிதுலாவும் புரிந்து கொண்டு இயல்பாக சிரித்தனர்.
அப்படி பேசாதே ராஜேஸ்வரி.அது தப்பு.
ஏன் பெரியம்மா அவள் என்ன இல்லாததையா சொல்லிவிட்டாள்? உண்மையை தானே சொல்கிறாள்.இதற்கு நீங்கள் ஏன் வருத்தப்படுகுறீர்கள்???? என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் வசீகரன்.
அதுவரை இருந்த ஒரு சுமுகமான சூழல் சட்டென மாறியது.யார் என்ன பேசுவது என்று புரியாமல் என்று சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.’ஹப்பா என் அண்ணா வந்ததும் எல்லாரும் அமைதி ஆகியாச்சு. என்னையா கிண்டல் பண்ணுற இரு இரு உன்னை அண்ணன்கிட்ட மாட்டி விடறேன் என்று வர்ஷினி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே வாய் திறந்து பேச நினைக்கும் முன்னே வாய் திறந்து பேச ஆரம்பித்தாள் மிதுலா.
“என்ன அத்தை இவ்வளவு நேரம் உங்க பிள்ளையயை பற்றி வானத்துக்கும் பூமிக்குமாக அத்துணை உயர்வாக சொன்னீங்க!!! கடைசில உங்க பையன் என்னமோ பயந்து போய் வேற வழி இல்லாம எனக்கு தாலி கட்டினதா சொல்கிறாரே.உங்க பையன் அவ்வளவு பயந்தாங்கொள்ளியா???? இல்லை என் முகம் அவ்வளவு அகோரமா இருக்கா? என்று வேண்டும் என்றே அவனை சீண்டினாள்.
அவளது பதிலை கேட்டதும் தெய்வானை அதட்டலாக பேச ஆரம்பிக்கும் முன் ” அம்மா கீழே எல்லாரும் வந்துட்டாங்க சீக்கிரம் போய் அவங்களை கவனிங்க.காவேரி கிளம்பியதும் வர்ஷினியும் மிதுலாவை முறைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
இருவரும் கிளம்பியதும் தெய்வானை தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.”தப்பா எடுத்துக்காதீங்க தம்பி கொஞ்சம் செல்லமா வளர்ந்து விட்டாள். இப்படி தான் சில நேரங்களில் துடுக்குத்தனமாக பேசிவிடுவாள். நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.”
தெய்வானையிடம் வசீகரன் மறுத்தும் பேசவில்லை.அவர் சொன்னதை ஒத்துக் கொண்டது போலவும் இல்லை. மரத்துப் போன ஒரு பார்வையுடன் இருந்தான்.தெய்வானை கெஞ்சுதலாக ஒரு பார்வை பார்த்தார்.அவன் சட்டென்று தன் பார்வையை மிதுலாவின் பக்கம் திருப்பினான்.அதுவரை அவன் தன்னை பார்க்கவில்லையென்று கணவனை நன்றாக சைட் அடித்துக் கொண்டு இருந்தாள் மிதுலா.
வாவ்!!!! வேஷ்டி சட்டையில் என்னமா இருக்காரு என் புருஷர்ர்ர்ர். ஜிம்க்கு கரெக்ட் ஆஹ் போய்டுவார் போல கரெக்டா பாடியை மெயின்டைன் பண்ணுறார். என்ன கொஞ்சம் சிரிச்சார் னா போதும் சூப்பரா இருக்கும்.ஹ்ம் இதை யாரு போய் என் புருஷர்ர்ர்ர் கிட்ட போய் சொல்லுறது??? ஏன் நீ தான் போய் சொல்லேன்? ஆமாம் நான் சொன்னால் கேட்டு விட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்.போடி. அவரிடம் பேசாமல் நீயே ஒரு முடிவு எடுத்தால் எப்படி நான் கூப்பிடுகிறேன் நீ அவரிடம் சொல்லி விடு. வேண்டாம் கூப்பிடாதே என்று மனசாட்சியோடு பேசிக் கொண்டே வேண்டாம் என்று மனசாட்சியிடம் சொல்வதாக நினைத்து வெளியில் மண்டையை அவள் இடமும் வலமும் அசைக்கும் அதே நேரம் வசீகரன் அவளை பார்த்து வைத்தான்.
தலையை அசைத்துக் கொண்டே இருந்தவள் தன்னவனின் தீர்க்கமான பாவனையில் பேச்சிழந்து அசைவற்று நின்று விட்டாள்.
இருவரையும் மாறி மாறி பார்த்த தெய்வானை” நான் கீழே போய் அண்ணிக்கு உதவி செய்கிறேன் தம்பி.நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுத்து கீழே வாங்க.”என்று அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு அங்கு இருந்து கிளம்பினார்.
வசீகரன் தெய்வானை அறையை விட்டு சென்று விட்டாரா என்பதை திரும்பி பார்த்து உறுதி செய்து கொண்டான்.இவர் எதுக்கு இப்ப வாசலை பார்க்கிறார் என்று இவளும் எட்டி வாசலை பார்த்தாள். தெய்வானை அறையை விட்டு வெளியேறியதையே அப்பொழுது தான் கவனித்தாள். ஐயையோ தெய்வா இப்படி தனியா மாட்டி விட்டுடியே? வெளியே ஓடிடலாமா என்று பார்த்தால் அதற்கும் வழி இல்லை.இந்த பனைமரத்தான் தான் வழியிலே நிற்கின்றானே . என்ன செய்வது என்று இவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே வசீகரன் இவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.இப்பொழுது மிதுலாவிற்குள் பயபந்து சுழன்றது.மெதுவாக நிமிர்ந்து வசீகரனை நிமிர்ந்து பார்த்தாள்.
கண்ணை சிமிட்டக் கூட செய்யாமல் அவளையே பார்த்தபடி மேலும் ஒரு அடி முன்னேறினான். இப்பொழுது ஏன் இவர் முன்னால் வருகிறார் என்று யோசித்த படியே, மிதுலா வசீகரன் அவனை நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னோக்கி நகர்ந்தாள்.
மிதுலாவின் உடம்பெல்லாம் வியர்வையில் வழிய ஆரம்பித்தது.நிமிர்ந்தும் அவனை பாராமல் பின்னோக்கி சென்று கொண்டு இருந்தவள் சுவற்றில் மோதி நின்று விட்டாள். அவளது நடை தான் நின்று போனது வசீகரன் தொடர்ந்து முன்னேறினான்.மிதுலாவின் உதடு உலர்ந்தது. நா வறண்டது.புடவை முந்தானையை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். இதை கட்டிக் கொண்டு ஓட வேறு முடியாதே . இடுப்பில் தூக்கி சொருகி கொண்டு ஓடி விட வேண்டியது தான் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே வசீகரன் மேலும் நெருங்கி நின்றான்.நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்கக் கூட மிதுலாவால் முடியவில்லை.
“நான் உனக்கு பயந்து போய் தாலி கட்டினேன் என்று தானே கொஞ்ச நேரம் முன் எல்லார் முன்னிலையிலும் சொன்னாய்!!!! எங்கே இப்போ அதே வார்த்தையை என்னை பார்த்து சொல்லு பார்க்கலாம்? வசீகரனின் குரலில் சவால் இருந்தது.நீ தான் தைரியசாலி ஆயிற்றே எங்கே என்னை பார்த்து பதில் சொல் பார்க்கலாம்??
மிதுலா நிமிர்ந்து அவனை பார். உன் புருசரர்ர் உன்னிடம் வம்பு பண்ணுறார். வாயை திறந்து பேசி தொலையேண்டி என்று கூவிய மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தாள்.
பயத்தில் கண்கள் லேசாக கலங்க மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் வசீகரன்.
சற்று நேரம் அவளையே வேடிக்கை பார்த்தவன் சட்டென்று,” சரி நீ கீழே போ” என்றான். இவர் ஹீரோவா இல்லை வில்லனா என்று சந்தேகத்தோடு நம்ப முடியாமல் அவனை பார்த்துக் கொண்டு இருந்தவளிடம் சற்று நெருங்கி நின்று ,”என்ன கீழே போகிற எண்ணம் இல்லையா? வேண்டுமானால் நாம் இருவரும்….. என்று அவன் சொல்லி முடிக்கவில்லை சிட்டாக பறந்து வாசலை அடைந்து விட்டாள்.
வாசல் படியை தாண்டும் முன் , ” நில்லு“.இப்போ புரிஞ்சுதா யாருக்கு பயம்னு என்று அழுத்திக் கேட்டவன் அத்தோடு விட்டு இருக்கலாம்.இப்பொழுது எளிதாக ஓடி விடலாம்.ரத்திரிக்கு எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்க போகிறாய்? தயாராய் இரு எல்லாவற்றிற்கும் என்று அவளது கண்களை பார்த்து தெளிவாக சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினான்.
தயாராய் இருக்கணுமா எதற்கு ????? “பே” என்று முழிக்க ஆரம்பித்தாள் மிதுலா.