நிலவே உந்தன் நிழல் நானே 1

ஹாய் மக்களே,

உங்ககிட்டே சொன்ன மாதிரியே எந்த வித எடிட்டிங்கும் செய்யாத என்னுடைய முதல் கதை ‘நிலவே உந்தன் நிழல் நானே’ வுடன் வந்துட்டேன்.மொபைலில் டைப் செய்த கதை என்பதால் space பிரச்சினை இருக்கும்..கண்டிப்பா நிறைய தப்பு செஞ்சு இருப்பேன்.அது எதையும் மாத்தாம அப்படியே கொடுக்கிறேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ… தினமும் ஒரு எபி போடட்டும்… கம்ப்யூட்டர் சதி செய்யாத வரை.

ஹாய்குட்மார்னிங் !!! நைட்நல்லாதூங்குனீங்களா ?இல்ல புது இடமா இருக்கிறதால தூக்கம் வரலியா ?நைட் உங்ககிட்ட சொன்னா மாதிரியே காலையில எழுந்ததும் உங்கள பாக்க ஓடிவந்துட்டேன் .ஏய் என்ன இது? இப்படி காலையில எழுந்ததும் அவகிட்ட வம்புபண்ற? அவகிட்ட போகாதே அவ கடிச்சுடுவா!!!ஐயோ சொன்னேன்ல பாரு கடிச்சுட்டா. ஹே கூல் சந்திரா பாவம் அவன் உன் தம்பி தான?என்செல்லம்ல சந்திரா விட்டுடு பாவம் அவன். ஏதோதெரியாம செஞ்சுட்டான்.

அடியேய்மிதுலா!!!!காலைல எழுந்ததும் பல்ல கூட விளக்காம அங்க நாய்குட்டி ஓட என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு.இவ்வளவு கத்துறேனே கொஞ்சமாவது எதாவது கண்டுகிறாளான்னு பாரு.. நீ பாட்டுக்கு கத்து எனக்கென்ன அப்படினு நாய்குட்டிய கொஞ்சிகிட்டு இருக்கிறா?. வரவரஉன் அட்டகாசம்தாங்கமுடியலை.தெருவுலபோற தெருநாய் எல்லாம் வீட்டுக்கு தூக்கிட்டு வந்து ஏண்டி இப்படி வீட்டை நாசம் பண்ற.
அம்மா!!!!!உனக்கு பிடிக்காதுங்கிறதுக்காக இப்படிபேசாதம்மா, பாவம் வாயில்லா ஜீவன் நேத்து சாயங்காலம் கோவிலுக்கு போயிட்டு வரும் போது பாவமா ரோட்ல இங்கேயும் அங்கேயும் ஓடி பசியில கத்திக்கிட்டு இருந்துச்சு மனசு கேக்கல. எப்படியும் நான் காலேஜ் போனதுக்கு அப்பறம் உனக்கு போர் அடிக்கும்ல அந்த நேரத்துல இவங்களோட விளையாடு நேரம் போறதே தெரியாது அம்மா.
அந்த ரோட்ல நீ மட்டும் தான் இதுகளை பாத்தியா? மத்தவங்க எல்லாம் அவங்க வேலைய பாத்துகிட்டு போகலை. உன்ன மாதிரியா வீட்டுக்கு தூக்கிட்டு வந்து கொஞ்சிகிட்டு இருக்காங்க..

யாருமே இரக்கபடலைனா நாமளும் அப்படியே இருக்கணுமாம்மா. இவங்களும் நம்மள மாதிரியே ஒரு உயிர்தானம்மா. நம்மளமாதிரியே அவங்களுக்கும் பசிக்கும். அங்கரோட்ல அத்தனைபேரு இருந்தும் இவங்களயாரும் கண்டுக்கவே இல்லம்மா. ஆனா இப்பபாரு நம்மவீட்டுல இவங்களுக்கு நேராநேரத்துக்கு கரெக்டா சாப்பாடு கிடைக்கும்ல.. பாவம் ரொம்ப சின்னகுட்டிங்க…. அம்மா இல்லாம தனியா எப்படிம்மா இருக்க முடியும்.
ஆமா இப்படி நாய் பூனை குரங்கு மேல எல்லாம் இரக்கப்பட்டு உதவிசெய்.ஒருநாளாவது எனக்கு கிச்சன்ல உதவிபண்றியா. கொஞ்சமாவது வீட்டுவேலை எதாவது செய்யுறியா ? எல்லா வேலையும் நானேதனியா கிடந்து செய்யுறேன். காலேஜ்க்குபோனா வீட்டுல அம்மாக்கு ஏதும் உதவி செய்யகூடாதுனு சட்டம்இருக்கா?சரி வீட்டு வேலைதான் ஏதும்செய்யறது இல்ல.காலேஜ் முடிஞ்சு வந்ததும் புக் எடுத்தாச்சும் படிக்குறியா???? அதுவும் இல்ல .எப்பபாரு மொட்டைமாடில உட்கார்ந்து நிலாவை பாத்துகிட்டுஇருக்க ……
ஏன்மாஇப்படி கத்தி டென்ஷன் ஆகுற ரிலாக்ஸ். இப்ப நான் ஒழுங்கா படிக்கலையா ??? ஏன் இவளோகோவம் ?மார்க்எல்லாம் நல்லாதானே எடுக்கறேன். வாம்மாநீயும் கொஞ்சம்நேரம் இவங்களோடவிளையாடுமாடென்ஷன்எல்லாம்ஓடிபோய்டும்.
சுத்தம்!!! ஏண்டி நீ கெட்டது பத்தாதா? என்னையும் சேர்த்து கெடுக்குறியா?ஒழுங்கா மரியாதையா இப்ப கிளம்பி காலேஜ்க்கு போக போறியா இல்ல உங்க அப்பாகிட்ட சொல்லட்டுமா?
அப்பான்னு சொன்னா உடனே நான் பயந்துடுவேனா?அதெல்லாம் அப்பாக்கு எப்படி ஐஸ் வைக்குறதுனு எனக்கு தெரியும். நீதான்என்ன எப்ப பாரு திட்டுவ ஆனா அப்பாஎன்ன திட்டவே மாட்டார்தெரியுமா?
சரிசரிநேரம்ஆச்சு.நீபோய்குளிச்சுட்டுகிளம்பு.காலேஜ்போகணும்ல.இரும்மாஇன்னும்கொஞ்சநேரம்சந்துருகூடயும்சந்திராகூடயும்விளையாடிட்டுவரேன்

.ஏன்மிதுலாஊர்லஎல்லாரும்அவங்கநாய்க்குட்டிக்குஜிம்மிடாமிஇப்படிதான்பேருவைப்பாங்கநீஎன்னஇப்படிபேருவைச்சுஇருக்கிற?
அம்மாஅதுக்குகாரணம்நீங்கதான்.

என்னதுநானா????ஆமாஎனக்குஒரு தம்பியோஇல்லதங்கச்சியோஇருந்து இருந்தா நான்அவங்களோடவே விளையாடிஇருப்பேன்.நீங்க ஏன்ஒரு குழந்தை போதும்னு நினைச்சீங்க? இப்ப அதுனால எனக்கு விளையாடயாருமேஇல்ல. அதான்நான்இப்படிநாய்க்குட்டியோடஎல்லாம்விளையாடவேண்டிஇருக்கு.இப்பவும்ஒண்ணும்கெட்டுபோகல.எனக்குஒருதம்பியோஇல்லதங்கச்சியோஏற்பாடுபண்ணுங்க. நான் சந்துருகிட்டயும் சந்திராகிட்டயும் டூ விட்டுடறேன் என்னம்மா டீல் ஓகேவா என்றுகண்சிமிட்டினாள்.

தெய்வானையின்முறைப்பைபார்த்ததும் அம்மாவிடம் அடி உறுதி என்று தெரிந்ததால் அங்குஇருந்துசிட்டாக ஓடி மறைந்தாள் மிதுலா. சிட்டு குருவிபோல துள்ளி ஓடும் மகளையே பாசத்தோடு பார்த்துக்கொண்டுஇருந்தார்தெய்வானை. 20வயதுஆனாலும் இன்னும்குழந்தையாகவேஇருக்கிறாளே இந்தபெண் எனபெருமூச்சுவிட்டபடி படிகளில் இறங்கி கீழேவந்தவரை வரவேற்றது மகளின் அலறல் குரல் ஐயோஅம்ம்மா!!!!!!!!!!!!என்று.

மகளின்அலறலைகேட்டதும்மகளுக்குஎன்னவோஏதோஎன்றுவிரைந்துகுரல்கேட்டதிசையைநோக்கிஓடினார்தெய்வானை.அங்கேதரையில்அமர்ந்துமுகத்தைமூடிஅழும்மகளைகண்டதும்ஒருநொடிஒன்றும்புரியாமல்திகைத்துப்போய்நின்றார்.அவளுக்குஉடம்பில்காயமோஅடியோஏதும்பட்டுஇருந்தால்இந்நேரம்வலிக்கிறதுஎன்றுகத்திஊரையேகூப்பிட்டுஇருப்பாள். அப்படிஇல்லாமல்முகத்தைமூடிஏன்அழுகிறாள்என்றுசிந்தித்தவாறேமகளின்தோளைமெதுவாகதொட்டுமிதுலாஎன்றுகூப்பிட்டார்.
அம்மாஎன்றுகதறியபடிஅன்னையின்தோளில்சாய்ந்துமேலும்மேலும்அழுதுகொண்டேஇருந்தாள்.என்னஆச்சுமிதுலாசொன்னதானேதெரியும் ????என்றுகேட்டாள்தெய்வானை..மெதுவாகதன்னைஅமைதிபடுத்திகொண்டபின்போனவாரம்வெயிட்மெஷின்லவெயிட்பாத்தப்போ 65 கிலோதான்மாஇருந்தேன்.இப்ப 68 கிலோன்னுகாட்டுத்துமா.இந்தசுஜிதாகூடபந்தயம்கட்டிஇருக்கேன்மா .எப்படியும்இன்னும்ஒருமாசத்துக்குள்ள 50 கிலோவாகுறைச்சுகாமிக்கிறேன்னுசொல்லிஇருக்கேனே .இப்பஎன்னமாபண்றதுஎன்றுகூறிவிட்டுமீண்டும்அழஆரம்பித்தாள்.. அடிப்பாவி!!! கிராதகி இதுக்கா இவளோ கத்துகத்தினா என்றுமனதுக்குள் நினைத்துக்கொண்டு, இதுக்காக எல்லாம்அழுவாங்களா என்று மகளை சமாதானபடுத்த முனைந்தார். ஆனால்அவளோ நிறுத்தாமல் அழுதுகொண்டேஇருந்தாள்.
இவளைவிட்டால் நாள் முழுக்க இதையே நினைத்து கொண்டு இருப்பாள் என்றுஒருமுடிவுக்கு வந்த தெய்வானை .ஆமா இன்னிக்கு காலேஜ்லஏதோ டெஸ்ட்இருக்குனு சொன்னியே என்றுகேட்டதுதான்தாமதம் அய்யயோஆமாம்மாமறந்தேபோய்ட்டேன்.இப்பவேநேரம்ஆச்சு,இப்பகிளம்பினாதான்அந்தமுசுடுமுத்தப்பாவர்ரதுக்குமுன்னாடிலேபுக்குபோகமுடியும். சரிடிஅப்பறம்ஏன்நின்னுபேசிட்டேஇருக்க .ம்கிளம்புபோஎன்றுமகளைவிரட்டிகுளிக்கஅனுப்பினார்.
நேரேகுளித்துமுடித்துதன்னுடையஅறைக்குசென்றவள்ஒருசுடிதாரைஎடுத்துஉடுத்திக்கொண்டுகண்ணாடிபார்த்துபொட்டுவைத்துக்கொண்டுசமையல்அறைமேடையின்மேல்ஏறிஅமர்ந்தாள்.ஆரம்பிச்சுட்டியா ? என்பதைபோலபார்த்ததாயின்பார்வையைபொருட்படுத்தாமல்அம்மாஎனக்குலேட்டாஆச்சுநான்சாப்பிடஆரம்பிச்சாலேட்ஆகிடும்.அதனாலநீயேஊட்டிவிட்டுடுமாஎன்றுகூறியமிதுலாவைமுறைத்துகொண்டேதெய்வானைபேசஆரம்பிக்கும்முன்தாயின்குரலிலேஏழுகழுதைவயசாகுதுஇன்னும்உனக்குஊட்டிவிடசொல்லிஏண்டிஇப்படிபடுத்துறஎன்றுகூறிமுடிக்கவும்சிரித்துகொண்டேவாயாடிஎன்றுகூறிதோளில்ஒருதட்டுதட்டிஅவளுக்குசாப்பாடுஊட்டஆரம்பித்தாள்தெய்வானை.
வயசுபொண்ணாலட்சணமாபுடவைகட்டிக்கோனுஎத்தனைதடவைசொல்றேன்.ஒருநாளாவதுபுடவைகட்டுறியா? என்னதுபுடவையா???? போம்மா .அதைகட்டிக்கிட்டுயாருசோளக்கொல்லைபொம்மைமாதிரிநிக்கறது !!!!!!!! சுடிதார்தான்மாவசதி.ஹம்ம்என்பதைதவிரவேறுஎதுவும்தெய்வானைசொல்லவில்லை.ஒருவழியாகசாப்பிட்டுமுடித்துஅம்மாநான்கிளம்பறேன்மா.அப்படியேஅப்பாகிட்டஉங்களபத்திகாம்பிளைன்ட்ஒன்னுபண்ணனும்.அப்பாகிட்டபத்தவச்சுட்டுகிளம்பறேன்என்றவள்நேரேசென்றதுபூஜைஅறையில்இருந்தஅவளதுதந்தையின்புகைப்படத்தைநோக்கி.
குமரகுருதான்மிதுலாவின்தந்தை.,.அவளுக்கு 5 வயதுஇருக்கும்போதேஒருவிபத்தில்உயிரைவிட்டுவிட்டார் .குமரகுருசொந்தமாகஒருடிபார்ட்மென்டல்ஸ்டோர்வைத்துஇருந்தார்.அவருடையநெருங்கியநண்பர்கங்காதரனும்அதில்ஒருபார்ட்னர்.குமரகுருஇறந்ததும்கங்காதரன்தொழிலின்முழுபொறுப்பைதானேஏற்றுக்கொண்டார்.பார்ட்னெர்ஷிப்பைதெய்வானைபெயருக்குமாற்றிஅவரைசைலன்ட்பார்ட்னர்ஆக்கிவருமானத்தில்லாபத்தொகையைமாதாமாதம்அவரேநேரில்வந்துபணத்தைகொடுத்துவிட்டுபோவார்.குமரகுருவுக்குசொந்தமாகஇருந்தவீடுகளின்வாடகைமூலமாகஅவர்களுக்குவந்தமேற்படிவருமானத்தைபடிப்பறிவுஇல்லாவிட்டாலும்தெய்வானைமகளின்எதிர்காலத்திற்காக.முறையாகசேமித்துவந்தார்
தந்தையின்புகைப்படத்தின்முன்நின்றவள்அப்பாவரவரஉங்கபொண்டாட்டியோடஇம்சைதாங்கமுடியலைப்பா..எப்பபாருஒரேஅட்வைஸ்தான்.இப்படிசெய்யாதஇப்படிஇருக்காத……………ரெண்டுகாதுலயும்ரத்தம்வராதகுறைஎன்றுபுலம்பியமகளைபார்த்ததெய்வானையின்நினைவுகள்பின்னோக்கிசென்றது.
குமரகுருஇறந்தபிறகுஅப்பாஎங்கே,எப்பவருவாங்கஎன்றுவிடாமல்கேள்விகேட்டமிதுலாவைசமாளிக்கஅவளதுஅன்னைதெய்வானைஅப்பாஇந்தபோட்டோக்குள்ளஇருக்காங்கநீபேசுறதுசெய்யுறதுஎல்லாத்தையும்அங்கஇருந்துபார்ப்பார்என்றுசொல்லிசமாளித்துவைத்தார். அன்றிலிருந்துதந்தையிடம்அன்றையநாளில்என்னநடந்தது,தான்செய்ததுஎன்றுஎல்லாவற்றையும்ஒப்பித்துவிடுவாள்.மனதுசரிஇல்லாதநேரங்களில்தெய்வானையும்குமரகுருவின்போட்டோவின்அருகேஅமர்ந்துபேசுவார்.ஏதேனும்முக்கியமுடிவுஎடுக்கவேண்டும்என்றால்கூடகுமரகுருவிடம்சீட்டுஎழுதிபோட்டுதான்முடிவுஎடுப்பார். அந்தவீட்டைபொறுத்தவரைகுமரகுருஇன்னும்வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்.
அம்ம்மா !!!!!!!!!! எத்தனைதடவைகூப்பிடறேன்என்னம்மாயோசனை???? ஓஅப்பாகூடடூயட்டா? ஹம்நடத்துநடத்து!!!சரிம்மாஎனக்குநேரம்ஆச்சுநான்கிளம்புறேன்சாயந்திரம்லைப்ரரிக்குபோயிட்டுவரேன்மா.6 மணிக்குள்ளவந்துடுவேன்பைஎன்றவள்காலேஜ்க்குகிளம்பினாள்.மகள்கண்பார்வையில்இருந்துமறையும்வரைபார்த்துக்கொண்டேஇருந்தவர்பின்னர்கதவைசாத்திவிட்டுகணவனின்புகைப்படத்தின்கீழ்அமர்ந்து,உங்கபொண்ணுக்குவரவரவாய்ஜாஸ்திஆகிடுச்சு .சொல்பேச்சேகேக்கமாட்டேங்குறாங்கரொம்பவிளையாட்டுத்தனம் .ஆச்சுஇன்னும்ஒருவருஷம்தான்அவபடிப்பைமுடிக்கட்டும்ஒருநல்லபையனைபாத்துகல்யாணம்செஞ்சுவச்சிட்டாபோதும்என்கடமைமுடிஞ்சுடும்உங்ககிட்டவேநானும்வந்துசேர்ந்துடுவேன்என்றார்கண்ணீர்மல்க .

நீ நினைப்பது எல்லாம் அப்படியே நடந்து விட்டால் பிறகு நான் எதற்கு இருக்கிறேன் என்ற கேள்வியோடு விதி தெய்வானையை பார்த்து சிரித்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Madhumathi Bharath

Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

Share
Published by
Madhumathi Bharath

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago