நாராயணசாமி எப்பவும் அதே நாராயணசாமிதான்

0
35

மதுரை ஒத்தக்கடைல ஒரு சின்னப்பையன் இருந்தான் . அவன் பெயர் நாராயணசாமி.

க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் நாராயணசாமி.

படிப்புல எல்லாருக்கும் பின்னால இருந்தாலும் அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. . சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C – யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்….

சங்கடத்தோட அவனோட அம்மா ஒத்தக்கடையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.

25 வருஷத்துக்கு அப்புறம்…..

பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.

எல்லா டாக்டர்களும் பரிசோதித்தார்கள். அவர்கள் கூறினார்கள். நீங்கள் கிரிட்டிக்கல் சிச்சுவேஷனில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்…..

அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ஹெட்மாஸ்டரை வென்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.

ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்….. எதிரே அழகான இளவயது டாக்டர் தன்முன்னில்…..

தன் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி கூற முயற்சி செய்தார் ஹெட்மாஸ்டர்…..

ஒரு சிறு புன்சிரிப்போடு டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின் முகம் அதிர்ச்சியில் விளறியது…..

என்னமோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை . தூக்கினாலும் உயர்ந்த கை கீழே விழுந்தது….. கண்கள் நிரந்தரமாய் மூடியது….

திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டாக்டர் திரும்பி பார்த்தபோது……..

வெண்டிலேட்டரோட பின்ன புடுங்கி வாக்வம் க்ளீனர் ப்ளக்கில் சொருகி அறையை சுத்தம் செய்துகொண்டிருந்தான் நம்முடைய நாராயணசாமி. அவன் இப்போ அங்க கிளீனரா வேல பாக்குறான்.

ரொம்ப சாரி….. அந்த இளவயது டாக்டர்தான் நாராயணசாமியா இருக்கும்னு நீங்க நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு காரணம்

நீங்க சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனாலதான்.

*நாராயணசாமி என்னைக்கும், எப்பவும் அதே நாராயணசாமிதான்.?????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here