தேடி வந்த சொர்க்கம்_8

0
433
4-andhranews|677x500

மஞ்சள் வெயில் கொஞ்ச கொஞ்சமாய் மாறி சூரியன் தனது உக்கிரத்தை காட்ட தயாரான காலை வேளை நேரம் பத்து மணியை நெருங்கிய வேகமாக வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தாள் சுமித்ரா.
இரவு ஏற்கனவே பேசியிருக்க ராகவிற்கு மறுபடியும் அழைத்தபடி வெளியில் வந்தாள்.

கரும்பு நிற ஜீன்ஸ் அதே கரும்பு நிறத்தில் வண்ணம் கலந்த முழுக்கை சட்டை அவளை இன்னும் கலராய் காட்டியது.

அதே நேரம் தத்தையும்் வெளியில் வர அப்பா… அப்பா.. நான் ராகவ் வீட்டுக்கு போயிட்டு வரேன். நீங்க ஆபீஸ் கிளம்பியாச்சா.

ஆமாண்டா. நீ சாப்பிடலையா….

அவனை பார்த்துவிட்டு வந்து சாப்பிடறைன்பா. இல்லன்னா அவன்கூட அங்கேயே சாப்பிட்டுடுவேன்.

அதுக்கு எதுக்குமா பர்ஸ்….

அப்பா… வெளியே போய் சாப்பிட்டாலும் சாப்பிடுவேன்.

சுமித்ரா…உடம்புக்கு ஒத்துக்காம போக போகுது. பார்த்துக்கோ…

பா… நான் என்றைக்கு தனியா போய் இருக்கிறேன். கூட ராகவ் வருவான்.

சரிடா பார்த்து போ… பேசியபடி வாசல் அருகில் வந்திருக்க நின்றிருந்த காரில் அவர் புறப்பட இவள் அடுத்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

எதிர்பட்ட வேலையாட்கள் இவளை பார்த்து அறிமுக புன்னகையை சிந்தனை சிரித்தபடி பிரபாஅங்கிள் இல்லையா…

காலையிலேயே ரெண்டு பேரும் புறப்பட்டு போயிட்டிங்கமா…

வெளியில் கார் நிக்குது. யார் வந்து இருக்கறாங்க.

ராகவ் தம்பியை பார்க்க வந்து இருக்கறாங்க. தம்பிக்கு கை அடிபட்டு இருக்குன்னு பார்க்கவந்து இருக்கறாங்க

என்னது அடி பட்டு இருக்கா. யாரும் சொல்லலை. சரி போய் பார்க்கிறேன். எனக்கு ஒரு டம்ளர் காபி எடுத்துட்டு வாங்க. இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் படி ஏறினாள் சுமி…

ராகவ்வின் அறை மூடி இருக்க ராகவ் என்ற குரலோடு கதவில் கை வைத்து திறக்க உள்ளே பார்த்தவள் ஓரு நிமிடம் திகைத்து பின் திரும்பி கொண்டாள். ராகவ் உள்ள வரலாமா என்ற கேள்வியோடு…

ஏய்.. சுமி வா.. வா. இது நிஷா என்னை பார்க்க வந்து இருக்கிறா. இவனை அணைத்தபடி நின்றவளை விலக்கி நிறுத்தியவன். வா வந்து உட்காரு.
ஏற்கனவே கண்கள் கழங்கியபடி இருந்த நிஷாவை பார்த்து ஹாய் என்ற சொல்லோடு உள்ளே வர..

ராகவ் நிஷாவை பார்த்து…. ரெண்டு நாள் கழிச்சு பார்க்கலாம். பை என்ற சொல்லோடு வாசல் வரை சென்று அனுப்பி வைக்க…

சுமி உயரமான டேபிலின் மேல் ஏறி அமர்ந்தபடி ராகவ் இங்கே என்ன நடக்குது. அந்த பொண்ணு உன்னை
கட்டி பிடிச்சிட்டு நிக்குது. நீ எதுவுமே சொல்லாமல் இருக்கற….

அவ என் ப்ரெண்ட் சுமி. இங்க பாரு
அடிபட்டு இருக்குதுன்னா இவ பொக்கே வாங்கிட்டு வந்து இருக்கிறா. அந்த அளவுக்கு புத்திசாலி ப்ரெண்ட்…

ப்ரெண்ட்…. புத்திசாலி…. சரி கைல எப்படி அடி பட்டுச்சு. நீ ஏன் என் கிட்ட சொல்லல . எதா இருந்தாலும் போன்ல எழுதுவல்ல. இத மட்டும் ஏன் சொல்லல. அன்றைக்கு வண்டில அக்ஸிடெண்ட் ஆச்சே அப்பவா பட்டுது.

அப்போது காபியோடு கதவை திறந்தபடி வீட்டுவேலை செய்யும் பாட்டி வர சுமி நீயே கேளுமா. ரெண்டு நாளா புள்ள வீட்டுக்குல்லயே அடைஞ்சு கிடக்குது.

பாட்டி ஏன் நீங்க சொல்ல மாட்டிங்களா.
பக்கத்து வீடு தான.

தம்பி தான் உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாப்புடி. நான் என்ன பண்ணறது.

காபியை சுமதியிடம் கொடுக்க போக வேகமாக அதை கைகளில் வாங்கி இருந்தான் ராகவ். பாட்டி வந்ததும் காபி கேட்கறான்னா இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டா. நீங்க சாப்பிட கீழே எடுத்து வைங்க. நாங்க ரெண்டு பேரும் வர்றோம். கையில் இருந்த காபியை குடிக்க ஆரம்பிக்க…

டேய் … ஏண்டா எனக்கு வந்த காபிய நீ புடிங்கி குடிக்கற என அடிக்க ஆரம்பிக்க…

சுமி இத்தனை நாள் பார்க்கறேன்
உன்னை தெரியாதா… சாப்பிடலதான…

ராகவ் உன் கூட வெளியே போய் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன். நீ வேற கையில் கட்டு போட்டு இருக்கற.
பரவாயில்லை இன்னொரு நாள் பார்க்கலாம்.

சுமி இவ்வளவு தானா. வா போகலாம்.
நீ கார் ஓட்டுவல்ல.

ஏய்… கிண்டலா … நல்லாவே ஓட்டுவேன். இருவரும் வெளியில் வர சமையற்கார பாட்டியிடம் இப்ப வேணாம் பாட்டி கூறியபடி அருகில் ஊள்ள அண்ணபூர்னாவிற்கு வண்டியை விட அங்கு இருந்த தனி இருக்கையில் அமர்ந்தவன் இவளுக்கு பிடித்ததை ஆர்டர் கொடுக்க…

நீ சாப்பிடலையா ராகவ்.

நான் வீட்டிலேயே சாப்பிட்டுடேன். நீ சாப்பிடு…

கொண்டு வைத்த உணவை இத டேஸ்ட் பாரு ராகவ்…என கூறி இவனுக்கு ஒரு ஸ்பூனை ஊட்டி விட்டபடி இவளும் சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு வர மதியம் பன்னிரெண்டு மணியை தொட்டு இருந்தது.

உள்ளே நூழைந்தவள் இப்ப சொல்லு ராகவ் எப்படி கைல அடி பட்டுச்சு….

ஒருத்தன் கூட சின்ன கைகலப்பு.

அவன் அடிக்கறவரை நீ பார்த்துட்டா இருந்த..

கொஞ்சம் நிதானத்துல இல்ல. சோ.ஆனா அவனுக்கு இருக்கு என் கிட்ட … அவனுக்கு பெரிசா வச்சி இருக்கிறேன். மறக்க முடியாத அளவுக்கு.அவன் முகத்தில் தெரிந்த கோபத்தை திகைத்தபடி பார்த்திருந்தாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here