
சுமித்ராவிற்கு சிரித்த படி பதில் கூறியவன் உண்மையிலேயே கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனது மனம் உலைகலமாய் தகித்து கொண்டிருந்தது. அறைக்குள் கூண்டில் அடைபட்டுக் சிங்கம் போல் நடை பயின்று கொண்டிருந்தான்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிந்திருக்க நடந்தது ஏனோ அவ்வப்போது கண் முன் வந்து
சென்று கொண்டிருந்தது.
தன்னை அறியாமல் கை கண்ணத்தில் பட குரு… உனக்கு பெரிய தண்டனை என் கிட்ட இருக்கு.
வாழ்கையிலேயே நீ எதிர் பார்க்காத அந்த தண்டனை. நீ சாகற வரை மறக்க முடியாமல் தவிக்கற அந்த தண்டனை உனக்கு தரப்போகிறேன்.
கைகளை பார்க்க வலது கையில் தற்சமயம் டாக்டர் பரிந்துரைத்த
பேன்டேட் இருக்கி பிடித்தபடி இருந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு கையை அசைக்க கூடாது என கூறி இருக்க வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். இடையில் ஒரு முறை விநாயக்கிடம் பேசியதோடு சரி…
அவனோ இந்த இரண்டு நாட்களும் காலையில் வந்தவன் இரவு வீடு திரும்புவதை வலக்கத்தில் வைத்திருந்தான்.
அவனிடமும் நடந்ததை சொல்லவில்லை. மனம் முழுக்க குருவை மட்டுமே சுற்றி வர இந்த நிமிடம் அவன் மட்டும் கையில் கிடைத்தால்….
மேலும் நடந்தவனுக்கு அன்றைக்கு நடந்தது கண் முன் வந்தது. தள்ளாடியபடி இறங்கியவனை பார்த்ததும் ஓங்கி அரைந்திருந்தான்.
அரைந்த அடுத்த நொடி இவனது கை அவனது சட்டையை கொத்தாக பற்றி இருந்தது. ஏண்டா…. எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல கை வச்சி இருப்ப… அடி பட்டா சொல்லுடா
அதுக்கு எவ்வளவு தரணுமோ அத நான் தர்றேன். கை வக்கற. நான் யார் தெரியுமா. என்னோட பேக்ரவுண்ட் தெரியுமா. நான் நினைச்சா உன்னை அட்ரஸ் இல்லாம ஆக்க முடியும்.
பிடித்த படி முகம் பார்க்க உண்மையிலேயே குரு அவனுக்கு இரண்டாய் தெரிந்தான். தனியா வர தைரியம் இல்லாம ரெண்டு பேரா வர்றியா….
சட்டையை பிடித்தவனின் கைகளை
மிக எளிதாக தட்டி விட்டவன். வண்டியே உனக்கு ஓட்ட முடியலை. ஓரு வேளை ப்ளாட்பாரத்தில் யாராவது தூங்கி இருந்தா…. என்ன பண்ணி இருப்ப…
பணம் பணம் குடுப்பேன். உனக்கு தெரியாது நம்ம சல்மான்கானே பணம் குடுத்து வெளியில் வந்துட்டாரு. தலைவர் வழிதான் எப்பவுமே… இவங்கல யாரு இங்கே வந்து தங்க சொன்னது. நான் தான் உன் மேல படக்கூடாதுன்னு தானே இங்கே வந்து பார்க் பண்ணினேன்.
நீ ஏன் வந்து கத்தற…. ஓ… கைல அடி பட்டிருக்கா…. அதுதான் வந்தியா…
இரு… ப்ரோ … குழறியபடி ஒரு பாக்கெட்டில் கை விட்டவன் எதுவும் இல்லாமல் அடுத்த பாக்கெட்டில் கையை விட்டு பார்க்க….
யெஸ்… இதோ இருக்கு… இந்தா
டாக்டர் கிட்ட போய் சரி பண்ணிடு.
ஓகே. …ஓகே. .. கையில் வந்த கொத்து பணக்கட்டை அவனது கையில் வைத்து அழுத்தினான்.
ஒ… பணம் குடுத்தா எல்லாம் சரி ஆகிடுமா….
இல்லையா… பத்தாதா இரு தேடி பார்க்கிறேன். மறுபடியும் பின்புற பேண்ட் பாக்கெட்டில் தேட ஆரம்பிக்க…
குருவோ கோபத்தின் எல்லையை கடந்து கொண்டிருந்தான்.
மறுபடியும் கேக்கறேன் காசு கொடுத்தா எல்லாம் சரி ஆகிடுமா…
ஆமாம்டா….
அப்ப இந்தா நான் தர்றேன். யோசிக்காது அவனது வலது கையை பிடித்து முறுக்கிய வேகத்தில் நிச்சயமாக ஒரு வாரத்திற்கு கையை அசைக்க முடியாது என்ன தெரிந்து விட்டது குருவிற்கு… தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்தவன்… இந்தா நீ இத வச்சு சரி பண்ணிடு… பேக்ரவுண்ட் பத்தி பேசினல்ல. எனக்கு எந்த பேக்ரவுண்டும் கிடையாது. இந்தா இது தான் நான் வேலை செய்யற இடம். நீ எப்ப வேணாலும் வா… ஓடி ஓளிய மாட்டேன்.. கையில் விசிட்டிங் கார்ட்டை அழுத்தியவன் அவனது வண்டியில் கிளம்பி இருந்தான்.
தனது அறையில் நினைத்தபடி பாக்கெட்டில் கைவிட விசிட்டிங் கார்டு கையில் வந்தது. பார்த்தவன் சிரித்தபடி வர்றேன் குரு… வெயிட் பண்ணு…. நீ இருக்கற இடத்துக்கே வரேன். நீ என்ன பண்ணறன்னு பார்க்கிறேன். இனிமே ஆடப்போற இந்த ஆடுபுலி ஆட்டம் ரொம்ப சுவாரசியமா இருக்க போகுது.
தொடரும்.