தேடி வந்த சொர்க்கம் _3

0
675
index|260x194

மணி மூன்றை நெருங்க மெதுவாக கண் விழித்தான் ராகவ். போம் மெத்தையில் படுத்திருக்க சற்று தொலைவில் இருந்த இருக்கையில் சாய்ந்த படி தூங்கி கொண்டிருந்தாள் நிஷா. கதவு திறந்து இருந்தது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் சுற்றிலும் பார்க்க அது அந்த ஹோட்டலில் இருக்கும் தங்கும் அறை. வேகமாக எழுந்தவன் தனது
வாட்சில் நேரம் பார்க்க அது மூன்றை காட்டியது.

கொஞ்சமும் யோசிக்காமல் நிஷா… என கத்த அவள் அதிர்ச்சியோடு கண்விழித்தாள். அதே நேரம் கையில் காபியோடு விநாயக் உள் நுழைந்தான்.

டேய் கத்தாதடா. இந்தா நிஷா…. இத குடி உன் கார் ரெடி ஆகி இருக்கும். நீ கிளம்பு. இவனை நான் பார்த்துக்கறேன்.

டேய் ஏண்டா இவ போகாமல் இங்கே இருக்கறா …

அது எப்படிடா உனக்கு அப்படி தூக்கம் வருது. ஹோட்டலையே தலைகீழா மாத்திட்டு அந்த சத்தத்துல… உன்னை அங்கே இருந்து இங்கே ஷிப்ட் பண்ணறதுகுல்ல எவ்வளவு கஷ்டபட்டோம் தெரியுமா.ஹாயா கண்ண முழிச்சிட்டு நீ போகலையா… நீ போகலையான்னு கேள்வி கேட்கற.

விநாயக் நான் உன்னையா கேட்டேன். இவளைதானே கேட்டேன். எப்பவும் உடனே போயிடுவால்ல. இன்றைக்கு ஏன் இங்கேயே இருக்கறா….

அவளோட டிரைவர் அப்பவே வந்தாச்சு.டயர் பஞ்சர் அப்புறம் எப்படி அனுப்பறதாம். சரி இங்கேயே இருன்னு உட்கார வச்சேன். சரி பண்ணிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிடுச்சி.

நிஷா நீ வா….
சரிடா நீ எப்ப வீட்டுக்கு போக போற….

நானும் கிளம்பியாச்சு. இதோ எழுந்தவன் லேசாக தடுமாற ..

இன்றைக்கு ரொம்ப அதிகம் ராகவ் நான் அப்பவே சொன்னேன். நீ கேட்கவே இல்ல. அதனால தான் இங்கே கூப்பிட்டுட்டு வந்தேன்.

அங்கே ஹால் முழுசும் பாட்டில் உடைஞ்சு கண்ணாடி யா சிதறி இருக்கு நீ பாட்டுக்கு கால வச்சா யார் பதில் சொல்லறதாம் உங்க அப்பாவுக்கு.

வாசல் வரை புறப்பட்ட நிஷாவோ திரும்பி வந்து ராகவ் எனக்கு ஒரு விஷயம் உண்மையான்னு சொல்லு.

என்ன நிஷா…..

நிஜமாகவே உனக்கு கல்யாணம் முடிவு ஆகிடுச்சா… அதுக்கு தான் இந்த பார்ட்டியா …

யார் இந்த புரளியை கிளப்பி விட்டது. அப்பா கேட்டாங்க நிஷா உனக்கு பொண்ணு பார்க்கவான்னு சரி பாருங்கன்னு சொன்னேன் அவ்வளவு தான்.பார்ட்டியில கேட்டத வச்சி கேட்கறயா. அவன் கேட்டதுக்கு பதில் சொன்னேன். ஆனால் இன்றைக்கு நல்லா இருந்ததுல்ல….நீயா விநாயக் சொன்ன .. பேச்சே சற்று தெளிவில்லாமல் வந்து விழுந்தது.

ஆமாம்டா. ஏன் இருக்காது….அத்தனையையும் போட்டு அடிச்சு நொறுக்கி இருக்கற. பத்தாதற்கு அவனையும் அடிச்சு அனுப்பி வச்சு இருக்கற…

அவன் சொன்ன பதில் கேட்டு கொஞ்சம் நிம்மதியாக வெளியேறினாள் நிஷா. அளவோடு சென்ற விநாயக் காரில் ஏறும் வரை கூட இருந்தவன் திரும்ப ராகவ் இருக்கும் அறையை நோக்கி திரும்பி வந்தான்.

விநாயக் ராகவ்வோட நண்பன் மட்டும் அல்ல தீவிர ரசிகன் அப்படின்னும் சொல்லலாம். விநாயக் கல்லூரி முதலே ராகவின் நண்பன். இடையில் இரண்டு வருட மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்க திரும்ப வந்ததும் இணைந்து கொண்டார்கள்.
ராகவிடம் கேட்டால் விநாயக் என்னுடைய ப்ரெண்ட். இவ்வளவு தான் சொல்லுவான். அதே விநாயக்கிடம் அவன் ஒரு கதையே சொல்லுவான் ராகவை பற்றி. …

இன்றும் ஞாபகம் இருக்கிறது கல்லூரியின் முதல் நாளில் நடந்தது.
இவனது டிபாட்மெண்டில் நுழைந்த ஆசிரியரிடம் நேராக சென்றவன் சார் நான் ராகவ் …

சரி… சொல்லுபா…

இங்கே மூனு வருஷம் படிப்ப முடிச்சா மேல ரெண்டு வருஷம் படிக்கணும். தன்னுடைய தந்தையின் கம்பெனியை சொன்னவன். அங்கே நாலாயிரம் பேர் வேலை செய்யறாங்க. படிப்பு முடிஞ்சதுன்னா நேரா அங்கே தான் போகணும். வெளியில் வேலை தேட வேண்டிய அவசியம் இல்ல. உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா. கேளுங்கள்…. என்ன வேணும்னாலும் செய்யறேன்..

சரி என் கிட்ட ஏன் சொல்லறே. .

அவசரபடாதிங்க… சொல்லறேன். நான் என்ன சொல்ல வரேன்னா. …
டென்த் பசங்க மாதிரி அசெம்மென்ட் பண்ணு. டெஸ்ட்க்கு படி இப்படி எல்லாம் சொல்ல கூடாது. எனக்கு புடிக்காது.ஒரு டிகிரிக்காக தான் இங்கே வரேன். சரியா. ..ரைட்…

அன்றைக்கு அவன் பேசின அந்த ஆளுமையான பேச்சு விநாயக்கை நண்பன் ஆக்கியது இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருந்தது.முன்பு நடந்நதை யோசித்தபடி ரூம் உள்ளே நுழைந்தவன் சரிடா… நானும் கிளம்பறேன். நீ வர்றயா உன் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பறேன்.

இல்லடா. கார் இருக்கு. என்னால டிரைவ் பண்ண முடியும். நீ கிளம்பு…
விநாயக்கும் வெளியேற ராகவும் சற்றே தடுமாறியபடி பார்ட்டி நடந்த ஹாலை கடக்க அங்கே தகறாரு நடந்த எந்த அறிகுறியும் இன்றி எப்போதும் போல் பிரகாசித்தது. பார்த்தபடியே பார்க்கிங்கில் தனது வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அன்றைய விடியல் ராகவிற்கு மறக்க முடியாத விடியலாய் இருக்க போவதை உணர்வானா…

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here