தேடி வந்த சொர்க்கம் _24

0
773

இன்றோடு ஏழு நாட்கள் முடிந்து இருந்தது. அன்று பார்த்து சென்றவன்தான் இன்று வரை பார்க்க வரவில்லை. இடையில் ஒரு முறை நிஷாவை பார்த்து விட்டு வந்திருந்தாள் அவ்வளவே.. அன்றைய
பிரச்சனை அப்படியே தான் இருந்தது. அவள் வரையில்… குருவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல்…. வேலையில் இருந்து நின்று விட்டதாக ஒரு முறை அப்பா பேசியபோது கேட்டதோடு சரி… என்ன ஒரு ஆறுதல் ராகவ் நிஷாவின் பின் சுற்றி கொண்டு இருந்தான்.

எப்படியோ அவனாவது நல்லா இருக்கட்டும். அவனுக்கு பிடித்த பெண் கூட வாழ்க்கை அமையணும். இப்படி நினைத்து கொண்டிருக்க இதோ இன்று என் முன்பாக வந்து நின்றிருந்தான். அதே பழைய சிரிப்போடு கண்களில் குறும்போடு…

எப்போதுமே அவனது வழக்கம்…. ஏதாவது சர்ப்ரைஸ் செய்யும் போது தோன்றும் புன்னகை அது… ஆனால் இப்ப என்ன செய்ய போறான்னுதான் புரியலை.

எனக்குமே அவனது முகம் பார்க்கும் போது அவனது புன்னகை எதனையும் தொற்றிக் கொண்டது எதனையும் அறியாமல். …

என்ன ராகவ்… என்ன விஷயம்.

ம்… சாயங்காலம் ஒரு பங்சன்க்கு போறோம். நாம எல்லோரும் சரியா. கிளம்பி இரு… அப்பா பிரபா அங்கிள் எல்லோர் முதத்திலும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

அவனோடு மாலையில் கிளம்பியவளை அழைத்து சென்றது திருமண மண்டபத்திற்கு… மணமகள் அறைக்கு என்னை அழைத்து சென்றவன் ரெடி பண்ணி விடுங்க. கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்க்கிறேன் என கூறி சென்று இருந்தான்.

ஏற்கனவே நான்கு பெண்கள் இருக்க அவர்கள் எனை அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர். என்னை சுற்றி என்ன நடக்கிறது எதுவும் புரியவில்லை. சற்று நேரத்தில் நிஷாவை இன்னும் என்னுடைய நண்பர்கள் என்ன சிலர் வர நானோ…

நிஷா… என்ன நடக்குது ஏன் எனக்கு அலங்காரம் செய்யறாங்க…

ராகவ் சொல்லலையா. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ… அவனே சொல்வான்.

சுமியோ மனதிற்குள் இந்த நிஷா கூட கடுப்படிக்கறாப்பா…ஒரு வேளை குரு கூட நிச்சயம் ஏதாவது செய்ய போறாங்களா. அவன் கோபக்காரன். சம்மதிக்க மாட்டேனே. என்னன்னே தெரியாம இருக்கற கொடுமை இருக்கே… அப்பா. இந்த நிமிஷம் நிஜமாகவே பயமாக படபடப்பா இருந்தது.

அவ்வளவு அலங்காரத்திலேயும் முகத்தில் தெரிந்த பதட்டத்தை மறைக்க முடியவில்லை. இதோ மறுபடியும் வந்து முன்னால் நின்றான் அதே அக்மார்க் புன்னகையோடு…

என்ன இப்போது உடை மாற்றி இருந்தான். பட்டு வேஷ்டி முழு நீள பட்டு சட்டை கூடனே கையை தழுவி இருந்த ரோலக்ஸ் வாட்ச் என…
பார்க்க வித்தியாசமாய்… சாதாரண நேரமாய் இருந்து இருந்தால் ஏண்டா தூணுக்கு சுற்றி இருக்கறமாதிரி சுற்றி இருக்கற என கிண்டல் அடித்து இருப்பாள். இப்போது எதுவும் தோண்டாமல் அவனை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

சுமி நானே நிறைய யோசித்து
ஸ்டேஜ் டெக்கடேட் பண்ணி இருக்கிறேன். வந்து பார்த்து சொல்லு பார்க்கலாம்.

இன்னமும் புரியாமல் எதை போய் பார்க்க… வேண்டாம் என தலையாட்ட
சும்மா இங்கே நின்னே கீழ பாரு… மாடியில் இருந்த ரூமில் மேக்கப் நடந்து கொண்டு இருந்தது.

என்ன கையை இழுத்தவன் மாடியில் இருந்து கீழே காட்ட.. அங்கே குரு வெட்ஸ் சுமித்ரா என்ன அழகாய் எழுதி இருந்தது. ஒரு இதயத்தை இரண்டு அண்ணப்பறவை வாயிஸ் கவ்விக்கொண்டு இருக்க சுற்றிலும் மலர்களால் அலங்கறித்து இருந்தது.

ஒரே நிமிடம் தான் ராகவ் என கூறியவளுக்கு கண்ணீர் வர ஆரம்பிக்க அந்த மனநிலையை சொல்ல வார்த்தைகளே இல்லை. மகிழ்ச்சியோடு அவனை வயிற்றோடு அணைக்க செல்ல…அவனோ குறும்போடு…முதல் முதலில் படித்து வரும் போது நான் சொன்னதை திருப்பி படித்தான்.

ஏய். சுமி என்ன பண்ண வர்றே. கட்டிக்கறதா இருந்தா இந்தா இவனை கட்டிக்கோ… சுவற்றோரமாய் நின்றிருந்த குருவை இழுத்து முன் நிறுத்தினான். இவனை பார்க்கவே இல்லையே…சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி சத்தோஷம் என்றும் மொத்தமாய் போட்டியிட…

ஏன் கட்டிக்க மாட்டனா… போடா என்ன கூறிக்கொண்டே குருவின் வயிற்றில்கைகளை கைகோர்த்தபடி அணைத்திருந்தேன். கன்னத்தில் வழிந்த கண்ணீர் அவனது சட்டையை நினைக்க.. காடு பேடுகளை தாண்டி என்னுடைய இருப்பிடத்தை அடைந்த நிறைவு. அவனுமே ஒரு கையில் எனை அணைத்தவன் மறு கையால் எனது முதுகை ஆறுதலாய் தட்டிக் கொண்டு இருந்தான்.

ஐந்து நிமிடம் கழித்து ராகவ் அழைப்பது காதில் கேட்டது.

சுமி…. சுமி….

என்னடா…

எனக்கு வெட்கம் கூச்சம் எதுவும் கிடையாது. எவ்வளவு நேரம் வேணும்னாலும் இப்படியே நிற்பேன். ஆனால் பாவம் ப்யூட்டிசியன்ஸ் என்ன பண்ணறதுன்னு தெரியாம இருக்கறாங்க… விட்டுடேன் குருவ…
நாளையில் இருந்து அவன் உனக்கு சொந்தமானவன் தான் சரியா….

இதோ அவனை அடுத்து இருந்த ரூம்பிற்கு அழைத்து செல்ல…

எப்படி ராகவ் சம்மதிச்சாங்க….

ம்… அப்பாகிட்ட அடித்து வாங்கினது அப்புறம் குரு வீட்ல குற்றவாளி மாதிரி கைய கட்டி நின்னது. எதுக்கு உனக்கு அதெல்லாம். … இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணு சுமி… நான் இருக்கிறேன். ..

குரு வேணும் தான் சொன்னேன். இப்பவே கல்யாணம் வேணும்னா கேட்டேன்.

ஒய்… என்ன விளையாடறையா… ரூம்பே நிறையற அளவுக்கு அந்த அழுகை அழுத. எவ்வளவு கஷ்டப்பட்டு இதை அரேன்ஜ் பண்ணி இருக்கிறேன். வேண்டாமாம்ல.. ஒடிடு சுமி…

இதோ அதே பார்ட்டி ஹால் ஆனால் சூழ்நிலை தான் வேறு.. இன்று மது எதுவும் இல்லை. இஷ்டம் போல் சாப்பிட நிறைய விதவிதமாக உணவு சமைத்து காத்திருக்க மேடையில் ஒரு புறம் பாட்டு கச்சேரி நடந்து கொண்டிருக்க இங்கே மேடையில் ஆடிக்கொண்டு இருந்தனர். ராகவ் குருவை ப்ரோ என அழைக்க ஆரம்பித்து இருந்தான்.

இதோ என் அருகில் குரு தனது கைகளில் எனது கையை கோர்த்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது தொடுதலில் அத்தனை உரிமை அன்பு கலந்திருந்தது.

இப்போது நிஷாவை அழைத்து கொண்டு மேடையில் ஏறியிருந்தான். ராகவ்
அவனுக்கு பிடித்த படி நடனமாட….

அருகில் இருந்த குருவோ எனை பார்த்து …. எத்தனை பேருக்கு செஞ்ச தப்பை ஏத்துக்கற தைரியம் இருக்கு. என் மேல்தான் தப்பு சுமி மேல தப்பு இல்லை. அவளை அழ வைக்காதன்னு சொல்லும் போது…. நானுமே உலகத்தை வெறுத்த நிலையில் இருந்தனா… தனா என்னோட அப்பா உடனே சரியின்னு சொல்லிட்டாங்க….

ராகவை பார்த்தபடி…. வித்தியாசமானவன் இல்லையா சுமி…

நீ கூட தான்… இதை சொல்லும் போது அவளுக்குமே அவ்வளவு நிறைவு நிம்மதி குரலில் இருந்தது.???

தேடி வந்த சொர்க்கம் நிறைவுற்றது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here