அந்த மண்டத்தில் வரவேற்பு பகுதியில் இருபுறம் வலைவாய் அரண்மணை போல் அழங்கறித்து இருந்தனர். பலூன்களினாள் கூடவே ஜீகினாவால் மின்னியபடி பிளாஸ்டிக் தோரணங்கள் கட்டி இருக்க அங்கங்கே இருந்த தூண்களை பலூனால் கவர் செய்திருக்க இரவு ஒன்பது மணியை தாண்டி இருந்தது. ராகவ் சுமித்ரா வீடு வந்து சேர்வதற்கு சுமியின் போன் சுவிச்ஆப் ஆகி இருக்க அதைபற்றிய நினைவு இல்லாமல் தூங்கி எழுந்திருந்தாள். . …இதோ எழும் முன்பாகவே பரபரப்பு தொற்றி இருந்தது. அன்று காலையிலேயே
ராகவின் தந்தையும் தாயும் வந்து இருந்தனர்.
இந்த முறை கொஞ்சம் பெரிய அளவில் துவங்கி இருப்பதினால்
பெரிய மணிதர்கள் நிறைய பேருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். சீக்கிரமே வந்துடு சுமி என கூறியவர் அழகான
இள ஆரஞ்சு நிற லெகன்காவை இவளுக்கு தந்தவர் டெல்லியில் இருந்து உனக்காக வாங்கி வந்தது. இத போட்டுட்டு வா.. சரியாம்மா என கூற ….மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டாள். கூடவே இருந்து இவளது அப்பாவை அழைத்து கொண்டு கிளம்பி இருந்தனர் இருவரும்…
பத்து மணிவாக்கில் ராகவ் வர அவனோடு கிளம்பினாள். இப்போது கையில் எதுவும் எடுக்கவில்லை. போனை சுத்தமாக மறந்து இருந்தாள். லெகன்கா அவளுடைய நிறத்திற்கு அவ்வளவு பொறுத்தமாய் இருந்தது. உடுத்தியிருந்த உடையில் உள்ள கற்கள் மின்னியதில் ஏற்கனவே பிங்க் நிறத்தில் இருந்தவளை இன்னும் கலராக அவளை தேவதையாய் காட்டியது இன்னும் அழகாக….
ராகவுமே கோர்ட்சூட் அணிந்த படி வர சுமியுமே டேய் செமையா இருக்கற…
நீ கூடதான் ஏஜ்ஜல் என கூறியவன்.
இப்பவே லேட் சீக்கிரம் வா … அப்பவே இன்னும் கிளம்பலையான்னு போன் வந்துடுச்சி…இங்கே மண்டபத்திற்கு வர என்றும் இல்லாமல் விஐபிக்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.
என்னடா… இவ்வளவு கூட்டம்.
அதுதான் எனக்கும் தெரியலை. நிறைய பேரை கூப்பிட்டு இருப்பாங்க போல. உள் சென்றவர்கள் நிஷா விநாயக் இன்னும் சில நண்பர்கள் குழுமி இருக்க அவர்களோடு இணைந்து கொண்டனர் இருவரும். நிஷாவை பார்த்த ராகவ் வாவ்… அடுத்த ஏஜ்ஜல் நெருங்கி அணைத்து பின் நகர… அவளுமே நீலநிறத்தில் கற்கள் பதித்த நீண்ட தரை தொடும் அளவில் கவுன் அணிந்து இருந்தாள்.
நீ திருந்தவே மாட்ட ராகவ் சுமி அவனது முதுகில் அடித்தபடி வந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
ஏற்கனவே பணியாளர்கள் வந்த விஐபிகளுக்கு ஜூஸ் கொடுத்து கொண்டிருக்க இவர்கள் இருவரும் ஆளுக்கொரு டம்ளர்களை எடுத்து குடித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.
சற்று நேரத்தில் ராகவின் தந்தை பிரபாகர் அரங்கில் அமைத்து இருந்த சிறு மேடையில் ஏறியவர். வந்திருக்கும் அணைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இந்த நாள் எங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள். நான் எனது நண்பர் குமாரசாமி இணைந்து நடத்திய இந்த நிறுவனம் பெறும் வளர்ச்சியை அடைந்து உள்ளது. இந்நாளில் இன்னோரு சிறப்பு நண்பர்களாய் இருந்த நாங்கள் இன்று முதல் உறவிணர்களாக மாற உள்ளோம். எஸ் என்னுடைய மகன் ராகவிற்கும் என் நண்பனின் மகள் சுமித்ராவிற்கும் திருமணம் செய்ய இருவீட்டார்களும் முடிவு செய்து உள்ளோம்.
சொல்ல சொல்லவே ராகவ் சுமித்ரா இருவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். ராகவ் என்ன இது….
எனக்கும் தெரியலை. இரு வரேன் வேகமாக அவனது அண்னையை நோக்கி நடந்திருந்தான். அண்ணையிடம் பேசியவன் அதே வேகத்தில் இவளை நெருங்கி சுமி …
இப்ப எதுவும் பேச வேண்டாம். வீட்டுக்கு போய் பேசிக்கலாம். அம்மா கிட்ட சொல்லிவிட்டேன். வெறும் அலவுன்ஸ் மட்டும் தான். பயப்படாத. ஏதாவது பேசினா
இந்தன பேர் முன்னாடி ரெண்டு அப்பாவையும் அசிங்க படுத்தினா மாதிரி ஆகிடும். அடுத்த சில நிமிடத்தில் இவர்கள் இருவரையும் மேடைக்கு அழைக்க…
கூடவே இருக்கிறது மாலைகள் இருவருக்கும் போட்டு விட வந்தவர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி வாழ்த்த ஆரம்பித்தனர்.
சுமிக்கோ தீக்குள் நிற்பது போல் தகித்தபடி நிற்க சிரிப்பு என்பது சுத்தமாய் துடைத்து எடுக்கப்பட்டு இருந்தது முகத்தில்….
சற்று நேரம் பார்த்த ராகவ்… சுமி ஏன் இப்படி முகத்தை வச்சிட்டு இருக்கற.
எனக்குமே ஷாக் தான் அதுக்கு முகத்தில் காட்டணுமா. கொஞ்சம் சிரி …அவனை பொறுத்தவரையில் தீடின்னு சொன்னதால அதிர்ச்சி ஆகிட்டா… அவனுக்குமே புரியாத நிலை தான் அவளுக்கும் அவனுக்கும் உன்டான இந்த உறவு….ஆனாலும் தற்சமயம் அவளை தேற்றி எண்ணியவன்..
சுமி… இங்கே பாரு நாம முதல் தடவை கம்பெனி தொடங்கிய போது இதுமாதிரி தான் ரெண்டு பேருக்கும் மாலை போட்டு சேர்த்து நிற்க வச்சாங்க. இதே மாதிரி லெகங்கா தான் அப்பவும் போட்டு இருந்த… இப்பவும் அப்படிதான் நிக்கறோம். எல்லோரும் டென் இயர் சேலன்ஜ் போட்டோ போட்டா நாம டீவன்டி இயர் சேலன்ஜ் அப்டேட் பண்ணலாம். எங்கே சிரி ஒரு செல்பி….
அவன் சொன்னதை கேட்டதும் தானாய் சிரிப்பு வர இன்றுமே அந்த பழைய போட்டோவை பார்த்தாள் சிரிப்பு வரும் அவளுக்கு. ரெண்டு பேருமே அந்த புகைப்படத்தில் அவ்வளவு புன்னகையோடு நின்றிருப்பர். இவளுடைய கையை அன்றும் பிடித்தபடி அவ்வளவு அழகாய் போஸ் கொடுத்து கொண்டிருப்பான்.
அது போலவே கையை பிடித்தவன் எஸ் இது மாதிரி தான் என நான்கு ஐந்து போட்டோ எடுத்தவன் . சிரிச்சிட்டே இரு சுமி. நான் இருக்கிறேன். பார்த்துக்கலாம்…. அப்போது விநாயக்கோடு நிஷா மேடை ஏற….
கொஞ்சம் கூட யோசிக்காது ராகவை இழுத்து அணைத்தவள் ஐ மிஸ் யூ என்ற வார்த்தையோடு இரங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் களங்கிய கண்களோடு…. கூடவே விநாயக் அவளை சமாதானம் செய்தபடி நகர… வாசலின் அருகில் சென்றவள் ராகவை திரும்பி பார்த்து வழிந்த கண்ணீரை துடைத்தபடி நகர்ந்தாள்.
அவளது செய்கை ராகவிற்கு ஏதோ புரிவது போல் தோன்ற போகும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…