ஆறு மணியை தாண்டி இருக்க தனா…தனா என்ற குரலோடு அவனது வண்டியை வீட்டின் முன்பு நிறுத்தியவன் தந்தையை தேடி வீட்டின் உள் நுழைந்தான். அந்த கால வீடு எளிமையை பறை சாற்றியபடி இருந்தது. முன் புறம் நீண்ட திண்னை
அதை தாண்டியவுடன் பெரிய வராண்டா ஒன்றும் ஒரு புறம் சிறிய சமையலறையும் அதே எதிர் புறத்தில் இரண்டு படுக்கை அறையும் இருந்தது.
ஏற்கனவே திண்னையில் பதினைந்து மாணவர்கள் அன்றைய பாடத்தை படித்து கொண்டிருக்க இவன் அறிமுக புன்னகையை சிந்தியபடி உள் நுழைந்தவன் முன் புறம் அவனது தந்தை இல்லாதிருக்க வீட்டின் பின் புறம் தேடி போனான். மறுபடியும் தனா என்ற கூவலோடு….
அங்கே இவனின் சாயலில் எழுபது வயதை நெருங்கி இருந்தவர்
பின்புறம் இருந்த தோட்டத்திற்கு
தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அவரது ஆரம்ப நாட்களின் சேமிப்பில் வாங்கிய இடம் இது. இன்றைய நாளில் பத்து செண்ட் இடம் என்பது
பலரது கனவு. பின்புற தோட்டத்தில்
கொய்யா வாளை முருங்கை என மரங்கள் கூடவே சிறு தோட்டத்தில் கீரை வீட்டுக்கு தேவையான காய்கறிகளை விதைத்திருந்தார்.
குரு ஏன் வரும்போதே இப்படி கத்திகிட்டு வர்றே. இங்கே தானே இருக்கிறேன்.
தனா… உங்க ஸ்டூடெண்ட்ஸ் எல்லோரும் வந்தாச்சு. நீங்க பொறுப்பே இல்லாம இங்கே இருக்கறிங்க. மாலை நேரத்தில் சிறு தொகையை வாங்கி கொண்டு டியூசன் எடுத்து கொண்டிருந்தார். சில நேரங்களில் இவனுமே வந்து டியூசன்
எடுப்பதும் வழக்கம் தான்.
குரு இந்த பசங்களுக்கு கொய்யா பறிச்சி கொடுக்கலாம்ன்னு வந்தேன்.
நீ என்ன இன்றைக்கு சீக்கிரமே வந்துட்ட.
ஆறு மணியை தாண்டியாச்சு. எங்கே சீக்கிரம் வந்தேன். நீங்க உள்ள வாங்க. நான் இந்த வேலையை பார்த்துக்கறேன்.
குரு நான் சொல்லறதை கேட்கறயா….
என்ன…. இன்றைக்கு தனாவுக்கு என்ன ஆச்சு. பேச்சே சரி இல்ல.
நீ இங்கே பக்கத்தில் டியூசன் சென்டர் ஆரம்பிடா. வெளியில் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். உன் குணத்துக்கு அது சரி வராது. பயந்து பயந்து இருக்க முடியல. நீ சின்னதா எல்லாம் வேண்டாம். பெருசா ஆரம்பி . நான் பணம் தர்றேன். என்னடா….
ஏற்கனவே கையில் அடிபட்டது முதலே இதையே தினமும் சொல்லிக்கொண்டு இருந்தார். சீராய்ப்பு காயம் இப்போதுதான் லேசாக ஆற ஆரம்பிக்க பார்ப்பதற்கு தோல் உறிந்து இன்னும் விகாரமாக சற்றே காயத்தின் அளவு அதிகமாக தெரிந்தது. டாக்டர் கிட்ட போனியா…
வரும் போது பார்த்துட்டு தான் வந்தேன் பா. நீங்க உள்ள வாங்க. நான் தோட்டத்திற்கு தண்ணீர் விட்டுவிட்டு வரேன்.
இல்லடா. காலையில் பார்க்கலாம். நீ வா உனக்கு காபி கலக்கறேன்.
தண்ணீரில் முகம் கழுகியவன். ஏம்பா… இன்றைக்கு ரொம்ப டல்லா தெரியற. என்னஆச்சு.
உனக்கு காயம் ஆனதில் இருந்தே மனசு சரி இல்லடா. உன் அம்மா இருந்து இருந்தா இந்த மாதிரி ஆக விட்டு இருக்க மாட்டாலோன்னு….
தனா… அம்மா இருந்தாலும் இதுதான் நடந்து இருக்கும். சரியா உள்ள வாங்க. நானும் துணியை மாத்திட்டு
உன் கூட உட்காருறேன். நீ டியூசன் எடுக்கறத நானும் இன்றைக்கு பார்க்கிறேன்.
எதுக்கு. .. பசங்க போனதும் கிண்டல் பண்ணவா…
கிண்டல் பண்ணிட்டாலும். நீ அப்படியே பயப்படற ஆளு தான். பேசியபடி தனது அறைக்கு நுழைந்தவன் தனது முழுக்கை சட்டையை கலட்ட ஏற்கனவே சிராய்ப்பு காயத்தினால் லேசாக பட்டதும் வலி சுல்லென இழுத்து பிடித்தது. வலியில் முகம் சுருக்கியவன் அன்று ராகவ் பேசியது கண்முன் வந்து போனது.
கண்ணாடி முகம் பார்த்தபடி ராகவ் தானே பேர் சொன்ன. உன் கை கூட சரி ஆகி இருக்காதுல்ல. குரு உனக்கு நிறைய கோபம் வருது. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ.. நீ அவன அடிச்சது தனாவுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான். நீ தீர்ந்த. அவனே உன் மேல ஏத்த கூடாதுன்னுதான் ப்ளாட் பாரத்தில் ஏத்தினேன்னான். நீ தான் அடிச்சிட்ட..
அவனது மனசாட்சியோ வளைச்சி வளைச்சி வண்டி ஓட்டினா… அடிக்கலாம். தப்பு இல்ல… பெருசா என்ன பண்ணிடுவான் …பார்த்திருக்கலாம் விடுடா…
ஒரு ஷாட்ஸ் கையில்லாத டீசர்ட்டோடு வெளியேறினான். தந்தையை தேடி வந்தவன் அன்று அப்போது மட்டும் அல்ல மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது தொடங்கி ..இரவு உணவு உண்ணும் போதும் வரை தனாவை சிரிக்க வைத்து கொண்டே இருந்தான். அவர் தூங்கும் வரையிலுமே கூடவே இருந்தவன் அதன் பிறகே தனது அறைக்கு தூங்க சென்றான்.
தொடரும்.