ராகவ் என்ன சொல்ல இவனை பற்றி
முதன் முதலாய் பார்த்தது எப்போது
தத்தி நடந்த அந்த நாட்களில் கை பிடித்து நடந்தவன். ஒரு நிமிடம் கூட இவளை விலகாமல் பார்த்துக்கொண்டவன். இவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஏதோ ஒரு இடத்தில் இவனது நினைவும் கூடவே வரும்.
தாய் இறந்ததும் இங்கு அழைத்து வர
பார்த்த அந்த நிமிடம் முதல் சுமிக்கு எல்லாம் ஆகி போனவன். எந்த இடத்திலும் இவளை விட்டு தராதவன். இருவரும் ஒரே பள்ளியில் பயில
காலையில் கை பிடித்து அழைத்து போன நிமிடம் முதல் மாலை வருகையில் அழைத்து வருவது கை பிடித்து எழுத சொல்லி தருவது என அனைத்திலும் சுமியோடு கலந்தவன்.
ஒருவர் முகம் பார்த்தே அத்தனையும் கூறிவிடும் திறமை இருவருக்கும் உண்டு. இவனுக்கு பயந்தே யாரும் சுமியிடம் வம்பு வைத்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு
கூட படிக்கும் அத்தனை பேரையும் பயமுறுத்தி வைத்திருந்தான்.
இவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது இவள் பத்தாவது படிக்கும் போது இவன் காலேஜ் சேருவதற்கு முன்பு இவளது கிளாஸ் ரூம்பிற்கு வந்தவன்…. நான் இல்லைன்னு யாராவது சுமிகிட்ட வம்பு பண்ணினிங்கன்னு தெரிஞ்சுது
யோசிக்க மாட்டேன் பார்த்த இடத்துல தூக்கி போட்டு மிதிப்பேன்.
இவள் படித்து முடிக்கும் வரையிலுமே யாரும் இவளிடம் வம்பு வைத்து கொண்டதில்லை. இவள் காலேஜ் அடி எடுத்து வைக்க அவன் மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்ல ரெடி ஆகி கொண்டிருந்தான்.
சுமி பேசாம நீயும் என் கூட வந்துவிடு…
அங்க வந்து மேல படி…
எதுக்கு அங்கேயும் வந்து எல்லோரையும் மிரட்டுவ. நான் அப்பாவை விட்டு எங்கேயும் வர மாட்டேன். நீயே போய்க்கோ…
வரலைன்னா போ…. சரியான அப்பா பைத்தியம்.
இருந்துவிட்டு போறேன். அப்பாவுக்கு நான் தான் உலகம். அவங்கல எப்பவும் தனியா விட மாட்டேன்.
ஆர். எஸ் குழுமம் துவங்கிய நாளில் இருந்தே உள் வேலைகளை குமாரவேல் கவனித்து கொள்ள ஏற்றுமதியை பிரபாகரன் கவனித்து கொண்டார். ஆர்டர்கள் பொறுத்து ஹோட்டலில் விருந்து வைப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார் ஆரம்பத்தில் இருந்தே ….பிரபாகர்.
அப்படி ஆரம்பித்தது இன்று மது விருந்து குடுப்பது என வளர்ந்து இருந்தது கூடவே தொழிலும்…
குமாரவேல் பொறுத்த வரையில்
நீட் பர்சன். எந்த விருந்திலும் கலந்து கொண்டதில்லை. ஏன் சென்றது கூட இல்லை. பிரபாகரிற்கு இவர் கூறும் அதிகபட்ச அறிவுரை இப்படி செலவு செஞ்சு ஆர்டர் புடிக்கணுமா என்ன….
வாரம் இரண்டு பார்டிகளை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ ராகவிற்கு எதுவுமே தப்பாய் தோன்றியதே இல்லை. அமெரிக்கா சென்றதும்
சுமதிக்கு அணுப்பியதே பார்ட்டியில் நடனமாடிய அந்த விடியோவை தான்.
உடனே அழைத்து கூறியது இதை தான். எந்த பிரச்சனையிலேயும் சிக்கிடாத ராகவ்…
சுமி எனக்கு என்னோட எல்லை தெரியும். சோ நீ பயப்பட தேவையே இல்ல.
படிப்பை முடித்து வந்தவன் இவளை பார்த்ததும் மகிழ்ச்சியில் அணைக்க வந்தவனை….
டேய் நில்லுடா. என்ன பண்ண போற…
நீ படிக்க தான் போன. அங்கத்த பழக்கம் இங்கே வேண்டாம். அங்கேயே நில்லு …
பாட்டியம்மா… மறந்துவிட்டேன். இவள் எப்போது அவர்களது வீட்டிற்கு போணாலும் எங்காவது பிரபாகர் மீரா
இருவரும் சென்றிருக்க அங்கு செல்வதை வெகுவாக குறைத்திருந்தாள். ராகவ் வந்ததும்
மறுபடி போக ஆரம்பிக்க சமீபத்திய அவனது நடவடிக்கைகளினால் போவதை நிறுத்தி இருந்தாள்.
ஏதாவது அவசரம் எனில் அவனிடம் செல் பேசியில் பேசிவிட்டு போவதை வழக்கத்தில் வைத்திருந்தாள். இதோ இப்போதும் யோசித்து கொண்டிருந்தாள்.
இது சரியாக வருமா என… ஏய் சுமி
நீ எதுக்கு இல்லாத மூளைய வச்சி யோசிக்கற. ஏதா இருந்தாலும் அவனே யோசிக்கட்டும். உன்னை அழு மூஞ்சி சொன்னான்ல. நாளைக்கு வரேன்டா
உன்னை கதற விடலை….. யார் அழுமூஞ்சின்னு அப்புறம் பார்க்கலாம்.
ஆனால் அடுத்த நாள் அவனை பார்க்கும் போது தான் நினைத்தது எதுவும் நடக்காமல்
தானே புதியதாய் ஒரு பிரச்சனைக்குள் நூழைய போவதை அப்போது அவள் தெரிந்திருக்கவில்லை. அதனால் நடக்க இருக்கும் மாற்றம் எதுவுமே அப்போது அவள் உணர வில்லை.
ஒரு வேளை முன்பே தெரிந்திருந்தால்
மறுத்திருப்பாலோ…
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…