சுமித்ரா
இருபத்தி மூன்று வயது அழகு புயல். ஆனால் பழக தென்றலை போன்றவள் .தற்சமயம் தூக்கி கட்டிய குதிரை வாலோடு முழுநீள பர்மிடாஸ்
கழுத்தோடு கவர் செய்த டீ சர்ட் என நின்றிருந்தாள் அவளது அறையில். ..
ஆர். எஸ் குழுமத்தின் ஏக போக ராணி. ஆவளது ஐந்தாவது வயதில் இரண்டு நண்பர்கள் இணைந்து துவங்கிய அந்த நிறுவனம் இன்று கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை
தந்து கொண்டிருந்தது. இவர்கள் கால் பதிக்ஙாத துறை இப்போது இல்லை என கூறும் அளவிற்கு முன்னேறிக்கொண்டு இருந்தார்கள்.
இரும்பால் ஆன தொழில் இவர்களது. சிறு போல்ட் நட்டிலிருந்து
கட்டில் பிரோ என அனைத்தும்…
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் இவர்களது கிளைகள் இருந்தன. தற்சமயம் மர வேலைகளும் புதிதாய் துவங்கி ஏற்றுமதி செய்தனர் வெளி நாடுகளுக்கு… தொழில் துவங்கிய சில வருடங்களில் வாங்கிய இந்த இடம் இன்று முன்று மாடி கட்டிடமாய் வளர்ந்து இருந்தது. நண்பர்கள் இருவரும் அடுத்த அடுத்த இடங்களில் வீடு கட்டி இருந்தனர். ஆளுக்கு பத்து செண்ட் இடத்தில் சுற்றிலும் தோட்டத்தோடு நடுவில் வீடு என…ஓரே மாதிரி ஒரே அமைப்போடு…
கையில் அன்றைய நாளிதழை வைத்தபடி யோசித்து கொண்டிருந்தாள். சற்று தொலைவில் பார்க்க இவளது அறைக்கு நேர் எதிராக அடுத்த வீட்டில் அசைவு தெரிந்தது நிழலாக…கையில் செல்பேசியை எடுத்தவள் அழைக்கும் நண்பரை அடித்து போனின் ஆன் பட்டனை தட்டப்போக….. கதவு தட்டும்
ஓசை கேட்கவும் கையில் இருந்த மொபைலை கட்டிலின் மேல் வீசியபடி கதவை திறந்தாள்.
வெளியே இவளது தந்தை குமாரவேல்
நின்றிருந்தார் சிரித்தபடி…. உள்ளே வரலாமா என்ற கேள்வியோடு…
அப்பா…. உள்ளே வாங்க. ஏதாவது புது அக்ரிமெண்டுக்கு சைன் போடணுமா….
ஆக உன்னை பார்க்க வந்தா கையெழுத்து வாங்கதான் வருவேன்னு முடிவே பண்ணிட்ட…
இல்லைப்பா. இந்த நேரம் வர மாட்டிங்களே. என்ன விஷயம் பா ..
இதுவும் ஒரு மாதிரி ஆக்ரிமெண்ட் தான். நீ தான் முடிவு பண்ணனும்.
உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன். நீ தான் இது சரி வருமா இல்லையான்னு சொல்லணும். எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. நீ சரின்னு சொல்லணும்ன்னு கட்டாயம் இல்ல. உனக்கு சரின்னு பட்டா மட்டும் தான் எல்லாமே உன் முடிவு தான். நானே முடிவா சொல்லிவிட்டேன். சுமிக்கு விருப்பம் இல்லன்னா யாரும் எதுவுமே பேச கூடாதுன்னு…
அப்பா இந்த அளவு குழப்பத்துக்கு….
அப்படி யாருப்பா ஒரே நாள்ல குதிச்ச மாப்பிள்ளை… எனக்கு உங்க பக்கத்தில் இருக்கணும்பா. அதுக்கு சரிண்ணா யாராவது இருந்தாலும் ஓகே தான்.
பிரபா தான் கேட்டான் ராகவிற்கு….நமக்கு தெரிஞ்ச பையன். இப்ப கொஞ்ச நாளா சரி இல்ல. ஆனால் தப்பா எதுவும் சொல்ல முடியாது. நீ தான் முடிவு சொல்லணும். பிரபா கிட்ட தெளிவா சொல்லிட்டேன். அவளுக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான்னு… என்ன சொல்ல நான் அவங்களுக்கு…..
ஆக நீ இனிமே இங்கே இருக்க வேண்டாம். பக்கத்து வீட்ல போய் இருன்னு சொல்லறிங்க… அப்பா எனக்கு…. ராகவ்விற்கு தெரியுமா…. நான் ராகவ் கிட்ட பேசிவிட்டு பதில் சொல்லட்டா.
இன்னும் தெரியாதுடா. உன் முடிவு கேட்டுட்டு அவன் கிட்ட கேட்க போறதா சொல்லி இருக்கிறான்.
சரிப்பா. நாளைக்கு சொல்லறேன். அவர் வெளியேறவும் கையில் இருந்த பேப்பரை பிரிக்க அதில் தடுமாறும் இளைய சமூகம் என்ற தலைப்பில்
வெளிவந்திருந்த அந்த நீயூஸை பார்த்தாள். ஐம்பது பேர் சேர்ந்த ஓட்டு மொத்த குரூப் போட்டோ ஒன்று. கையில் மது கோப்பையை ஏந்தியபடி
ராகவின் புகைப்படம் ஒன்று நிஷாவின் தோலில் கைபோட்டபடி ஓன்று ரகளை செய்த போது எடுத்த புகைபடம் ஒன்று என சில படங்கள் இடம் பெற்றிருக்க… நான்காம் பக்கத்தில்
பிரபல தொழிலதிபர் மகன் குடி போதையில் வண்டி ஓட்டி பிளாட்பாரத்தில் வண்டி மோதியது அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்ற தகவலோடு….
யோசிக்காமல் நம்பரை தட்ட எதிர் புறம் எடுத்தவன் என்ன அழுமூஞ்சி இப்ப போன் பண்ணற…
டேய்… ராகவ் அழுமூஞ்சி சொல்லாதன்னு நிறைய டைம் சொல்லிவிட்டேன். வந்தா பிச்சிடுவேன்….
நீ தேவதைமா. எப்ப வர்ற.. பார்த்து ரெண்டு வாரம் ஆச்சுன்னு நினைக்கறேன்.
நீதான் வாரமெல்லாம் ஆபீஸ் போயிடறே. சனிக்கிழமை பார்ட்டி. ஞாயிற்றுக்கிழமை ஃபுல்லா தூக்கம்
அப்புறம் எப்படி பார்க்கறதாம்.
ஆபீஸ்க்கு வான்னா வர்றியா. ஈக்குவல் பாட்னர்மா ரெண்டு பேரும்
நான் உன்னை ஏமாத்திட்டா…
யாரு … நீ…சிரிக்க வைக்காத… அப்புறம் உன் கிட்ட பேசணும் எப்ப வரலாம்.
இப்ப வேணும்னாலும் வா. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.
நாளைக்கு வர்றேன். ஆபீஸ்க்கு எத்தனை மணிக்கு போவ…
லீவு தான் ரெண்டு நாளைக்கு….. காலையில் வா சுமி….
பை ராகவ் என்ற வார்த்தையோடு கட் செய்தவள் அவனின் நினைவில் ஆழ்ந்து போனாள்…
தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…