“என்னடா ரொம்ப சந்தோஷமா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்க போல”
“ஆமாடா. ஏழு வருசமா அவளுக்காக தேடி தேடி சேகரிச்ச பொருளெல்லாம் கொண்டுபோய் கொடுக்க வேண்டாமா???”
“அத்தனையும் தூக்கிட்டு போக முடியுமான்னு யோசிச்சயா? அடுத்த தடவை பாக்க போகும் போது மீதத்த எடுத்துட்டுபோலாமேடா”
” அவள பாக்க போறேன். மறுபடியும் பார்ப்பனா மாட்டானானு தெரியல. எதாவது விட்டுட்டு போயிட்டு திரும்பி கொடுக்க முடியலானா அதுவே என்னைய கொன்னுடும். அதான் எப்படியாவது எல்லாத்தையும் தூக்கிட்டு போலாம்னு ப்ளான் பண்ணிட்டேன்”
“சரிடா. இதெல்லாம் அவளால தூக்கிட்டு போக முடியுமான்னு யோசிச்சயா. நீ தூக்கிடுவா.. மாட்டுபய நீ. ஆனா அவ…”
“நான் தூக்கிகிட்டு போயி வீட்ல வச்சிட்டு வருவேன். போடா..”
“ஓகே.. ஓகே… மொத்த காதலையும் கண்ணீரில சொல்லாம முத்தத்தில சொல்லிடு வா”
வெட்கத்தில் சிரித்துக்கொண்டே சேகரித்த பரிசு மூட்டையை தூக்கிக்கொண்டு இத்தனை வருட பாசத்தையும் கனவுகளையும் சுமந்தபடி மகிழ்ச்சியில் கிளம்பினார் அந்த தந்தை தன் முகமறியா மகளின் முகம் காண.
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…