தேவை:
ப. அரிசி : 1கப் (200கிராம்)
பு. அரிசி : 1கப் (200கிராம்)
துவரம் பருப்பு : 1 கப் (200கிராம்)
உளுந்து : 2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் : 10
காய்ந்த மிளகாய் : 5
ப.மிளகாய்: 3
மிளகு : 8
சீரகம் : கால் தே.கரண்டி
தேங்காய் : கால் முடி
கருவேப்பிலை : ஒருகொத்து
பெருங்காயம், உப்பு சுவைக்கேற்ப
இது ரொம்ப சீக்கிரமா செய்யலாம் ஒரு அரைமணிநேரம் போதும்.
அரிசி பருப்பு ஒன்றாக சேர்த்து நன்கு களைந்து 25 நிமிடம் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் அரிசி பருப்பு, 2 மிளகாய் வகை, தேங்காய், வெங்காயம், மிளகு சீரகம், க.வேப்பிலை, உப்பு பெருங்காயம் எல்லாம் சேர்த்து
நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை வார்க்கலாம்.
இதை சூடாக சாப்பிட மிக மிக நன்றாக இருக்கும்..
குறிப்பு:
1.நான் இரண்டு அரிசியும் சமமாக சொல்லி இருக்கிறேன். ப.அரிசி அரைகப், பு. அரிசி 1.5 கப் போட்டாலும் நன்றாக இருக்கும்.
- உளுந்து சேர்ப்பது தோசையின் வர வரப்பை தவிர்க்க. மேலும் ஆறிய பிறகு காய்ந்து போனது போன்று இல்லாமல் இருக்க.
- தேங்காய் துருவி சேர்த்து அரைக்காமல் பல்லு பல்லாக நறுக்கி தோசை வார்க்கும் போது சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.
4.ப.மிளகாய், கா. மிளகாய் மிளகு மூன்று வேண்டாம் என்றால் வெரும் காய்ந்த மிளகாய் 10 மட்டும் கூட உபயோகிக்கலாம்.
5.சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் 1 சேர்க்கலாம். வெங்காயம் தவிர்த்தும் அரைக்கலாம்.
- வேர்க்கடலை சட்னி பொருத்தமாக இருக்கும்.