உள்ளே நுழைந்த ஸ்ருதியின் பார்வை முதலில் விழுந்தது அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்த மகிழ்வேந்தனின் மீது..
வயதான ஒருவரை எதிர்பார்த்து வந்தவள்… அங்கே இருந்த அழகான கம்பீரமான 6 அடி ஆண் மகனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை… அதுவும் கே.கேவை அவள் சத்தியமாக அங்கே மகிழ்வேந்தனாக எதிர்பார்க்கவில்லை என்று அவளது விழிகள் கூறியது…
அதற்கும் அடுத்து அவள் பார்வை அவன் அருகில் நின்று இருப்பவனிடம் திரும்ப .. அங்கே ரகுராம் அவனது விழிகளில் காதல் , தவிப்பு , கவலை, பயம் என அத்தனை உணர்வுகளையும் தாங்கிக்கொண்டு ஸ்ருதியை பார்த்து கொண்டு இருந்தான்….
ஆனால் அதற்கும் நேர்மாறாக ரகுவை பார்த்த ஸ்ருதியின் கண்களில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வெறுப்பு தென்பட்டது… அவளது கண்கள் என்ன உணர்வு சற்று முன் வெளிப்படுத்தியது என்று அவள் எதிரே இருந்த இருவரும் ஆராய்வதற்குள்… தன் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமல் வெறுமையாக மாற்றி இருந்தாள்….
அரை நொடிக்குள் அவளின் முக மாற்றங்கள் நடந்து முடிந்திருக்க அதை ஒரு ஜோடி கண்கள் தவறாமல் உள்வாங்கி இருந்தது…
“உட்காருங்க ஸ்ருதி” என்று மகிழ்வேந்தன் கூற அவனுக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள்..
“ரகுராம் யூ டூ பிலீஸ் பி சீட்டெட்…” என வேந்தன் கூற ரகு ஸ்ருதிக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்….
“ஸ்ருதி இவர் ரகுராம்… இந்தியன் டைம்ஸ்ல ஜெர்னலிஸ்ட்டா இருக்காரு… அவன் பக்கம் திரும்பிய ஸ்ருதி… வணக்கம் மிஸ்டர் ரகுராம்” என்று அழகாக கைகளைக் குவித்தாள்… தலை அசைவுடன் அவள் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன்.. அவளுடைய முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்… பாவம் அவனுக்கு விடை என்னவோ பூஜ்யம் தான் கிடைத்தது…
“ஸ்ருதி… இந்தியன் டைம்ஸ்ல கர்நாடிக் மியூசிக் பற்றி ஒரு கட்டுரை போட முடிவு எடுத்து அதுக்கான யங் டலேண்ட்ஸ் பற்றி ரீசேர்ச் செஞ்சப்போ உங்களை பத்தி தெரிஞ்சு இருக்கு… உங்களோட இசை வாழ்வை பற்றியும் கர்னாடிக் மியூசிக் பற்றியும் உங்ககிட்ட இன்டெர்வியூ எடுக்கணும்னு சொன்னாரு… அதான் உங்களை பார்க்க வர சொன்னேன்” என்று கூறி முடிக்க…
“சாரி மிஸ்டர் மகிழ்வேந்தன் … எனக்கு இதுல இஷ்டம் இல்ல … இதுக்கு தான் வர சொல்லி இருந்தீங்கன்னா நான் இப்போ கிளம்பறேன்.. “என்று கூறி இருக்கையில் இருந்த அவள் ஏழ…
“ஏன் இவ்ளோ அவசரம் சுருதி… நம்ம காண்ட்ராக்ட் பற்றி பேச தான் நான் உங்கள முக்கியமா வர சொன்னேன்… வெயிட் பண்ணுங்க எனக்கு இப்போ ரொம்ப முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு… நான் அது முடிஞ்சதும் ஒரு 20 நிமிஷத்துல வரேன் …. அது வரைக்கும் இங்கயே வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு ரகுவிடம் திரும்பியவன் “ஐ அம் சாரி ரகுராம்… ஷீ இஸ் நாட் இன்ட்ரெஸ்டட்… நீங்களே வேணா நான் மீட்டிங் முடிச்சு வரதுக்குள்ள அவங்ககிட்ட பேசிப் பாருங்க … அவங்க ஒத்துக்கலாம்…” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்….
வெளியேறிய மகிழ்வேந்தனின் மனதில் … ஸ்ருதி ரகு மீது செலுத்திய வெறுப்பான பார்வையை இருக்க… மீட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் வேறு அறைக்குள் நுழைந்தான்….
மகிழ்வேந்தன் அந்த அறையை விட்டு சென்றவுடன் … அங்கே பலத்த நிசப்தம் நிலவ…. அதை கலைக்க நினைத்து ரகு பேச ஆரம்பித்தான்…
“ஸ்ருதி இன்னும் என் மேல கோவமா தான் இருக்கியா?”
“கோவமா? எனக்கா? அதுவும் உங்க மேலயா?
5 நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த உங்க மேல நான் ஏன் ரகுராம் சார் கோபப்பட போறேன்….”
“ஸ்ருதி நான் பண்ணுனது எல்லாமே தப்பு தான்… என்ன மன்னிச்சுரு.. ப்ளீஸ் இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருப்ப? அங்கே அப்பா அம்மா எல்லாம் நீ பேசாததால மனசு உடஞ்சு போய் இருக்காங்க…. அவங்களுக்காகவாது எல்லாத்தையும் மறந்துட்டு வா ஸ்ருதி…. “
“தப்பா? நீ பண்ணுனதுக்கு பேரு துரோகம்…
மறந்துட்டு வரதா? எதை மறக்கறது? சொல்லு எதை மறக்க சொல்ற? என்னோட அப்பாவும் அம்மாவும் உன்னால செத்து போனங்களே அதை மறக்க சொல்றியா? அப்புறம் என்ன சொன்ன?
உன்னோட அப்பா அம்மா மனசு வருத்தப்படுதா?
அவங்களும் நீ செஞ்சது அத்தனையும் பார்த்துட்டு சும்மா தானே இருந்தாங்க…உன்னை எதுவும் சொல்லலேயே…அப்போ அவங்க நீ செஞ்சதை எல்லாம் தப்புன்னு சொல்லி இருந்தா நான் இன்னைக்கு அனாதையா இருந்து இருக்க மாட்டேன்….
உன்னையும் உன்னோட பெத்தவங்களையும் நான் என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்… உங்க மூஞ்சில எல்லாம் முழிக்க கூடாதுன்னு தான் நான் என்னோட நாட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேன்… இனிமேலும் என்ன பார்க்க வந்தேனா நான் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்….”
“ஸ்ருதி என்னவோ நான் மட்டும் தான் தப்பு பண்ணுன மாதிரி பேசாத..
அந்த முகுந்தனும் தான் இதுக்கு எல்லாத்துக்கும் காரணம்… அவன் எங்கே உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுருவானோன்னு தான் நான் அப்படி பண்ணுனேன்…
நியாப்படி பார்த்தா நீ அவன் மேல தான் கோபப்படனும்…. ஆனா நீ அவனை மணிச்சுட்ட….. சொல்லு இதுக்கு என்ன அர்த்தம்? இன்னும் உனக்கு அவன் மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கா?”
“சீ… நீ திருந்தவே மாட்ட… இப்போ கூட உனக்கு சந்தேகம் தான்…
உன்னோட இந்த சந்தேக புத்தியால தான் நான் இன்னைக்கு இப்படி தனியா நிக்கறேன்…
நான் முகுந்தை மன்னிச்சது உண்மை தான்… ஏன்னா முகுந்த் என்ன லவ் பன்னுணதை தவிர வேற எந்த தப்பும் செய்யல… அதை தப்புன்னு கூட சொல்ல முடியாது…
அவருக்கு என்ன பிடிச்சு இருந்தது அதை என்கிட்ட சொன்னாரு…
ஆனா நான் அவரை ஒரு நல்ல ப்ரெண்ட்டா தான் பார்த்தேன்… அதை நான் அவர்கிட்ட தெளிவா சொன்ன பிறகும் என்னோட லவ்வுக்காக நிறைய போராடினாரு….
ஆனா அதுக்காக அவரு அவரோட எல்லையை என்னைக்கும் மீறுனது இல்லை…. இன்னும் கொஞ்ச நாள் நீ எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்திருந்தா நான் அவருக்கு புரிய வெச்சு இருப்பேன்..
ஆனா அதுக்குள்ள நீ என் மேல சந்தேகப்பட்டு என்னோட வாழ்கையையே நரகமா மாத்திட்ட…. நான் எவ்ளோ உன்கிட்ட எடுத்து சொல்லியும் கேட்காம அத்தனை பிரச்சனை பண்ணி கடைசியா என்னோட அப்பா அம்மாவையும் என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட…” என்று கூறியவள் அந்த நாளின் நினைவுகளுக்கு சென்றாள்…
“ரகு அத்தான்…. நான் சொல்றத தயவு செஞ்சு கேளுங்க … நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்களை ஏமாத்தல..
முகுந்த் என்கிட்ட அவரோட காதலை சொன்னது உண்மை தான்… ஆனா நான் அவரை ஒரு நல்ல நண்பனா தான் பார்த்தேன் அத்தான்… இதை நான் அவர்கிட்டயே தெளிவா சொல்லிட்டேன்…
நீங்க என்னோட வாங்க… நம்ம முகுந்க்கிட்ட பேசலாம்….
அவரே சொல்லுவார்…. பிளீஸ் நான் சொல்றதை நம்புங்க அத்தான்…”
“நீ சொல்றதை கேட்க அந்த முகுந்த் மாதிரி ஒரு மடையனை பாரு… “
என்று கூறிவிட்டு ஸ்ருதியின் தந்தைக்கு அழைத்தான்…
“அத்தை மாமா நீங்களாவது சொல்லுங்க… ப்ளீஸ்….” என்று இவள் ரகுவின் பெற்றோரிடமும் கெஞ்ச அவர்கள் ரகுவின் கோபத்திற்கு பயந்து பேசாமல் நின்றுக்கொண்டனர்….
சுந்தரம் காயத்திரியுடன் சுருதியின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க காரில் சென்றுக்கொண்டு இருந்தவர்… ரகு அழைப்பதை பார்த்து உடனே அழைப்பை ஏற்று…
“சொல்லுங்க மாப்பிள்ளை….” என்றார்….
“மாப்பிள்ளையா ? அப்படி என்னை கூப்பிடாதீங்க மாமா… “
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? என்ன ஆச்சு? தீடீர்னு ஏன் இப்படி பேசறீங்க?”
“உங்களோட செல்ல பொண்ணு அவளே உங்களுக்கு வேற மாப்பிள்ளையை பார்த்துட்டா…. அவனை போய் கொஞ்சுங்க….
இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல தான் நான் போன் போட்டேன்…
ஆனா என்னை நம்ப வெச்சு கடைசில ஏமாத்திட்டீங்கல்ல…. எப்படி கல்யாணத்தை நடத்தறீங்கன்னு நானும் பாக்கறேன்… இனி எப்படி தலை நிமிர்ந்து நடக்கறீங்கன்னும் பாக்கறேன்…”
“என்ன மாப்பிள்ளை என்னென்னவோ சொல்றீங்க? எனக்கு மனசு எல்லாம் அடிச்சுக்குது…. என் பொண்ணு எந்த தப்பும் செஞ்சு இருக்க மாட்டா….நான் அவளை அப்படி வளர்க்கலைப்பா…” என்று பேசிக்கொண்டு இருந்தவர் நெஞ்சை பிடித்துக்கொள்ள….
“என்னங்க….. என்ன ஆச்சு? என்ன பண்ணுது?
ஹயோ நெஞ்சு வலிக்குதா சொல்லுங்கோன்னா…” என்று காயத்ரி கதறினார்….
அவரது கதறல்கள் எதுவும் அவரது காதில் விழாமல் போக… அவர் ஒட்டிக்கொண்டு இருந்த காரும் அவரது கட்டுப்பாட்டை இழந்து…
இங்கே ரகுவோ காயத்திரி கத்த ஆரம்பித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் செய்த தவறு அவனுக்கு புரிய ஆரம்பித்தது… இவை அனைத்தையும் கேட்க கேட்க அவனுடைய முகம் பதட்டம் அடைய…
ஸ்ருதி ரகுவின் போனை பிடிங்கி தன் காதில் வைத்தால்…
தன் அம்மாவின் கதறல்கள் அவள் காதில் விழுந்தது….
“அம்மா…. அம்மா….. என்ன ஆச்சும்மா… பேசும்மா….அப்பாக்கு என்ன ஆச்சு?எங்கே இருக்கீங்க?”என்று இவள் கேட்டுக்கொண்டு இருக்க இருக்க… அங்கே கட்டுப்பாட்டை இழந்த அவர்களது கார் தடம் புரண்டு… விபத்துக்கு உள்ளானது….
“ஸ்ருதி ஸ்ருதி ….” என்று ரகு அவளை அழைக்க…
“இன்னும் எங்கே அம்மா கதறனுனது என்னோட காதுல கேட்டுட்டே இருக்கு தெரியுமா? எல்லாத்துக்கும் உன்னோட சந்தேக புத்தி தான் காரணம்… தயவு செஞ்சு என்னோட கண்ணு முன்னாடி நிக்காத… போய்டு…. நான் உன்னை என்ன பண்ணுவேணு எனக்கே தெரியாது” என்று ஸ்ருதி பைத்தியம் பிடித்தவள் போல் கத்த….
இவர்கள் இருவர் பேசுவதையும் வேறு ஒரு அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த மகிழ்வேந்தன் ஸ்ருதி தன் கட்டுப்பாட்டை இழந்து பேசுவதை கேட்டு வேகமாக அவர்கள் இருக்கும் அறைக்கு விரைந்தான்….
கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஸ்ருதி அமைதியாக….
உள்ளே நுழைந்தவனின் பார்வையோ ஸ்ருதியை விட்டு இம்மியும் அசையவில்லை….
நேராக சென்று தன் இருக்கையில் அமர்ந்தவன் ரகுவிடம்…
“ரகுராம் ஐ திங்க யுவர் டைம் வாஸ் ஓவர் … இட்ஸ் மை டைம்…. டூ டாக் வித் ஸ்ருதி… சோ நைஸ் டு மீட் யூ….” என்று கை கொடுக்க…
வேந்தனுடன் கை குலுக்கி விட்டு.. ஸ்ருதியின் மீது கடைசியாக யாசிக்கும் பார்வையை செலுத்தி வெளியில் சென்றான்….
“ஸ்ருதி ….. இந்தாங்க தண்ணி குடிங்க….” என்று தண்ணீர் இருந்த டம்ளரை அவளிடம் நகர்த்த…. அதை எடுத்து குடித்தவள்…
மகிழ்வேந்தனை பார்த்தாள் …இருவருடைய கண்களும் ஒரு நொடி நேராக சந்தித்துக்கொள்ள….ஸ்ருதி தன் பார்வையை சற்று தளர்த்தினாள்….
“இப்போ நம்ம டீல் பத்தி பேசலாமா?” என்று கேட்டவனின் முகத்தில் முதல் முறையாக மென்னகை இருந்தது… அவன் அளவாக சிரித்தாலும் அவனுடைய கன்னத்து குழி அழகாக தெரிந்தது….
“ஸ்ருதி இன்னைக்கு உங்களோட கடைசி கச்சேரி தானே நம்ம கம்பெனில?”
“ஆமா சார்…. இந்த கம்பெனியோட எம்.டி முன்னாடி …. அதாவது உங்க முன்னாடி… இந்த கச்சேரியோட நம்ம காண்ட்ராக்ட் முடியுது சார்…”
“யா ஐ நோ… அதை பத்தி பேச தான் உங்களை வர சொன்னேன்… அப்படியே ரகுராம் இன்டெர்வியூ பத்தியும் பேசலாம்னு வர சொல்லி இருந்தேன்.. நீங்க ஏன் இன்டெர்வியூக்கு ஒதுக்கல… நீங்க இன்னும் பேமஸ் ஆகுவீங்க… இந்தியாவிலேயே நம்பர் ஒன் பத்திரிக்கை அது…”
“சார் நான் பாட்டு பாடுறது என்னோட மன அமைதிக்காகவும் கடவுளை சீக்கிரமா அடைய இசை ஒன்னு தான் சிறந்த வழி… அதனால தான் நான் பாடுறேன்… மத்தப்படி எனக்கு பேமஸ் ஆகணும்னு எல்லாம் ஆசை இல்லை…”.
“இன்டெர்ஸ்டிங் புகழுக்கு மயங்காத மங்கை… “
மெலிதாக புன்னகைத்தவள் … “புகழோ பணமோ மட்டும் வாழ்க்கை இல்ல… சார்… உங்களை மாதிரி இருக்கவங்களுக்கு அது என்னைக்கும் புரியாது…..”
“ஏன்மா என் மேல இவ்ளோ நல்ல எண்ணம்… நான் அப்படி என்ன பணத்துக்காகவும் புகழுக்காகவும் செஞ்சது நீ பார்த்த?” என்று அவன் ஒருமைக்கு தாவ..
ஸ்ருதியின் முகத்தில் அவன் ஒருமையாக அழைத்ததால் பிடித்தமின்மை அப்பட்டமாக தெரிய… அவன் தன் புருவங்களை உயர்த்தினான் …
“எப்படியும் நான் உன்னை விட ஒரு 7 வருஷம் பெரியவன்னா தான் இருப்பேன்.. நான் உன்னை ஒருமையா பேசுனதே உனக்கு பிடிக்கல… ஆனா முன்ன பின்ன தெரியாத என்னை பத்தி நீ பணத்தாசை பிடிச்சவன்… புகழுக்கு அடிமையானவன்னு நீ சொன்னது எந்த விதத்துல நியாயம்…
நீ பார்த்த ஒரு சிலரை வெச்சு மொத்த உலகத்தையும் எடை போடுறது தப்புமா…. போக போக என்ன பத்தி தெரிஞ்சுப்ப… என்று கூறி இம்முறை தன் பல்வரிசைகள் தெரியும் அளவிற்கு சிரிக்க… அவனது கன்னத்து குழி அழகாகவும் முன்னை விட ஆழமாக விழுந்தது….