தாய்மையிலும் விஷமுண்டு
கவி அன்பு

அத்தியாயம் -1

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

(தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்க கொடுத்து வைக்காதவர்கள் தாம் புல்லாங்குழல் ஓசையும் வீணையின் ஓசையும் இனிமையானவை என்று சொல்வார்கள் பேச்சைவிட மழலைச் சொற்கள் அதிக இன்பம் அளிப்பன.)

இந்தக் குரலிற்கேற்ப்ப தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு கிடைத்த வரம்….தாய்மை தான் ஒரு பெண்ணை முழுமை அடையச் செய்கிறது….. இல்லை என்று மறுப்பார் யாரும் இல்லை…..

ஆனால் அதே பெண்ணிற்கு குழந்தை இல்லை என்றால்… இந்த சமூகம் பார்க்கும் பார்வையில்….தான் ஏதோ செய்யக்கூடாத தவறை செய்து விட்டது போல்…இந்த சமூகத்தின் பரிதாப பார்வையில் அந்தப்பெண் கூனிக்குறுகி போகிறாள்….

வாழ்க்கை என்றாலே நிறை குறை இருக்கத்தான் செய்யும்…நிறைய ஏற்றுக்கொள்ளும் மனது குறையை ஏற்றுக்கொள்வதில்லை….

ஆயிரம் கனவுகளுடன் கற்பனைகளுடன் ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு வருகிறாள்…. தாய் தந்தையை போல மாமனார் மாமியாரும்….. சகோதரனைப் போல மச்சினனும்…. சகோதரியை போல நாத்தனாரும்…. இதில் எல்லாமுமாக கணவனும்…. இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் ஆசையிலும்…. ஒரு பெண் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கிறாள்.

இது எல்லாம் எதிர்ப்பதமாக நடந்தால் அந்த வீட்டில் அந்தப் பெண்ணின் நிலை என்ன….. பெண்களைப் பெண்களே இழிவுபடுத்தினால்…. சொல்வதற்கு என்ன இருக்கிறது…. தாய்மையிலும் விஷம்முண்டு தானே….

செயற்கையான நகரத்தின் வாசனையில் இருந்து தப்பித்து…. இயற்கையின் வனப்போடும் வாசனையோடும்…. எங்கு பார்த்தாலும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை….. பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியை வாரிவழங்கும் சொர்க்கம்….. பூம்பொழில் கிராமம்….

கிராமத்திற்கே உரிய அத்தனை இலக்கணத்தோடும் விளங்கியது…. ஜனத்தொகை குறைவுதான், இதற்கு முன் இங்கு வசித்தவர்கள்….. பெரும்பாலானோர் நகரிகத்தின் மோகத்திற்கு அடிமையாகி…. தங்கள் வசிப்பிடத்தை நகரத்திற்கு மாற்றிக் கொண்டார்கள்….

இந்த மண்ணின் அருமை உணர்ந்த, மண்ணின் மைந்தர்கள்…. இன்னும் இந்த மண்ணை விட்டு அகலாமல், இந்த மண்ணோடு தங்கள் வாழ்வாதாரத்தை, இணைத்துக் கொண்டுள்ளனர்….

பனி சிந்தும் காலைப்பொழுதில், அவரவர் வேலையை பார்க்க விரைந்து சென்றுகொண்டிருந்த…. ஒரு சிலர் அந்த வீட்டை கடந்த போது… வழக்கமாக கேட்பதை விட அதிக கதறலை கேட்டும், எதுவும் செய்ய முடியாமல்…. கனத்த மனதோடு அந்த வீட்டை கடந்தனர்…..

அப்பொழுது அத்தை என் கையை விடுங்க…. என்று அலறிய மலர்விழியின் சத்தம் அந்த வீடு எங்கும் ஓங்கி ஒலித்தது…..அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல்…. அவள் மாமியார் மங்கலம்…. மலர்விழியின் முடியை பிடித்து இழுத்து கொண்டு வந்து….பின்கட்டில் தள்ளி இருந்தாள்….

தான் என்ன தவறு செய்தோம் என்று கூட தெரியாமல்…. அந்த 20 வயது பெண், கண்களில் கண்ணீரோடும்….. முடியைப் பிடித்து இழுத்ததால், அந்த வலியோடும் கதறினாள்…. கல்யாணமாகி இரண்டு வருடம் ஆகிவிட்டது…. என் பையன் சோட்டு பசங்களுக்கு எல்லாம், குழந்தை இருக்கு…..

உன்னை கட்டி தொலைச்ச பாவத்துக்கு… ஒரு புழு பூச்சி உண்டா, எங்க வீட்டுக்குனு வந்து சேர்ந்து இருக்க பாரு…. இங்க பாரு இன்னைக்கு என் பையனுக்கு வேறுஒரு பெண் பார்க்கப் போறோம்…. உன் முகத்தில் விழித்தால் விளங்கிடும்…. நீ இங்கேயே கிட என்றாள் அகங்கார குரலில் மங்கலம்….

வேண்டாம் அத்தை என்று அவர் காலை கட்டிக் கொண்டாள் மலர்விழி… குழந்தை இல்லாததற்கு நான் என்ன பண்ணுவேன்…. எனக்கு எதுவும் தெரியாது அத்தை…. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்…. இன்னொரு கல்யாணம் மட்டும் அவருக்கு பண்ணாதீங்க அத்தை…. என் நிலைமையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்….

நானும் உங்களை மாதிரி ஒரு பொண்ணு தானே என்று கதறினாள் மலர்விழி…. என்னை மாதிரி பொண்ணுன்னு சொன்ன நாக்கை அறுத்து விடுவேன்…. நான் ஒன்னும் உன்னை மாதிரி மலடி இல்லை….

கல்யாணம் ஆன மறு வருடமே…. என் பையன் என் கையில் இருந்தான் என்றாள்…. ஏதோ பெரிய சாதனையை பண்ணி விட்டதை போல…. பெருமையாக. அப்பொழுது அம்மா அவ கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு…. நேரமாகுது வாங்க போகலாம் என்றாள்….

அவர் மகள் காவியா, மங்களத்திற்கு ஒரு பையன் ஒரு பெண், பையன் மதுபாலன்…. பக்கத்து நகரத்தில் துணிக்கடையில் வேலை பார்க்கிறான்…. அவன் மனைவிதான் மலர்விழி… பெண் காவியாவிற்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கு…

இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீடு வந்தவள்… குழந்தை பிறந்து மாதம் பத்து ஆகியும் இன்னும் கணவர் வீடு திரும்பவில்லை…. மங்கலம் கணவர் நாராயணன், இவர்கள் பக்கத்திலிருக்கும் ராணுவ அதிகாரியின்…. தோப்பு வயலை எல்லாம் குத்தகைக்கு எடுத்து…. அதில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள்…..

அப்பொழுது அங்கே வந்த மதுபாலன்….. அம்மா அவளை பார்த்தா பாவமா இருக்கு…. இன்னும் ஒரு ஆறு மாத பார்க்கலாம்…. என்று தயங்கியபடியே சொன்னான் மதுபாலன்…..

என்னடா பொண்டாட்டி மேல அப்படியே பாசம் பொங்குது… மலடியா இருக்கும் போதே இப்படினா…. உனக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால்….. எங்களை எல்லாம் வீட்டைவிட்டு துரத்திவிட்டுடுவ போல இருக்கு….

போய் பொண்ணு பார்க்க கிளம்பு, காலங்காத்தால என் கிட்ட வாங்கி கடிக்காதே என்று கத்தவும்…. வேறு வழியில்லாமல் பொண்டாட்டியை திரும்பிப் திரும்பிப் பார்த்துக்கொண்டே… உள்ளே செல்ல போக, மலர்விழி ஓடிவந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்….

என்னங்க என்னை கைவிட்றாதீங்க, நீங்களும் கைவிட்டால் நான் எங்கே போவேன்…. எனக்கென்று யார் இருக்காங்க, என்று மலர்விழியின் கதறலில்…. மது பாலனுக்கு கண்கலங்கியது….

அம்மாவை ஆற்றாமையோடு பார்த்தான்…. உள்ள போறயா என்னடா சொல்ற என்றாள் மங்கலம் அதிகாரமாக…. அண்ணா அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றாங்க….. உள்ள வா இன்னும் எதுக்கு அந்த மூதேவியை கொஞ்சிட்டு இருக்க….. என்று அவன் கையை இழுத்து சென்றாள் காவியா…..

மலர்விழியும் அவன் காலைக் கட்டிக் கொண்டே செல்ல…. மங்கலம் அவள் முடியை பற்றி இழுத்து தள்ளி விட்டாள்…. அவள் அந்தப்பறம் போய் கல் மேல் விழுந்தாள்…. நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்தது… அழுதுகொண்டே கல் மேல் அமர்ந்து கொண்டாள் மலர்விழி….

இதை எல்லாம் பார்த்த நாராயணனிற்கு… மனதிற்குள் பாறாங்கல்லை கட்டி வைத்தது போல் இருந்தது…. அவரால் மருமகளுக்கு இறக்கப்பட மட்டும் தான் முடியுமே தவிர….. வேறு எதுவும் செய்ய முடியாது…..

அந்த வீட்டின் மொத்த அதிகாரமும் மங்கலத்திடம் தான்…. மற்றவர்கள் அந்த வீட்டில் செல்லாக்காசு தான்…. ஒரு துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து வந்து…. மருமகளிடம் கொடுத்து துடைத்துக் கொள்ளம்மா ரத்தம் வருது பாரு என்றார்….

மாமா நீங்களாவது சொல்லக் கூடாதா… என்றாள் ஏக்கமான பார்வையில் மலர்விழி….நான் சொன்னா கேட்பாளா உங்க அத்தை….அவ இஷ்டத்திற்கு தான் ஆடுவாள்…. உன் விஷயத்தில் கடவுளா பார்த்து ஏதாவது…. செய்தால் தான்மா என்று சொல்லிவிட்டுச் சென்றார்…..

வீட்டுக்குள் இருந்த துணி பாத்திரம், எல்லாம் அள்ளிக் கொண்டுவந்து போட்டுவிட்டு….. நாங்க வருவதற்குள் துவைத்து பாத்திரம் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்…. என்று சொல்லிவிட்டு சென்றாள் மங்கலம்…. அவர்கள் சென்றதும் மலர்விழி கதறல்கள்…. கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ…..

ஆற்றுவார் தேற்றுவார் யாரும் இல்லாமல்…. அழுது கொண்டே வேலை செய்தாள் மலர்விழி…. ஏழைத் தாயின் வயிற்றில் நாலாவது பெண்ணாக பிறந்தவள் மலர்விழி….. இன்னும் திருமணமாகாத ஒரு தங்கை இருக்கிறாள்…..

பிறந்த வீடு என்று ஆசையாக அவள் செல்ல முடியாத நிலை… தன் பெண் கட்டிக்கொடுத்த இடத்தில் சந்தோஷமாக இருக்கிறாள்…. என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தாயை…. அவள் வேதனைப்படுத்த வேண்டாம் என்று நினைத்தாள்….

வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை…. 18 வயதில் திருமணம் செய்து கொடுத்தார்கள்…. இரண்டு வருடத்தில் வாழ்க்கையின் மொத்த கஷ்டத்தையும் அனுபவித்து விட்டாள்…. தாய் வீட்டில் கஞ்சியை குடித்தாலும் சந்தோசமாக வாழ்ந்தார்கள்….

அதை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் மலர்விழி… அவருக்கு இன்னொரு திருமணம் ஆனால்…. நம்ம நிலைமை என்ன என்று நினைத்து பயந்தாள்…. வாய்விட்டு கதறி அழுதாள், அப்பொழுது அந்தப் பக்கம் இலை அறுக்க வந்த…. மிலிட்டரி வீட்டு மருமகள் சுகாசினி…..

அழுகை சத்தத்தை கேட்டு எட்டிப் பார்த்தாள்…. மலர்விழி தலையில் அடித்துக்கொண்டு அழுவதை பார்த்து…. காம்பவுண்ட் சுவர் ஏறி அந்த சைடு குதித்து…. வந்து அவளை அணைத்துக் கொண்டாள்…. மலர் இங்க பாரு யாருக்கு என்ன ஆச்சு…. ஏன் இப்படி அழற என்றாள் அவளும் பதட்டத்தோடு….

அக்கா என் வாழ்க்கையே போயிடுச்சு…. நான் என்ன பண்ணுவேன் இனிமேல் என் நிலைமை என்ன…. செத்துவிடலாம் போல் இருக்கு அக்கா…. என்று கதறினாள், அவளின் அழுகை சுகாசினியால் தாங்க முடியவில்லை….. அவள் முதுகை வருடிக் கொடுத்து, கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள்….

அவளுடைய அழுகை கொஞ்சம் மட்டு படவும்…. இப்ப சொல்லு என்ன நடந்தது என்றாள் சுகாசினி…. மலர்விழி நடந்ததை சொல்லவும்… சுகாசினி கொதித்து போனாள், அவள் படித்தவள் நகரத்தில் இருந்து வந்தவள்….

திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது…. மாமனார் ராணுவத்திலிருந்து போரில் வீரமரணம் அடைந்திருந்தார்… அவள் கணவர் ராணுவத்திள் மேஜர்…. மாமியார் சாரதா ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை….

அந்த கிராமத்தில் இவர்கள் குடும்பத்திற்கு என்று தனி மரியாதை உள்ளது…. இவர்கள் நிலத்தை தான் மலர்விழியின் மாமனார் மாமியார்…. குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்க்கிறார்கள்…. இந்தக் காலத்தில்கூட இப்படி எல்லாம் இருக்கிறார்களா…. என்று ஆத்திரப்பட்ட சுகாசினி…..

இதுக்கு நான் ஒரு வழி பண்ணுகிறேன் பயப்படாதே என்றாள் சுகாசினி… மலர்விழி மலர்ந்த முகத்தோடு அக்கா உங்களால இதை சரி பண்ண முடியுமா…. என் புருஷனோட என்னை சேர்த்து வைங்க அக்கா…. அவர் பாவம் எனக்காக அவங்க அம்மாகிட்ட பரிந்து பேசினார்… என்றாள் குழந்தை மனதோடு….

சுகாசினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… இவள் நிலையே பாவமாக இருக்கும் போது…. தாயின் அதட்டலுக்கு பணிந்து மற்றொரு திருமணத்திற்கு சம்மதித்த…. கணவனை பாவம் என்கிறாள், என்று மனதில் நினைத்தாள் சுகாசினி…

நான் என் மாமியாரிடம் சொல்லி இதை தடுக்க பார்க்கிறேன்…. என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு…. பத்திரமாக இரு தவறான எந்த முடிவையும் எடுக்காத…. நான் இருக்கிறேன் தைரியமாக இரு…. நான் இருக்கும் வரை உனக்கு எந்த கெடுதலும் நடக்காது… நான் பார்த்துக்கொள்கிறேன்….

சாப்டியா என்றாள் சுகாசினி, தயங்கி தயங்கி இல்லை என்று தலையாட்டினாள் மலர்விழி…. சரி வா என்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று…. மாமியாரிடம் நடந்ததைச் சொன்னாள் சுகாசினி….. அத்தை இதை இப்படியே விடக்கூடாது….

அவங்க வந்ததும் நீங்க போய் கேளுங்க… என்று இளமையின் வேகத்தில் குதித்தால் சுகாசினி…. சாரதா வயதுக்கே உரிய பொறுமையோடும்… பக்குவத்தோடு யோசனை செய்து கொண்டிருந்தாள்….

என்னத்தை யோசிக்கிறீங்க என்றாள் சுகாசினி….நீ சொன்ன மாதிரி அப்படி எல்லாம் போய் கேட்க முடியாது…. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று…. பிறகு ஊருக்குள்ள பஞ்சாயத்தை கூட்டி…. குழந்தை இல்லைங்கறதை காரணம் காட்டுவார்கள்….

இது நகரம் இல்லை கிராமம் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்….. வேறு ஏதாவது வழியில் தான் முயற்சி செய்ய வேண்டும்…. அதுதான் என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறேன் என்றார் சாரதா…. குழந்தை இல்லைங்கிற காக இன்னொரு கல்யாணம் பண்றது…. எல்லாம் தப்பு இல்லையா என்றாள் விடாப்பிடியாக சுகாசினி…

இங்க எல்லாம் குழந்தை இல்லை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது…. அந்தப் பெண்ணோட தங்கச்சியவே இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணிக்கிறது…. இதெல்லாம் சர்வ சாதாரணமா நடக்கும் என்றார் சாரதா….

அப்போ குழந்தை இருந்துட்டா இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டாங்க… அப்படித்தானே என்றாள் சுகாசினி…. குழந்தை இல்லேன்னா அனாதைக் குழந்தையை தத்தெடுக்கலாம்…. இல்ல டெஸ்ட் டியூப் பேபி இருக்கு… இப்படி எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது…. இரண்டாவது கல்யாணம் தான் ஒரு முடிவா….

இரண்டாவது கல்யாணம் பண்ணியும் குழந்தை இல்லை என்றாள் என்ன பண்ணுவாங்க…. மூன்றாவது நாலாவது கல்யாணம்னு பண்ணிக்கிட்டே போவாங்களா…. என்று பொரிந்து தள்ளினாள் சுகாசினி…. குழந்தை இல்லை என்றால் அதற்கு உண்டான வழியை தேடணும்….

எது தீர்வோ அதைச் செய்யாமல் பொண்டாட்டிய கைவிட்டுவிட்டு… இன்னொரு பெண்ணை தேட கூடாது என்றாள் கோபமாக சுகாசினி…. அவளின் பேச்சை மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி…..

சுகாசினியின் பேச்சைக்கேட்டு சாரதா புன்னகைத்தார்….பேசாம இவளுக்கு டெஸ்டு பேபிக்கு வழி செய்தால் என்ன என்றாள் சுகாசினி…. முதலில் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று…. ஏதாவது குறை இருக்கா என்று தெரிந்து கொள்ள வேண்டும்….

ஹாஸ்பிடலுக்கு போலாம் என்று நாம போய் அவங்க வீட்டுல சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.., வேறு யாராவது மூலமாக சொல்ல வைக்க வேண்டும்…. என்று யோசனை சொன்னார் சாரதா…. கொஞ்ச நேரம் யோசித்த சுகாசினி…. அத்தை இப்படி செய்தால் என்ன என்றாள்…..

எப்படின்னு சொல்லுமா என்றார் சாரதா…. என் ஃப்ரண்டு ஒருத்தி போலீஸ் வேலையில இருக்காள்…..அவளை வரவைத்து முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தால்…. சட்டப்படி குற்றம் என்று சொல்லி புரிய வைத்து….குழந்தை பெற்றுக்கொள்ள இத்தனை வழிமுறை இருக்கிறது…. என்று அவளையே சொல்லச் சொன்னால் என்ன என்று கேட்டாள் சுகாசினி…..

நீ சொல்ற மாதிரி தான் செய்ய வேண்டும்…. வேறு வழியில்லை என்றார் சாரதா…. மலர்விழி இருவர் பேசுவதையும், மாறி மாறி அவர்கள் இருவர் முகத்தையுமே பார்த்து கொண்டிருந்தாள்…..

அவளுக்கு பசிக்கும் எப்ப சாப்பிட்டாலோ பாவம்… போய் சாப்பாடு போட்டு கொடு என்றார் சாரதா…ஆமா அத்தை அவள் இன்னும் சாப்பிடல… நான் போய் போட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு…. அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள் சுகாசினி…..

சாரதா இதை எந்த முறையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராமல்…. சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்….குழந்தை இல்லை என்கிறது ஒரு குறை இல்லை என்ற விழிப்புணர்வை… இந்த மக்களுக்கு கொண்டு வர வேண்டும்…. அதற்கு நாம ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அன்புடனும் நட்புடனும்,
கவிஅன்பு.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago