கடைசி வரி படித்தவுடன் உங்க சிரிப்புக்கு நான் கேரன்டி
இறந்துவிட்டான் சேகர்…..
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்…..
இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.
சேகர் : சாமி… என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்
சேகர் : L O V E
சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..
சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்….நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் நீ இதே கேள்வியை அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. … இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்….
சேகர் : சரிங்க சாமி !!
சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்!
சேகர் அதிர்ச்சி அடைந்தான்…..
காரணம் அது சேகரின் மனைவி.
சேகர்: நீ எப்படி இங்க வந்த ? !
மனைவி : அதாங்க… உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்..
நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும்.
மனைவி : என்ன வார்த்தை ?
சேகர் : செக்கோஸ்லோவாகியா.
?????
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…