சித்திரை திருநாளுக்கு சித்திரைக்கனினு சில இடங்கல்ல கொண்டாடராங்களே அதபத்தி விரிவா எழுதளாம்னு யோசிச்சு என்ற வூட்டுபக்கத்துல இருக்க வயசானவங்க எல்லாத்துக்கிட்டையும் போய்கேட்டேன்.
ஏங்கண்ணு அந்தகாலத்துல ஆருகண்ணு இப்பத்தமாதிரி புதுசுபுதுசா விழா கொண்டானுனாங்க.நாங்க எல்லாம் அந்தகாலத்துல எங்களுக்கு சோறுபோடர நிலத்துக்கும்,இயற்கை தெய்வங்களான சூரியர்,சந்திரருக்கும் ,ஆடு,மாடுகளுக்கும் தை முதல்நாள்ல விழா எடுப்போம் அம்புட்டுதான். இப்பத்தமாதிரி நெதம் ஒரு நாளும் விழா ஆருகண்ணு கொண்டாடுனாங்க இதே பதிலத்தான் எல்லாரும் அவங்கஅவங்களுக்கு தெரிஞ்சமாதிரி சொன்னாங்க.என்னோட முன்னோர்களுக்கு இதலா என்னன்னே தெரியாம நிம்மதியா வாழ்ந்துருக்காங்க.
ஆனா நாம தினம் ஒருநாளும் புதுசு புதுசா விழாகொண்டாடறோம் அப்படி கொண்டாடரதுல இதுவரைலும் என்னத்த சாதிச்சிருக்கோம்னு யோசிச்சுபாத்தா அப்படி ஒன்னும்மே கிடையாது.
சித்திரைகனி இதுவும் ஒருவைகைல நாளடைவில் நம்மீது புகுத்தப்பட ஒரு விழா மட்டுமே.என்னோடமுன்னோர்கள் இந்தமாதிரி எதையும் கொண்டாடுனது இல்லை.
நாகரிகம்ங்ர பேர்ல புதுசுபுதுசா ஒரு விழா கொண்டாடறோம்.இதுதான் உண்மை.