சாரல் 1

0
289

சாரல் – 1
கிழக்கு சூரியன் ஏகாந்தமாக உதயமாகி, வான மகளை நாணமுற செய்து கொண்டு இருந்தது. பட்சிகளின், “கீச் கீச்” ரீங்காரம் சூழலையே ரம்யமாக்கி கொண்டு இருந்தது. மரத்தின் கிளைகளில் பலவித பறவைகள் தன் கூடுகளில்
ஆனந்தமாக செங்கதிரொனை வரவேற்கும் விதமாக
தன் சிறகுகளை, பட பட வென அடித்து வரவேற்று கொண்டு இருந்தது.

ஆனால் அதை இரு விழிகள் மட்டும் உணர்ச்சி துடைத்த விழிகளுடன் பார்த்துக்கொண்டு இருந்தது. அவன் கண்களோ எங்கேயோ தொலை தூரத்தை வெறித்து கொண்டு இருக்க, மனமோ, அலைகடலென ஆர்பரித்துக் கொண்டு இருந்தது.

“இதே மாறி! உன்கூட காலைல, உன் கைய பிடிச்சுக்கிட்டு, உன் தோள்ல சாஞ்சுகிட்டு இந்த “கீச் கீச்” சத்தம், காலை காத்து, பால்கனில நின்னுகிட்டு ஒரு கப் காபியோட இந்த சூரிய உதயத்தை பார்க்கணும்” என, ரசனையோட சொன்ன அவள் வார்த்தைகள் அவனது காதில் ரீங்காரமிட்டு கொண்டு இருந்தது.

தூரத்து வெறித்த பார்வையில், அவன் தனது தொலைந்து போன வாழ்க்கையை தேடிக்கொண்டு இருந்தானோ?

அந்த ஏகாந்த சூழல் அவனது மனதை குளிர்விக்காமல், அவனது மன வெம்மையை தான் அதிகரிக்க செய்தது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்து கண்களை திறந்தவனின் கண்ணோரம் ஏதோ சிறு வலி.

மனதெங்கும் ஆறா ரணமாய் பல காயங்கள், அதில்
இன்னும் வடியும் உதிரமாய் , அவள் விட்டுச்சென்ற
நினைவுகள்.

மனம் நிழலுக்கும், நிஜத்திற்கும் இடையே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் தனது தோள் சாய்ந்து கண் முடிய தருணங்களும், தான் அவள் தலை மேல் தலை சாய்த்து அதை ரசித்த நாட்களும் நினைவுக்கு வர , கண்ணோரம் கரித்துக்கொண்டு வந்தது அவனுக்கு.

தடதடக்கும் ரயில் பெட்டி போல, அதனை தொடர்ந்து சில பல ஞாபக ஊர்வலங்களும், அவன் மனக்கண் முன்னே தோன்ற, “ என்ன காலையிலேயே கனவா? கனவுல யார் கூட டூயட் பாடிக்கிட்டு இருந்த?” என தன் பின்னே கேட்ட குரலில், நிழலை விட்டு நிதர்சனம்
திரும்பினான் .

சட்டென கேட்ட குரலில், அதை விட அதன் வார்த்தைகளில், மனம் இறுக, மூண்ட சினத்தை
தணிக்க, கண்களையும், உள்ளங்கைகளையும்
இறுக மூடி தன்னை சமன் செய்துக் கொண்டான்.

அவன் உடல்மொழிக் கொண்டே அவன் மனம் கணித்தாள் அவன் மனைவி. “என்ன கனவ களச்சுட்டேனேனு கோவமா? என அவனை மேலும்
சீண்டினாள், அபிரக்ஷிதா.

மெல்ல திரும்பி, அங்கு ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல், அவளை தாண்டி செல்ல முற்பட்ட வேளையில், “உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்!” என அவன் கைபிடித்து நிறுத்த, அவள் முகத்தையும், அவள் பிடியில் இருக்கும் தன் கையையும் மாறி மாறி பார்த்தவாறே அவள் பிடியை விலக்க முயல,

“என்ன கட்டிக்கிட்டு எவளையோ மனசுல நெனச்சுட்டு இருக்க?” எனும் வார்த்தையில் அவன் பார்வையின் கூர்மை கூடி அவனது உக்கிரம் தெரிய, நொடியில் அவளது கழுத்தை இருக்கியது அவன் கை.

“பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டுச்சுன்னு இருக்குமாம் ! உனக்கு எத்தனையோ முறை சொல்லி, சொல்லி நான் ஓய்ஞ்சு போய்ட்டேன்! இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்! இனிமே இப்டி பேசுன!, என தான் பிடித்த பிடியில் அழுத்தம் தர, அவளை அப்படியே உதறிச்
சென்றான்.
அவன் தனது பிடியை விட்டவுடன், வலித்த தன் கழுத்தை தடவி விட்டுக் கொண்டாள் அபிரக்ஷிதா.
அவனது உதாசினம் தந்த பாதிப்பால், கண்கள் சிவக்க, அவனை நோக்கி அங்கிருந்த பூஜாடியை எறிய, அது அங்கிருந்த சுவற்றில் பட்டு சில்லு சில்லாக உடைந்து நொறுங்கியது.

அந்த சத்ததில் தூங்கி கொண்டு இருந்த அவர்களின் மகள் லேசாக அசைய, மகளது துயில் களையா வண்ணம் அவன் மகளை தட்டி கொடுக்க, அவள் தூங்க, மனைவியிடம் கண்களால் அவளை எரிப்பது போல் முறைக்க, கணவனின் பார்வையில் உள்ளுக்குள் திகில் பரவ, மகளிடம் விரைந்தாள், அபி.

இங்கே குளியலறையில் , அங்கிருக்கும் வாஷ்பேசினில் தன் இரு கைகளையும் அதன் மீது பதித்த படி, அங்கிருந்த கண்ணாடி முன் நின்று, அதில் தெரியும் தன் பிம்பதையே பார்த்து கொண்டு இருந்தான் விஷ்வபிரகாஷ்.

எதையோ நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டவன், முகத்தில் நீரை வாரி இறைக்கிறான். நேரம் ஆவது உணர்ந்து மனதிற்கு கடிவாளம் இட்டு குளிக்க செல்ல, மனதின் வெம்மையை அந்த குளிர்ந்த நீர் சற்றே போக்கியது.

அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது அவன் கண்மணி 4 வயதான சின்ன சிட்டு பிரகதி அப்போது தான் துயில் களைந்தாள். தந்தையை கண்டதும் உற்சாகமாக அவனை நோக்கி தன் கை விரிக்க, மகளை நோக்கி விரைந்தான் விஷ்வா.

அந்த சின்ன மொட்டு தனது தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு, “குட் மார்னிங் ப்பா” என சொல்லி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் தர ,
அவளை பின்பற்றி அவனும் மகளுக்கு திருப்பி ஒரு முத்தம் வைத்து, “குட் மார்னிங் செல்லம்”, என்றான்.

இதை எல்லாம் சுவற்றில் சாய்ந்த படி கை கட்டி கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள் அபி. அவளை கண்டும் காணாதது போல “என் செல்லம் என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துடாங்க” என கேட்க மகளோ நான் குட் கேர்ள் பா அதான் நான் ஏர்லியாவே ஏந்துட்டேன்” என, இன்னும் தன் மழலை மாறாமல் பதிலளித்தாள்.

“ஓகே செல்லம்! அப்பா இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ் போனும்! அப்பா கெளம்புறேன்!” என, மகளிடம் கூற அந்த சின்ன சிட்டின் முகமோ வாடியது. தன் மகளின் முக வாட்டம் கண்டு பொருக்காதவனாய், மகளின் முகம் நிமிர்த்தி, “என்னடா? என்ன ஆச்சு என் பாப்புக்கு?” என கேட்க, “ நீங்க என்ன நேத்து பீச் கூட்டிட்டு போறேன் னு சொன்னேங்க “ என கூற,
அப்போது தான் தான் தனது மகளிடம் நேற்று கூறியது ஞாபகம் வந்தது.

உடனே தான் செய்த தவறு புரிந்தவனாய்,
“ சாரி செல்லம் அப்பாக்கு நேத்து நிறையா வேல இருந்துச்சு அதுல அப்பா மறந்துட்டேன் டா சாரி மா” ,என் மகளிடம் மன்னிப்பு கேட்க, உங்க அப்பாக்கு எது தான் ஞாபகம் இருக்கு இது மட்டும் இருக்கு என பின்னே எகத்தாளமான பதில் வர , மகளுக்கு அது புரியவிடினும் அவனுக்கு அது புரிய, கண்களில் கனலோடு அவளை நோக்கி திரும்ப, அவன் பார்வை
கண்டு “கப் சிப்” , என ஆனாள் அவன் மனையாள்.

மகள் தன்னையே பார்ப்பது உணர்ந்து, “அப்பா உங்களுக்காக இன்னைக்கு சீக்கிரமே வரேன் செல்லம்! பிளீஸ் அப்பா ரொம்ப ரொம்ப சாரி டா” என மகளை சமாதானப்படுத்த, அதில் சமாதானம் அடைந்த மகள், “ப்ரோமிஸ்”என கையை நீட்டி சத்தியம் கேட்க, அதில் அழகாய் கண் சுருக்கி, கெஞ்சலோடு தன்னிடம் வலது கையை நீட்டி “ப்ராமிஸ்”, கேட்ட குரல் ஞாபகம் வந்தது. அதற்கு அவன் சத்தியம் செய்ய கையை நீட்ட, அங்கே அவன் மகள் நின்றுக்கொண்டு இருந்தாள்.

அவன் கவனம் இங்கு இல்லாது போக, மகள் தான் தந்தையை
“அப்பா அப்பா! ” , என அழைக்க, அதில் மகளின் குரலில் தன்னிலை அடைய, தன் முன்னே அதே போல் கண்ணோடு முகமும் சுருக்கி, “ப்ராமிஸ்” கேட்ட மகள் தான் நின்றாள்.

“ப்ராமிஸ்” என நீட்டிய கையில் சத்தியம் செய்ய, மகளின் முகம் மலர, அவளை தூக்கி ஒரு முத்தம் வைத்து இறக்கி விட்டான். அதில் மேலும் குதூகலமாக, தன் பாட்டியிடம் அதை கூற ஓடினாள் பெண்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்க கொண்டு இருந்த அபியின் முகம் மாறுதல் அடைய அவனை ஒரு பொருள் விளங்கா பார்வை பார்த்தாள் அவள்.
மகளின் குதூகலம் கண்டு, புன்னகை முகம் கொண்டு திரும்பியவனின் கண்ணில் மனைவியின் பார்வை விழ, அதைக் கண்டு புருவம் சுருக்கினான்.

கணவனின் பார்வையை உணர்ந்து அவள் முகத்தில் ஒரு எள்ளல் புன்னகை உதயமாக, அதில் முகம் இறுக அவளை கண்டு ஒரு அந்நிய பார்வையை வீசி சென்றான் விஷ்வா.

சாரல் அடிக்கும்…

images (26)|468x500
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here