குப்பைத்தொட்டி

0
52

ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பை தொட்டியில் தனக்கு தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார். மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது.

இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர் கூறிய வார்த்தைகள் ,
ஒரு சிறிய குப்பை தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து , விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது , இனி வரும் காலங்கள் பொற்காலமே , மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்க சென்றார்.

? ” இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவர்கள் ” ?

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here