அபி கண் விழிக்கும் போது மஞ்சத்தில் கைகள், கால்கள், வாய் ஆகியன கட்டப் பட்டு படுக்க வைக்க பட்டிருந்தாள். அவளின் தலை சுவற்றில் மோதியது போல் வலித்து கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழ் உணர்வின்றி மறந்திருந்தது. அவள் மதியம் சாப்பிட்டது இரவு வீட்டிற்கு சென்று உண்ணலாமென்று எண்ணி இருந்தாள் இப்போது எத்தனை மணி என்று தெரிய வில்லை பசி… அவளுக்கு பசி பெரிதாக தோன்ற வில்லை, “தன் கற்பு பறிபோனது இனி தன் பெற்றோர் முகத்தில் எப்படி விழிப்பது? இல்லை அது நடவாது எப்படி இருந்தாலும் தன்னை கொன்று எங்காவது வீசி விட்டு போவார்கள். அதை பார்த்து தன் பெற்றோர் கதறி அழுவதை தன்னால் பார்க்க முடியாது அல்லவே? அந்த மட்டில் ஒரு ஆறுதல்” என்று எண்ணி அழுது கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ராஜா கையில் உணவு தட்டுடன் கதவை திறந்து கொண்டு வந்தான். அவள் அருகில் அமர்ந்தான் அவளோ அவன் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவன் முகத்திலோ அமைதி குடிகொண்டிருந்தது எதையோ சாதித்த சந்தோசம் அவனுக்கு. அவள் அவன் முகத்தை விடாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பேசினான்…
“சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன் வாய் கட்ட மட்டும் அவுத்து விடறேன் கத்த கூடாது ம்? ஊட்டி விடறேன் சாப்பிடு ஏதும் பேச கூடாது…” ஒட்டி விட்டான்… சாப்பிட்டு முடித்தாள்… வாயை திறக்க வில்லை. திரும்ப வாயை கட்ட வந்தவன் அப்போது தான் அவள் முகத்தை பார்த்தான்… அவள் அப்போதும் அவன் முகத்தை தான் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கண்கள் சந்தித்தன அவன் தன் பார்வையை திருப்பி கொண்டு…
“எதாவது பேசணுமா?”
“மோகன் எப்போ வருவான்? எனக்கு முடியல தயவு செய்து சீக்கிரம் என்னை கொன்னுருங்க.” என்று சொல்லி விட்டு தேமித் தேமி அழத் தொடங்கினாள்.
“மோகன் மட்டுமில்ல யாரும் வர மாட்டாங்க… நீ சாகுற வரை இந்த அறையில தான் இருக்க போற… என் கூட மட்டும் தான் வாழ போற மீறி எதாவது அலும்பு பண்ணுனா கண்டிப்பா கொன்னுடுவேன் உன்ன மட்டுமில்ல உன் அப்பா அம்மா வயும் சேத்து. இப்போ தூங்கு.”
“இத்தன பேரு சேந்து ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு இப்போ வாழ்நாள் முழுக்க அடிமையா இருக்க சொல்ற. முடியாது நீ கொல்லலைனா நானா செத்துட போறேன்.”
“நா இருக்கப்போ வேற எவனும் தொட விட மாட்டேன்… நா மட்டும் தான் உன்ன தொட்டேன் இனியும் தொடுவேன்…” என்று மறுபடி அவள் வாயைக் கட்டி விட்டு அவள் நெற்றியில் முத்தம் ஒன்று வைத்து விட்டு போய் விட்டான். அவளும் அசதியில் தூங்கி விட்டாள். அடுத்த நாள் காலை அந்த அறை திறக்க படவில்லை அவள் பட்டினியாக இருந்தாள். மதியம் மீண்டும் உணவுடனும் ஒரு பையுடனும் வந்தான் அதிர்ச்சியில் வெளிறி போனது படுக்கையில் அவளை காண வில்லை அவனோ சுற்றி முற்றி பார்த்தும் அவளைக் காண வில்லை. வேகமாக அறையை விட்டு வெளியேறினான்… சில நிமிடங்களில் மறுபடி அறைக்குள் வந்தான் தலையில் கை வைத்துக்கொண்டு மஞ்சத்தின் மேல் பொத்தென அமர்ந்தான். சில நிமிடங்களில் அந்த அறையின் ஓய்வறையிலிருந்து அபி வெளியே வந்தாள் அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் கண்கள் கலங்கியிருந்தது. அவள் அவன் முன் வந்து மண்டி யிட்டு அமர்ந்தாள்.
“அவசரம் பா அதான்… சரி இந்தா கட்டு” என கயிற்றை அவன் கையில் குடுக்க அவனோ கயிற்றை வீசிவிட்டு அவளை அணைத்துக் கொண்டான்…
“ஓடிட்டேனு நினைச்சியா?”
“…..” மௌனம்
“அப்றம்?”
“செத்துட்டன்னு பயந்துட்டேன்…”
“நேத்து நீ இல்லாம போயிருந்தா செத்து தாண்டா போயிருப்பேன்…” என்று சொல்லி அழுது கொண்டே முகம் முழுதும் முத்தம் கொடுத்து விட்டு அவன் இதழ்களை நோக்கி செல்ல அவனுக்கு எழுந்த பெரிய சந்தேகதை கேட்கலானான்…
அவள் கண்களை துடைத்துக் கொண்டே ” நா உன்ன கற்பழிச்சிருக்கேன் உனக்கு கோவமே இல்லையா?”
“உன் பேய் கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது சொல்லு… எப்பிடிடா இப்படி வெள்ளந்தியாவே இருக்க?”
“உனக்கு கால் மரத்து போகலையா?”
“அப்டி நடந்தா மரத்து போகுமுன்னு உனக்கு தெரியுமா?”
“அப்புறம்?”
“கல்யாணத்துக்கப்புறம் சொல்றேன்… நீ இப்போ சொல்லு என்ன நடந்துச்சு? எப்படி நடந்துச்சு?”
“என் மேல எப்படி நம்பிக்கை வந்துச்சி அத முதல்ல சொல்லு…”
“நீ அறைக்குள்ள வர வரைக்கும் வாழ்க்கையே வெறுத்திருந்தேன். நீ சாப்பாட்டு தட்டோட வந்த உன் முகத்த பாத்ததும் எனக்கு நம்பிக்கை வந்துருச்சு… சந்தோசமா வந்த அக்கறையா ஊட்டி விட்ட உன் கண்ணுல அன்பு மட்டும் தான் இருந்துச்சி… அவனுங்கள பத்தி பேசுனப்போ உன் கண்ணுல கோவத்த பாத்தேன். உன்ன நம்பி வாழ்க்கையை குடுக்கலாமான்னு யோசிச்சிட்டுருந்தேன்… நீ வசனம்லாம் பேசிட்டுருந்த அதெல்லாம் என் மண்டைல ஏறல… கடைசில வலிக்காம வாய கட்டி விட்டு நெத்தில முத்தம் குடுத்த அப்போ தான் முடிவு பண்ணுனேன் இனி என் வாழ்க்கை உன் கூட தான்னு… சொல்லு இப்போ” அவன் அவளை அணைத்து கன்னத்தோடு கன்னம் வைத்து கண்ணை மூடிருந்தான்….
“சொல்லு பா…”
“ம்” என்று விலகியவனை விலக விடாமல் “இப்டியே சொல்லு” என்றாள்…
“அன்னைக்கு நா அங்க டீ கடைல உக்காந்து தம்மடிச்சிட்டுருந்தேன்… மொறைக்காத கேளு… அந்த இடத்துக்கு சம்மந்தமே இல்லாம ரெண்டு பேரு எனக்கு பின்னாடி இருந்த கட்ட சுவத்துல உக்காந்து பேசிக்கிட்டானுங்க…”
“டேய் மதி பச்சிய பாத்தியா இன்னைக்கு நல்ல விருந்து ஆனா அந்த மோகன் வர வரைக்கும் பொருத்துருக்கனுமா பாத்தாலே இருப்பு கொல்லலயே பக்கத்துல வச்சிக்கிட்டு எப்படி இருக்க போறோம்?”
“”
“நா கொஞ்சம் எம்பி தொலைபேசியை பார்த்தா நீ… நா மதியம் தான் உன்ன உன் நண்பன் இறக்கி விட்டு போனான் பாத்தேன்…”
“அமீர் என் நண்பன்னு எப்படி தெரிஞ்சுக்கிட்ட?”
“பொண்ணுங்க நண்பனை தான் எருமன்னு சொல்லுவாங்க கேட்டிருக்கேன்…”
“ம்…”
“எதாவது செய்யணுமேன்னு யோசிச்சேன்… அவனுங்களே துருப்பு சீட்டு குடுத்துருந்தானுங்க பக்கத்துல வச்சிக்கிட்டு எப்படி சும்மா இருக்க போறோம்னு… டப்புனு சுவத்த சுத்திகிட்டு போய் அவனுங்க முன்ன நின்னேன்”
“நீங்க தானே ஜானி?”
“ஆமா இன்னா வோணும்?”
“அண்ணே என் பேரு ராஜா… மோகன் அனுப்பினாரு உங்க கூட உதவியா இருக்க சொன்னாரு…” “சொன்னதும் அவன் மோகனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தான் நா அத பத்தி யோசிக்கவே இல்ல அல்லு தெரிச்சிருச்சி மூஞ்சில காட்டிக்காம சும்மா நின்னேன் ஆனா அந்த வெளங்காதவன் என்ன செஞ்சான் தெரியுமா?”
ஜானி “தல ஏற்கெனவே மூணு பேர் இருக்கோம்… இதுல இந்த ராஜா பய வேற புதுசா வந்து ஓட்டுறான் அவன வேணாம்னு சொல்லிடவா?”
மோகன் “டேய் எத்தன பேரு வந்தா என்ன? எனக்கு என் வேல முடிஞ்சா சரி… அதான் மூணு பேரு இருக்கீங்களே நல்லபடியா வேலைய முடிங்க” அழைப்பை துண்டித்தான்.
மதி “டேய் உன்ன என்ன சொல்லி அனுப்பினாரு டா?”
“பொண்ண தூக்கணுமாம் அவரு வர வரைக்கும் உங்கள கை வைக்காம பாத்துக்க சொன்னாரு.”
மதி அவனை அடிக்க பாய ஜானி தடுத்தான்.
“இவன் வந்தா என்னடா விடு விடு…” இந்த சம்பத்தை கூறிவிட்டு பெருமூச்சு விட்டான்…
“அதுக்கு அப்பறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே…”
“உன்ன எதாவது பன்னிருந்தா?” அவள் கண்கள் கலங்கியிருந்தது.
“ஒரு பொண்ண காப்பாத்த இவ்ளோ கூட செய்யலன்னா எப்படி? உன்ன மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கைல வந்தா நல்லாருக்கும்னு முன்ன ஒரு முறை உன்ன பாத்தப்போ கடவுள வேண்டிகிட்டேன் ஆனா அந்த கடவுள் உன்னையே குடுத்துட்டார் தேவதைய அடையணும்னா கொஞ்சம் கஷ்டம் பட்டு தானே ஆகணும்?” இப்போது இருவர் இதழ்களும் இணைந்தன. அந்த நேரம் அபியின் அப்பா
“காமராஜ் காமராஜ் அபிய பத்தி எதாவது தெரிஞ்சிதா?” என்று கேட்டு கொண்டே அறையின் உள்ளே வர அவர்கள் இருந்த நிலை அவர் முகம் சுழிக்க வைத்தது வெறுப்புடன் வெளியே சென்றார்.
அபியின் அம்மா “என்னங்க பொண்ணு கிடைச்சிட்டாளா?” கண்ணீர் வடித்து கேட்க
“உள்ள போய் பாரு ரெண்டும் என்ன பண்ணுதுங்கன்னு…” அம்மா முகத்தில் புன்னகை பூத்தது…
“நாமளும் காதலிச்ச தான் ங்க கல்யாணம் பன்னுகிட்டோம் மறந்துட்டீங்களா?” இன்னும் சமாதானம் செய்து கொண்டிருக்க…
“சரி இந்த துணிய மாத்திக்கிட்டு வா உங்க வீட்டுக்கு போகலாம்”
“என் துணி எப்படி கிடைச்சுது?”
“உன் அம்மா தான் குடுத்தாங்க… காலைல உங்க வீட்டுக்கு போய் உன் அப்பா அம்மா கிட்ட விஷயத்தை சொல்லி துணிய வாங்கிட்டு உன்ன கிளப்பி கூட்டிட்டு போலாம்னு வந்தேன் அதுக்குள்ள தான் நீ இப்படி பண்ணிட்ட… உன்ன காணும்னு வேற உங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன் பயந்துகிட்டு இருப்பாரு சீக்கிரம் கிளம்பு போகலாம்…” அவள் கிளம்பி வர இருவரும் வெளியில் வந்தனர் அபி அவள் அன்னையை பார்த்து புன்னகையுடன் சென்று கட்டி கொள்ள அன்னையும் மகளும் ஆனந்த கண்ணீரில் மிதந்தனர்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…