என் அண்ணன்
அவள் வருவதை தூரத்தில் பார்த்த நாதன் அவள் அலுவகத்தை அடையும் முன் அவள் முன் நின்றான். அவனை பார்த்து கோவமாக முகத்தை திருப்பி அவள் செல்ல முற்பட அவள் கையை வேகமாக பிடித்து இழுத்து கொண்டு வெளியே சென்றான்.
“நாதன் கைய விடுங்க”
“உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?”
“உங்கள பிடிக்கும் நாதன் அது மரியாதை நிமித்தமா… நீங்க தப்பா நினைச்சிடீங்க…” அவள் கையை விட்டான்.
“ஏய் என்ன சொல்ற?”
“இனி பேச வேணாம், குறுஞ்செய்திலாம் அனுப்பாதீங்க.”
அவன் முகத்தை திருப்பி கொண்டு “ம் சரி அத என் முன்னடி படி”
அவளும் எடுத்து படித்தாள்…
“உன்னை எனக்கு பிடிக்கும்… ஒரு சகோதரனாக உன்னை காக்க நினைக்கிறேன்… மோகன் எதோ கெட்ட எண்ணத்துடன் திட்டம் தீட்டியுள்ளான்… நீ நாளை அலுவலகம் வராதே…” படித்து முடிக்கும் போது அவள் கண்கள் கலங்கி இருந்தது. அவன் கரத்தை பற்றி கொண்டாள்.
அவள் பயந்து விட்டாள் என எண்ணி “சரி பாத்துக்கலாம் அழுவாத”
“முழுசா படிச்சிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்… மன்னிச்சிருங்க ண்ணா…”
“அவசரமா அனுப்புனது மா அது முதல் வரிய பாத்துட்டு தப்பா நினைச்சிருப்ப. சரி விடு…” இருவரும் அலுவகத்துக்கு சென்றனர்.
அலுவலகத்திற்குள் சென்று அவள் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து நாதனின் இருக்கையை எட்டி பார்த்தாள் அங்கு அவன் எதோ இறுக்கமாக எதோ சிந்தித்து கொண்டிருந்தான். அதை கண்டு அவளும் சிறிது பதற்றம் அடைந்தாள். பலமுறை எட்டி பார்த்தும் அவன் பார்க்காததால் பொறுமை இழந்து சிறு காகித உருண்டையை எடுத்து அவன் மீது வீச அவன் யோசித்து கொண்டே நிமிர்ந்து பார்த்தான். “என்ன” என்பது போல் அவள் முகத்தை கீழிருந்து மேல் நிமிர்த்தி கேட்க்கும் போது அவள் கண்கள் சிவந்திருந்தன அவனை பார்க்கும் போது கலங்கியும் இருந்தன, அவள் தைரியமான பெண்தான் இருந்தாலும் பெண் என்றாலே மேன்மையும் மென்மையும் தானே அந்த மென்மை கண்ணீரை சிந்துவது தான் அதன் பிரதான தொழில்… அன்பானவர்களிடம் ஆனந்த கண்ணீர் கொடுமையானவர்களிடம் வலியுடன் கண்ணீர். அவள் முகத்தை பார்த்தவன் அன்பான புன்னகையை சிந்தி “நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன்” என்பதாக அவன் நெஞ்சத்தில் கை வைத்து செய்கை செய்ய, அவளும் நம்பிக்கையாக கண்களை துடைத்துக் கொண்டு அமர்ந்து தன் பணிகளை செய்ய தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் மோகன் வந்தான்… அவன் பார்வை அவள் மீது வைத்து கொண்டே நுழைந்தான் அவன் பார்வையில் சொட்டிய காமம் அங்குள்ள அனைவருக்கும் அவனை பற்றி தெரிந்ததினால் அவன் பார்வை நிலைத்த அபியை நினைத்து வருத்தம் கொண்டனர். பெண்களிடம் உள்ள சிறப்பம்சம் மற்றவர்களை எப்போது எப்படி பார்ப்பார்கள் என்பது தெரியாது ஆனால் சுற்றி நடப்பது எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருப்பர். அபி அவனை தான் கவனித்து கொண்டிருந்தாள் அவன் பார்வை அவளுக்கு அருவருப்பையும் அச்சத்தையும் அளித்தது.
ஒரு பெண் மற்றவரிடம் கூறினாள் “இன்னைக்கு இந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சின்னா நாளைக்கு அந்த நாய நா செருப்பை கழட்டி அடிப்பேன்டீ”
“இந்த பொண்ணு எப்படி இவ்ளோ நாள் வேலைக்கு வரான்னு தெரியல. சந்தோசமா இருக்காளே அப்டினா இதுவரை ஏதும் ஆகல. இன்னைக்கு அவ மட்டும் தான் தாமதமா போவா. எதாவது செய்யணும்… நா ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டியே? “
“என்னடீ?”
“நாம என்ன அவ்லோ மோசமாவா இருக்கோம்? அவன் நம்ம சீண்டவே இல்ல.?!”
“அழகா பொறந்திருந்தா இந்த வேலைக்கு வந்துட்டு போன பொண்ணுங்க நிலைமை தான் டீ நமக்கும். அத நினைச்சி சந்தோசபட்டுக்கோ…”
அந்த குழுவில் மற்றோர் அனைவரும் 6:30 கு கிளம்ப இவர்கள் இருவரும் மட்டும் அவளுடன் 7:30 வரை இருந்தனர். அவர்கள் வீட்டிலிருந்து அழைப்புகள் அதிகம் வர… ஒருவர் பின் ஒருவராக சென்றனர். ஆனால் நாதனின் குழு நகரவே இல்லை…
பொறுத்து பார்த்த மோகன் பொறுமை இழந்தான் அவளுக்கு அவன் எண்ணம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். அவள் நாதனின் செய்தி என எண்ணி தான் எடுத்து படித்தாள். அதை படித்ததும் நேராக மோகனின் அறைக்கு சென்று அவனிடம் காட்டமாக அதே சமயம் பயமும் இருக்க குரல் கம்மிவிட்டது.
“நீ கேவலமானவன்னு நா வந்த அன்னிக்கே உன் பார்வையே சொல்லுச்சு. நீ நினைக்கிற ஆள் நா இல்ல. இனி இதுமாதிரி எதாவது பேசுன சிறைல தான் குடும்பம் நடத்துவ. தெரிஞ்சுக்கோ.” என்று சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள்.
அவள் பேச்சுக்கு மறுவார்த்தை எதுவும் பேசாதிருந்தவன் அவள் சென்ற பின் சிறிது சத்தமாகவே சொன்னான் “பேசுனா தான டீ இனி செயல் தான்.” என்றவன் தன் தொலைபேசியை எடுத்தான். “டேய் ஜானி”
“என்ன தல என் ஞாபகம் வந்துகீது உனக்கு?!”
“வேலையா தான் டா… எங்க இருக்க?”
“வீட்டாண்ட பா சொல்லு.”
“நம்ம அலுவலகத்துக்கிட்ட உன் பசங்கல அழைச்சிட்டு வந்து காத்திரு இன்னும் கொஞ்சம் நேரத்துல ஒரு பொண்ணு வெளில வருவா தூக்கிரு… அந்த இடிஞ்ச பங்களால அடைச்சு வை நா வந்துடறேன். நல்லா கேட்டுக்கோ எவனும் நா வர வரை கை வைக்க கூடாது அவகிட்ட எனக்கு ஒரு வேல இருக்கு…”
“சரி தல… ஆனா ரொம்ப தாமதமாக்கிறாத பசங்கள கட்டு படுத்துறது சிரமம்”
“அதிகமா ஆள் சேக்காத இன்னும் ஒருத்தன மட்டும் சேத்துக்கோ”
“சரி தல நீ வச்சாப்புல அவ செல்பீ அனுப்பு” அவன் இடத்திலிருந்து அவளை ஒரு புகைபடம் எடுத்து ஜானிக்கு அனுப்பினான் மோகன்…
அபியின் அழகை கண்டு தன்னுள் உறங்கி கொண்டிருந்த மிருகத்தை எழுப்பி விட்டான் மோகன் எப்படியேனும் அவளை அடைந்தே தீருவது என்று முடிவு செய்தான். அவளின் தேவை தீர்ந்த பின் கொன்று மாயமாக்கவும் திட்டம் தீட்டலானான்.
சிறிது நேரம் கழித்து அவள் ஓய்வறைக்கு செல்வதை கவனித்தவன் அவள் இடத்திற்கு சென்றான் அங்கு அவள் தொலைபேசியை வைத்து விட்டு சென்றிருந்தாள். அதை எடுத்து அவள் அழைப்புகளை செய்திகளையும் சோதித்தான். அமீருக்கு அனுப்பிய செய்தியை பார்த்தான். அவள் அனுப்பியவாரே
“டேய் எரும நீ தூங்கி தொல நா பாத்துக்குறேன்…” அப்டி ஒரு சேதியை தட்டி விட்டு அனுப்புனர் நகலை மட்டும் அகற்றி விட்டு அவன் இடத்தில் பொய் அமர்ந்தான்.
10 மணிக்கு அவன் நாதனிடம் சென்று “நாதன் நா கிளம்புறேன் அபி வேலைய முடிச்சதும் எனக்கு அறிக்கை அனுப்பிட்டு போக சொல்லுங்க.” என்று சொல்லி விட்டு கிளம்ப நாதன் “ஹப்பா காப்பாத்திட்டோம்” என்று பெரு மூச்சி விட்டான்.
அவள் செய்தியை படித்து விட்டு “இவ ஒருத்தி உடனே கோவம் வந்துரும்” என்று சொல்லி கொண்டு அமீர் அவள் அலுவலகத்தை அடைந்தான். அப்போது அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த மோகனிடமே வந்து,
அமீர் “ஒரு நிமிஷம்…”
மோகன் ‘யாருடா இவன் எரும மாதிரி’ என்று நினைத்து கொண்டு “சொல்லுங்க என்ன வேணும்?”
அமீர் “இங்க அபிநய சுந்தரி னு அவங்கள பாக்கணும்…”
மோகன் “நீங்க?”
அமீர் “நா அமீர் அவங்க தோழன்”
மோகன் “அவங்க பத்து நிமிஷம் முன்ன தான் கிளம்புனாங்க…”
“இவ ஏன் இப்டி பண்ணுறா?” என்று முனகி கொண்டே தன் தொலைபேசியை எடுத்து கொண்டு அவன் வாகனத்துக்கருகில் சென்றான்.
“தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் எண் தொடர்பு எல்லை க்கு வெளியே உள்ளது” என பதில் வர கோபமானவன் அவள் வீடு நோக்கி பயணம் ஆனான்… அவன் செல்வதை பார்த்து கொண்டே புன்னகைத்த படி தன் வாகனத்தை கிளப்பினான் மோகன்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…