காபி ஷாப்பிலிருந்து வந்தவளுக்கு மனது ஒரு மட்டுக்குள் அடங்கவில்லை… “யாருடி இவன் காலைல இருந்து வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான். நல்ல சண்ட சேவல போல சிலுப்பிக்கிட்டே வர்றான்…. மூஞ்சியும் முகரையையும் பாரு நல்லா திட்டி நாலு காட்டு காட்டி இருக்கனும் … ச்சே… அதுக்குள்ள இவளுங்க இழுத்து வந்துட்டாளுங்க” என்று சிநேகிதிகளை குமைந்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்தாள் கவி
“கவி….. ஏய் கவி…. இந்த உலகத்துலதான் இருக்கியா என்ன?!? ” என்று தங்கையின் கேள்வியில் நடப்பிற்க்கு வந்து தியாவை கண்டவள், “பக்கத்துல தானே உட்காந்து இருக்கேன் ஏன் காது கிழிய கத்துற” என்று எரிந்துவிழுந்து அவளை முறைத்தாள்.
“என்ன கவி ஒருமாதிரியா பேசுற!?! எதுக்கு இப்படி எரிஞ்சி விழுற ?!? மார்னிங் கிளாஸ் முடியிற வரையும் நல்லாதானே இருந்த!!!; அப்புறம் என்ன ஆச்சு?? இப்படி மூஞ்ச உர்ருன்னு வெச்சி இருக்க!!” என்று தியா கேட்க
பச்… என்று சலித்தவள் “உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?? ” என்று மேலும் கத்த இப்போது தியாவே அமைதியாகி கவியாக சொல்லும்போது சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள்.
கல்லூரி பேருந்தில் இருவரும் வீட்டை அடைந்தனர். வரும்போதே கோபமுகம் எதை கேட்டாலும் எரிந்து விழும் மானோபாவத்திற்க்கு மாறி இருந்தாள் கவி. வீட்டில் நுழையும் போதே செருப்பை ஒரு பக்கம் ஏனோ தானோ என்று கழட்டியவள் மனதிற்க்குள்ளே அந்த பெயர் தெரியாதவனை திட்டி தீர்த்தாள் அதே சமயம் வாடிய முகமும் சோர்ந்திருந்த தேகமும் கொண்டு புத்தகத்தை அப்படியே டையனிங் டேபிளில் போட்டுவிட்டு சேரில் அமர்ந்தாள். கால்களை தூக்கி டைனிங் டேபிள் சேரில் வைத்து இருகைகளிலும் கட்டிக்கொண்டு முகத்தை அதில் புதைத்துக் கொண்டவளின் கண்களில் லேசாய் செம்மை படர்ந்திருக்க வானம் பொத்துக்கொண்டு பெய்ய தயராக இருக்கும் மழை மேகம் போல் இருந்தது.
இவர்களை பார்த்துதும் சமயலறைக்கு சென்ற மஞ்சுளா பாலை சூடாக்கிக்கொண்டே “கவிமா தியாமா போய் பிரஷ் ஆகிட்டு வாங்க ஸ்நாக்சும் டீயும் தறேன்” என்று கூறவும் அதை கேட்ட தியா சமத்தாக மாடி ஏறி செல்ல
கவி அப்படியே அமர்ந்திருந்தாள்… “கவி” என்று தியா அழைக்க அவள் பதிலளிக்கமல் அமர்ந்திருக்க இதனை கண்ட மஞ்சுளா வாசலை எட்டி பார்த்தார். செறுப்பு கன்னா பின்னாவென்று ஆளுக்கு ஒரு பக்கமாய் அதன் இணையை பிரிந்து கவிழ்ந்து கிடந்தது. டேபுளில் சிதறிய புத்தகத்தையும் கலங்கிய முகத்துடன் இருந்த மகளையும் பார்த்தவர் மனதில் ஏதோ உந்த “நீ போ தியா அவ வருவான்னு” சைகை செய்ய மாடி ஏறினாள் இளையவள்.
எவ்வளவு முயன்றும் அவன் பேசிய வார்த்தைகள் இவளுக்கு அதிகபடியாகவே தெரிந்தது. அவனிடம் வாங்கிய வசவுகள் அவளை ஆத்திரம் கொள்ள செய்தது. அவளை சுட்ட வார்த்தைகளில் இருந்து வெளியில் வர முடியாமல் முகத்தை உர்ரென்னு வைத்துக்கொண்டு மௌனமாக இருந்தாள்.
கவிமா…. கவிமா… என்று அழைத்து தலையை ஆதுரமாக கோத அவரை நிமிர்ந்து பார்த்தவள் மறுபடியும் திராட்சை விழிகளை தாழ்த்தி கொண்டாள் “கவிமா என்னடா என்னாச்சி ஏன்டா ஒரு மாதிரி இருக்க??என்று பக்கத்தில் அமர்ந்தார் மஞ்சுளா
அவரை காணமல் தலையை தாழ்த்திக்கொண்டவள் “ஒன்னும் இல்லை மா கொஞ்சம் தலைவலி டென்ஷன் அவ்வளவுதான் மா”. என்றாள்.
“ம் சரிவா” என்று சோபாவிற்க்கு அழைத்துச்சென்றவர் மடியில் படுக்க வைத்து தலையை பிடித்துவிட துவங்கினார். அன்னையின் மடியும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களால் ஏற்பட்ட அழுத்தமும் தாயன்பும் சேர்ந்தே கொடுத்த மாயத்தால் எதிலிருந்தோ விடுபட்டவள் போல் கண்களை மென்மையாக முடினாள். தாயின் மடியில் கிடைக்காத சொர்க்கம் தான் உண்டோ என்பது எவ்வளவு உண்மை இதுவரை மனதை ஆட்கொண்ட சினம் மறைந்து தெளிவு நிதானம் பொறுமை வந்தது. ஆனால் அவன் மீது கொண்ட கோபம் மட்டும் இம்மியளவும் குறையவில்லை….
எப்படி எல்லோர் முன்னிலையிலும் அவன் தன்னை திட்டலாம் அங்கு கூடி இருந்தவர்களின் காட்சி பொருளாய் இருந்ததை எண்ணியவளின் ஆத்திரமே அவன் மேல் பிரதனமாய் இருந்தது.
அதனை மாற்ற எண்ணியது மனம் சிறிதுநேரம் கண்மூடி இருந்தவளின் மனது தெளிந்த நீரோடை போல அமைதியாய் தங்கு தடையில்லாமல் செல்ல தன் சிந்தனையிலிருந்து அவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றினாள்.
சிறிது நேரம் கழித்து எழுந்து அமர்ந்த கவி அன்னையை பார்த்து “அம்மா ரொம்ப தேங்க்ஸ் மா” என்றாள்
கவியை பார்த்த மஞ்சு “என்ன கவி என்ன ஆச்சு ஏன் மூட் அவுட் தலைவலி” என்று கேட்க
“அது ஒன்னும் இல்லை எக்ஸாம் டென்ஷன், பிளஸ் தலைவலி” என்று கூறி “இரண்டுமே சேர்ந்ததால் ஒரு மாதிரி ஆகிடுச்சிமா” என்றாள்.
“புரியுதுடா …. ஆனா ஏன் டென்ஷன் ஆகனும் சொல்லு நாம செய்யறது சரின்னு நினை… உன்னால முடியுன்னு உனக்கு நீயே சொல்லிக்கோ அதனால வர்ற டென்ஷன்..பயம் குறையும்” என்று சொல்லி கொடுக்க…
அன்னையின் முகத்தையே பார்த்திருந்தவள் “உங்களுக்கு செம டேலன்ட் மா” என்று அவரை கட்டிக்கொண்டாள்.. ” எவ்வளவு கஷ்டம் மனசு முழுக்க சுமையோட வந்தாளும் உங்க மடியில படுத்து உங்க விரலால தலை கோதுரப்போ வரும் நிம்மதி அதுக்கு சான்ஸே இல்லை மா…. அதனாலதான் மிஸ்டர் மாணிக்கம் மனைவி சொல்லே மந்திரம்ன்னு உங்களையே சுத்தி சுத்தி வராரோ என்றவள் லக்கி பர்சன் மா அப்பா” என்று அவருங்கு சான்றிதழை வழங்கியவள் அவரின் கைகளை பிடித்து “இந்த கைக்கு செம மேஜிக் பவர்மா என்று கன்னத்தில் பதித்துக்கொண்டாள்.
அவள் கூறியதும் வெட்கம் கொண்டவர் “கையை விடு கவி” என்று கையை உருவியர் “என்ன பேச்சு பேசுற ?? வாய் ரொம்ப அதிகமாகிடுச்சி!! போடி ” என்று போலி கோவம் கொண்டவர் “போய் உடுப்பு மாத்திக்கிட்டு வா மூன்று பேரும் கோவிலுக்கு போய்ட்டு வருவோம்” என்று அனுப்பி வைக்க துள்ளி ஓடும் புள்ளிமானாய் படிகளில் தாவி ஏறினாள் கவி.
அதே நேரம் வீட்டிற்க்கு வந்தார் மாணிக்கம்.. மனைவியை அழைத்தபடி ஹாலில் அமர்ந்தார்.
கணவரை பார்த்ததும் “என்னங்க இப்போதான் வர்றிங்க மலைகோவில் போகனுமுன்னு சொல்லி இருந்தேன் ஞாபகம் இருக்கா??” என்க
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு.. முதல்ல ஸ்ட்ராங்கா ஒரு காபி கொடு மா” என்று கேட்க
“இதோ ஒரு நிமிஷங்க” என்று அரை நிமிடத்தில் கணவருக்கு காபியுடன் வந்தார் மஞ்சுளா.. மணக்க மணக்க மல்லி காபி நாக்கில் சுவை அரும்புகள் மொட்டு விட தொண்டைக்கு இதமான சூட்டில் அமிர்தமாய் இறங்கியது.
காபியை குடித்து முடித்து மனைவியை பார்த்தவர் “நான் இப்போ டேவிட் வீட்டுல இருந்துதான் வர்றேன் மா” என்றார் வருத்தமுகமாக
டேவிட்டா யாருங்க என்று யோசித்தவர் “ஹோ அந்த பைனான்ஸ் கம்பெனி வைச்சி நடத்துராறே ரியல் எஸ்டேட் கூட இருக்கே அவராங்க” என்று உறுதிபடுத்திக் கொள்ள கேட்க
” ஆமா மஞ்சு அவர்தான்” என்றவர்
“என்னங்க அவர்வீட்டுக்கு போயிருக்கிங்க என்ன விஷயம்” என்று ஆவலாய் கேட்க
“சொல்றேன் மா பிள்ளைங்க எங்க??” என்று கேள்வி எழுப்பினார்
‘இப்போதான் வந்தாங்க… கோவிலுக்கு கிளம்ப சொல்லி மேல அனுப்பி இருக்கேன் என்றார்.
பெருமூச்சுடன்” சரி “என்றவர் அங்கு போனதை சொல்ல ஆரம்பித்தார். அந்த டேவிட் ஊர்ல எவ்வளவு பெரிய மனுசன் ஆனா அவர் பொண்ணே தலை குனியும்படி ஒரு விஷயத்தை பண்ணிட்டா மஞ்சு” என்றார் ஆற்றாமையுடன்
“என்னங்க சொல்றிங்க?!?! என்ன ஆச்சு ஏதாவது” என்று ஆரம்பிக்கவும்
“டேவிட்டோட பொண்ணு ஷீலா கூட காலேஜ்ல படிக்கிர பையனை காதலிச்சி, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி மாலையும் கழுத்துமா வந்து இருக்காங்க… இது கேசு அடிதடி லெவலுக்கு போகவும், எனக்கு போன் பண்ணினாங்க அதான் அங்க போயிட்டு வர்றேன் என்றார்…
“ஆனா பாவம் மஞ்சு ரொம்ப பெரிய ஆள், நெனச்சத சாதிக்கும் மனுஷன் அப்படியே நொறுங்கி போய் இருக்கார் என்றார் மனதாங்களுடன்.
“ஏங்க இந்த புள்ளைங்களுக்கு இப்படி புத்தி போகுது… பெத்துக்கிட்ட நாம அதுங்களுக்கு கெட்டதா நினைப்போம் இந்தாலும் இது ரொம்ப அநியாயங்க” என்றார் ஒரு பெற்றவராக
“என்ன செய்ய மஞ்சு…. யார் சொன்னாலும் அந்த பொண்ணு கேட்கிற மனநிலைமைல இல்ல வாழ்ந்தா அந்த பையன்கூடதான் வாழ்வேன் இல்லை இப்படியே அவர் கட்டின தாலியோட சாகுறேன்னு ஒரே பிரச்சனை பண்ணிட்டா” என்றார்.
“அந்த பொண்ணு கல்யாணம் பண்ண பையனை பாத்திங்களா ?? உங்களுக்கு எப்படி தெரியுது” என்று மஞ்சுளா கேட்க
“அந்த பையன் இந்து… பார்க்க நல்லவனாதான் தெரியுரான் டேவிட் பொண்ணுக்கு போட்டதெல்லாம் கழட்டி ஒரு குண்டுமணி கூட மிச்சம் இல்லாம கொடுத்துட்டான். டேவிட் பொண்ணு போட்டிருந்தது எல்லாமே அவன் கொடுத்ததுதான். அம்மா மட்டும் போல கொஞ்சம் வசதி வாய்ப்பும் இருக்கு. என் மனசுக்கு திருப்தியாதான் இருந்தான்… ஆனா என்ன ஒன்னு நிதானமா வீட்டுல பேசி இரண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணி இருக்கலாம்”. என்றார் சற்றே யோசனையுடன்.
“பாவம் டேவிட்டோட வீடுதான் களையே இழந்து கிடக்கு. இன்னைக்கு நிச்சயம் வைச்சிக்கிட்டு அந்த பொண்ணு இப்படி பண்ணி இருக்க வேண்டாம்!!”என்று எரிச்சலாய் மாணிக்கம் கூற
என்ன இன்னைக்கு நிச்சயமா..!! அந்த பொண்ணு இப்படி கழுத்தருத்துட்டாளே!! என்னதான் நல்லவனாவே இருந்தாலும், பெத்தவஙகளோட வைத்தெரிச்சலை சம்பாதிச்சிக்கிட்டு அவங்களோட வாழ்க்கைய ஆரம்பிக்க எப்படிதான் முடியுதோ” என்றார் கோபமாக
“விடு ஆனது ஆயிடுச்சி… என்ன பண்ண முடியும்?? அவங்கள அந்த பையனோட வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டுதான் வர்றேன். என்றார்.
“இந்த பிள்ளைங்களை எவ்வளவு ஆசையா வளர்த்து இருப்பாங்க… பெத்தவங்களுக்கு பிள்ளைகளை கொண்டு எவ்வளவு கனவு இருந்திருக்கும்… அதையெல்லாம் தெரிஞ்சி துரோகம் செய்ய தோனுதோ யாரையும் குத்தம் சொல்லி தப்பில்ல வயசு பொண்ணுங்களை நம்ம வீட்டுல வைச்சிக்கிறதும் மடியில நெருப்பு கட்டி வைச்சிருக்கிறதும் ஒன்னுதான் எப்போ சுட்டுடுமோன்னு பயந்துக்கிட்டே இருக்கனும்”. என்று வருத்தப்பட்டார் மஞ்சுளா.
(இந்த கல்யாணம் செய்ய துணை போதே தன் சீமந்த புத்திரிதான் என்று தெரியும் போது அவர் என்ன செய்வாரோ……)
உடனே நினைவு வந்தவராக “நம்ம கவிக்கு இன்னைக்கு ஜாதகம் பார்க்க கொடுக்கனுமுன்னு சொன்னனேங்க என்று கேட்க
“கோவிந்தசாமி பையனுக்கு போன் பண்ணினேன் மஞ்சு. அய்யரை வரச்சொல்லி இருக்கேன். நல்ல நெரம் பார்த்து எடுத்து கொடு நான் போய் ரெடி ஆகிறேன்”. என்று எழுந்து விட்டார் மாணிக்கம்.
அவர் இருக்கும்போதே கோவிந்தசாமி அய்யர் வந்துவிட
“அடடே வாங்க வாங்க கோவிந்தசாமி உட்காருங்க…”. என்று அழைத்து அமர வைத்தார் மாணிக்கம்.
“வாங்க சாமி” என்று சம்பிரதாயமாக அழைத்து காபி கொண்டுவர சென்றார் மஞ்சுளா
“சார் வரச்சொன்னிங்களாம் அம்பி வந்து சொன்னான். என்ன விஷயமா வரச்சொன்னேள்ன்னு தெரிஞ்சிண்டு போகலாம்ன்னு வந்தேன்”. என்றார். அய்யர்
“ஆமா கோவித்தசாமி வரச்சொல்லி இருந்தேன். வேற என்ன விஷயமா வரச்சொல்ல போறேன் எல்லாம் என் பொண்ணு விஷயம்தான் இந்த வருஷம் படிப்பு முடியபோகுது எங்க சமூகத்துல படிச்ச மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்ன்னு இவ்வளவு தூரம் பொண்ணுங்கள படிக்க வைக்கவே மாட்டாங்க… ஆனா என் பொண்ணு ஆசைபட்டாளேன்னு படிக்க வைச்சுட்டேன்…. ஆனா இப்போ வீட்டுலயும் கடும் போராட்டம் வீட்டம்மா போர்கொடி தூக்காதது ஒன்னுதான் பாக்கி அதான் வரன் பார்க்க உங்களை வரச்சொன்னேன்”. என்று கூறி மனையாளின் முகம் பார்க்க
கணவரை ஒரு பார்வையில் நொடித்தவர் அவரிடம் காபியை கொடுத்துவிட்டு” நாம செய்யுறத கால காலத்துல செஞ்சிடனும் சாமி நாள் கடத்த கூடாது பொண்ணை இன்னொரு வீட்டுல கட்டிக்கொடுத்து புருஷன் குடும்பம் பிள்ளை குட்டின்னு வாழறதை பார்க்க தான் நமக்கு சந்தோஷம் நாம வாழ்ந்த வாழக்கைக்கும் அர்த்தம் இருக்கும்”. என்றவர்
அவரே தொடர்ந்து “எங்க கவிக்கு நல்ல வரனா பாருங்க அவ முகலட்சணத்துக்கும், படிப்புக்கும் அவளை கண்கலங்கமா பாத்துக்குற நல்ல பையனா பாருங்க சாமி”. என்று கோரிக்கையை வைக்க
“அதுக்கென்னம்மா அமோகமா பாத்திடலாம்” என்று வாக்கு கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு ஜாதகத்தை வாங்கிக்கொண்டு சென்றார் அய்யர்.
ஜெயந்தும் கேஷவ்வும் வீடு வர மதியம் ஆனது அடுக்களையில் வேலையாய் இருந்த நாரயணியை இருவரும் அசையவிடாது முற்றுகை இட்டனர்.
“ஏய் என்ன பா இது சின்ன பிள்ளைகளாட்டும் விளையாடுறிங்க… வழிய விடுங்கப்பா…” என்று அவர்களை விலக்க முயன்றார். என்ன முயன்றும் இருவரும் விலகாமல் சிரித்தபடி நின்றிருந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி இருந்தவரின் கையில் இருந்த பாத்திரத்தை ஒருவர் பறித்து வைக்க மற்றோருவர் அவரை சமயலறையில் இருந்து தோள்மீது கைவைத்து கையோடு தள்ளிக் கொண்டு ஹாலுக்கு வந்தனர்.
“டேய் டேய் என்னடா இது … உங்க அப்பா வந்துடுவாறு டா என்னடா பண்ணுறிங்க…. என்ற சப்தங்கள் வர அதனை எதையும் காதில் வாங்காமல் அவர்கள் செய்யும் வேலையின் மும்மரத்தில் இருந்தனர்.
“அதயெல்லாம் பாத்துக்கலாம் மா… வாங்க வாங்க இப்படி உட்காருங்க” என்று அமரவைத்தவன் கேஷவின் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸில் இருந்து லட்டை எடுத்து அன்னைக்கு ஊட்டிவிட்டான் ஜெய்.
“என்ன கண்ணா இது ….. இனிப்பு எதுக்கு தம்பி…. என்று வினவவும் “அம்மா நீங்க ரொம்ப நாள் எதிர்பார்த்த ரெண்டு குட்நீயூஸ் உங்களுக்கு இருக்கு அதுக்குதான் இது” என்றான் கேஷவ்.
“குட்நீயூஸ்ஸா!!! என்ன குட்நீயூஸ் ??என்று சந்தோஷமாய் கேட்க
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே சிரித்த வண்ணம் இருக்க
இது வேலைக்கு ஆகாது என்று இவருவரின் முக்ததையும் பார்த்தவர் “ம்ஹீம் என்று பெருமூச்சிவிட்டு “என்ன நீயூஸ் ஜெய் கண்ணா நீ என் தங்க பையன்ல” என்று பாகாய் விஷயத்தை கேட்க
“எனக்கு பாக்ஸிங் சாம்பியன்ஸ்ல கலந்துக்குர வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று ஒவ்வொரு வார்த்தையாய் அழுத்தி தனித்தனியாய் கூறி விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள அவர் ஆனந்த அதிரச்சியில் எழுந்து நிற்க அவரை தூக்கி சுற்றினான் ஜெய்.
“ஜெய் விடு கண்ணா.. விடு தம்பி …” என்ற தாயின் குரலை சட்டே செய்யாமல் சுற்ற சிரிப்புடன் அவரை கிழே இறக்கி விட்டதும் இருந்த லட்டை அப்படியே ஜெய்யின் வாயில் திணித்தவர் அவனை உச்சி முகர்ந்து முத்தம் வைத்து நல்லதே நடக்கும் ராஜா என்று வாழ்த்தினார்.
அடுத்த மகனை இன்னொரு செய்தி என்ன என்பதாய் பார்க்க அம்மா “அண்ணா ஊருக்கு போய்ட்டு வர்ர வரைக்கும் ஃபாக்டீரிய நான்தான் பாத்துக்க போறேன் “என்றதும் தான் தாமதம்
தாயின் கண்களில் தன்னையும் அறியாமல் நீர் துளிர்த்தது இத்தனை நாள் தன்னைவிட்டு பிரிந்து இருந்த மகன் தன் உடன் இருக்க போகிறான்
தந்தை மகன் மோதலில் ஒரு வருடமாக வீட்டிற்க்கு வருவதையே தவிர்த்து இருந்தவனை தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளும் வாய்ப்பு வர மகனிடம் சாய்ந்தார் நாரயணி.
அம்மா என்று அவரை சாய்த்துக்கொண்டவன் உங்க மனச எவ்வளவு வாட விட்டுருக்கேன்னு புரியுதுமா என்று அவர்களின் கண்களை துடைத்தான் கேஷவ்
“இது உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா?!!” என்றவர் உடனே அவருக்கு தெரிவிக்க தொலைபேசியை எடுக்க
“அதை பார்த்த ஜெய் அம்மா நான் அப்பாவுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன் இருங்கமா ஸ்வீட்டோட சொல்லலாம்” என்றான்.
அதை ஆமோதித்தவர் மூவருக்கும் என்னன்னென்ன வகை உணவுகள் பிடிக்குமோ அத்தனையையும் செய்தவர் இனிப்பான பால்பாயசத்தையும் செய்ய மறக்கவில்லை
அவருக்கு இது இரட்டிப்பு சந்தோஷம் அல்லவா முதல் மகனின் கனவு ஆசை லட்சியம் அனைத்தையும் கைக்குள் கொண்டுவரும் வாய்ப்பு இன்று அவனிடத்தில்
இரண்டாவது மகன் கண்களில் படமாட்டானா என்று தேடும் தாயின் ஏக்கங்களையும் தந்தை மகன் சுமூக உறவுக்கு பாலமாய் இருக்க போகும் நிர்வாக பொறுப்பினை கையில் எடுக்க போகிறான் என்ற செய்தி அவரை சிறு பெண்ணாக மாற்றியது. பம்பரமாய் சுழுன்று வேலையை பார்த்தவர் 1 மணி நேரத்தில் ஒரு விருந்தையே தயார் செய்து வைத்திருந்தார்.
வீட்டிற்க்குள் நுழையும்போதே மகனை தேடினார் ராஜாராமன் அனைவரும் சாப்பட்டு மேசையில் அமர்ந்திருக்க தந்தையை பார்த்ததும் எழுந்து நின்றனர் இருவரும்.
ம்க்கூம் என்று கனைத்தவர் “மனசுக்குள்ள மரியாதை இருந்தா போதும்” உட்காருங்கன்னு கம்பீரத்துடன் கூற
அதிசயமாய் பெரிய மகன் வீட்டில் இருக்க “என்ன ஜெய் இன்னைக்கு ஃபாக்டீரிக்கு போகலியா?”. என்று கேட்க
“இல்லை பா… இன்னைக்கு எல்லா இன்ஸ்டரக்ஷ்னும் கார்த்திக்கு கொடுத்துட்டேன் சோ அவன் பாத்துப்பான்” என்றான்
சரி என்று தலையை ஆட்டியவர் “என்ன ஆதி சமையல் வாசம் வீட்டு வாசல் வரையும் மணக்குது என்ன வீட்டுக்கு விஐபி வந்துருக்காங்கன்னு தடபுடல் விருந்து ராஜ உபச்சாரமோ!!” என்று மகனை கேளியாய் பேச
ஆதி அவரை பார்வயாலேயே கண்டிக்க “எந்நேரமும் அவனயே ஏதாவது சொல்லிக்கிட்டு இருங்க” என்று கோபமாய் கூறியவர் பெரிய மகனிடம் ஜாடயாய் விஷயத்தை சொல்ல சொன்னார்.
மனைவி கூறியதும் மகனின் முகம் பார்கக தான் கூறியதில் வருத்தமாய் தலை கவிழ்ந்து இருக்க பேசாமல் தன் வேலையை பார்க்க எழுந்தார்.
“அப்பா என்று அழைத்தான் ஜெய்” ஜெய்யை கண்டவர் “ஆஹ் ஜெய் மறந்தே போயிட்டேன் பார். நீ ஏதோ முக்கியமா பேசனுமுன்னு சொன்னே ல என்ன பேசனும்” என்று கேட்க
“முக்கியமான நீயூஸ் மட்டும் இல்ல ரொம்ப சந்தோஷமான நீயூஸும் கூட” என்றவன் தான் வாங்கி வந்திருந்த ஸ்வீட்டை கொடுத்து போட்டியில் கலந்துக்கொள்ள தேர்ந்தெடுக்கபட்டதை கூற மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அவரின் காலில் விழுந்து வணங்க மனதார வாழ்த்தியவர் நிச்சயம் நீ ஜெய்ச்சி வருவ என்று கூறினார்.
“இன்னொரு விஷயம் பா என்ற ஜெய் என்றவன் நான் திரும்பி வரும் வரை கேஷவ் ஃபாக்டீரிய பாத்துப்பான் பா” என்றான்.
சட்டென்று முகம் பிரகாசமாக மாறி மறுபடி பழைய நிலைக்கு திரும்பியது கேள்வியாய் இளைய மகனை பார்க்க நீயே சொல் என்பது போல் இருந்தது.
அவர் பார்த்தும் தடுமாறியவன் “ஜெய் வரவரையும் நான் பாத்துக்குறேன் பா” என்றான் கேஷவ். “உன்னோட போட்டோகிராபி” என்றார் கேள்வியாய் அதற்க்குதானே இவ்வளவு பாடும் பட்டது அவன்.
“காண்டஸ்ட்டுக்கு 1வீக் இருக்கு 2டேஸ்ல முடிச்சிடுவேன்” என்று கூற அதை கேட்டவர் “இது அவனோட ஒவ்வொரு துளி வியர்வையிலும் உருவானது மூலதனம் நான்தான் என்றாலும் ஜெய்யோட.உழைப்பு தான் இவ்வளவு பெரிய ஸ்தாபனமா உயரக்காரணம் உன்னோட விளையாட்டு தனத்தையும் முரட்டு முன் கோபத்தையும் ஓரம்கட்டிட்டு முழுமனதோட இந்த பொறுப்பை ஏற்று நடத்தனும் புரியுதா” என்று கராராய் பேச
“புரியுது பா” என்று பதில் உறைத்தவன் தாயையும் தமையனையும் பார்த்தான்.
கண்களை மூடி ஃபிரியா விடு என்று கூற அவனை ஒர பாரவையால் முறைத்தான். தந்தையை பார்த்ததும் பார்வையை தாழ்த்திக் கொண்டவன் எங்கே அவர் கண்டாள் இன்னும் அவரிடம் பேச்சு வாங்க நேரிடுமே என்று தலையை தாழ்த்திக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
கேஷவ்.
Hi friends ungaluku story pidichi iruka pls unga comments sonna dhan next part poda vasathiya irukum ??????