அரவிந்தனின் புன்னகைக்கு பதிலாக பிரபா முறைக்க இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெரியவர்கள் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்…. நெஞ்சில் திக் திக் என பிரபாவும் அரவிந்தனும் தனித்து விடப்பட்டனர் அறையில்…..

என்னப் பேசுவது என புரியாமல் ஒரு கால் மணி நேரம் மௌனமாக கழிந்தது …மௌனத்தின் கனத்தை தாங்க முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…..

தூங்குவோமா என்ற கேள்வி இருவர் வாயிலிருந்தும் வந்தது.. ஒரு சேர சிரிப்பும் புன்னகையும் சேர்ந்து வந்தது….

‘அப்பாடா ‘என பெருமூச்சு விட்டாள் பிரபா ,தன்னை அறியாமல் …..

‘என்ன அப்பா டா!’ …என்றான் அரவிந்தன்…

திருதிருவென முழித்தாள்…..

அப்பாடா.. ன்னு சொன்னியே ??? அதான் என்னன்னு கேட்டேன்…

ஒன்னும் இல்லையே….

என்ன !!ஒன்னும் இல்லையே …

முன்ன பின்ன பழகாமல் வந்தவுடனே மேல பாஞ்சி டுவேன் னு நினைச்சியா…?

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை …எனக்கு தூக்கம் வருது… குட் நைட்… என படுத்துக்கொண்டு கண் மூடி தூங்க முயற்சி செய்தாள்…..

குட் நைட் என்றான் பதிலுக்கு …..தூங்கியும் விட்டான் ….

ஆனால் புது இடத்தில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடியும் போது தான் கண் உறங்கினாள்…..

பிரபா பிரபா என்று எங்கோ கத்துவது போல் கேட்டது …அரவிந்தன் தான் அழைத்தான்… அவளிடம் பதில் இல்லை …..

ஹே !பிரபா!எந்திரிக்கிற ஐடியா இருக்கா இல்லையா என்று தோள் தட்டி எழுப்பினான்…அடிச்சு பிடிச்சு எந்திரிச்சி மணியை பார்த்தாள். மணி பத்து ..தன்னைத்தானே நொந்துகொண்டு ஒரு அசட்டு புன்னகையை அரவிந்தனை நோக்கி உதிர்த்தாள்…

இந்நேரம் எங்கம்மா கவி மட்டும் இங்கே இருந்திருந்தால் என்ன விளக்குமாற்றால் அடிக்காத குறையா அடித்து எழுப்பி விட்டிருப்பாங்க என மனதினில் அம்மாவை மிஸ் செய்தாள்…

என்ன அம்மா ஞாபகமா!? என்றான் …

எப்படி கண்டு பிடிக்கிறான் மனசில் நினைக்கிறத… என நினைத்துக் கொண்டாள்…

சரி குளிச்சிட்டு கீழ வா உங்க அம்மா அப்பா இப்ப வந்திடுவாங்க என்றான்…குழந்தையை சமாதானப்படுத்துவது போல்….

குளித்து முடித்துவிட்டு வழக்கம்போல் சுடியா? சேலையா? என பட்டிமன்றம் நடத்தி சேலை என முடிவு செய்து சேலையைக் கட்டி கீழே இறங்கி வந்தாள்…

தீபிக்கா…. நீ எப்ப வந்த ..மாமா… என்றாள் பிரேமிடமும்..எட்டு மணிக்கே வந்துட்டோம் என்றான் பிரேம் …ஏண்டி பத்து மணி வரைக்குமா தூங்குவ…என்று காதில் கடித்தாள் தீபிகா…. என்ன பதில் சொல்ல என தெரியாமல் உதவிக்காக அரவிந்தனைப் பார்த்தாள்….

சரி அண்ணி நீங்க உங்க பாசமலர் கூட அப்புறமா பேசுங்க .நாங்க சாப்பிடுகிறோம் என சாப்பிட அழைத்துச் சென்றான் ….பிரபாவின் அம்மா அப்பா வந்து மறு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள் ….ஒரு நாள் பிரிவில் நம்ம அம்மா அப்பாவும் அன்னியமாக முடியுமா !!!!அழைத்தால் தான் நான் என் வீட்டுக்குப் போக முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள் ….

இல்லாததை உருட்டி தேடிக்கிட்டு இருக்க???
என்றான் அரவிந்தன் அவனை நோக்கி எதுவும் புரியாமல் விழித்தாள் பிரபா …..

எல்லாத்துக்கும் இதே ரியாக்சன் தானா என்றான்…..

இல்லாத மூளையே ஏன் கசக்கி பிழிஞ்சு யோசனை செஞ்சுகிட்டு இருக்க …..சரி நான் கிளம்புறேன்…. நீ உன் கும்பகர்ணி வேலையை ஸ்டார்ட் பண்ணு என்று சிரித்து விட்டு கிளம்பினான்…..

நீ யாருடா… இவன் …நேற்று வரை எதுவும் பேசாமல் அமுங்குனியாய் அமைதியாய் நீ யாரோ நான் யாரோ என்று இருந்தான்…இன்னைக்கு என்னமோ லவ் மேரேஜ் பண்ணினவங்க போல என் முகத்தை வைத்தே என் மனதை புரிஞ்சுக்கிறன்…. கேலி கிண்டல் சேய்து என் மனதை இலகுவாக்கி என் மனம் என்னை அறியாமலே அவன்பால் அன்பால் சாய்கிறதே!!

….. நீ தான் எப்பவோ அவன் பக்கம் சாஞ்சிட்டியே பிரபா என மனசாட்சி என்ட்ரி கொடுத்தது…

அது சரிதான் …ஆனால் அந்த சித்ரா விசயம் முழுசா தெரியிற வரைக்கும் அதை வெளிக்காட்டிக் கூடாது என நினைத்தாள்….

ஒருவேளை சித்ராவும் இவரும் லவ் பண்ணி இருப்பார்களோ என ஆராய்ச்சியில் இறங்கினாள்….

எனக்கு மூளை இல்லன்னு கிண்டல் பண்றடா… என் கிட்னிய வச்சி …..அச்சச்சோ…பிரெய்ன வச்சி யோசிச்சு சித்ராவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இப்ப என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கிறேன் மனதினில் சபதமேற்றாள் பிரபா ……

இந்த காதல் மட்டும் புரிவதில்லை!!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago