காதல் மட்டும் புரிவதில்லை 10
பிரபாவதியின் கையிலிருந்த பார்சலை பிரித்து பார்க்க வைத்தான், அரவிந்தன்..
அது ஒரு லேப்டாப் …
இது எதுக்கு? என ஆச்சரியம் காட்டினாள் பிரபா..
உனக்கு என்னோட கிப்ட் ,என்றான் …
எதுக்கு ?இன்னைக்கு என் பிறந்த நாள் கூட இல்லையே ….
அது எனக்கு தெரியும்….
அப்புறம் எதுக்கு??
உன்னோட பிறந்தநாளுக்கு கிப்ட்டா கொடுப்போம்னு வாங்கி வச்சு இருந்தேன் …ஆனா என்னோட பிறந்த நாளுக்கு நீ கொடுத்த சர்ப்ரைஸ் னால இப்பவே கொடுக்கணும்னு தோணுச்சு ….
ஓ!!!
என்ன ஓ???
ம்..ஆனா எதுக்கு இது??
நீ தான் நம்ம கல்யாணம் நிச்சயம் ஆன உடனே வேலைக்கு கண்டிப்பா போகனும் அப்படிங்கிற என்னோட லட்சியம் என்ன ஆகுறது …கல்யாணம் பண்றதுக்கா இன்ஜினியரிங் படிக்க வச்சீங்க னு கேட்டியாமே.. அதுக்குத்தான் இது …
வியப்பு மேலிட அரவிந்தனை ஏறிட்டாள் பிரபா ..
முட்டைக் கண்ணை இன்னும் விரிக்காதா!! என்றான்…
நீ வீட்டிலிருந்து ஆன்லைன்ல பார்க்கிற மாதிரி வேலையை ட்ரை பண்ணிடு …ஓகேவா…?
சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி சரி சொன்னாள்….
காதல் கடலில் அவர்கள் பயணம் இனிதே தொடர்ந்தது ….
தங்களது காதலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விரும்பினர் இருவரும் ….
ஆனால் சித்ரா விஷயம் மட்டும் தீர்க்கப்படாத புதிராகவே இருந்தது பிரபாவுக்கு… அதுவே அவளுக்கு கவலை அளித்தது ….
எப்படியாவது அரவிந்தனிடம் இன்று கேட்டுவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டே இருந்தாள் பிரபா …
குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அவர்கள் வீட்டிற்கு வந்து இருந்தனர் காரணம் மறுநாள் அரவிந்தனின் அண்ணி மாலதியின் வளைகாப்பு வைபவம்…
ஆளுக்கு ஒரு வேளையுமாய் பொழுதொரு கேலியுமாய் வைபவம் களைகட்டியது …மாலதியின் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர் சித்ரா உட்பட…..
சித்ரா கவனமாக பிரபாவுடன் பேச்சை தவிர்த்தாள்….
அந்த அழகான இள வெயில் அடிக்கும் மாலைப்பொழுதில் அரவிந்தனும் பிரபாவும் வளைகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
ஃபங்சன் முடிந்ததும் சித்ராவைப் பற்றி கேட்டுவிட முடிவு செய்தாள் பிரபா….
குடும்பத்திற்குள் ஃபங்சன் என்றால் கொண்டாட்டமும் இருக்கும் சண்டையும் இருக்கும் தானே..
இந்த ஃபங்சன் அரவிந்தன் பிரபாவுக்கு எதை வைத்து இருக்கிறது எனப் பார்ப்போம் ….
இந்த காதல் மட்டும் புரிவதில்லை…!