காதல் கருவறை 9

0
967

கரு 9:

நான் உங்ககிட்ட பேசறதுக்கு பதிலா இந்த செவிறுகிட்ட பேசினா கூட யாரு பெத்த பொண்ணோ பாவம்னு கவனிச்சு இருக்கும் அதை விட்டுட்டு உங்ககிட்ட பேசறேன் பாருங்க என்ன சொல்லணும்

தாருண்யாவின் கண்கள் குணாவை பார்த்தாலும் மனம் வேறெங்கோ இருந்தது , குணா திட்டுவதையெல்லாம் அவள் காது கொடுத்து கேட்டால்தானே அவளின் நினைவோ அன்று நடந்த சம்பவத்தை பற்றியே இருந்தது , அது முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது அடுத்த நாளே அவளின் வேலை முடிந்துவிட்டதாக மனுபரதன் கூறியதாக பெரியம்மா கூறினார் . ஏதோ நிம்மதியும் கூடவே ஒரு கலக்கமும் ஒன்றாக அவளின் மனதில் தோன்றியது .

அன்றிலிரிந்து அவனின் யோசனைகளும் கூடவே இருந்து கொண்டு இருந்தது அதை மாற்ற அவள் கவனத்தை தையலில் திருப்பினாள் . அன்று , மனுபரதனை அடித்த அன்றுதான் , இவ்வளவு நாள் வேலை அதிகம் இருந்ததால் குணாவிடம் பேச முடியவில்லை என்று அவளை வர சொல்லி இருந்தாள் ஆனால் நடந்த நிகழ்ச்சியில் அதை சுத்தமாக மறந்துவிட்டிருந்தவளை முகம் கொடுக்காமல் இரண்டு நாள் ஒட்டியவள் பொருக்கமுடியாமல் மூன்றாம் நாள் அவளை வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் குணசுந்தரி

இவ்வளவு நாள் வேலைன்னு இருந்தீங்க வந்து மூணு நாள் ஆச்சு ஆனா என்ன வந்து பாக்கவே இல்லை

வந்த ரெண்டு நாளும் மேடம் தான் மூஞ்சி திருப்பிட்டு இருந்தீங்க எங்க நான் ஆரமிச்சிடுவேனோன்னு நீ முந்திக்கிட்டு இப்படி மூச்சுவிடாம திட்ற , இப்பதான் வேலை டென்ஷன் முடிஞ்சது அதுக்குள்ள நீ உன்ன பார்க்கலனு சண்டை போடற , நான் சீக்கிரமே அவளை பற்றி தகவல் சேகரிக்கறேன் ஓகே வா

நீங்க பாக்காத வேலையையும் சேர்த்து நான் பார்த்தேன் என் ஃபிரண்டுக்காக என்றபடி தன் கையில் இருந்த கைபேசியில் ஒரு ஆணின் புகைப்படத்தை காமித்தாள்

நீங்களும் இல்லையா எனக்கு என்ன பண்ணனு தெரியல எதுக்கும் சந்தோஷிய ஃபாலோ பண்ணலாமேன்னு அவ போற இடத்துக்கெல்லாம் போனேன் அப்போ தான் இந்த பையன் என் கண்ல பட்டான் , முதல்ல நானும் சரியா கவனிக்கல திரும்ப திரும்ப என் கண்ல பட்டுட்டே இருந்தான் அதுவும் எப்பவும் இல்லாம சந்தோஷிய நான் ஃபாலோ பண்ணும்போது மட்டும் அதான் சரி எதுக்கும் கவனிக்கலாமேன்னு போட்டோ எடுத்தேன்

குணாம்மா , கலக்கற போ நான் இல்லாத நேரத்துல ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பார்த்துருக்க போல ஆனா நீ கோவமேபட்டாலும் சரி இதை நான் சொல்லியே ஆகணும் , சந்தோஷி ஓரு அழகான பொண்ணு அதனால சும்மா இந்த சாரும் சான்ஸ் கிடைக்குமான்னு சுத்திருக்கலாம்ல

அக்கா , சும்மா ஒட்டாதீங்க நான் இவன மட்டும் பார்திருந்தா ஏதோ ரோட் சைட் ரோமியோன்னு விட்டிருப்பேன் ஆனா அவனை முதல்ல சந்தோஷி பாக்கல பார்த்த பிறகு அவ பார்வைல அவ்ளோ தயக்கம் அது மட்டும் இல்ல அவனை அவ வாழ்க்கையிலிருந்து விலக சொல்லி கெஞ்சிக்கிட்டு இருந்தா அவ அந்த மாதிரி ரியாக்ட் பண்ணி நான் பார்த்ததே இல்ல தெரியுமா

இவக்கூட அப்பவே சண்டை போடாமலாம்னு நெனச்சேன் நீங்க தான் எதுவும் செய்ய கூடாதுன்னு சொன்னிங்களேன்னு போட்டோ மட்டும் எடுத்தேன் , நீங்க என்னடான்னா எங்க அண்ணன் வேலை செய்ய சொன்னதிலேர்ந்து எல்லா விஷயத்தையும் மறந்துட்டீங்க என்று குறைப்பட்டாள்

உங்க அண்ணன் வந்ததில் இருந்து நான் என் வழியை பற்றியே யோசிக்கவில்லை இதில் சந்தோஷியை எங்கே யோசிப்பது என்று நினைத்தவள் இப்பொழுதாவது அதற்கு வழி தேடவேண்டும் என்று நினைத்து சரி விடு இனிமே நான் தான் உன்கூடவே இருக்கப்போறேன் அதனால நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த கள்ளியோட காதலன் யார்ன்னு கண்டுப்பிடிப்போம்

முதல்ல அந்த போட்டோல இருக்கற ஆள் யாருன்னு கண்டுபிடிக்கணும் நீ சொல்றத வைச்சு பார்த்தா அவன் கண்டிப்பா நம்ப சந்தோஷி போகிற இடத்துக்கு வருவான் அதனால நாளைக்கு முதல் வேலையா அவ எங்க போறாளோ நம்ப அங்க அவளை தொடர்ந்து போலாம

சரி சங்கத்தை கலச்சிட்டு சாப்பிட போகலாம் வாங்கக்கா என்று தாருண்யாவை தள்ளி கொண்டு போனாள்

மறுநாள் அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பு அவர்களுக்கு எதிரில் வந்தது

வழக்கம் போல சந்தோஷியை சந்தித்தவன் அவளை வழிமறித்தான் இன்னும் எவ்ளோ நாள் என்னை அலயவிடப்போற , என்னால முடியல , எவ்ளோ ஆசைகளோட எல்லா பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பிச்சாங்க என்கூட பேசிட்டு நீ போன நிம்மதியில் தான் நான் வெளிநாட்டுக்கு போனேன் , ஆனா திரும்பி வந்தப்போ எல்லாமே முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க , என்ன நடந்ததுன்னு ஒண்ணும் புரியலை

நீங்க எதையும் புரிஞ்சிக்க வேணாம் தயவு செஞ்சு இங்கிருந்து போய்டீங்கன்னா போதும்

இதையே எத்தனை தடவை சொல்லுவ எனக்கு ஏன் எதுவும் தெரியக்கூடாதுன்னு சொல்ற , நீ என்கிட்ட எதையோ மறைக்க முயற்சி செய்யற அது என்ன உண்மை சொல்லு சஷி

சரண் ப்ளீஸ் தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க , நமக்குள்ள இனிமே எதுவும் இல்லை அதனால என்ன பாத்து பேச முயற்சி செய்யாம என்ன விட்டு முடிஞ்சா இந்த ஊரை விட்டுக்கூட போய்டுங்க என்றவள் விலக அவளை கை பிடித்து நிறுத்தியவன்

இல்ல எனக்கு நீ பதில் சொல்லாத வரை உன்ன விடமாட்டேன் , எனக்கு தேவை உன் விளக்கம் மட்டும்தான் அது கிடைக்கற வரைக்கும் நான் எங்கேயும் போகமாட்டேன் என்றவனை உதறியவள் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி சென்றாள்

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு பெருமூச்சுடன் திரும்பி நடக்க எதிரில் அவனை வழிமறித்த இரு பெண்களையும் என்ன என்பது போல் பார்க்க

சந்தோஷி விஷயமா நாங்க உங்ககிட்ட பேசணும் இங்க முடியாது எங்கேயாவது உட்கார்ந்து பேசலாமா என்றவர்களை அளப்பது போல் பார்த்தவன்

நான் என் கார்ல வந்திருக்கேன் உங்க வண்டில முன்னாடி போங்க நான் பின்னாடியே வரேன் என்றபடி சென்றான்

வண்டியில் வரும்போது பின்னாடி இருந்து குணா அக்கா எனக்கு என்னாமோ அந்த குழந்தைக்கும் இவனுக்கும் சம்மந்தம் இருக்கணும்னு தோணுது ஏதோ தப்பாகி இருக்கு அதான் அவள் இவரை இவ்ளோ மறுக்கறா

எதுவாக இருந்தாலும் பேசி பார்த்தாதான் தெரியும் என்று முடித்தவள் அந்த ரெஸ்டாரெண்டை நெருங்கி அவனையும் அழைத்துக் கொண்டு ஓரமாய் அமர்ந்தவர்கள் பேருக்கு ஆர்டர் செய்து விட்டு மௌனம் காத்தனர்

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தாருண்யா யோசித்துக்கொண்டிருக்க குணா சராமாறியாக கேள்விகளை தொடுத்தாள் யாரு சார் நீங்க , என்ன பண்ணீங்க அவளை , அவ எப்படி இருந்த பெண் தெரியுமா உங்களுக்கு ? அவளை இந்த நிலைமைக்கு நீங்க தான் கொண்டு வந்துருக்கீங்க

ஹலோ , என்ன உளர்றீங்க , நான் என்ன பண்ணேன் ? எனக்கே என்ன நடந்ததுன்னு தெரியாம தான் அவகிட்ட கேட்டுகிட்டு இருக்கேன் , நீங்க கூட ஏதாவது அவளை பத்தி சொல்வீங்கன்னு நெனச்சுதான் நீங்க கூப்பிட்டதும் உடனே வந்தேன்

சும்மா நடிக்காதீங்க சார் , அவ மனச கலச்சி அவக்கூட பழகி ஏமாத்திருக்கீங்க , இந்த நிலைமைக்கு அவளை கொண்டு வந்துட்டு இப்ப நான் என்ன பண்ணேன்னு கேக்கறீங்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ?”

போதும் இவ்ளோதான் உங்களுக்கு மரியாதை , ச்ச , ஏதோ உங்கக்கூட பேசினா அவளபத்தி ஏதாவது தெரிஞ்சிக்கலாம்னு நெனச்சேன் பாருங்க என்ன சொல்லணும் என்றபடி எழுந்திருக்க

குணா கொஞ்சம் சும்மா இரு , என்ன நடந்ததுன்னு தெரியாம அவரை குறை கூற முடியாது

இன்னும் என்னக்கா தெரியணும் அதான் பேசினாலே தெரியுதே இந்த ஆளோட லட்சணம்

அம்மா தாயே , கொஞ்ச நேரம் வாய மூடு என்றவள் அவனிடம் திரும்பி

சாரி மிஸ்டர் என்று இழுக்க அவன் சரண் என்றான்

சாரி சரண் , அவ ஃபிரெண்ட் மேல இருக்கற பாசத்துல இப்படியெல்லாம் பேசிட்டா , என் பேர் தாருண்யா நான் அவங்க வீட்ல வேலை பார்க்கிறேன் தவிர சந்தோஷியோட பிரச்சனை என்னனு என்ன பாக்க சொல்லி அவங்க பெரியம்மா சொல்லி இருக்காங்க , இவ குணசுந்தரி , சந்தோஷியோட ஃபிரெண்ட் , நீங்க எங்களுக்கு உங்களை பற்றிய விவரங்களை சொன்னீங்கனாதான் நாம மேற்கொண்டு என்ன பண்ண முடியும்னு யோசிக்கலாம்

கண்டிப்பா சொல்றேன் தாருண்யா , இவங்க சொல்றா மாதிரி அவளை ஏமாத்தி விட்டு போக எனக்கு எந்த அவசியமும் இல்லை , அப்படி ஏமாத்தி போறவனா இருந்தா இங்க அவளை தேடி வந்திருக்கவே மாட்டேன் என்றவன் அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை தந்தான்

நானும் அவளும் மனதார நேசிக்கின்றோம் , தவிர அவளை கல்யாணம் செய்ய அவர்கள் பெற்றோர் பார்த்த பையன் நான்தான்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here