கரு 23:

அந்த கார் பெரிய கேட்டின் முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது சரணை இங்கு ஏன் அடைத்து வைத்திருக்கிறான் என்று யோசனையுடன் உள் நுழைந்தவர்களை இரு காவலர்கள் அழைத்து சீக்கிரம் பார்த்துவிட்டு போங்கள் உங்களுக்காக தான் இவரை இன்னும் கோர்ட்டிற்கு கூட்டி செல்லாமல் இருக்கிறோம் பத்து நிமிடங்கள் தான்

கீழ் உள்ள ரூமில் அமைதியாக அமர்ந்திருந்தவனை பார்த்து கண்ணீர் வழிய நின்றவளை பார்க்க நெஞ்சு கலங்கியது தாருண்யாவிற்கு மெதுவாக அவள் பேச ஆரம்பித்தாள்

என்ன சரண் இதெல்லாம் அவர் சொன்னதிற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய அவசியம் என்ன , நான் எவ்வளவோ நம்பிக்கையோடு இருந்தேனே நீங்கள் இவளுடன் வாழும் வாழ்க்கையை பற்றி எவ்வளவு யோசித்தோம்

எதற்கும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவன் விழிகள் மட்டும் சந்தோஷியை விட்டு அகலவில்லை அதை பார்த்து அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி நகர்ந்தவளை நில் தாருண்யா என்ற சரணின் குரல் நிறுத்தியது

பொதுவாக அவளை பார்த்து மனுபரதன் எந்த தவறும் செய்யவில்லை நான் கொஞ்சம் பின்தங்கிவிட்டேன் அவனை கண்டுபிடிப்பதில் , அதில் அவர் முந்திக்கொண்டு அவனை அழித்துவிட்டார் , ஆனால் வருணின் அழிவு என் கணக்கு நான் செய்ய வேண்டிய காரியம் அதை இன்னொருவருக்கு விட்டதே தவறு பிறகு தண்டனை அவருக்கு எப்படி வரும்

வருண் செய்த எல்லா விஷயங்களையும் தம்பி என்று ஒதுக்கி விட்டு விலகி இருந்தேன் பிசினஸ் விஷயங்களில் அவன் மூக்கை நுழைப்பதில்லை என்கிற தைரியத்தில் அவனை ஆராயாமல் விட்டது முழுக்க என் தவறு இதில் எதுவும் அறியா ஒரு பெண் அவள் வாழ்க்கையை அடகு வைக்கும் அளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறேன் இதெல்லாம் மனுபரதன் குற்றமா ?”

இதோ இவள் வார்த்தைக்கு வார்த்தை அது என் குழந்தை உனக்கு சம்பந்தமில்லை என்றுஎன்னை ஒதுக்குகிறாள் அதை போல் இது என் முடிவு அவர் அதற்கு ஒத்துக்கொண்டார் அவ்வளவுதான் இதில் யாரையும் என்னை வற்புறுத்தவோ மிரட்டவோ இல்லை

மெதுவாக எழுந்தவன் இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என் அஜாக்கிரதை மட்டும் தான் என்றவன் வலியுடன் சந்தோஷியை பார்த்து

என்னை நான் யாருக்குமே புரிய வைக்கவில்லை தாருண்யா , இவள் எனக்காக செய்த தியாகம் வீணாகாமல் இருக்க என்னை மறுக்கிறாள் , ஒன்றை மறந்துவிட்டாள் எல்லாம் முடிந்து நான் வந்த பிறகும் இவளைதான் தேடி அலைந்தேன் , நான் வேறு வாழக்கை அமைத்துக்கொண்டு வாழ்வேன் என்று எப்படி யோசித்தாள் எப்படி அவளுக்கு நான் இல்லாமல் வேறு வாழக்கை இல்லை என்று எனக்கு தெரியுமோ அதுபோல் அவள் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா என் வாழ்க்கையில் அவளை தவிர யாரும் இல்லை என்று , இல்லை நான்தான் எதுவும் புரியவைக்கவில்லை நான் மோசமாக தோற்றுவிட்டேன்

வியாபாரத்தில் ஜெயித்துவிட்டேன் என்று நினைத்தேன் அதுவும் இவள் எனக்கு போட்ட பிச்சை வாழ்க்கையில் ஜெயித்துவிட்டேன் என்று நினைத்தேன் அதுவும் இவளின் மறுப்பால் இல்லை என்றாகிவிட்டது நான் எதிலுமே வெற்றிபெறவில்லை என்று தெரிந்துவிட்டது அதான் இந்த தண்டனை என் தோல்விக்கெல்லாம் வடிகாலாக இருக்கும் என்று இதை ஏற்கிறேன்

காதல் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது தான் எனக்காக பார்த்து பார்த்து செய்தவள் என்னை விட்டுவிட்டாள் அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை , எனக்கான மறுவாழ்வு இன்னொரு பெண்ணுடன் என்று எப்படி யோசித்தாள் , அது என்னுடைய குழந்தை தாருண்யா என் நலனுக்காக வந்தவள் எனக்காக இந்த பூமியில் வந்த தேவதை , இவள் யார் அதை எனக்கு தரமாட்டேன் என்று சொல்வதற்கு

என்னிடம் எல்லாம் உள்ளது பணம் புகழ் அந்தஸ்து ஆனால் எல்லாம் இருந்தும் இந்த நொடி ஆதரவில்லாதவனாக உணர்கிறேன் , அன்பில்லாது மறுக்கப்படுவதை விட அதிக அன்பால் மறுக்கப்படுவதை மிக கொடுமையாக உணர்கிறேன் , இதை தாங்கி வெளியில் சாதாரணமாக வாழ என்னால் முடியாது தாருண்யா , இதை கூட அவள் நம்பமாட்டாள் நான் கைதாகிய விவரம் மற்றும் ஃஎப் ஆர் காபி இருக்கும் அவளை பார்க்க சொல் என்றவன் கண்களை மூடி கொண்டு நாற்காலியில் சாய்ந்தான்

அதுவரை அவன் பேசியதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள் திரும்பி தாருண்யாவை பார்க்க அவள் எல்லாம் உன் பிடிவாதம் என்பதுபோல் பார்வையாலேயே இவளை குறை கூறிக்கொண்டிருந்தாள் , இன்னும் எவ்வளவு தான் அவன் உணர்வுகளை கொல்ல போகிறாய் சந்தோஷி என்பது போல் இருந்தது அவள் பார்வை

அந்த பார்வையை தாங்கியவள் ஒரு பெருமூச்சுடன் அவள் கையில் இருந்த பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்தவள் அவர்கள் பார்வை அதில் படும்படி வைத்துவிட்டு நகர்ந்துவிட்டாள் அதை பார்த்தவர்கள் விழிகள் தெறிக்கும் அளவு விரிந்தது .

ஒரு பேப்பரில் இத்தனை நேரம் தொலைந்த சந்தோஷம் கிடைத்துவிட்டது என்று நம்ப முடியாமல் நின்றனர் , அது குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அதில் குழந்தையை பிறந்த ஹாஸ்பிடல் பெயர் மற்றும் குழந்தையின் பெயர் இருந்த இடத்தில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தது தாயின் பெயர் சந்தோஷி தந்தையின் பெயர் சரண் என்றும் இருந்தது அதை பார்த்த சரணின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்தது

நான் ஒன்றும் இரும்பு மனுஷி இல்லை தாருண்யா , இது மாமாவின் மிராட்டலுக்காகவும் இல்லை அவள் பிறந்த போதே என் வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சி அவள் பேரில் இருந்தே தொடங்க வேண்டும் அவளின் தந்தை இவர் தான் என்று பெயரளவில் சேர்க்க வேண்டும் என்றும் அப்பொழுதே நான் இதை கொடுத்து விட்டேன் ஆனால் யார் வந்து கேட்டாலும் விவரம் கொடுக்க கூடாது என்று கேட்டுக்கொண்டேன் என் மனதை பொறுத்தவரை அவர்தான் இவளுக்கு தந்தை என்று என் மனம் நம்புகிறது ஆனாலும் அவர் வாழ்க்கை எல்லாவற்றையும் விட எனக்கு பெரியது என்றுதான் ஒதுங்கி போக நினைத்தேன் ஆனால் எப்பொழுது என் சந்தோஷம் தான் அவர் நிம்மதி என்று நினைக்கிறாரோ அவர் நிம்மதியை நான் நிச்சயம் இழக்க விடமாட்டேன் இப்பொழுதும் அவர் நிம்மதிக்காக தான் நான் இந்த திருமணத்தை ஏற்கிறேன் தவிர என் வாழ்வு சீர் செய்வதற்காக இல்லை என்றவளின் காதல் மேல் பிரமிப்பு தான் வந்தது தாருண்யாவிற்கு

பின்னிருந்து கை தட்டும் ஓசை கேட்க அங்கு மனுபரதனை கண்டதும் அனைவருக்கும் அதிர்ச்சியும் வியப்பும் ஏற்பட

எனக்கு தெரியும் சரணுக்கு ஆபத்து என்றால் நீ நிச்சயம் மாறுவாய் என்று அவருக்கே தெரியாமல் நான் அவரை இதில் மாட்ட வைத்தேன் நிச்சயம் உன் காதலுக்கு தகுதி உள்ள மனிதர்தான் உனக்காக எதையும் செய்யக்கூடியவர் இனியும் நீங்கள் வேதனை அடையாமல் வாழ நான் எல்லாம் செய்வேன் என்றவன் சரணை பார்க்க

சாரி சரண் கொஞ்சம் கசப்பு மருந்து குடித்தால் தான் நோய் சரியாகும் என்பதுபோல் என் சந்தோஷிக்கும் உங்களின் காதலும் அவல்ஜன் காதலை உங்களுக்கு உணர்த்தவே உங்களை கைது செய்ய சொன்னேன் இனி உங்கள் கல்யாணத்தை சுமுகமாக முடிப்பது என் வேலை என்றதும்

மாமா …. பெரியம்மா என்று கலங்கியவளை இனியும் என்னடா கலக்கம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறேன் இல்லையா , பெரியம்மா மட்டுமில்லை சரணின் பெற்றோரும் வருவார்கள் அவர்களாகவே என்றவன் பிரிந்த காதலர்களுக்கு தனிமை தர எண்ணி சரணிடம் தன் கார் சாவியை தந்தவன் இனியாவது மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று கேலி செய்வதுபோல் கூறி தாருண்யா பக்கம் கை நீட்டி அவர்களை நான் வீட்டில் விட்டு விடுகிறேன் அதற்கு முன் காவல் துறை நண்பர்களுக்கு ஒரு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தாருண்யாவை பார்க்காமலேயே நடந்தான் ,

ஓடி வந்து தாருண்யாவை அணைத்த சந்தோஷி என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் தாருண்யா என்றவளை இறுக்கி அணைத்தவள் உன் காதலுக்கு முன் நான் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை , நீ இனி ஒரு துன்பம் கூட அடையாமல் சரண் உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வார் , இனி எல்லாம் சரியாகிவிடும் சந்தோஷி , குணாவிற்கு தெரிந்தால் மிகவும் சந்தோஷம் அடைவாள் என்று கூறிவிட்டு சரணிடம் வந்தவள்

நான் கூட யோசித்தேன் , சந்தோஷி இவ்வளவு விஷயங்கள் ஏன் செய்தாள் என்று , இப்பொழுது புரிகிறது உங்களை போன்ற உண்மையான மனிதருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அறிந்துதான் அவள் அவளையே பணயம் வைத்தாள் இனி நீங்கள் இருவரும் எந்த குறையும் இல்லாமல் எப்பொழுதும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதே நான் கடவுளிடம் வைக்கும் கோரிக்கை என்றவள் ஒரு தலை அசைப்புடன் விடைபெற்றாள்

அவர்கள் சென்றதும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் கையை கட்டிக்கொண்டு சந்தோஷியை பார்த்துக்கொண்டிருந்தவன் அவளின் தவிப்பை பார்த்து இரு கைகளையும் நீட்டி அவளை வா என்று பார்வையால் அழைத்தான்

சரண் என்ற கதறலுடன் அவனிடம் பாய்ந்தவளை அவள் அழுகை ஓயும் வரை தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தான் பின் தன்னை தேற்றிக்கொண்டவள் அவன் மடியில் அமர்ந்திருப்பதை பார்த்து அவசரமாக எழ உதை வேண்டுமா உனக்கு என்று அவள் இடையில் கை கொடுத்து தன் புறம் இழுத்தவன் நன்றாக கேள் இது என் மனைவிக்கும் என் மகளுக்கும் உரிய இடம் , அதை விட்டு நகர என் அனுமதி வேண்டும் என்றவன் அவள் பின் கழுத்தில் அழுந்த முத்தமிட்டான் ..

அவன் செய்கையில் நெகிழ்வும் விதிர்பும் ஒரு சேர எழ அவள் தன் வாய் திறந்து சொல்வதற்கு முன் எனக்கு தெரியும் சஷி இந்த உறவு நம் நிம்மதிக்கு மட்டுமே நீ மாறியே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை ஆனால் நிச்சயம் என் அன்பு உன்னை பழைய சந்தோஷியாக மீட்டெடுக்கும் .. மகிழ்ச்சி என் பெண் , என் வாழ்வு முழுமைக்கும் அவள் மட்டும் போதும் … “ என்றவனின் காதல் என்றும் போல் அவளை சிறையெடுத்தது .

வீட்டிலிருந்து வாசல் வருவதற்குள் ஆயிரம் யோசனைகள் மனதினுள் ஓட தட தடவென்று ஓடும் இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்டது வேறு வழியில்லை அவனுடன் போய்தான் ஆக வேண்டும் , சும்மா இருக்கும் பொழுதே அவ்வளவு திட்டுவான் இப்பொழுது அவனை புரிந்து கொள்ளாமல் பேசியதற்கு வேறு அவன் வாங்கி கொள்ளவேண்டும்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago