கரு 22:
எவ்வளவு சொன்னான் தான் பார்த்துக்கொள்வதாக எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும் தான் இவன் இவ்வளவு சதி செய்வான் என்று நினைக்கவே இல்லையே என்று ஒய்ந்துபோனாள் தாருண்யா , சந்தோஷியின் கதரலுக்கு தானும் காரணம் ஆகிவிட்டோம் என்ற நினைப்புதான் அதிகம் வாட்டியது
அழுது ஓய்ந்தவளின் தோற்றம் நெஞ்சை அறுக்க ஏதாவது அவளுக்கு குடிக்க தர எண்ணி எழுந்தவள் அவள் வாயருகில் பால் டம்பிளரை கொண்டுபோனவன் ” நான் இதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைதாயானால் இதை சாப்பிடு ” என்றதும் மறுபேச்சு பேசாமல் அருந்தியவள் சிறிது நேரத்தில் உறங்கி போனாள்
அவளை குழந்தை போல் ஏந்தியவன் மெதுவாக அவன் அறையில் படுக்க வைத்தான்
இவ்வளவுக்கும் தான் இருந்த இடத்தில் இருந்து அசையாதவள் அவனை தீப்பார்வை பார்த்தாள் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அந்த பார்வையை எதிர்கொண்டவன்
“ என்னை நம்பவில்லை அப்படித்தானே ”
‘ இதற்கு மேலுமா ?, எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வீர்கள் என்று , எல்லாம் பொய் பாவம் சரண் அவரை ஏன் இதில் மாட்டவைத்தீர்கள் ”
முகத்தில் கோபம் எற “ ஏன் இன்று சந்தோஷியின் இந்த நிலைக்கு அவன் தானே காரணம் ”
“ உளறல் , அவள் தானாக தான் பணயம் வைத்தாள் இது எதுவுமே சரணுக்கு தெரியாது இப்பொழுது கூட அவள் நிலையின் காரணம் தெரியாமலேயே அவளை திருமணம் செய்தவர் அவர் , கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு காரணம் சரண் என்று சொல்ல உங்களுக்கு வாய் கூசவில்லை “
“ சந்தோஷி உறவுமுறை தாண்டி எனக்கு குழந்தை போன்றவள் அவள் வாழ்வு நாசமானவர்களுக்கு நான் தண்டனை தந்துவிட்டேன் அதற்கு முதல் காரணம் சரணின் மீது உள்ள காதல் இவளை பற்றி ஒரு வருடம் என்னவாயிற்று என்று கூட அக்கறை இல்லாமல் அவன் வேலையை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான் அவனுக்கும் தண்டனை தராமல் எப்படி விடுவது ”
தாருண்யாவிற்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது ” அவருக்கு இவ்வளவு தூரம் போகும் என்று தெரியாது தெரிந்திருந்தால் அவர் போயிருக்கவே மாட்டார் ”
“ கூட இருந்து குழி பரிப்பவர்கள் யார் என்ற கணக்கீடு இல்லாமல் தொழில் செய்பவன் முட்டாளாக இருப்பான் , அவனின் முட்டாள்தனம் இந்த பெண்ணின் அறியாத்தனம் இரண்டும் அவள் வாழ்க்கையை எங்கோ கொண்டுபோய்விட்டது உண்மைதானே ”
அவனுக்கு புரியவைக்கும் வேகத்தில் “ ஏன் நீங்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள் பெரிய பிசினஸ் புலி , அவள் அங்கு நாசமாகிக்கொண்டிருந்ததை இங்கிருந்தே ஞானத்திருஷ்டியில் கண்டுபிடிக்கவேண்டியதுதானே ”
சிறு சிரிப்பு தோன்றியதோ என்று நினைக்கும்முன் இறுகியவன் அவள் அருகில் வந்தான் ‘ நான் சந்தோஷியின் பெற்றோர் இருக்கின்ற தைரியத்தில் அவளை பற்றி யோசிக்கவில்லை மேலும் என் தொழில் எதிரிகள் அவர்களை எதுவும் செய்யமுடியாதபடி பாதுகாத்திருந்தேன் ஆனால் இந்த காதல் அவளிடம் வந்தது எனக்கு தெரியாது தன்யா ” என்றவன்
மேலும் அவளை நெருங்கி அவள் நகரவிடாதபடி கைகளை ஊன்றியவன் ” என் விஷயத்தில் நான் என் காதலியை கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ”
அவன் வார்த்தையில் குழப்பம் அதிர்ச்சி இரண்டும் வந்தது இவன் என்ன சொல்கிறான் அப்படி என்றால் மித்திலாவை இவன் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறானா அவள் இருக்கும் இடம் இவனுக்கு தெரியுமா என்று யோசிக்கையில் அந்த கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாக விலகினாள்
சந்தோஷி சோர்வுடன் அவனிடம் வர அவளிடம் இளக்கம் தோன்ற மெதுவாக அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை கோதியவன்
“ சொல்லு நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் ”
“ சரண் பாவம் மாமா , அவரை விட்டுவிடுங்கள் ”
பெருமூச்செறிந்தவன் “ இதில் நான் தலையிடும் பொழுது சரண் உள்ளே வரவில்லை அவனுக்கு எதுவும் தெரியாது நான் போனதும் கண்டுபிடித்துவிட்டேன் ” என்று அவளை பார்க்க சந்தோஷிக்குமே அதில் ஆயிரம் குழப்பங்கள்
“ உட்கார் சந்தோஷி , என்றவன் தாருண்யாவையும் உட்கார சொல்லி கண்ணசைத்தவன் சந்தோஷியிடம் பொறுமையாக பேச ஆரம்பித்தான்
“ சொல்லு அவர்கள் யார் என்று உனக்கு தெரியுமா ?”
எதை பற்றி நினைவு கூற விருப்பம் இல்லாமல் இருந்தாளோ அதை பற்றி மனுபரதனிடம் பேச அவளுக்கு விருப்பமில்லை இருப்பினும் இதில் சரண் வாழ்வு என்ற நிலை அவளை பேச வைத்தது
“ தெரியாது மாமா அவர்கள் அந்த டாக்குமெண்ட்ஸ் வைத்துதான் என்னை மிரட்டினார்கள் ”
“ அது வருண் , சரணோட பெரியம்மா மகன் , அவன் வளர்ச்சி பிடிக்காமல் போட்டியில் பொறாமையில் சரணின் பிசினஸ் பிளானை அழிக்க அவனுடனே இருந்து செயல்பட்டிருக்கிறான் , உன்னை பணயம் வைத்ததும் அவன்தான் நேரே இறங்கினால் மாட்டிக்கொள்வோம் என்று ஆட்களை ஏவி உன்னை வளைத்திருக்கிறான் ”
சொல்லும்பொழுதே மனுபரதனின் முகம் இறுகியது
“ கேட்டவளின் முகம் வெளிரியது “ நீ என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எல்லாவற்றையும் இழுத்து அத்தை மாமாவையும் அதனால் இழந்திருக்கிறாய் நான் உன்னை பாதுகாக்க மாட்டேன் என்று முடிவுசெய்துவிட்டாய் , உன் மாமன் அந்தளவு கையாலாகதவன் என்று என்னை நினைத்துவிட்டாய் இல்லையா ? ”
அவன் பேசும்பொழுதே பாதி உடைந்தவள் அடுத்த கேள்விகளில் முழுவதும் நொறுங்கிவிட்டாள்
“ இப்பொழுது சொல் எப்படி அவனை நான் விடசொல்வது உனக்கு இத்தனை இன்னல்கள் தந்தவன் உன் காதலன் அவன் மேல் நீ வைத்த நம்பிக்கை அதனால் எவ்வளவு கஷ்டங்கள் அவனை எப்படி நான் விடுவது இருந்தாலும் உனக்காக அவனை நான் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் அவன் வலிய வந்து தண்டனை ஏற்கிறேன் என்றபொழுது உனக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டேன் இதில் நான் எதுவும் செய்வதற்கில்லை ” என்றான் தெனாவட்டாக தாருண்யாவை ஒரு பார்வை பார்த்தபடி
“ மாமா நான் இவ்வளவு கஷ்டப்பட்டதும் அவர் வாழ்வின் நன்மைக்காக ஆனால் நீங்கள் அவர் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறீர்கள் ” என்று கதரியவளிடம்
“ அது நீ சரணுடன் பேசவேண்டியது இப்பொழுதும் சொல்கிறேன் அவன் விடசொல்லி சொன்னால் நான் நிச்சயம் இந்த கேஸில் இருந்து விடுவிக்கிறேன் ” என்றவனிடம்
“ நான் சரணுடன் பேச வேண்டும் ” என்றாள்
“நிச்சயமாக, கூடவே இவளையும் அழைத்துக்கொண்டு போ அப்பொழுதாவது என்னை பற்றிய சந்தேகம் தீருகிறதா என்று பார்க்கலாம்” என்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது தாருண்யாவால்