கரு 20:
“ எனக்கு தண்டனை தர நீங்கள் யார் , கேவலம் பெண்களை ஆண்கள் அடக்கும் ஒரே வழி , அதை கையாண்டு என்னை அடக்க பார்க்கிறீர்கள் , நான் சொல்ல வந்த விஷயத்தை முதலில் கேட்கும் எண்ணம் கூட இல்லை ஆனால் தண்டனையை மட்டும் தந்து விடும் எண்ணம் அதிகம் இருக்கிறது ”
“ ஆமாம் விசாரணை இல்லாமல் உனக்கு தண்டனை தரலாம் ஏனென்றால் உன் வாயில் வருவது எல்லாமே பொய் என்பதால் ”
இவன் என்னை பற்றிய இந்த கருத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டானா என்று ஆயாசமாக இருந்தது தாருண்யாவிற்கு
“ என் விஷயம் எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும் ஆனால் இப்பொழுது நீங்கள் கேட்டுக்கொள்ளும் விஷயம் பொய் இல்லை ” என்றவள்
நேராக அவன் கண்களை பார்த்து
“ சரண் சந்தோஷியின் கணவன் ”
“ அதுமட்டும் இல்லை சந்தோஷி தந்தையில்லாத ஒரு பெண் குழந்தைக்கு தாய் ” என்று அதிர்வெடிகளை வீசினாள்
பேரமைதி நிலவியது காருக்குள் தாருண்யாவிற்கு அவள் இதயத்துடிப்பு கேட்டது இவனின் பதில் குறித்த பயமே என்றாலும் மனுபரதன் எப்படி உணர்கிறான் என்று தாருண்யாவிற்கு தெரியவில்லை
அவன் பார்வையில் அவளை கொன்றுவிடும் அளவு வெறி இருந்தது அவளை அவன் நம்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது அவசரமாக அவளது பையில் இருந்து சில பேப்பர்சை அவனிடம் கொடுத்தவள்
“ உங்கள் அத்தை அவளை கவனிக்க சொல்லி , அவளின் குணத்தை மாற்ற சொல்லி சொன்ன பொழுது நான் அவளை பற்றி சேகரித்த விஷயங்கள் இது “ என்று ஆரம்பித்து காலையில் சரண் எதிர்பாராமல் சந்தோஷிக்கு தாலி கட்டியது பிறகு குழந்தை பிறப்பிற்கான காரணம் வரை சொல்லிவிட்டு அவனை பார்த்தாள்
மனுபரதன் முகத்தில் கோபம் வெறி ஏமாற்றம் என்று மாறி மாறி வந்து போனது தொழிலில் கொடி கட்டியவன் வீட்டில் கோட்டை விட்டிருப்பதாக எண்ணினான்
ஆண்மகனிற்கு தெரிவதில்லை அலைந்து தெரிந்து சமூகத்தில் வாழ பழகும் காலத்தில் கூட அவர்களை விட நான்கு சுவர்களுக்கள் இருந்தே பெண்கள் தங்கள் திறமைகளையும் திட்டங்களையும் செயல் படுத்தும் மந்திரிகள் என்று
பெண்கள் உடல் பலத்தில் கம்மியாக எண்ணப்பட்டவர்கள் ஆனால் மனோபலம் அதிகம் உடையவர்கள் , ஆண்களை விட பெண்களுக்கு மனமுதிர்ச்சி அதிகம் உண்டு , அதனாலேயே அவளால் தான் வாழ்ந்த வீட்டை விட்டு மறுவீடு சென்று அங்குள்ள சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் திறனுடையவளாகிறாள் ,
கணவன் தன்னை விட வயது அதிகம் இருந்தாலும் கூட சிந்தனைகளில் அவனை விட அனுபவம் அதிகம் உள்ளவளாய் அவனிற்கு வழி காட்டும் ஆசானாய் மாறும் திறன் உடையவள் இதை வயதில் உணராத பலர் வயது முதிர்ந்ததும் அனுபவத்தால் உணர்கிறார்கள் … .
மனுபரதனும் அப்படியே அவன் உணரவில்லை பெண்ணின் மனம் தான் விரும்புபவனுக்காக எதுவும் செய்யும் என்று …. ஏன் …… பெண்களே கூட அதை அறிவதில்லை
அவள் கொடுத்த பேப்பர்களை உற்று பார்த்தவன் அவளை யோசனையாக பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவளாய்
“ அவள் இந்த கொடூரத்திற்கு காரணமானவர்கள் யார் என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டாள் நானும் இன்றைக்கு தான் இதெல்லாம் தெரிந்துகொண்டேன் இன்னும் அதைப்பற்றி முயற்சிக்கவில்லை ”
அதை அவள் கையில் கொடுத்தவன் ஸ்டியரிங்கில் தன் தலையை கவிழ்ந்து படுத்துவிட்டான் , தாருண்யாவிற்கு புரிந்தது கம்பீரமாக சுற்றிக் கொண்டிருந்தவன் குடும்பத்தை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ளவில்லை என்று தன்னை நினைத்தே கலங்குகிறான் என்னதான் அவளுக்கு வேண்டாதவன் என்றாலும் கூட அவனின் இந்நிலை தாருண்யாவிற்கு பரிதாபமாக இருந்தது
மெதுவாக அவன் தோள் தொட்டவள் அவனின் முதுகை ஆதரவாக தடவினாள் கவிழ்ந்த நிலையிலேயே அவளின் கையை பற்றியவன் தன் கையோடு இணைத்து பற்றிக்கொண்டான் ,
சிறிது நேரம் அப்படியே இருந்தவன் அவள் கையை விடுவித்து காரை விட்டு வெளியே இறங்கியவன் சிறிது தூரம் நடந்தான் தன்னை சரி செய்து கொள்கிறான் என்பதை அறிந்தவள் அவன் வேதனையால் தன் மனம் பாரமாவதை உணர்ந்தாள்
மெதுவாக வந்து காரில் அமர்ந்தவன் அதை உயிர்ப்பித்து எதுவும் பேசாமல் அவன் வீடு அருகில் வந்து “ எனக்கு வேலை இருக்கிறது தாருண்யா நீ இங்கேயே இறங்கி வீட்டுக்கு செல் ” என்றான்
அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் தயக்கத்துடன் இறங்க கதவை திறந்தவளின் கை பற்றி
“ இனி அவர்களை சேர்த்துவைப்பது என் பொறுப்பு அதுவரை அத்தையிடம் எதுவும் பேசப்போவதில்லை ”
முகம் இறுக ” இதற்கு காரணமானவன் மனுபரதனை முழுதாக சந்திப்பான் , வேறு எதுவும் என்னால் இப்பொழுது சொல்லமுடியாது ”
கலக்கத்துடன் அவனை பார்த்து “ இல்லை சந்தோஷியின் பிடிவாதம் … . அதுதான் அதிக பயத்தை அளிக்கிறது ”
மெதுவாக அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை இரண்டு கைகளால் ஏந்தியபடி அவள் கண்களை பார்த்து
“ எல்லாம் சரியாகி விடும் என்னை நம்புகிறாய் அல்லவா “
என்றதற்கு வெறும் பொம்மையாக தலையாட்ட மட்டுமே முடிந்தது தாருண்யாவால்
மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை போக சொல்லி தலையசைத்தவன் யோசனையுடன் அவசரமாக காரை கிளப்பிக்கொண்டு போனான்
மந்திரத்தில் கட்டுண்டவள் போல் இறங்கியவள் தன் அறை நோக்கி சென்றாள்
அவனை பற்றி யோசித்ததில் ஒன்று மட்டும் உணர்ந்து கொண்டாள் அவன் மனம் பால் தன்னிடம் ஏதோ ஒன்று கரைகிறது என்று
“ காதல் உணரா நம்மில்
பிரிதல் சரி என்றேன் இல்லை
புரிதல் சரியாகும் என்றாய்
புரிய முயற்சிக்கிறேன் வலிகளின் சுவடுகளுடன் ”