காதல் கருவறை 16

0
804

கரு : 16

மித்திலாவின் வாழ்க்கை என்று நினைத்து மனுபரதனைப்பற்றி யோசிக்காமல் விட்டிருந்தாலும் கோபியின் வருத்தமும் அதை தொடர்ந்து மித்திலாவின் பேச்சும் உள்ளுக்குள் ஒரு கொதி நிலையை கொடுத்தது தாருண்யாவிற்கு , ஏதோ அவள் காதல் அவனிடம் என்று நினைத்தவளுக்கு மித்திலாவின் பேச்சு அவளுக்கு மனுபரதனிடம் இருப்பது காதலா இல்லை அவன் ஆளுமையில் , அந்தஸ்தில் வந்த மயக்கமா என்று யோசிக்க வைத்தது .

முன்பிருந்ததை விட மனுபரதன் அவள் மனதில் இறங்கி போய்விட்டான் ஏனென்று வரையறுக்க முடியாத அளவுக்கு மனதில் வெறுப்பு மண்டி இருந்தது , அன்று அவள் பயிற்சி எடுக்கும் வீணை வகுப்பின் ஆண்டு விழா கொண்டாட்ட ஏற்பாடுகளை பார்வையிட வேண்டும் என்பதால் வர தாமதமாகும் என்று கூறி இரவு கோபியுடன் வந்து விடுவதாக பத்து தரம் உரைத்த பிறகே அவள் தாய் ஒத்துக்கொண்டார் .

அங்கு சிறு பிள்ளைகளுக்கு செட் வாரியாக பாட்டு நடனம் வீணை என்று பயிற்சி சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தவளிடம் அவள் குரு கோபி வரவில்லை என்பதை கூற தாருண்யாவிற்கு அம்மாவிடம் என்ன சொல்வது என்ற பயம் வந்தது சரி நமக்கு பழக்கப்பட்ட இடம் தானே போய்விடலாம் என்று எல்லாம் முடிந்து கிளம்ப இருட்டிவிட்டது கோபிக்கு இந்நேரத்தில் அழைக்க பிடிக்காமல் மித்திலாவிற்கு அழைத்தவள்

மித்து , வீணை கிளாஸ் முடிய லேட் ஆகிவிட்டது நானே போய்விடுவேன் அம்மா கேட்டால் நீ வீடு அருகில் வந்து விட்டுவிட்டு வேலை இருந்ததாக போய்விட்டாய் என்று சொல்லி விடுகிறேன் அம்மா ஒருவேளை நாளை ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டால் பார்த்து அதற்கேற்றாற் போல் சொல்லிக்கொள் என்று வைத்துவிட்டாள்

அவளது வீட்டிற்கும் வகுப்புக்கும் அதிக தூரம் இருப்பதால் தான் அவள் தாய் பயந்ததே இருந்தாலும் தாருண்யாவின் ஆசையும் பிடிவாதமும் கடைசியில் வென்றது .

வேகமாக நடந்தவளை அந்த இருட்டு கொஞ்சம் பயமுறுத்ததான் செய்தது காற்றில் ஆடிய தாவணியை பிடித்துக்கொண்டு மனதில் இன்னும் நாலே எட்டு வைத்தால் ட்ராக்க்கை கடந்து விடலாம் அதன் பிறகு மெயின் ரோடு வந்துவிடும் இந்த இடம் மட்டும் எப்பவும் ஏன்தான் இப்படி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறதோ என்று கூறிக்கொண்டே நடந்தாள்

அந்த இடத்தை கடக்கும் நேரம் தான் அந்த அபாயம் அவளை தாக்கியது சரேலென்று அவள் பின்னிருந்து வந்த வண்டியில் ஹெல்மெட்டுடன் இருவர் அவள் செயினையும் தாவணியையும் சேர்த்து இழுத்தனர் .

தாருண்யா இடப்பக்கமாக ட்ரெயின் வருகிறதா என்று பார்த்துக்கொண்டே நடக்க வலப்பக்கம் வந்தவர்களை அவள் கவனிக்கவில்லை எப்பொழுதும் ஆளரவம் இல்லாத இடத்தில் திடீரென்று அவள் இருவரை எதிர்பார்க்கவும் இல்லை அவர்கள் அவளை தாவணியுடன் இழுத்த வேகத்தில் பின் செய்திருந்த தாவணி கிழிந்து பாதி அவர்களிடம் சிக்கியது , இழுத்த வேகத்தில் ஜாக்கெட் கிழிந்து அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றாள் .

சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அவளை சூழ்ந்து கொள்ள தன் நிலையால் மிச்சம் இருந்த தாவணியை போர்த்தியவாறு நின்றாள் அவளை கவனியாமல் நடந்ததை பேச ஆரமித்தவர்களிடம் எதுவும் சொல்ல முடியாமல் அதிர்ச்சியில் நாக்கு ஒட்டிக்கொண்டது

ஒரு பெண் இப்படி இருப்பதை பார்த்து கூடி பேசி என்ன பிரயோஜனம் அவள் ஆடை கிழிந்து நிற்கிறாள் அதை பார்த்து பெண்கள் நீங்களே உதவாமல் நிற்கிறீர்களே என்ற மனுபரதனின் குரலில் நிமிர்ந்தவள் தன் நிலையை நினைத்து மேலும் நொந்து கொண்டாள் . அவளை நோக்கி வந்தவன் சட்டென்று தனது சிகப்பு சட்டையை கழட்டி அவளுக்கு கொடுத்து விட்டு எனக்கு தெரிந்த பெண்தான் நானே கூட்டி சென்று விடுகிறேன் என்று அவளை பார்க்க அதிர்ச்சியில் இருந்தவளுக்கு அவனை பின் தொடர்வது தவிர ஒன்றும் தோன்றவில்லை .

காரில் அமரவைத்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிந்தவர் தான் இப்பவே ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம் என்று அவளை அழைத்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொல்லி கம்ப்ளைன்ட் கொடுத்து அவளுக்கு குடிக்க குளிர்பானம் வாங்கி கொடுத்தவன் அவளை வீட்டுக்கு அழைத்து செல்ல காரில் ஏற்றினான்

அதிர்ச்சியில் அமர்ந்திருந்தவள் சுற்றுப்புறம் உணர்ந்து அவனுக்கு நன்றி உரைத்தாள்

முகம் இறுக அவளை பாராமல் காரை ஒட்டியபடி பேச ஆரமித்தான் என்னை அடிக்க தெரிந்தவளுக்கு தன்னை பாதுகாத்து கொள்ளவும் தெரிய வேண்டும் இப்படி இரவு நேரத்தில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் போவது சாகசம் என்று நினைதாயா , உன் செயின் போனால் பரவாயில்லை மானம் அல்லது உயிர் போனால் அப்பொழுதும் தைரியமாக இருப்பாயா , இதில் பொய் உரைக்க மித்திலாவை கூட்டு சேர்த்துக்கொள்கிறாய் , பெரிய ஜான்சி ராணி என்று நினைப்பு

அவ்வளவு நேரம் அவன் பேசுவதை பல்லை கடித்து கேட்டு கொண்டிருந்தவள் அவள் மித்திலாவுக்கு சொன்னது இவனுக்கு எப்படி தெரியும்

நான் பேசியதை நீங்கள் தான் கேட்டீர்களா அவள் போனை நீங்கள் ஏன் எடுத்தீர்கள்

நல்லவேளை நான் எடுத்தேன் இல்லை என்றால் மித்திலா உனக்காக உன் தாயிடம் மாட்டி இருப்பாள் எப்படியும் நீ சொன்னது பொய் என்று இப்பொழுது வீட்டுக்கு போனால் உன் அம்மாவிற்கு தெரிந்துவிடும் கொஞ்சமும் தாயிடம் பொய் உரைக்கிறோம் என்று பயமில்லை , மானத்தை பற்றி கவலையும் இல்லை

அவன் கடைசி வார்த்தையில் மனம் சீற அவனை பார்த்து மானத்தை பற்றி நீங்கள் பேச வேண்டாம் எனக்கு பொய் பேசுபவள் , அடங்காதவள் என்று பட்டம் கட்டுகிறீர்களே அறியாத சின்ன பெண்ணை பணத்தை காட்டி மயக்கி வைத்திருக்கும் நீங்கள் மானத்தை பற்றி பேச தகுதி இல்லாதவர் , அவளுக்காக காத்திருந்தவரின் மனதை உங்களுக்காக நோகடிக்க செய்ய வைத்திரிக்கிறீர்கள் என் வாழ்க்கையில் இப்படி பட்டவரை நான் பார்த்ததே இல்லை , ச்சீ உங்களுடன் வருவது கூட பாவம் வண்டியை நிறுத்துங்கள் என்றாள்

அவள் வார்த்தையில் கண்கள் சிவக்க வண்டியை நிறுதியவன் வாட் , நான் ஏமாற்றுக்காரனா நீ அதை சொல்ல கூட தகுதி இல்லாதவள் , தராதரம் பார்த்து உதவி செய்யாதது என் தவறு அப்பறம் மித்திலாவை நான் ஏமாற்றுகிறேன் என்கிறாய் அதுவும் பணத்தை காட்டி என்று அந்தளவு எந்த பணமும் நான் சம்பாதிக்கவில்லை எனக்கென்னவோ அவளை நீதான் என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறாயோ என்று தோன்றுகிறது அதுவும் அதே பணத்திற்காக தான் என்றவன் அவளை பார்த்த பார்வையில் வெறுப்பை தவிர ஒன்றுமில்லை .

நீயே சொன்னாலும் உன்னை நான் கொண்டுவிட்டிருக்கமாட்டேன் , உன்னை காரில் இருந்து மட்டுமல்ல என் பார்வை விழக்கூடிய எந்த இடத்திலும் காணக்கூடாது என்றிருக்கிறேன் என்றவன் கதவை திறந்து அவள் இறங்கியதும் கதவை அறைந்து சாற்றி திருப்பி கொண்டு அடுத்த தெருவில் நுழைந்து சென்றுவிட்டான் .

அவன் பேச்சில் கண்கள் கலங்க சென்றவளை ஏற்க்கனவே தாமதம் ஆனதால் வாசலில் தவிப்புடன் காத்திருந்த அவள் அன்னை பெரும் அலறலுடன் எதிர்கொள்ள நடந்ததை சொன்னவள் தனக்கு உதவியது மித்திலா என்று சொல்லி சட்டை யாரோ அங்கு கூட்டத்தில் இருந்தவர் தந்தது என்று முடித்து விட்டாள் அவன் சட்டை அணிந்திருப்பது என்னவோ தீயை போர்த்தியிருப்பது போல் தோன்ற அதை மூலையில் வீசியவள் குளித்து உடை மாற்றினாள் .

மறுநாள் அவளை பார்க்க வந்த மித்திலாவிற்கு நேற்று நடந்தது எதுவும் தெரியவில்லை அதனால் அவள் தாயிடம் சொன்னதையே சொல்ல அவளுக்கு உதவியது அங்கிருந்தவர்கள் என்றும் அவள் தாய் பயப்படுவார்கள் என்பதற்காக மித்திலா உதவியதாக பொய் சொல்லி இருப்பதாக கூறியவள் மறந்தும் மனுபரதனின் பெயரை உபயோகிக்கவில்லை அவன் சென்ற பிறகு அவன் பேச்சு காதில் ஒலித்து அவனை இன்னும் அதிகமாக வெறுக்கவைத்தது .

அவளுக்கு ரொம்ப பிடித்த டாலர் செயின் பறிபோனதில் அவள் இன்னும் வேதனை கொண்டாள் . அதற்கும் அவள் மனம் மனுபரதனையே சாடியது அவனை பார்த்ததில் இருந்து அவளுக்கு எல்லாமே வருத்தம் தரக்கூடிய விஷயங்களாக இருக்கிறது என்று வருந்தியவள் அவனை இனி வாழ்க்கையில் எக்காரணத்தை கொண்டும் பார்க்க கூடாது என்று முடிவு செய்து கொண்டு தொடர்ந்தாள் . இந்த திருட்டு விளைவித்த பயனால் அவள் வீணை தடைபட்டது அவள் தாய் கண்டிப்பாக முடியாது என்று கூறிவிட அவள் வீட்டிலேயே பயின்றாள் .

மனுபரதன் இனி மித்திலாவின் வாழ்வில் நிச்சயம் என நினைத்தவள் அவளுடனும் அதிகமாக பழகுவதை தவிர்த்தாள் நாளை தோழிக்கு தன்னால் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்று நினைத்தவள் அவளுடன் அளவாகவே பேசினாள் . மித்திலாவும் அதிகமாக தோழியுடன் உறவாடவில்லை அதற்கேற்றாற்போல் அவள் கடைசி செமஸ்டர் பரீட்சைகள் முடிய இன்டெர்ன் கோர்ஸிற்கு விண்ணப்பித்து அந்த தேர்வை முடிப்பதற்காக படித்து கொண்டிருந்தவள் மித்திலாவை சந்திப்பதை சுத்தமாக நிறுதியிருந்தாள்

அன்றும் வழக்கம் போல படித்துக் கொண்டிருந்தவள் வீட்டில் காலிங் பெல் ஒலிக்க கதவை திறந்தவளுக்கு அழுகையும் பதட்டமுமாக நின்றிருந்த மித்திலா அவளை பார்த்ததும் கட்டிக்கொண்டு நான் மோசம் போனேன் தரு , அந்த மனுபரதன் ஏமாற்றுக்காரன் என் வாழ்க்கையை ஏமாற்றிவிட்டான் என்று கதறினாள் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here