கரு 15:
அவளிடம் நெருங்கும் பொழுதே அது வேறு யாரோ என்பதை கவனித்துவிட்டான் மனுபரதன் அவளை அவசரமாக நிறுத்தியவன் அவளிடம் பேச வாயெடுக்கும் முன் “ பளார் ” என்று அறைந்தாள்
“ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ , என்ன பார்த்தா எப்படி தெரியுது நீ இப்படி பண்ணதுக்கு உன்னை நாலு பேர் முன்னாடி அடிச்சி போலீசில் புடிச்சுக் கொடுக்கணும் அப்பதான் உன்னை மாதிரி எந்த இடத்துல எவ கிடைப்பாள் என்று அலைபவனுக்கெல்லாம் புத்தி வரும் ” என்று கத்த அதற்குள் அங்கு ரெண்டு மூன்று பேர் கூடி விட்டார்கள்
தான் நிற்க சொன்ன இடத்தில் கூட்டத்தை பார்த்து ஓடி வந்தாள் மித்திலா “ என்னடி ஏன் உன்னை சுற்றி கூட்டம் “ என்றவளிடம்
“ எல்லாம் இந்த இடியட்டால டி , என்ன ஹராஸ் பண்ணான் ” என்றதும் திரும்பியவள் அதிர்ச்சியில் “ மனோ ” என்று கத்த
கேள்வியாய் மித்திலாவை பார்த்தாள் தாருண்யா
“ தரு , இவர் தான் டி நான் சொன்ன மனோ , ஐ மீன் இவர்தான் மிஸ்டர் . மனுபரதன் ”
பேச வார்தையில்லாமல் அதிர்ச்சியில் உரைந்தாள் தாருண்யா , தன் கோபத்தில் இருந்தவள் அப்பொழுதுதான் அவனை கவனித்தாள் நாகரீகமாக உடை அணிந்து ஆறடி உயரத்திற்கு இருந்தவனிடம் கண்ணியம் இருந்தது ஒருவேளை மித்திலா என்று நினைத்து தன்னை அப்படி அணைத்து விட்டானோ என்று யோசித்தவள் ஒரே மாதிரி உடுத்திய தன் மடத்தனத்தையும் நொந்து கொண்டாள் , எப்படியோ இனி மித்துக்காக மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும் என்று யோசித்தவள் தொண்டையை சரி செய்து
“ சாரி சார் , நீங்க இவ ஃபிரெண்டன்னு தெரியாம உங்களிடம் கோபமாக பேசிட்டேன் ”
“ வாய் மட்டும் இல்லை உன் ஃபிரெண்ட கையும் பேசிடுச்சி ” என்று தாருண்யாவை பார்த்த்துக்கொண்டே கன்னத்தை தடவினான் , அதிர்ச்சியில் கண்களை விரித்தாள் மித்திலா அவன் முகத்தில் எதையும் படிக்க முடியவில்லை ஒரு மாதிரி இருகிய தோற்றம் தவிர எதுவும் தெரியவில்லை
“ என்னடி , இப்படி பண்ணிட்ட அவர் ரொம்ப டீசென்ட தெரியுமா உன்னை பார்க்க நான் ரொம்ப வற்புறுத்தி கூட்டிட்டு வந்தேன் நீ என்னடான்னா அவரை இப்படி அசிங்க படுத்திருக்க ” என்று கோபப்பட தாருண்யாவிற்கும் கோபம் வந்தது
“ அதான் சாரி சொல்லிட்டேனே , திடீர்ன்னு ஒருத்தர் வந்து பின்னாடி அணைக்க நான் பயந்துட்டேன் , என்னதான் இவ்ளோ நெருக்கம்னாலும் பொது இடத்துல இந்த மாதிரி நடக்கிறது , அது உன்கிட்டேன்னாலும் தப்பு ” என்றாள் அவனை பார்த்து
ஒருமுறை ஆழமாக பார்த்தவன் மித்திலாவை பார்த்து ” கூடா நட்பு கேடில் முடியும் ” என்றவன் “ ஐந்து நிமிடத்தில் அவளை அனுப்பிவிட்டு காருக்கு வா , இல்லையென்றால் நான் போய்விடுவேன் ” என்று விட்டு திரும்பி நடக்க
அவசரமாக மித்திலா அவளை பார்த்து ” என்னடி இப்படி சொதப்பி வச்சிருக்க அவனை அண்ணாகூட பார்த்ததிலேர்ந்து கஷ்டப்பட்டு டீடெயில்ஸ் கலக்ட் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா பிளான் பண்ணி இம்ப்ரெஸ் செஞ்சு கரெக்ட் பண்ணேன் அண்ணாவிற்கு அவ்ளோ பிஸினெஸ்ஸும் அவன்தான் கொடுக்கிறான் , குறைந்த மாசம்னாலும் அவ்ளோ லாபம் பார்த்திருக்கான் லைஃப் செட்டில் ஆகிடும்னு நெனச்சேன் இப்ப நீ பண்ண வேலைக்கு அவன் என்னை கழட்டிவிடாம இருக்கணும் ” என்று புலம்பியவள்
“ நீ வீட்டுக்கு போ நான் அவனை எப்படியாவது சரி பண்ணிட்டு வரேன் ” என்று அவள் பதிலை கூட பார்க்காமல் அவன் சென்ற திசையில் சென்று விட்டாள் .
தாருண்யாவிற்கு கோபத்தில் தலையே சுற்றியது நாம் மன்னிப்பு கேட்டபிறகும் திமிரு பிடிச்சு போறான் பாரு , இவளுக்கும் அறிவே இல்லை அவன் பின்னாடியே போறா கொஞ்சம் கூட தன்மானம் இல்லை என்று திட்டியவள் அதையே அவள் அன்று இரவு , மித்திலா அவள் வீட்டிற்கு வந்த போது கேட்க அவள் விளக்கமே வேறாக இருந்தது
“ தன்மானமா , உன் தன்மானம் எனக்கு லைஃப்ல செட்டில் ஆக உதவுமா தரு ?”
“ என்னடி எல்லாமே பணத்தை வெச்சுதான் மதிப்பிடற , அதையும் தாண்டி குணம்னு ஒண்ணு உன் கருத்தில் பதியவே இல்லையே , நான் தப்பு செய்ததுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறேன் சரி என் மேல் கோபம் இருந்தது அவர் அதை காண்பிப்பதற்காக மதிக்காமல் சென்றாலும் கூட நீ என்ன தவறு செய்தாய் உன்னை எப்படி கடிந்துகொண்டார் , தவிர உன்னை மதிக்கவில்லையே ”
இவள் இப்படிதான் என்று நினைத்த மித்திலா எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் அவளை பார்த்துவிட்டு பேச ஆரமித்தாள் “ நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சி சொல்லு பொதுவா பொண்ணு பார்க்க வர்ற பையன் வீட்டில் என்ன கேட்கறோம் பையன் படிச்சி இருக்கணும் நல்ல வேலைக்கு போகணும் இதெல்லாம் தானே நானும் அப்படி ஒருவரை தேடி காதலிக்கிறேன் இதில் என்ன தவறு ?”
“ அப்புறம் மதிப்பில் என்ன இருக்கிறது எல்லாம் பணத்தில் தான் இருக்கிறது தரு , இதுவே எனக்கு கல்யாணம் ஆகி இருந்து இவன் இப்படி பண்ணா நான் இதே மாதிரி அவரை சமாதானம் செய்யத்தான் பார்ப்பேன் அப்ப மட்டும் என்ன முறிகிக்கிட்டு இருப்பேனா ”
“ எனக்கு என்ன கஷ்டம்னா மனோவும் நீயும் பார்த்த முதல் முறையே கசப்பாகிவிட்டது என்பதுதான் ” என்றவளிடம்
“ பரவாயில்லை மித்து நீயும் அவரும் ஒற்றுமையாக இருந்தால் போதும் எங்களுக்குள் எப்படி அமைந்தால் என்ன ” என்றவள் தன் தாய் அழைத்ததும் இரவு அவளை உண்ண வைத்து அவள் அண்ணன் வந்த பிறகு அவனுக்கும் உணவளித்த பின்பே அனுப்பினாள் .
தன் அறைக்கு வந்தவளுக்கு மித்திலாவின் யோசனைகள் அதிகமாய் இருந்தது அவள் கூறியதெல்லாம் உண்மைதான் நாம்தான் தேவையில்லாமல் குழம்புகிறோம் போலும் என்று நினைத்தவளின் மனம் மனுபரதனையும் யோசித்தது “ ப்பா … இவ்வளவு அகங்காரம் கூடாது என்னமோ ஊரிலேயே இவனுக்குதான் கோபப்படும் உரிமை உள்ளது போல் நடந்துகொண்டான் , என்னதான் இந்த மித்திலாவின் வார்த்தைகள் உண்மை என்று தோன்றினாலும் கூட என்னமோ அவனிடம் மிகவும் அடங்கிப்போகிறாள் , கேட்டால் பணம் என்கிறாளே வசதிக்கும் அன்பிற்கும் என்ன சம்மந்தம் ” என்று குழம்பியவள்
“ ச்ச .. எல்லாம் இந்த மனுபரதனால் வந்தது அவனை பற்றி யோசிக்க வைத்து குழப்பி என் தூக்கத்தை கலைக்கிறான் , இனி அவனை எப்பொழுதும் பார்க்க கூடாது ” என்று அவனை திட்டியவாறே உறங்கிப்போனாள் .
அவனை சந்தித்து ஒரு வாரம் ஆனது , தாருண்யா அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்து சாதாரணமாக இருக்க தொடங்கி விட்டாள் மனம் ஒரு நிலைக்கு வந்தது , என்னதான் பணம் என்று தோழி காரணம் சொன்னாலும் கூட அவளுக்கு அவன் மேல் உண்மை நேசம் இருக்கிறது தவிர இது அவர்கள் வாழ்க்கை அதனால் நான் வீணாக அவளை நோக செய்யக்கூடாது என்று நினைத்தவள் மித்திலாவிடமும் சாதாரணமாக பேசி பழகினாள் , மித்திலாவும் அவளிடம் மனுபரதனை பற்றி கூறுவதில்லை .
அன்று தாருண்யாவிற்கு வீணை வகுப்பு , அது முடிந்து கிளம்பும் பொழுது மணி எட்டாகி விட்டது , இது கூட அவள் தாயிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கியது தான் அவளுக்கு சிறு வயதில் இருந்தே வீணை என்றால் பிடிக்கும் அம்மாவின் ஆசைக்காக பாட்டு கற்றுக்கொண்டாள் ஓரளவு நன்றாக பாடினாலும் வீணை மேல் தீராத அவளது காதல் காலேஜ் வந்ததும் அதிகமானது
அதற்கேற்றாற்போல் மித்திலாவின் அண்ணன் இங்கு நடக்கும் வகுப்பை பற்றி கூற , அவள் தாயிடம் அனுமதி வேண்டினாள் அதிக கண்டிப்பு இல்லை என்றாலும் கூட அவர் தூரத்தை நினைத்து கவலை கொண்டார் அதனாலேயே எப்பொழுதும் ஏழு மணிக்கு கிளம்புபவளுக்கு இன்று புது சங்கதி விரல்களில் பழக்கப்பட தாமதமானது அம்மாவிற்கு அழைத்து சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரமித்தவள் சிறிது தூரம் போனதும் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள் அவள் கற்றுக்கொள்ளும் இடத்தில் அவளுடன்1 ஃபுளுட் கற்றுக்கொள்ளும் கோபி அழைத்தான் , அவர்கள் இருவருக்கும் ஒரே நேரம் பெரும்பாலும் ஒரே சங்கதிக்கு இருவரும் வெவ்வேறு இசை கருவிகளில் வாசிப்பவர்கள் அதுமட்டுமின்றி அவன் மித்திலாவின் பக்கத்து வீடு அதனால் இருவருக்குமே பழக்கம் , தாருண்யா ம்மித்திலா வீட்டுக்கு செல்லும் பொழுது அவனுடன் பேசி இருக்கிறாள் .
தனியாக செல்வதை விட அவனுடன் செல்லலாம் என்று காதிருந்தவள் அவன் வந்ததும் நடந்தாள்
“ ஏன் கோபி இன்னைக்கு நீங்க கிளாஸ் வரலை ”
“ ப்ச் … மனசு சரி இல்லை ”
“ ஏன் ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா ?” என்றதற்கு இல்லை என்று தலையாட்டியவன் சிறிது நேரம் மௌனித்து பிறகு
“ மித்திலா ” என்றான்
“ அவக்கூட என்ன பிரச்சனை , ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆச்சே ”
“ உன்கிட்டயும் ஃபிரெண்ட்னு தான் சொல்லி இருக்காளா ”
“ புரியலை ”
“ நான் மித்திலாவை காதலிக்கிறேன் ” என்றதும் அதிர்ந்து நின்றாள் தாருண்யா
“ என்ன பேச்சு இது கோபி , அவள் அந்த மனுபரதனை காதலிக்கிறாள் , இது அவள் அண்ணாவிற்கு கூட தெரியும் , அவளை நீங்கள் இப்படி நினைப்பது ரொம்ப தப்பு ”
“ நான் இன்னும் முடிக்கவில்லை தாருண்யா அவளுக்கும் என்னிடம் ஈர்ப்பு இருப்பதாகத்தான் சொன்னாள் , என் ஆன்சைட் கூட அவளுக்காக விட்டு விட்டேன் இப்பொழுது மனுபரதன் தான் வாழ்க்கை என்கிறாள் , எனக்கு எல்லாமே வெறுத்து விட்டது ” என்று நிறுத்தியவன் பெருமூச்சு விட்டு தொடர்ந்தான்
“ காதலை அவளிடம் யாசகம் கேட்க எனக்கு பிடிக்கவில்லை , இருந்தும் அவளிடம் தெளிவான முடிவு கேட்கலாம் என்று பேசினேன் , மனுபரதனை விட்டு வந்தால் அவளை விட பெரிய முட்டாள் யாருமில்லை என்கிறாள் நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே அந்தஸ்து உள்ளவர்கள் போல் இருந்தாலும் அவன் வளர்ச்சி நிச்சயம் அதிகம் என்கிறாள் , எனக்கு எதுவுமே பிடித்தம் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறேன் ” என்றவனிடம் உண்மையாகவே பச்சாதாபம் எழுந்தது
“ கோபி , வாழ்க்கை ஒரு இடத்தோடு நின்று விடாது இன்னும் பிடித்தம் இல்லாதவளிடம் நிற்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும் ஆனால் சீக்கிரம் இதில் இருந்து வெளியே வந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் ” என்றவள் கனத்த மனதுடன் வீடு வந்தாள் அம்மாவின் திட்டு கூட அந்நேரம் அவளுக்கு ஆறுதல் கொடுத்தது .
தன் படுக்கையில் விழுந்தவளுக்கு மறுபடியும் மனுபரதனை பற்றிய சிந்தனை அதிகமானது “ எல்லாம் அவனால்தான் தன் பணத்தை காட்டி மயக்கி இருக்கிறான் பாவம் அந்த கோபி எவ்வளவோ ஆசைகளை வளர்த்திருக்கிறார் ” என்று யோசிக்கும் போதே உன் தோழி பக்கம் தவறே இல்லை என்று நினைக்கிறாயா என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்க அவள் பாவம் சின்ன பெண் ஏதோ பணத்தாசையில் மயங்கிவிட்டாள் பணம் மட்டுமா அவனிடம் மயங்க அவனே போதும் அளவு அழகன்தான் என்று வழக்கம் போல் உண்மை கூற அவளும் அதை வழக்கம் போல் அடக்கிவிட்டாள்
மறுநாள் மித்திலாவை பார்த்து அவள் நேற்று நடந்ததை வைத்து கேள்வி கேட்க
“ கோபி சொன்னானா ”
“ யார் சொன்னால் என்ன மித்து இது தவறு ”
“ நான் அவனை காதலிப்பதாக சொல்லவில்லை ”
“ ஆனால் ஈர்ப்பு இருப்பதாக ஆசை வளர்த்திருக்கிறாய் ”
“ ஆசை நான் கொள்ள சொல்லவில்லை தரு ”
“ ஆனால் அதற்கு வழி அமைத்துக் கொடுத்திடுக்கிறாய் அவர் அதை நம்பி முழுமையாக உன்னை நேசிக்க ஆரமித்திருக்கிறார் ஆனால் இப்பொழுது ஒன்றுமேயில்லாமல் போய்விட்டதா அப்பொழுது இருந்த அந்த ஈர்ப்பு எங்கே டி போய் விட்டது ”
“ அதற்கு காரணம் இருக்கிறது தரு ”
“ என்னடி பெரிய காரணம் ”
“ அதற்கு ஒரே காரணம் தான் தரு ஏனெனில் அவன் மனுபரதனல்ல ” என்றாள்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…