கரு 14:
இந்த முறை தாருண்யாவிற்கு அதிர்ச்சியில் நாக்கு ஒட்டிக் கொண்டது இவனிடம் என்ன சொல்வது என்று யோசிக்க கூட தோன்றாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் , மனம் அவளுக்கு தெரிந்த மொழியில் அவனை அர்ச்சித்தது ,
இவனுக்கு மட்டும் எங்கே இருந்து தான் மூக்கில் வேர்க்கிறது போன ஜென்மத்துல சரியான வேட்டை நாய் இல்லை மோப்ப நாயா பொறந்துருப்பான் , கரெக்ட்டாக நாம் போகும் இடத்தை பற்றி தெரிந்து வைத்து கேள்வி கேட்கிறான் பார் என்றபடி அவனை பார்க்க , குணாவோ மனதிற்குள் தாருண்யாவை அர்ச்சித்தாள்
“ இந்த அக்கா வாய்ல கொழுக்கட்டையா வெச்சிருக்காங்க வாய தொறக்க மாட்டேங்கரங்க ” சரி நம்மளே சமாளிப்போம்
“ அது வந்து அண்ணா ” என் று ஆரம்பித்தவள் அவ ள் இப்பொழுதாவது உதவுவாளா என்று தா ர ுண்யாவைப்பார்க்க அதில் சுரணை வர பெற்றவளாய் தாரு ண்யா பேச ஆரம்பித்தாள்
“ அது வந்து அவருக்கு பிறந்தநாளுக்காக ” என்று ஆரம்பித்தவளை கை அசைவில் தடுத்தவன்
“ நான் உன்னை கேட்கவில்லை ” என்றதும் அவளுக்கு கோபம் வந்தது
“ சரண் என் ஃபிரெண்ட ” என்றாள்
அவளை நக்கலாக பார்த்தவன் “ உனக்கு ஊர் முழுவதும் இந்த மாதிரி ஃபிரெண்ட்ஸ் தானே ” என்றவன் அவள் அடுத்து கூறும் முன் குணாவிடம் கேள்வி கேட்டான்
ஓரளவு தாருண்யா சொல்ல வந்ததை ஊகித்தவள் “ இல்லண்ணா சரண் அண்ணாவிற்கு பிறந்த நாள் அவர் இந்த ஊருக்கு புதுசு அதான் ஏதாவது ஆதரவற்ற குழந்தைகளுக்கு சாப்பாடு போட அக்காகிட்ட கேட்டி ர ுக்காங்க , அக்கா எனக்கு தெரியுமான்னு கேட்டாங்க நானும் இந்த இல்லத்தை பத்தி என் ஃபிரெண்ட் மூலமா கேள்வி பட்டிருக்கேன் அதான் சொன்னேன் அவங்களுக்கு இடம் தெரியாததுனால என்னையும் கூட்டிட்டு போனாங்க ” என்று ஓரக்கண்ணால் தாருண்யாவை பார்த்தாள் .
இவ நம்மளவிட அடிச்சி விடறாளே நாம லைட்டா கோடு தான் போட்டோம் பரவால்ல டக்குன்னு புடிச்சிட்டா என்று அவளை மனதில் மெச்சிக் கொண்டாள்
ஏதோ யோசித்தவன் “ ம்ம்ம் … சரி இந்த முறை ஏதோ நல்ல காரியத்திற்கு உதவினாய் என்றதனால் விடுகிறேன் , இனி அடுத்தமுறை தெரியாதவர்களுடன் போகாதே ” என்று தாருண்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சொன்னான் .
“ இல்ல அண்ணா சரண் அண்ணா கூட தனியா போகலயே அக்கா கூட சேர்ந்து தான் போனேன் “
“ அதை தான் நானும் சொல்கிறேன் சில நாள் பழகியதற்காக எல்லாரையும் நம்பி செல்லக்கூடாது , நீ உன் வீட்டிற்கு போ ” என்றான் .
அதிர்ந்தபடி அவளை பார்த்தவள் “ சரி அண்ணா ” என்று யோசித்தவள் “ நாங்கள் அங்கு சென்றது உங்களுக்கு எப்படி தெரியும் ”
“ நான் அந்தப்பக்கம் ஒரு வேலை விஷயமாக வந்தேன் உங்கள் வண்டியை பார்த்தேன் தவிர அன்று உங்களை பார்த்து சென்ற அந்த ஆளின் கார் அங்கு இருந்தது ” என்றான் தாருண்யாவை முறைத்தபடி
“ நீ வீட்டிற்கு போ ” என்று அவள் போகும் வரை காத்திருந்தவன் தாருண்யா நகருவதற்கு முன்
“ நில்லு ” என்றான்
அவனிடம் பேச மனமும் இல்லை தெம்பும் இல்லை அதனால் அவனை மதிக்காமல் மறுபடியும் படியேறியவளை வழிமறித்தவன் “ நான் நில்லுன்னு சொன்னேன் ”
“ உங்களிடம் பேச எனக்கு ஒண்ணுமில்லை ” என்றவள் அவனை பார்க்காமல் நகர முற்பட அவள் கையை பிடித்து இழுத்து அவளை செவிரோடு சாய்த்தான் அதிர்ந்து நின்றவளின் கைகளை தன் ஓரு கையால் அழுத்தி பிடித்தவன் அவளை “ தன்யா ” என்று அழைத்தான்
அந்த அழைப்பே அடுத்து அவனிடம் வருவது வெடி என்று அவள் அறிவாள் , இன்னும் அழுத்தமாக நெருங்கியவனின் ஆண்மை அவளை நடுங்க செய்தது அவளின் கண்களை தொட்டவன் ” இந்த கண்கள் எல்லாவற்றையும் உள்ளிழுக்கும் சக்தி உடையது பார்க்கும் யாரையும் மயக்கி பைத்தியம் கொள்ள செய்யும் , இதோ இந்த நாசி கூட மூச்சு விடுவதற்கு மட்டும் இல்லை அடுத்தவன் மூச்சை தன் அழகால் நிற்க செய்யும் அளவு வலிமை உடையது இதோ அதற்கு இந்த மூக்குத்தி கூட சேர்ந்து தூபம் போட்டு உணர்வுகளை தூண்டி பல சேதி சொல்லும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை ” என்று அந்த மூகுதியின் மணியை சுண்டினான்
அவள் அதிர்ச்சியாய் பார்க்கும் பொழுதே அவளின் உதடுகளை தொட்டவன் “ இந்த உதடுகளுக்கு இருக்கும் கவர்ச்சி வேறெதற்கும் இருந்ததில்லை தன்யா , ஆளை சிறிது சிறிதாக புதைக்கும் புதைகுழி இது ” என்று நிறுத்தியவன்
“ ஆனால் இதற்கு அதிகமாய் பேச தெரிந்தது பொய் மட்டும் தான் , நீ அந்த சரணை அடிக்கடி சந்திக்கிறாய் இல்லையா , அப்பொழுது அழகாக அவனிடம் சிரிக்கும் இந்த உதடுகளுக்கு , என்னை பார்த்தால் மட்டும் திட்டி பேசவோ இல்லை பொய்கள் உரைக்க மட்டும் தான் தெரிகிறது இல்லையா ” என்று வருடியவனின் கண்களில் இருந்த வெறி அவளின் உடல் முழுவதும் நடுங்கி ஆட செய்தது
“ பொய் பேசும் இந்த உதடுகளுக்கு தண்டனை தர வேண்டாம் ” என்றவன் அவளை நெருங்க அவன் எண்ணம் புரிந்தவளாய் அவள் விலக எத்தனிக்க அவளை இரும்பை போல் நகர விடாமல் தோள் பற்றியவன் அவள் உதடுகளை சிறை செய்தான் வ ன்மையாக
தன் உயிரையும் சேர்த்து உறிஞ்சி எடுப்பது போல் தோன்றியவளுக்கு அவனிடம் விடுபட தன் கைகளை உதறி அவனை அடிக்க இம்முறை அவள் இடையை பற்றி அவளை ஒரு நிமிடத்தில் அடக்கியவன் தன் வெறி முழுவதையும் அந்த முத்தத்தில் காட்டி விடுவித்தான்
உதட்டின் ஓரத்தில் ரத்தம் துளிர்க்க கால்கள் பாரம் தாங்காமல் சரிந்து மடிய கீழே தோய்ந்தவள் இது வரை பிறர் முன் செய்யாததை செய்தாள் , மௌனமாக அழுது கரைந்தாள்
“ அழு நன்றாக அழு இனி இந்த உதடுகளுக்கு பொய் சொல்ல தைரியம் வரக்கூடாது “ என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் .
நேராக தன் அறைக்கு சென்று விழுந்தவனின் மனதில் அவளை பற்றிய எண்ணங்களே , தான் செய்தது தவறு என்று அவனுக்கு நன்றாக தெரியும் எதனால் அப்படி செய்தான் அவள் தன்னை மதிக்காமல் பேசியதற்கா இல்லை சரணுடன் பேசுவதற்காகவா , எப்படி அவளை தான் நடத்துகிறோம் என்று அவனுக்கு புரியாமல் இல்லை அது தவறென்று தெரியாமலும் இல்லை ஆனால் அவனால் அவளை வேறு ஒருவனுடன் இணைத்து பார்க்க முடியவில்லை எனறு புரிந்தது காரணம் என்ன என்று யோசி என்று சொன்ன மனதிற்கு அவள் எனக்கு செய்தது போல் வேறு ஒருவனுக்கு செய்ய கூடாது என்ற காரணத்தால்தான் என்று அடமாய் நினைத்து முடித்தான் .
தட்டு தடுமாறி தன் அறைக்கு வந்தவள் எதையும் சரி செய்யாமல் படுக்கையில் சரிந்தாள் எவ்வளவோ கற்பனைகள் நெஞ்சோடு சுமந்து வாழ்ந்தவளுக்கு அன்னையின் நினைவு அதிகமாக அவளுடன் இருந்த நாட்களுக்கு பயணம் செய்தது அழையாய் விருந்தாளியாய் அதில் நுழைந்தது மிதிலாவும் மனுபரதனின் நினைவுகளும் ”
“ அம்மா என் ரெட் சுடிதார் எங்கம்மா இன்னைக்கு மிதிலாவும் நானும் ஒரே மாதிரி கலர்ல ட்ரெஸ் போட போகிறோம் ”
“ ஏற்கனவே நீங்கள் இருவரும் ஒரே உயரம் உடல் அமைப்பு உள்ளவர்கள் தூரத்தில் பார்த்தால் எனக்கே யாரென்று சட்டென்று சொல்ல முடியாது இதில் ஒரே கலர் ட்ரெஸ் எதற்க்காக செந் ” என்று ஆரமித்தவர் அவள் முறைப்பில் சரி தரு ” என்று முடிக்க
“ அட நீ மட்டுமா சொல்கிராய் காலேஜ் மொத்தமும் அப்படித்தான் சொல்கிறார்கள் அதான் ஒரே மாதிரி போய் கலக்க போகிறோம் , அப்புறம் சாயங்காலம் அவள் ஏதோ முக்கியமான இடத்திற்கு என்னை அழைத்து போகிறாளாம் அதனால் நான் வர நேரம் ஆகும் “
“ சரி ஆனா ..” என்று ஆரமித்தவரை
“ நான் ஜாக்கிரதையாக மித்திலா அவங்க அண்ணா விஜய் கூட பத்திரமா வரேன் ” என்று கிளம்பியவள் தன் ஸ்கூட்டியில் கல்லூரியை அடைய அவளுக்காக காதிருந்தவள் போல் அவளை நோக்கி அதே ரெட் கலர் ட்ரெஸ்ஸில் வந்தாள் மிதிலா .
கிட்டத்தட்ட தாருண்யாவை ஒத்து இருந்தாள் எல்லாம் ஒரே மாதிரி அமைப்பு ஆனால் அந்த கண்கள் மட்டும் எப்பொழுதும் நிலை இல்லாமல் சுற்றும்
“ எவ்ளோ நேரம் டி உனக்காக வெய்ட் பண்றது “
“ சாரி மித்து டிராபிக் , சரி சொல்லு இன்னைக்கு கிளாஸ் முடிஞ்சு எங்கடி கூட்டிகிட்டு போற ”
“ அது சஸ்பென்ஸ் என் சம்மந்தப்பட்ட முக்கியமான ஒரு ஆளை உனக்கு காண்பிக்க போகிறேன் காலேஜ் முடிஞ்சதும் ரெடி ஆக இரு உன் வண்டில போயிடலாம் நான் ஒட்டறேன் “ என்றவளை பார்த்து தலையாட்டியபடி கிளாஸுக்குள் நுழைந்தனர் .
மாலை 4 மணிக்கு ஸ்கூட்டியை பீச்சுக்கு ஓட்டிய மித்திலா காந்தி மண்டபத்தில் அவளை இறக்கி விட்டு வெய்ட் பண்ணுடி நான் பார்க்கிங் போட்டு வந்துடறேன் ” என்றவளிடம் தலையாட்டிவிட்டு திரும்பி நின்று தூரத்தில் தெரிந்த கடல் அலைகளை ரசித்த பொழுது என்னவென்று உணர்வதற்குள் காதோரம் ஒரு குரல் அவள் கழுத்தை உரசியபடி
“ என்றும் இல்லாமல் இன்று பேரழகியாய் ஜொலிக்கிறீங்க மேடம் ” என்று கூறியபடி அவளை பின்புறம் அணைத்து சுற்றி அவள் இடுப்பை வளைத்து சாய்த்து தாருண்யாவை நெருங்கினான் மனுபரதன் .