கரு 13

அந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்க அங்கங்கே பெரியவர்கள் தங்கள் நோய்களை அன்றே குறைத்து விடும் வேகத்தோடு நடை பயின்று கொண்டிருந்தனர்

ஏன் கா பேசாம இவங்களாம் வேலைக்கு ஆள் வைக்காம அவங்களே அந்த வேலைகளை பார்த்தா இந்த மாதிரி தனியா உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியமே இல்லையே

உண்மைதான் குணா இப்ப வந்துருக்கிற எல்லா மெஷின்ஸும் நம்ப வேலைய சுலபமாக்கரா மாதிரிதான் இருக்கு ஆனா அதுவே நம்ப சோம்பி இருக்க வைக்குது கூடவே இலவசமா நோய்களையும் கொண்டு வருது என்றவளிடம்

என்னக்கா சரண் நம்மள வர சொல்லி அரை மணி நேரம் ஆகிடுச்சு இன்னும் ஆள காணோம்

வந்துருவார் நமக்கு வேறே ஒரு வேலையும் இல்ல ஆனா அவர் அப்படி இல்லையே இங்க சந்தோஷிக்காக வந்தாலும் கூட அவரோட பிசினஸ் வேலைகளையும் இங்க பார்க்கறார்

ம்ம் அண்ணா கூட அப்படித்தான் கா , சும்மா இருக்கவே மாட்டார் எப்பவும் அவரோட பிசினஸ் வேலைகளை எந்த இடத்திலயும் நிறுத்த மாட்டார் என்றதும் அவளின் நினைவுகளும் அவனை சுற்றியே வந்தது கூடவே அன்று நடந்ததும் ….. அன்று ….. மெதுவாக தன்னை சரி செய்தவள் அவளின் மொபைலில் இருந்து சரணுக்கு அழைத்தாள் அவள் பிசியாக இருந்ததால் மொபைலை கவனிக்கவில்லை என்றும் இப்பொழுதுதான் பார்த்ததாக கூறினார்

பரவாயில்லை தாருண்யா நான் சந்தோஷியின் விஷயமாக உங்களை பார்க்க வேண்டும் நாளை உங்கள் வீடு அருகில் இருக்கும் பூங்காவிற்கு 11 மணி அளவில் வந்துவிடுங்கள் என்றதும் சரி என்றவள் குணாவையும் அழைத்துக்கொண்டு அவன் சொன்ன பூங்காவிற்கு வந்தாள் .

எங்கு சென்றாலும் மனுபரதனின் நினைவுகளில் இருந்து தாருண்யாவிற்கு விடுதலை இல்லை என்பது போல் தோன்றியது . இப்பொழுது குணா அவன் பேச்சை எடுத்தாள் அவள் இல்லை என்றாலும் தன் மனமே தனக்கு வில்லனாய் இருக்கிறது என்றவளின் நினைவுகளை குணாவின் குரல் கலைத்தது

அக்கா அதோ சரண் சார் என்றதும் அவசரமாக அவளின் நினைவுகளில் இருந்து கலைந்தவள் அவனை நோக்கி விரைந்தாள்

சாரி குணா , தாருண்யா ரொம்ப நேரம் காதிருக்க வைத்துவிட்டேனா இங்கு ஒரு டீலரை பார்க்க வேண்டி இருந்தது தவிர்க்கமுடியவில்லை அதான்

பரவாயில்லை சரண் நாங்க கொஞ்ச நேரமாக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்

எனக்கு அவ விஷயத்தை பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியல இருந்தாலும் முயற்சி செஞ்சேன் அதைப்பற்றி ஒரு முக்கியமான விஷயம் பேசதான் நான் உங்களை கூப்பிட்டேன் நான் சந்தோஷியை பத்தி அவளோட ஃபிரெண்ட்ஸ் எல்லார்கிட்டையும் பொதுவா விசாரிச்சேன் அவளுக்கு நெருக்கமான நண்பர்கள் யாராவது இருக்காங்களா இல்ல அவ யார்க்கிட்டாயாவது தொடர்ந்து பேசறது பழகறது அப்படின்னு இருந்தாளான்னு கேட்டேன் , அப்ப அவளோட ஃபிரெண்ட்ஸ் சொன்னது நான் ஊருக்கு போய் ரெண்டு மாதங்கள் இயல்பாக இருந்ததாகவும் அதன் பிறகு அவள் எல்லோரையும் தவிர்த்ததாகவும் கூறினாள் என்றபடி அவர்களை பார்க்க

இதுதான் உங்கள் வாய்மொழியாக எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே இதில் புதிதாக என்ன இருக்கிறது அண்ணா என்ற குணாவிடம்

இல்லம்மா நான் போன பிறகு அவளிடம் ஏதோ மாற்றம் நடந்திருக்கிறது அந்த பையனைப்பற்றி எங்கும் சாட்சியம் இல்லாதபடி அவள் அதை மறைக்க முயன்றிருக்கிறாள் , சோ தாருண்யா இனி அவள் வாயிலாக சொன்னால் மட்டுமே நமக்கு அந்த குழந்தையின் தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றவன் தாருண்யா ஏதோ சொல்லவருவதை தடுத்து

அவளிடம் கேட்டால் நிச்சயம் சொல்லமாட்டாள் என்பது எனக்கும் தெரியும் அதனால் தான் உங்கள் உதவி எனக்கு தேவை படுகிறது என்றவரிடம்

என் உதவியா என்று யோசித்தவள் என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்கிறேன்

நிச்சயம் உங்களால் முடியும் என்றவனை இருவரும் கேள்வியாக பார்க்க அவன் பொறுமையாக சொன்ன விஷயத்தில் இருவருமே அதிர்ந்தனர் .

என்ன அண்ணா விளையாடுகிறீர்களா , இதை எப்படி செய்ய முடியும் , அதுவும் இதனால் என்ன விளைவுகள் வரும் என்று யாருக்கும் தெரியாது

எனக்கு சம்மதம் என்று தாருண்யா சொன்னதும் குணாவுக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது

என்னக்கா ?! தெரிஞ்சு தான் பேசுகிறாயா

உனக்கு அவள் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க வேறு ஏதாவது யோசனை இருக்கிறதா என்றதும் முழித்தவளை முறைத்து விட்டு

சந்தோஷியின் குழந்தையை சட்டப்படி தத்து எடுக்க அந்த இல்லத்தில் நாம் தான் அதற்கு பெற்றோர்களாக இருக்க போகிறோம் என்று நான் கூறுகிறேன்

அக்கா அப்படியெல்லாம் சும்மா தத்து கொடுகமாட்டார்கள் தெரியாதா , பாரெண்டல் எபிலிட்டிக்கான சர்டிபிகேட் நாம் தரவேண்டும் அதுவும் இல்லாமல் நீங்கள் திருமணம் செய்திருக்கிறீர்கள் என்ற சர்டிபிகேட் தரணும்

எதையுமே நீ முழுசா கேட்க மாட்டியா குணா என்றவள்

முதல்ல ஒரு குழந்தையை கல்யாணம் ஆனவங்கதான் தத்து எடுக்கணும்னு கிடையாது தத்து எடுப்பதற்கு பாலினம் இல்லை கல்யாணம் செய்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை , ஆனால் அந்த குழந்தைக்கு நல்ல தாயாகவோ தந்தையாகவோ இருக்க நமக்கு மனதில் பலமும் , வசதியும் வயதும் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்

என்னால் சரணின் திட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது , இதில் அவர் உன்னை இழுத்தால் தன் குழந்தைக்கு நல்ல தாய் தந்தை கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் அவள் சம்மதிக்க கூட வாய்ப்பிருக்கிறது ஆனால் நான் இதில் இருப்பது தெரிந்தால் அவள் நிச்சயம் சம்மதிக்க மாட்டாள் , ஏனென்றால் குழந்தைக்கு தாயின் அன்பு கிடைக்குமா என்று அவளுக்கு சந்தேகம் வரும் , அதனால் தெரியாத என்னை நம்பி அவள் குழந்தையை கொடுக்க சம்மதிக்க மாட்டாள் அதை கொஞ்சம் நாம் தூண்டிவிட்டால் நிச்சயம் அந்த குழந்தையின் தந்தையை பற்றி கூறுவாள் என்று நிறுத்தியவள்

ஆனால் இதை பற்றி நாம் ஆசிரமத்தின் நிர்வாகியிடம் பேச வேண்டும் தவிர நாம் அவளின் குழந்தையை தான் தத்தெடுக்க வந்திருக்கிறோம் என்பதை அவள் பார்க்கும் படி செய்ய வேண்டும்

அப்படியென்றால் நாம் மூவரும் இப்பொழுதே ஆசிரம தலைவியை பார்க்க போக வேண்டுமாக்கா

மூவர் இல்லை நால்வர் , சோனாவையும் அதுதான் அந்த குழந்தையை பார்த்து கொள்ளும் வேலைக்கார பென் அவளையும் கூட்டிக்கொண்டு போகவேண்டும் அவள் ஆசிரமத்தில் தான் இருப்பாள் அப்படியே விஷயத்தை சொல்லி . தலைவியின் அறைக்கு அழைத்து சென்றுவிடலாம் என்றதும்

சோனா அவள் சந்தோஷி வீட்டில் வேலை செய்த பெண் தானே என்று கேட்டவனுக்கு எல்லாம் சொல்லி அவளுக்கும் குழந்தையின் தந்தையை பற்றிய தகவல் தெரியவில்லை சரண் , இனி சந்தோஷியை சொல்ல வைத்தால்தான் உண்டு என்றவள் அவனை காரில் அந்த ஆசிரமத்திற்கு வர சொல்லிவிட்டு இவள் வண்டியில் குணாவுடன் அங்கு சென்றாள் .

பொறுமையாக அனைத்தையும் கேட்ட தலைவி சிறிது யோசித்தார் பின் பொறுமையாக பேச ஆரமித்தார்

அவள் அந்த குழந்தையின் மீது காட்டிய ஆர்வம் இரக்கத்தினால் என்று நினைத்தேன் மா , ஆனால் அது தாய் பாசம் என்று தெரியாமல் போய் விட்டது , எனக்கு இது எவ்வளவு தூரம் சரியாக வரும் என்று தெரியவிள்ல்லை ஆனால் இதனால் ஓரு பெண்ணின் வாழ்வு சரியாகும் என்றால் நான் இதற்கு சம்மதிக்கிறேன் , நீங்கள் இந்த குழந்தையை அவள் முன்னால் தத்து எடுக்க நான் சம்மதிக்கிறேன் ஆனால் அதற்கான ஆவணங்களை நீங்கள் தயார் செய்ய வேண்டும் என்றதும்

மேடம் நான் சிங்கிள் பாரெண்டாக தான் இதை வளர்க்க அனுமதி கோருகிறேன் அதற்கான ஆவணங்களையும் என் வசதி குறித்த ஆவணங்களையும் நான் இங்கு நாளையே கொடுக்கிறேன் என்ற சரணை அதிசயமாக பார்த்தனர் இரு பெண்களும்

நான் உங்களை சந்தோஷி எதிரே மட்டும் தான் நடிக்க சொன்னேன் உண்மையில் இந்த குழந்தையை தனியாக தத்தெடுக்கவே நான் விரும்புகிறேன் என்றவனி ம் தனி மரியாதயே வந்தது .

இந்த விஷயத்தை சந்தோஷிக்கு தெரிவிக்க வேண்டும் எப்படி அக்கா என்றவளை பார்த்து சிரித்த தாருண்யா சோனாவை நோக்கி கை காண்பித்தாள்

அவர்களுக்கும் இந்த தத்தெடுக்கும் விஷயம் கடைசி நிமிஷம் தான் தெரியும் என்பது போல தான் சந்தோஷியிடம் சொல்ல போகிறார்கள்

மூவரும் எல்லாம் பேசிவிட்டு சோனாவிற்கும் எல்லாம் சொ ்லி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வர இரவானது சந்தோஷி விஷயத்தில் நிச்சயம் தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வீட்டினுள் வந்தவர்களுக்கு அவர்கள் வரவை எதிர்பார்த்தது போல் ஹாலில் நடு நாயகமாக அமர்ந்திருந்த மனுபரதன் அதிர்ச்சியை கொடுத்தான்

எவனை இனி கவனமாக தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாளோ அவனை மறுநாளே இப்படி ஒரு நிலைமையில் பார்தது அதுவும் அவனிடம் என்ன பொய் சொல்லலாம் என்று யோசித்தவளுக்கு அவன் குணாவை பார்த்து கேட்ட கேள்வியில் மயக்கமே வந்தது

அன்னை ஆசிரமத்தில் அந்த சரணுடன் உங்கள் இருவருக்கும் என்ன வேலை குணா மா என்றானே பார்க்கலாம் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago