காதல் கருவறை 12

0
878

கரு 12:

கோவில் பூஜைகளை முடித்துக் கொண்டு கிளம்பியதும் பெரியம்மாவின் நெருங்கிய தோழியும் அவர்களது மகளையும் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து பேச ஆரம்பிக்க மனுபரதனும் ஒரு சிறு விசாரிப்பிற்கு பின் சென்று விட்டான் குணாவுக்கும் அந்த பெண்ணிற்கும் முன்னே பழக்கம் போல் அவளும் அதில் கலந்து கொண்டாள் , தாருண்யாவிற்கு மட்டும் அவர்களை தெரியாததால் சிறு அறிமுகப்படலத்தோடு நிறுத்திக்கொண்டாள் .

அவளுக்கு தனிமை வேண்டும் போல் இருந்தது , ஏற்கனவே தன் பார்வை மனுபரதனின் மேல் படிந்ததை அதிர்ச்சியுடன் உணர்ந்தவளுக்கு அவன் அதை கண்டிருந்தால் தன்னை எத்தனை ஏளனமாக நினைப்பான் ஏற்கனவே அவன் தவறுகளுக்கும் அவளை தான் குறைசொல்கிறான் என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் யோசிக்கமுடியவில்லை தவிர அவன் பார்வைகளை அவள் கவனிக்கவும் இல்லை .

பேசிக்கொண்டே வாசல் வரை வந்தவர்களுடன் தன் யோசனையிலேயே அவளும் தொடர்ந்தாள் , இவ்வளவு நாள் கழித்து பார்த்ததும் அவர்களை பக்கத்தில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு வற்புறுத்தி அழைக்க , பெரியம்மாவும் குணாவும் அவளையும் அழைத்தனர்

இல்லம்மா நீங்க அவங்களோட நிம்மதியா பேசிட்டு வாங்க குணா உங்களுக்கு துணையா வரட்டும் தவிர அவளும் அவளோட ஃபிரெண்ட் கூட பேசிட்டு வரட்டும் எனக்கு ஒண்ணுமில்லை நான் ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்டறேன் , எனக்கு இன்னும் தலைவலி சரி ஆகவில்லை

எதுக்கும்மா ஆட்டோ நீ பரத் கூட போய்டு அவன் வீட்டுக்கு தான் போறான் என்ற பொழுது தான் அவள் சுற்றம் உரைத்து பார்க்க அங்கு மனுபரதன் காரின் மேல் சாய்ந்தபடி அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான் , அதில் அரண்டவள்

இல்லம்மா எதுக்கு அவருக்கு வீண் சிரமம் நான் ஆட்டோவிலே போய் கொள்கிறேன் என்றவளிடம்

அது என்னம்மா சிரமம் , அவனும் வீட்டுக்கு தான் போறான் அப்படியே விடப்போறான் , யாரும் இல்லன்னா உன்னை ஆட்டோல அனுப்பலாம் பரத்தான் இருக்கானே என்றவர் அவனிடம் சொல்லிவிட்டு அவர்கள் தோழியுடன் சென்றனர் .

யோசனையுடன் அவள் கார் அருகில் வர அவளுக்கு முன் இருக்கையை திறந்துவிட்டு அவனும் டிரைவிங் சீட்டில் அமர்ந்தான் . இப்படி இவன்கூட கோர்த்துவிடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா பெரியம்மாவுடனே போயிருக்கலாம் , எல்லாம் என் நேரம் என்று நினைத்தவள் மெதுவாக காரில் ஏறி கதவை அறைந்தாள்

தன் பார்வையை கவனமாக வெளிப்புறம் திருப்பியவள் மறந்தும் அவன் புறம் பார்க்க கூடாது என்று நினைத்தாள் , மனுபரதனின் நிலை அதை விட மோசமாக இருந்தது கோவிலேலேயே பார்வையை விலக்க முடியவில்லை இதில் பக்கத்தில் வேறு உட்கார்ந்து உயிரை வாங்குகிறாள் என்று நினைத்தவன் சாலையை பார்ப்பதுபோல் அவளை பார்த்தான் தன் விரல்களை பிரித்து கோர்த்து விளையாடிக்கொண்டு இருந்தவளை பார்த்ததும் வாய் அவனையும் அறியாமல் முணுமுணுத்தது மஞ்சளழகி என்று

இன்னும் எவ்வளவு நேரம் அந்த விரல்களை பிசைவாய் , என்னை ஒன்றும் செய்ய முடியாத கோபத்தை விரல்களில் காட்டுகிறாய் போல என்றவனின் குரலில் திடுகிட்டவள்

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை தன்னை சரி செய்து பேச ஆரமித்தாள்

உங்களிடம் கோபம் கொள்ள எனக்கு என்ன இருக்கிறது

இல்லை என்னுடன் வருவதற்கு யோசித்தாயே , இல்லையென்றால் என் சிரமத்தை பற்றியெல்லாம் அக்கறை கொள்ள உனக்கு என்ன அவசியம்

இல்லை என்னை உங்கள் கூட கூட்டி செல்வதெல்லாம் உங்களுக்கு கஷ்டம் தரும் வேலை தானே , அதான் உங்களுக்கு அந்த தொந்தரவு எதற்கு என்று நினைத்தேன்

நன்றி என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை பாதிக்க மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்

ஸ்டியரிங்கை அனாயசமாக திருப்பியபடி அவன் பார்வை சாலையில் கவனமாக இருக்க அவன் அடர்மீசையை தாண்டிய புன்சிரிப்பு அவளை அதிர்ச்சி கொள்ளத்தான் செய்தது இவனுக்கு சிரிக்கக்கூட தெரியுமா

அவளிடம் பதில் வராமல் போக அவளை பார்த்தவன் அந்த விழிவீச்சில் அவனையும் அறியாமல் வண்டியை நிறுத்தினான் மெதுவாக அவளை நெருங்கியவன் அவள் விழிகளில் தன் விழிகளை ஊடுருவி அவளை ஆழம் பார்த்தான்

தொண்டையில் எதுவோ அடைத்தது தாருண்யாவிற்கு மூச்சு முட்டுவது போல இருந்தது எழுந்து ஓட சொல்லி மனம் சொன்னாலும் ஒரு அடி கூட நகரவிடாமல் புத்தி தன் எண்ணவோட்டத்தை நிறுத்தி இருந்தது

ஏற்கனவே முட்டைகண்ணு இதுல இவ்ளோ பெருசா அந்த கண்ணை விரிக்காதடி என்றவன் அவளின் முன்னுச்சியில் விழுந்த கூந்தலை ஒதுக்கினான்

அவனின் செய்கை இன்னும் அவளை விழி விரிக்க செய்ய அதில் தன் கண்களை அலயவிட்டவன் தன் கைகளால் அவள் கண்களை வருடினான் அவன் கை பட்டதும் தானாக மூட கண்கள் பார்க்க மட்டும்தானே செய்யும் ஆனால் இதோ இந்த கண்களுக்கு ஆளை இழுத்து மூழ்கடிக்கும் சக்தி இருக்கிறது

அவனின் கைகள் மெதுவாக அவள் நாசியிலிருந்து அவள் இதழ்களில் படிய அதை வீணை போல் மீட்டியவன் அவள் கண்களை பிரித்தான் மூடியிருந்த விழிகளில் தெரிந்த உணர்வுகளை திறந்த விழிகளில் படித்தவன் அவள் இதழ் நோக்கி குனிய அவள் இமைகள் மறுபடியும் மூடியது

அந்நேரம் அவள் அலைபேசி அழைக்க மெல்ல இமை பிரித்தவளை பார்த்தபடி அவள் கையில் இருந்து அதை எடுத்து வைக்க எடுத்தவனின் விழிகள் மொபைலில் உள்ள பெயரை பார்க்க அதில் சரண் என்றும் காலையில் அவளுடன் பார்த்த அந்த பையனின் போட்டோவும் வந்ததும் , சட்டென்று அனைத்தும் கலைய தீச்சுட்டது போல விலகினான் , தாருண்யாவின் நிலையும் அதுதான் சரண் என்ற பெயரை பார்த்தபொழுது கூட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை எல்லாம் ஒரு திரைக்கு பின்னால் இருப்பது போலவே தோன்றியது ஆனால் அவன் விலகலில் அவளும் சுயம் உணர்ந்தாள் .

அதற்குள் தொலைபேசி அடித்து ஓய்ந்தது , ச்சீ கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் அவன் ஒரு தொடுகையில் நிலை மறந்து குழைந்திருக்கிறேன் , இதுதான் நான் கற்ற அறமா

சரியான ஆள்மயக்கி தரு , எந்த பெண்ணையும் வசியம் செய்வான் என்னை கூட பேசிப்பேசியே குழைத்தான் எல்லாம் பொய் நான் ஏமாந்து நிற்பதுதான் நிஜம் என்ற தோழியின் குரலும் அதை தொடர்ந்து நான் சொல்லலை அவன் யாரையும் மயக்கி விடும் வல்லமை கொண்டவன் நீ என்னமோ மனோபலம் உள்ளவள் என்று நினைத்தேனே நீயும் இவ்வளவுதானா என்று அவள் கூறுவது போல் தோன்ற தன்னை நினைத்து வெட்கி கண்களை மூடியவளின் காதில் அதிகாரமாக ஒலித்தது அவன் குரல்

இறங்கி பின்னாடி ஏறு

அவன் சொல்வது தன்னைத்தான் என உணர்ந்து அவள் கண்களை திறக்கும் முன் இறங்கி வந்து அவள் கையை பிடித்து பின் சீட்டில் தள்ளினான் அவள் அதிர்ச்சியாய் பார்க்கும்போதே ஏறி காரை ஸ்டார்ட் செய்தவன் ஸ்டியரிங்கில் ஓங்கி தன் கையை குத்திக் கொண்டபடி அதை திருப்பினான்

வீடு வரும் வரை ஒன்றும் பேசாமல் வந்தவள் அவன் நிறுத்தியதும் இறங்க நில்லு என்றவன் அவளை நோக்கி அவள் செல்லை வீசியவன்

உனக்கு தாருண்யா என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ஆள்மயக்கி என்று வைத்திருக்க வேண்டும் , மதியம் அந்த சரண் , இப்பொழுது இங்கு நான் , இன்னும் எத்தனையோ தேடி தேடி வலை விரிப்பவளின் வலையில் மாட்ட எத்தனையோ ஆண்கள் , ச்சீ உன்னை தொட்ட இந்த கையை தீயில் இட்டு பொசுக்க வேண்டும் ஆனால் வருந்தும் அளவு நீ ஒன்றும் உத்தமி இல்லையே என்றவன் அவளை பார்க்க கூட பிடிக்காதவன் போல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்

அவன் பேச்சிற்கு பதில் சொல்லும் தெம்பை கூட இழந்தவள் போல் நின்றிருந்தவளின் மனம் அவன் வார்த்தைகளை ஜீரணிக்க சக்தி அற்றதாக உறைந்திருந்தது , மெதுவாக தன் அறைக்கு சென்றவள் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் தன்னை பற்றி அவன் பேசிய வார்த்தைகள் மனதில் ஓட அவன் தொட்ட இடம் இப்பொழுது முள்ளாய் குத்தியது ஓடி சென்று குளித்து விட்டு வந்தவள் மனதை சமநிலைப்படுத்த விவேகானந்தர் போதனைகளை படித்தாள் , சிறிது நேரத்தில் மனம் தெளிந்தது போல் தோன்றியது

நாம் யார் என்பதை உணர்த்துவதை புரிந்து கொள்வதற்கு எதிரில் இருப்பவர்களுக்கும் அந்த அறிவும் தகுதியும் இருக்கவேண்டும் , தனக்கு கேவலமான பட்டத்தை தந்து விட்டு செல்பவனுக்கு விளக்கம் தரும் அளவு அவன் ஒன்றும் தகுதி உள்ளவன் இல்லை , இப்பொழுது நடந்தது கூட ஒரு நொடி மயக்கம் இனி இவனை தவிர்த்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தவள் தன் நிலை மறந்து நின்றதற்கான காரணத்தை ஆராய முயற்சிக்கவில்லை முயலவும் இல்லை .

மனம் கொள்ளாமல் எல்லா இடமும் சென்று சுற்றி விட்டு வந்தவன் வெளியே சென்றவர்கள் வருவதற்குள் வந்துவிட்டிருந்தான் யாரையும் பார்க்க விருப்பம் இல்லாமல் தன் அறைக்குள் சென்றவன் கட்டிலில் விழுந்தான் அவன் மனதில் தாருண்யாவின் எண்ணங்களே நிறைந்திருந்தது எப்படி அவளை நெருங்கினேன் அதுவும் அவளின் குணம் முழுதும் தெரிந்த பிறகும் ச்சே அவளின் ஆள்மயக்கும் தனத்தை என்னிடமும் காண்பித்துவிட்டாள் விடமாட்டேன் அவளை நிமமதியாக இருக்க விடவேகூடாது என்று யோசித்தவனின் மனம் அவளை முதலில் நெருங்கியது நீதானே என்று கேள்விகேட்க அதற்கான சூழ்நிலையை அவள்தான் தந்திரமாக அமைத்தாள் என்று அவனது அறிவு அவனை தப்புவித்து அவளை கூண்டிலேற்றியது குற்றவாளியாக .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here