கரு 11:

தாருண்யாவின் மனம் உலைக்களமாய் கொதித்தது , எவ்வளவு திமிராக பேசுகிறான் என்று நினைத்தவள் அவனை பார்த்து முறைத்தாள் ,

என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்கரியா ?” என்றவனின் பேச்சில் கோபம் வந்தாலும் அவன் சரணை தன்னோடு சம்பந்தப்படுத்தி பார்க்கிறான் இவனுக்கு இப்பொழுது சந்தோஷியை பற்றி எதுவும் தெரியவரக்கூடாது என்று நினைத்தவள் அவனை திசை மாற்ற எண்ணி பேச்சை ஆரம்பித்தாள்

ஆமாம் , அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள் , தோழி நம்பும் ஆண் நடத்தை கெட்டவன் என்றால் பிரிப்பதில் ஒன்றும் தவறில்லை

அது எப்படியம்மா உன் தோழிகளின் நண்பர்கள் மட்டும் நடத்தை கெட்டவர்களாகவே இருகிறார்கள் , அவர்களை காப்பாற்றும் வேலையையும் அந்த ஆண்டவன் உனக்கே தருகிறார் என்றான்

எனக்கு இது மட்டும்தானே தலையாய வேலை அதனால் தான் என் கண்களுக்கு மட்டும் இதெல்லாம் தெரிகிறது

அவளிடம் கோபத்தை எதிர்பார்த்தவனுக்கு அவளின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியது

நீ வேறு எவனின் வாழ்க்கையையும் பாழ் பண்ண நான் விட மாட்டேன்

அவளுக்கு ஆத்திரம் அதிகமாகியது இருந்தாலும் அவனை இந்த வழியில் தான் வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தவள் அவனை நக்கலாக பார்த்து

அப்படியா ரொம்ப சந்தோஷம் சார் , நீங்கள் எல்லார் வாழ்க்கையையும் என்ன I டம் இருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் இப்பொழுது எனக்கு நேரமாகி விட்டது வண்டி எடுக்கறீர்களா வீட்டுக்கு போக வேண்டும் இல்லை என்றால் நான் இப்படியே இறங்கி ஆட்டோவில் கூட போய் கொள்கிறேன் என்றவளை முறைத்துக் கொண்டே வண்டியை எடுப்பது அவன் முறை ஆயிற்று .

வீட்டு வாசல் வரும் வரை எதுவும் பேசாமல் வந்தவன் அவள் இறங்கும் முன் அவளிடம் நிச்சயம் உன்னை நான் நிம்மதியாக இருக்க விடவே மாட்டேன் என்பதை மட்டும் மறக்காதே என்றபடி சென்றுவிட்டான் .

என் நிம்மதி உன்னை பார்த்ததும் போய்விட்டது ஆனால் ஏதோ ஒரு குழப்பம் மட்டும் என்னை ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றுதான் புரியவில்லை என்று நினைத்தவள் சிறிது நேரம் அவன் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தாள் ,

உள்ளே வந்ததும் பிடித்துக்கொண்ட குணாவிடம் சரணை தன் நண்பன் என்று கூறியதாகவும் எதைப்பற்றியும் பெரியம்மாவிடமும் பரத்திடமும் கூறவேண்டாம் என்று சொல்லிவிட்டு பெரியம்மாவை காண சென்றாள்

அவரின் அறைக்கு நுழைந்தவள் பெரியம்மா ஏதோ ஒரு பெட்டியை எடுத்து வைத்து அதில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தவள் பெரியம்மா என்று குரல் கொடுத்தாள்

வா தரூ என்றவர் அவளை பக்கத்தில் உக்காரவைத்துக்கொண்டு அவளிடம் சில புகைப்படத்தை காட்டினார் எல்லாம் மனுபரதனின் சிறு வயது புகைப்படம் , முதலில் அதை பெரியம்மாவிற்காக பார்த்தவள் பிறகு அவளையும் அறியாமல் அதில் ஒன்றி போனாள் அவனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் படம் பிடித்திருந்தார் , அவன் பெரியப்பா தூக்கி போட்டு பிடிக்கும்போது தன் பொக்கை வாய் திறந்து சிரிக்கும் மனுபரதன் , நடை வண்டி பிடித்துக்கொண்டு நடக்கும் மனுபரதன் , பொம்மை காரை ஒட்டியபடி , பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டபடி , அரும்பு மீசையில் பெரியம்மாவை கட்டிக்கொண்டு நிற்கும்படி , சந்தோஷி குணாவின் ரெட்டை பின்னலை இழுத்தபடி , பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ஒரு போட்டோவை கொடுத்தவர் இதை நான் யாருக்கும் காண்பிக்க கூடாது என்று என்னை மிரட்டி வைத்திருக்கிறான் எனக்கு பிடித்தவர்களுக்கு தவிர நானும் காண்பிக்க மாட்டேன் .

அந்த போட்டோவில் மனுபரதன் முதுகு காட்டி எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்க அவன் கையில் அந்த சட்டையை பார்த்தாள் அது ஒரு சிகப்பு நிற சட்டை அதை பார்த்தவளின் மனம் அதிர்ந்து பிறகு நிலைக்கொள்ளாமல் தவித்தது அதை விட அவன் நடு முதுகில் இருந்த மச்சம் அதை காண்பித்தவர்

அவன் பிறந்த பொழுது எல்லாரும் கூறியது அவன் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அதற்கு காரணம் இந்த மச்சம் , மயில் தோகை வடிவில் இருக்கும் இதனாலேயே அவன் அறை தவிர வேறெங்கும் சட்டையை கழட்ட மாட்டான் அவன் வளர்ந்து நாங்கள் இதை பார்க்கவே இல்லை , இந்த போட்டோ பின்னாடி ஒரு கதையே இருக்கு டா என்றவரை பார்த்துக்கொண்டிருந்தாள்

அவன் இங்கு இருக்கும் பொழுது மலை ஏறுவது அவனுக்கு பி டித்த விஷயம் , ஒரு தடவை அவனின் மாமாவும் கூட வர அங்கு போகும் பொழுது அங்கிருந்த மலைவாசி வழக்கப்படி ஒரு ஜோடிக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள் நாம் அவர்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறோம் அதனால் அவர்களையும் அழைத்தார்கள் அங்கு சென்றபின் தெரிந்தது அந்த பெண்ணிற்கு கட்டாய கல்யாணம் என்று இவனுக்கு வந்த கோபத்தில் அங்கு எதிர்த்த மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களை புரட்டி எடுத்துவிட்டான் அந்த பெண்ணை காப்பாற்றியவன் அவள் பெற்றோரிடம் புத்தி சொல்லி அவளை மேலே படிக்க வைத்தான் அப்பொழுது அவன் மேல் கோபமாக இருந்தார்கள் , பிறகு அவன் விடாமல் செய்த முயற்சியால் நிறைய பேரை படிக்க வைத்தான் அதுவும் முக்கியமாக பெண்களை அவன் இப்பொழுது அங்கிருப்பவர்களுக்கு கடவுள் மாதிரி என்ன சொன்னாலும் செய்வார்கள் ..

இந்த போட்டோ அவன் சண்டையிட்டபோது இந்த சட்டையில் கரை படிய அதை அலச கழட்டினான் எனக்கு மச்சத்தை காட்ட அவன் மாமா எடுத்தது அதை அழிக்க சொல்லி கெஞ்சியவனிடம் யாருக்கும் காட்ட மாட்டேன் என்று நான் வைத்திருக்கிறேன்

அவனுக்கு அந்த சிகப்பு சட்டை அவ்வளவு பிடிக்கும் அதான் அவ்வளவு அழுக்கிலும் அதை சுத்தம் செய்து உபயோகித்தான் ஆனால் சென்னையில் இருந்த பொழுது அதில் கரை படிந்ததால் அதை தூக்கி போட்டுவிட்டேன் என்றான் , எனக்கு அவ்வளவு ஆச்ச்ரியம் என்று பேசிக்கொண்டே அவளை பார்த்தவர் பதறி

தரு , என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்

தலைவலிக்கிறது என்றவளிடம்

நீயே வலியில் இருக்கிறாய் உன்னிடம் வேண்டாத கதை பேசி இருக்கிறேன் பார் என்றவர் அவளுக்கு காபி வரவழைத்து அருந்த செய்து மாத்திரையை கொடுத்துவிட்டே ரூமிற்கு அனுப்பினார் .

தன் ரூமிற்குள் நுழைந்தவளின் மனதில் மட்டும் தோழியின் குரல் ஒலித்தது எந்த பெண்ணையும் விடுவதில்லையாம் தரு , தூணிற்கு சேலை கட்டினால் கூட தொட்டுவிட்டு கை கழுவுபவனாம் , என்னிடம் முறை தவற முயன்றான் , ஓடி வந்து பிழைத்தேன் இல்லை என்றால் செத்திருப்பேன் என்று அழுதவளின் முகம் அவளை குழப்பி தலைவலியை அதிகரித்தது .

ஓரமாய் இருந்த அந்த சிறு பெட்டியை திறந்தவள் தன் தாயின் படத்தை வெகு நேரம் உற்று பார்த்தாள் பிறகு அவள் தாயின் சேலையை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தவள் அடியில் இருந்த அந்த சிகப்பு சட்டையை எடுத்து பார்த்தாள் , அன்று அதை ஏன் எடுத்து வைத்தாள் , இன்று ஏன் அதை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கு புரியவில்லை .

அலுவலகத்திற்கு வந்த மனுபரதனின் மனதில் இருந்த நினைவுகள் அனைத்திலும் தாருண்யாவும் அவளது செயலுமே மனதில் இருந்தது விடமாட்டேன் தன்யா இனி உன்னை யார் வாழ்விலும் விளையாட விடவே மாட்டேன் என்று உரைத்தவனுக்கே தெரியவில்லை அவனின் வாழ்வில் வரப்போகும் விளையாட்டை

சிறிது நேரம் தூங்கி எழுந்தவளின் அறைக்கதவை யாரோ தட்ட அவசரமாக கலைந்திருந்த பொருட்களை பெட்டியில் போட்டு மூடி வைத்து விட்டு திறந்தவள் குணாவை பார்த்து வழி விட்டாள்

என்னக்கா தலைவலி அதிகமாக இருக்கிறதா இந்த குடும்பத்திற்காக யோசித்து உங்களுக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம் என்றவளிடம் என்ன கூறமுடியும் இது முடியா தலைவலி ஒருவனால் தனக்கு ஏற்பட்டது என்றா என நினைத்தவள் ஒன்றும் சொல்லாமல் அவளை பார்க்க

அக்கா இன்னைக்கு நம்ப கோவில்ல பூஜை அதனால் பெரியம்மா உங்களை ரெடியாக சொன்னாங்க ஆனா தலைவலி அதிகம் இருந்தா வேணாம்னும் சொன்னாங்க என்றவளிடம் வருவதாக கூறியதும் பெரியம்மாவிடம் சொல்ல சென்றாள்

அந்த வெண்பட்டு அவளுக்கு மிகவும் பிடித்த நிறம் அதில் சிகப்பு கரையிட்ட பார்டர் அதுக்கு மேலும் அழகை கொடுக்க அதை எடுத்து அணிந்தாள் அதற்கு தோதாக முத்து ஆரம் குடை ஜிமிக்கி என்று அலங்கரித்தவளின் மனம் நிம்மதியாக இருந்தது இதுவும் அவளின் தாயின் ஆலோசனை தான் ,

எப்பொழுதும் சதாரணாமாக இருந்தாலும் கோவிலுக்கு செல்வது என்றால் அழகாக அதுவும் கண்ணை உறுத்தாத வகையில் கிளம்புவார் கேட்பதற்கு அந்த ஆண்டவன் நம்மை நன்றாக வைத்திருக்கிறான் அதை அவனுக்கும் நாம் காண்பிக்க வேண்டும் என்பார் , நான் உன் தயவால் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன் என் நிலை இவ்வளவு அழகாக இருக்க நீ காரணம் என்று அவனுக்கு நன்றி உரைக்கவேண்டும் கண்ணு , எப்படி தன் குழந்தையை அலங்கரித்து பார்க்க தாய் ஆசை படுவாளோ அது போல் தான் இறைவனின் குழந்தைகளான நாமும் அவனுக்கு அப்படியே என்பார் , குறை சொல்லிக் கொள்ள மட்டும் கோவிலுக்கு போகக்கூடாது கண்ணு நன்றி சொல்லத்தான் முக்கியமாக போகணும் கண்ணு என்பார் .

தன் நினைவில் கலைந்தவள் தன் அஞ்சன விழிகளுக்கு மையிட்டு லேசாக உதட்டு சாயம் தடவி செஞ்சாந்திட்டு சந்தன கீற்றுடன் ஒருதரம் தன்னை சரி பார்த்துக்கொண்டு கிளம்பினாள்

கீழே வந்தவள் பெரியம்மாவை காண சென்றாள் , அங்கு தங்கத்திடம் கோவில் எடுத்து செல்வதற்கான பொருட்களை சரி பார்த்துக்கொண்டிருந்தவர் அவளை பார்த்ததும் அருகே வந்தவர்

ரொம்ப அழகா இருக்கே டா , சில பேரின் அழகு மனதை அமைதிப்படுத்தும் அது போல் தான் நீயும் , இப்பொழுது தலைவலி பரவாயில்லையா என்றவரை பார்த்து பரவாயில்லை மா என்று புன்னகைத்தாள் பிறகு தங்கத்திற்கு உதவினாள் , அவரை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வர அங்கு வந்த குணா

ப்பா , மயக்கும் மோகினி நேர்ல வந்துட்டாங்க என்றவளை உதை , நீ மட்டும் என்னவா மயக்கும் தேவதை தான் என்றாள் அதற்கேற்றாற்போல் பச்சை பட்டு பாவாடை தாவணியில் அடக்கமான அழகுடன் மிளிர்ந்தவள் பெரியம்மாவிடம்

என்ன சொன்னாலும் பெரியம்மா உங்க அழகுக்கு ஈடாகுமா , நீங்க அந்த காலத்து ஐஸ்வர்யா ராய் ஆச்சே என்று அவரை வம்பிழுத்து அவரிடம் அடி வாங்கி கொண்டாள் .

அந்நேரம் அங்கு வந்த சந்தோஷி அவர்களை பார்த்து ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல பின் நிறுத்தி நாய்களுக்கு எதற்கு பட்டு குஞ்சரம் என்று ஏளனமாக கூற

சந்தோஷி என்ற பெரியம்மாவின் அதட்டலில் விறு விறுவென்று தன் அறைக்கு சென்று கதவடைத்தவளை என்றாவது மாறமாட்டாளா என்று ஏக்கமாக பார்த்தது பெரியம்மாவின் விழிகள் இரக்கமாக பார்த்தன தாருண்யா மற்றும் குணாவின் விழிகள் . அவளின் நிலை அறிந்ததில் இருந்து அவளின் மீது இருவருக்குமே கோபம் வரவில்லை . பிறகு பெரியம்மாவை சமாதான படுத்தி காரில் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றனர் .

மெதுவாக அம்மனை தரிசித்து அமர்ந்தனர் அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் முடிந்ததும் அனைவரும் எழுந்தனர் அலங்காரம் முடியும் பொழுதே குணாவும் தாருண்யாவும் இன்னும் சிறிது நேரம் பிரகாரத்தை சுற்ற சென்றனர் , அதேநேரம் பட்டு வேட்டி சரசரக்க கம்பீரமாக உள்ளே வந்தான் மனுபரதன் , நேரே பெரியம்மாவிடம் சென்றவன் தாமதம் இல்லையே என்றான்

என்றும் போல அன்றும் அந்த தாய் , மகனின் கம்பீரத்தில் லயித்தபடி இல்லப்பா இப்பொழுதுதான் அலங்காரம் முடிந்தது குணாவும் தருவும் பிரகாரத்தை சுற்ற போயிருக்கிறார்கள் என்றவரிடம் தலையசைப்புடன் இடது பக்க வரிசையில் பெரியம்மாவை தள்ளி கொண்டு திரும்பி நிற்க

தங்கள் சுற்றை முடித்து எதிர்பக்கம் வந்து நின்ற பெண்களை கண்டவன் தாருண்யாவை கண்டதும் அதிர்ந்து நின்றான் அவளுக்கும் அதே நிலை பார்மல்ஸ் காஷுவல்ஸில் அவனை பார்த்தவளுக்கு அவனின் இந்த தோற்றம் ஒருவித அதிர்வை கொடுத்தது அதுவும் காலையில் இருந்து பெரியம்மா அவன் புராணம் பாடி அவனின் புகைப்படத்தை காண்பித்ததோ என்னவோ அவளுக்கு அவன் மனதிற்கு நெருக்கமான சொந்தம் போல் தோன்றினான் .

மனுபரதன் மூச்சுவிட மறந்தவன் போல் அவளை பொறுமையாக ஆராய்ந்தான் அவளின் மேனியில் இயல்பாகவே மஞ்சள் தன்மை இருக்குமோ அதனால்தான் அவளின் மேனி இவ்வளவு சுடர் விடுகிறது அந்த கண்கள் ஏற்கனவே முட்டைகண்ணு இதில் மை வேறு இட்டு பெரிதாக்கி இருக்கிறாள் அவளின் கூர் நாசியில் மூக்குத்தி நீளமாக சிறு முத்து தொங்க இருக்க அது ஆடும் பொழுதெல்லாம் அவன் கை அதை சுண்ட பரபரத்தது இவள் மூக்கு குத்தியிருக்கிறாளா நான் பார்க்கவே இல்லையே என்று நினைத்தவன் அவளின் இதழ்களை பார்க்க அந்த இதழில் இருந்த ஈரம் அதை தொட்டு இழுக்க சொல்லுவது போல் தோன்ற அவசரமாக பார்வையை மாற்றி அவளின் வெண்பட்டு சேலையை கவனித்தான் அது அவளின் உடலை பாந்தமாக தழுவி நிற்க அந்த இடைவெளியில் தெரிந்த இடை கூட அவளின் மஞ்சளழகை எடுத்து காட்டியது , காலின் கொலுசு கூட அவனை சுற்றி இழுக்கும் கொடி போல தோன்ற மீண்டும் அவன் அவள் கண்களில் மூழ்க , எவ்வளவு நேரம் கட்டுண்டிருந்தனரோ ஆரத்தி ஆரமித்ததும் மணியோசயில் இருவரின் மனமும் கலைய அவசரமாக பார்வையை திருப்பினர் அம்மனை நோக்கி .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago