காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா -1

0
340

ஹாய் மக்களே… புதுசா ஒரு கதை ஸ்டார்ட் பணிருக்கேன்..வீக்லி monday, wednesday, friday ud தறேன்ப்பா.

படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா -1

“நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ..
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ.. “

“டேய்… தீபு.. போன் அலறது உன் காதுல விழுதா இல்லையா? செவுத்துல போட்ட சாணி மாறி உக்காந்துருக்க? ” என்று கலா கத்தவும், சுரணை வந்தவனாக செல்லை ஓரக்கண்ணால் பார்த்தவன் எச்சில் விழுங்கினான்.

அவன் மைண்ட் வாய்சோ “அய்யயோ… கால் பண்ணறாலே… என்ன சொல்றதுன்னு தெரியலையே… இல்லைனு சொன்னாலும் கழுவி ஊத்துவா.. ஆமான்னா வேற வினையே வேண்டியில்லை.. சொந்த செலவுல சூனியம் வெச்ச கதை தான்… ஹ்ம்ம்… பேசாம… கால் அட்டென்ட் பண்ணி தங்கச்சிய வெளிய போய்ட்டேனு சொல்ல சொல்லிறலாம்… “

“ப்ரீத்தி… ஏய்ய்ய்… ப்ரீத்தி ” என்றவன் கூப்பாடு போட,

“என்னடா எரும.. காலைலையும் ஏன் கத்தற… “

“என் செல்ல தங்கச்சியாம்… என் அழகு பாப்பாவாம்… என்… “

“போதும் போதும்.. ஹோல்டான் நிறுத்து… எதுக்கு இப்போ மண்டைய கழுவற… என்ன செய்யனும்… தண்ணி வேணுமா? “

“சு… அது இல்லடி… இங்க பாரு… இந்த நம்பர்ல இருந்து கால் வரும்… வந்ததும் எடுத்து அண்ணா வீட்ல இல்ல… வெளிய போய்ட்டான்… போன மறந்து வெச்சுட்டு போய்ட்டானு சொல்றியா? ” என்றான் நைச்சியமாக.

அவனை ஏறஇறங்க பார்த்தவள் “ஹ்ம்ம்… யார் நம்பர் அது? “

திருதிருவென முழித்து பல்லு முப்பத்திரண்டையும் காட்டினான்.

“கருமம்… பாக்க சகிக்கல ” என்று கண்ணை இறுக்கி மூடிகொண்டவள்..

“பண்ணி தொலைக்கறேன்.. ஆனா ஒரு கண்டிஷன் “

“ஐயோ… இவ வேற… சரியான தட்லக்க மட்லக்க “
என்று மனதோடு வைதவன்..

“என்ன? ” என்று வினவ…

அவன் முன் காலை நீட்டினாள் ப்ரீத்தி…
அவள் கேட்பது புரிந்துவிட, “முடியாது போடி ” என்று முகம் திருப்பினான் தீபக்.

“முடியாது போடா” என்றவளும் முகம் திருப்ப, மீண்டும் அவன் செல் அலறியது.

அவனுக்கு பிடித்த பாடல் தான்.. ஆனால் இன்று ஏதோ சங்கு சத்தம் போல கேட்டது.

ப்ரீத்தியை நிமிர்ந்துபார்த்தான், அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு “இப்போ என்னப்பன்னுவ ” என்பதுபோல் காலை ஆட்டினாள்.

ஒரு நொந்து போன பெருமூச்சை விட்டவன்… “ப்ரீதிக்கா… எனக்காக இந்த ஹெல்ப் பண்ணுங்கக்கா.. ” என்றவள் காலை தொட்டு கும்பிடவும்…

“அது… ” என்று தல பாணியில் அவனிடம் சொன்னவள், போனை எடுத்து ஹலோ யார் என்று கூட வினவாமல் பேசினாள்.

“அண்ணனா… அவன் வீட்ல இல்ல… வெளிய போய்ட்டான்.. போன வீட்ல மறந்து வெச்சுட்டு போய்ட்டானாம் ” எனவும்..

எதிர்சாரி குரல் ” அவன் அப்டினு சொல்ல சொன்னானா? ” என்றது கோவமாக..

“ஏய்… கரெக்ட்டா சொல்ட்டேங்க…. இருங்க அவன்கிட்ட தரேன் ” என்றவள் சொல்ல கொலைவெறியோடு அவளை குதறி விடுபவன் போல பார்த்த தீபக்கிற்கு கெக்கலி காட்டி சிரித்தாள் ப்ரீத்தி…

“பிசாசு… ராட்சசி… ” என்றவளை திட்டிக்கொண்டே செல்லை புடிங்கியவனை எதிர்சாரி குரல் மிரட்டியது..

“யாரடா திட்ற..? என்னத்தான? “

“ஏய்… சுங்குடி உன்ன சொல்வனாடி… நான் ப்ரீதியா சொன்னேன்? ” என்று குளறியபடி உளறிக்கொண்டிருந்தவனை, இடைவெட்டியவள்..

“வளவள கொழகொழன்னு இழுக்காத…. நான் நேத்து கேட்டதுக்கு… இன்னும் பதில் சொல்லல… என்ன நெனச்சுட்டு இருக்க…. “

“…….”

“என்னடா… சோப்லாங்கி… எஸ்ஸா நோவா…?? “

“ஏய்… ஏன்டி அவசரப்படுத்தற? “

“அப்டித்தான் படுத்துவேன்… எஸ்ஸா நோவா..? “

“நோ ” வேகமாக சொன்னவன், அதே வேகத்தில் போனை கட் செய்தான். அவன் ஹார்ட், ஜெர்ரிக்கு துடிப்பது போல டங் டங் என்று வெளியே வந்து அடித்துக்கொண்டது.

கொஞ்ச நேரம் மல்லாக்க படுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், பின் எழுந்து கல்லூரி நோக்கி சென்றான்.

அன்று அவர்களது கல்லூரியின் இறுதி நாள். அனைத்து மாணவர்களிடமும் முடித்துவிட்ட பெருமையும் பிரிவின் தாக்கமும் நிறம்பி வழிந்தது. அந்த ஜோதியில் தன்னையும் ஐக்கியம் ஆக்கிக்கொண்டான் தீபக்.

தீபக்.. கொஞ்சம் அமைதியானவன். சசிகலா ராஜேந்திரன் தம்பதிகளை ஏமாற்றி பிறந்த புதல்வன். பெண்குழந்தை தான் வேண்டும் என்று தவம் கிடந்தவர்களுக்கு பல்பு குடுத்த கேடி.. ஊமைய நம்பக்கூடாதுனு சொல்ற பழமொழிக்கு எக்ஸாக்ட்டான அல்ட்ரா மாடல். அமைதியா இருந்தே காரியம் சாதிக்கும் பேர்வழி.. அதுபோக உமைகுசும்பும் ஜாஸ்தி.

இவன் தொங்கச்சி.. சாரி தங்கச்சி ப்ரீத்தி.. இவனுக்கு நேர் எதிர். சரியான ராங்கி. அவளுக்கு அண்ணன் அளித்த அழகான பட்டபேர் தட்லக்க மட்லக்க… பெயர் காரணம் அவனுக்கே தெரியாது.

சராசரியை விட கொஞ்சம் உயர்ந்த மாட்டத்து குடும்பம். தனது கனவான பேஷன் டிசைனிங் படிப்பை வெற்றிகரமாக முடித்த களிப்பு அவன் முகத்தில். கல்லூரியில் அவனுக்கான நட்பு வட்டம் குறுகியது. அவனும் அவளும் மட்டும் தான்..

அவள்… மைத்ரேயி.. தீபக்கின் ஆருயிர் தோழி..நேற்று மாலை வரை அப்படித்தான் தீபு நினைத்துக்கொண்டிருந்தான்.

காலேஜின் இறுதி நாள் என்பதால் அவர்களது வகுப்பறையில் அமர்ந்து இருவரும் கல்லூரி நாட்கள் குறித்து சலசத்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் நட்பானதே ஒரு விபத்தில் தான். கல்லூரி முதல் நாள் என்ற பரப்பரப்போடும் ஆர்வத்தோடும் தன் புட்டி கண்ணாடியை துடைத்துக்கொண்டே காலேஜ் வாசலில் கால் வைத்த தீபு, அடுத்த நொடி குப்பற கிடந்தான்.

மீசை இல்லாதலால் நல்லவேளை மண் ஒட்டவில்லை.

பேந்த பேந்த முழித்துக்கொண்டே எழுந்தவன் முன், முகம் எல்லாம் அனல் வீசும் வடசட்டி கணக்காய் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.

“ஏய்… என்ன நியூ என்ட்ரியா…? “

“அய்யயோ… சீனியர் போல ” என்று மனதிற்குள் பீதி கிளம்ப,

“ஆமாம் மேம் ” என்றான் தீபு பணிவாக,

“காத என்ன கழட்டி வெச்சுட்டு வந்துட்டியா? எத்தனை ஹாரன் அடிக்க… “

“சாரி மேம் “

“என்னத்த சாரியோ.. மொத நாளே இப்டி… “

“ரியலி சாரி மேம்… ப்ளீஸ்… டென்ஷன்ல கவனிக்கல மேம்.. “

“ஹ்ம்ம்… போ போ ஒழுங்கா கிளாஸ்சுக்கு போ… எங்கயாச்சும் போய் மரத்துல முட்டிகிட்டு நீக்காத…அப்டியே உன் புட்டி கண்ணாடிக்கு காதோட பூட்டு போட்டுக்கோ “

ஸ்கூட்டியை கிளப்பியவள், விர்ரென அவனை நோக்கி முறுக்க, சட்டென பின்னகர்ந்தான் அவன்.

“அந்த பயம் எப்போவும் இருக்கனும் வத்தலு… ” என்றபடி சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் தான் சட்டை முழுவதும் வேர்த்து உடம்போடு ஒட்டிவிட்டது அவன் கருத்தில் பட்டது.

“அடி ஆத்தி… சூடான சுங்குடியாத்தாவா இருக்காளே… ” என்று நொந்தவன், அதன்பின் தனது வகுப்பறை விசாரித்து செல்வதற்குள் அங்கே முதல் வகுப்பே தொடங்கி இருந்தது.

அவனை சோதிப்பது போல, வகுப்பின் மேடைமேல் நின்றுக்கொண்டிருந்தாள் அவள்.

“அய்யயோ… இவ..இவங்க சீனியர் இல்ல போலவே… ப்ரோபஸ்ஸோர் போலவே… தீபு இப்டி மாட்டிகிட்டயே டா… இந்த சுங்கிடியாத்தா சூடம் இல்லாமலேயே இப்போ சுத்தி அடிப்பாளே… ” என்ற உதறலோடு

“எக்ஸ்குஸ் மீ மேம்… ” என்றான் தீபு.

வகுப்பில் இருந்த அனைவரும் அவனை தான் திரும்பி பார்த்தார்கள். அவனோ அவளையே பீதியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

“எஸ் கம் இன் ” என்ற குரல் எங்கேயோ தூரத்தில் கேட்க, வெடுக்கென தலை திருப்பி பார்த்த தீபக்கை கண்டு வகுப்பே நகைத்தது.

ஆசிரியை பின் சீட்டில் அமர்ந்திருக்க, வகுப்பு முன் அறிமுகம் படலம் நடப்பதை கொஞ்சம் மந்தமாக மண்டையில் ஏற்றிக்கொண்டவனுக்கு, “ஐயோ… கடவுளே காலைல இருந்து ஏன் என்னை சோதிக்கற…. இவ.. இந்த சுங்கிடிய…சீனியர் ஸ்டாப் னு நெனச்சு…சொல்லி சொல்லி சிரிப்பாளோ.. “

அவன் எண்ணப்போக்கை கலைத்தது, ஆசிரியரின் அழைப்பு.

உள்நுழைந்தவனை பார்த்து மௌனசிரிப்பில் குலுங்கினாள் மைத்து.

காலியாக இருந்த முன் இருக்கையில் சென்று அவன் அமர, மைத்ரேயி தன்னை அறிமுக படுத்திக்கொண்டாள்.

“ஹாய் டுயூட்ஸ் ஐ அம் மைத்ரேயி. மைத்துனு கூப்பிடுவாங்க…அப்பா அம்மாவோட ஒரே குட்டி பொண்ணு நான். கராத்தே பிடிக்கும். ஜாக்கி ஜான் கார்ட்டூன் பிடிக்கும். தென் டிரம்ஸ் ப்ளயிங் என்னோட ஹோபி. நெறய சாப்பிடுவேன்.. நெறய கோவப்படுவேன். ஈஸியாக பழகிருவேன். இப்போதைக்கு இது போதும்னு நினைக்கறேன். ” என்றவள் சிரித்துக்கொண்டே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லிவிட்டு கீழிறங்க, தீபுவிற்கு ஹார்ட் லொடக் லொடக்கென அடித்துக்கொண்டது.

“எப்புடி மொத நாளே இவ்ளோ தைரியமா பேசறா.. நம்மளையும் பேச சொல்வாய்ங்களே.. என்னனு பேச… குட் மார்னிங் எவெரிஒன்… ஐ அம் தீபக் சக்ரவர்த்தி… ” மனதோடு அவன் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்க, அவன் பேரை அழைத்தார் ஆசிரியை.

“உங்கள அறிமுகப்படுத்திக்கோங்க ” என்றவர் சொன்னதும், தீபுவிற்கு கண்கள் இருட்டியது. கையெல்லாம் வேர்த்து பிசுபிசுக்க, திருதிருவென விழித்தபடி எழுந்தவனை கண்டு வகுப்பே பொலக்கென சிரித்தது.

அவமானத்தில் அவன் முகம் கன்றுவதை கண்ட மைத்து, எழுந்து வகுப்பின் முன் வந்தாள்.

“ஏன்பா எல்லாரும் சிரிக்கறீங்க.. ஹி இஸ் அவர் கிளாஸ்மெட்.. மோரெவர் நாம எல்லாரும் சேம் டைப் கிடையாது. ஹி மே பீல் ஷை.. நாம தான் என்கராஜ் பண்ணனும் ” என்றவள் பொரிய, அவனுள் ஒரு தெம்பு பிறந்தது.

மேடையில் ஏறியவன் ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு பேசத்தொடங்கினான் “மை நேம் இஸ் தீபக் சக்கரவர்த்தி. ஐ… நான் அப்பா அம்மாக்கு மொத பையன். ஒரு தங்கச்சி இருக்கா.. நான் தமிழ் மீடியம்ல தான் படிச்சேன்.. அதுனால இங்கிலிஷ் அவ்ளோவா பேசமாட்டேன்.. எனக்கு பிடிக்கவும் இல்ல.. அப்பாக்கும் பிடிக்காது. அவரும் தமிழ் தான் படிச்சாறு… எப்போ அரசாங்க உத்தியோகம் பாக்கறாரு. அதுனாலே என்னையும் தங்கச்சியையும் தமிழ் மீடியம்ல சேத்தாறு.. இங்க எல்லாரும் இங்கிலீஷிலே தான் பேசணும்னு சொன்னாங்க . எனக்கு எது வருமோ அதுதான் நான் பண்ணமுடியும்.. அப்பறம் என் பொழுபோக்குனா நெறய உடற்பயிற்சி செய்வேன்.. பைக் வேகமா ஒட்ட பிடிக்கும்.. நல்லா ஸ்டைல் பணிக்க பிடிக்கும் “

எதார்த்தமான அவன் பேச்சை அனைவருமே ரசித்தனர்.

பேசிமுடித்ததும் அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

இடைவெளியின் போது மைத்ரேயிடம் வந்தவன், அவளுக்கு நன்றி உரைக்க, அதன் பின் ஆரம்பித்தது அவர்களின் நட்பு.

அனைத்தையும் ஒவ்வொன்றாக அவர்கள் எண்ணி எண்ணி மகிழ்ந்து மறுகும் போது தான், மைத்து அதை அவனிடம் சொன்னாள்.

“டேய் வத்தலு… காலேஜ் முடியப்போகுதுடா “

“ஆமா டி “

“என்ன ஆமா டின்னு ரொம்ப காசுலா சொல்ற…? நாம இனி பழையபடி சுத்தமுடியாது.. “

“அப்போப்போ பாத்துக்கலாம் டி.. ஒரே ஊர் தானே? “

“என்னது அப்பபவா? எனக்கு தினமும் பாக்கணும் “

“தினமும் பாக்க நான் என்ன தினத்தந்தியா? “

“ஐயோ.. மொக்கராச.. மூடு உன் திருவாயா.. நான் ஒரு ஐடியா சொல்றேன் கேட்டுத்தொலை “

“என்ன? “

“நாம கல்யாணம் பணிக்கலாமா? “

“ச்சு.. போடி.. உனக்கு எல்லாமே விளையாட்டு தான் “

“நான் சீரியசா சொல்றேன் டா “

“உன் சீரியஸ்ல சில்வண்டு கடிக்க “

“ஏய்… வத்தலு… ஓப்பனா சொல்றேன்…நான் உன்ன லவ் பண்றேன்.. மரியாதையா என்ன கல்யாணம் பண்ணிக்கற… நாளைக்கு வர உனக்கு டைம்… ஒழுங்கா பதில்… நல்ல பதிலா சொல்ற.. அவ்ளோதான் ” என்றுவிட்டு போய்விட்டாள் வத்தலின் சுங்குடி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here