காதலை தேடி – 7

0
298

வணக்கம் தோழிகளே…கொஞ்சம் வேலை இருந்ததால் கதையை அப்டேட் கொடுக்க முடியவில்லை…அப்டேட் தாமதமாக கொடுப்பதற்கு அனைவரும் மன்னிக்கவும்..இதோ காதலை தேடி அத்தியாயம் 7 கொடுத்து இருக்கேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்….

காதலை தேடி – 7

தன் வீட்டுக்கு வந்தவள் அறைக்குள் சென்று தாழிட்டுவிட்டு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.இதயம் தாறுமாறாக அடித்து கொள்ள காவ்யாவினுள் சில பல தடுமாற்றங்கள்..

தடதடவென கதவு தட்டும் சத்தத்தில் சுயஉணர்வு பெற்றவள் கதவை திறக்க “ஏண்டி உனக்கு நேரமாகலையா?”

இன்னும் கிளம்பாம என்ன பண்ற? மணி ஒன்பதாச்சு.

மா முதல்லயே சொல்லமாட்டியா?

சரி சரி சீக்கிரம் புடவைய மாத்திட்டு கிளம்பு.

நான் இனிமே சுடிதார் மாத்திட்டு கிளம்பு நேரமாகிடும். இப்படியே கிளம்புறேன் என தன் வண்டி சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

கொஞ்சம் சாப்பிட்டுட்டு போ காவ்யா என வசந்தா சொல்ல வேண்டாம் என்றுவிட்டு கிளம்பினாள்.

என்னாச்சு இவளுக்கு கொஞ்ச நேரம் கோவிலுக்கு புடவை கட்டிட்டு போக சொன்னதுக்கே அந்த குதி குதிச்சா. இப்போ ஆபிஸ்க்கு புடவை கட்டிட்டு போறா. தலைல வேற என்னைக்கும் இல்லாம இன்னைக்கு பூ வச்சுட்டு போறா என தன் யோசனையிலிருந்தவரை வசந்தா, உன் பொண்ண ரசிச்சது போதும் வந்து சாப்பாடு எடுத்துவை என்றார் காவ்யாவின் தந்தை பெருமாள்.

தனக்கு உடம்பு சரியில்லாததால் தான் இன்று அலுவலகம் வரவில்லையென மதுரா கூறிவிட, காலையில் நடந்ததை மனதுக்குள் ரசித்து கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

அலுவலகம் வந்தவளை பார்த்த கிருஷ்ணாவிற்கு மயக்கம் போடாத குறைதான்.

“காவி நீயாடி இது? இன்னைக்கென்ன பொண்ணா லட்சணமா வந்திருக்க?”

அப்போ இத்தனை நாள் பாக்க பொண்ணு மாதிரி தெரியலையா?

ம்ம் தெரியலையே காவி என அவளிடம் வம்புவளத்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் மதுராவின் உடல்நிலை குறித்து கூற “திங்கட்கிழமையாவது வருவாளா? நாம வேற அவளோட பிறந்தநாளுக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்” என கிருஷ்ணா கேட்க அதெல்லாம் வந்துடுவா.

அதெல்லாம் சரி தான். இன்னைக்கு என்ன விசேஷம்? மேடம் இன்னைக்கு புடவை கட்டி என்னைக்கும் இல்லாத திருநாளா பூ வெச்சிட்டு பொண்ணா அடக்க ஒடுக்காம வந்துருக்கீங்க?

கிருஷ்ணா கேட்டவுடன் காலையில் வினோத்துடன் நடந்தது நினைவுவர சிரித்து கொண்டே நின்றவளை பார்த்து “மேடம் கொஞ்சம் கனவுல இருந்து ஆபீஸ்க்கு வாங்க” என கூற நிகழ்வுக்கு வந்த காவ்யா சமாளித்து கொண்டு “ஒண்ணுமில்ல கிருஷ். காலையில கோயிலுக்கு போய்ட்டு வர லேட் ஆகிடுகிச்சு. அதான் அப்படியே வந்துட்டேன்” என கூற நம்பிட்டேன் என்றபடி தன் வேலையை பார்க்க சென்றாள்.

மாலை தன் வீட்டிற்கு வந்த காவ்யாவை பார்த்த அவள் தாய் வசந்தா “என்ன இன்னைக்கு அதிசயமா இருக்கு? சீக்கிரம் வந்துட்ட?”

இன்னைக்கு மதுரா வரலாமா. அதுவும் இல்லாம கொஞ்சம் தலைவலி வேற. அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்”. ஒரு காபி கொடுங்காம.

பத்து நிமிடத்தில் சூடான காபியுடன் வந்தவர் “இன்னும் புடவைய மாத்தமா என்ன பண்ற?”

மா நான் கொஞ்ச நேரம் மாடியிலே இருக்கேன் என காபி கோப்பையுடன் மாடிக்கு சென்றாள்.

பக்கத்து மாடியில் வினோத்தின் தம்பி சுகுமாரும் அவனின் நண்பர்களும் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். வினோத் மாடியில் உள்ள அறையில் படித்து கொண்டிருந்தான். காவ்யாவை பார்த்த சுகுமார் அவளிடம் பேச வர மற்றவர்களும் அரட்டையில் இணைந்து கொள்ள ஒரே சத்தமாய் இருக்க வெளிய வந்து பார்த்த வினோத் காவ்யா இருப்பது தெரியாமல் சுகுமாரை திட்டி கீழே செல்ல சொன்னான். அவனும் தன் நண்பர்களுடன் கீழே செல்ல காவ்யாவும் கீழே செல்ல எழுந்தாள். அப்பொழுதுதான் காவ்யாவை பார்த்த வினோத் அவளை கூப்பிட “நீயும் இங்க தான் இருக்கியா? நீ கிளாஸ் போய்ட்டானு நினைச்சேன். லீவா இன்னைக்கு?

ஆமா காவ்யா. நீ என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?

கொஞ்சம் தலைவலி வினோத். அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். மேலே என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை. இருவரும் காலையில் நடந்ததை எண்ணி அமைதியாக நிற்க வினோத் மௌனத்தை களைத்தான்.

“சாரி காவ்யா. காலையில உன்கிட்ட அப்படி நடந்ததுக்கு. நீ விழக்கூடாதுன்னுதான் உன்னை பிடிச்சேன். ஆனா கை எக்குத்தப்பா பட்ருச்சு” என அவளின் இடையை பார்த்து கொண்டே சொல்ல அவனின் பார்வை சென்ற இடத்தை உணர்ந்து எதுவும் பேச முடியாமல் நின்றாள்.

எதுவும் சொல்லாமல் நான் கீழே போறேன் என சொல்லிவிட்டு செல்ல அவள் கோபமாக இருப்பதாக வினோத் நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.

அடுத்து வந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் வினோத்தால் காவ்யாவை பார்க்கமுடியவில்லை. காவ்யாவும் வினோத்தை பார்ப்பதை தவிர்த்தாள். தன் மனசுக்கும் புதிதாக வந்திருக்கும் உணர்வு என்னதென்று புரியாமல் குழம்பி இருக்கையில் வினோத்தை பார்த்தால் மேலும் குழம்பும் என்பதால் அவனை காண்பதை தவிர்த்தாள். இதை அறியாத வினோத் அவளின் கோபத்தை எப்படி சரியாக்குவது என யோசித்து கொண்டிருந்தான்.

தேடல் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here