ஹாய் நட்பூக்களே!!!!! காதலை தேடி…. மூன்றாம் அத்தியாயம் போட்டுட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் சொல்லுங்க…
காதலை தேடி….
மறுநாள் அலுவலகம் வந்தவளை தோழிகள் சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்டு கொண்டுருந்தனர்.
மதுரா மாப்பிள்ளை எப்படி இருந்தாரு? உனக்கு ஓகே வா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? என கிருஷ்ணா கேட்டு கொண்டுருக்க நடந்தவற்றை சொன்னாள் மதுரா.
ச்சே! நாங்க எவ்ளோ ஆர்வத்தோட இருந்தோம். இப்படி ஆகிடுச்சே என ருத்ரா கவலைப்பட தன் வேலையை பார்க்க சென்றாள் மதுரா.
இரண்டு நாள் வழக்கம் போல் சென்றது. மதுரா இரண்டு நாட்களாக கொஞ்சம் பதட்டமாக இருப்பதாக காவ்யாவிற்கு தோன்றியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைபேசியில் எதையோ பார்த்து கொண்டிருந்தாள்.
அன்று இரவு அருளிடம் இருந்து முகநூலில் செய்து வந்திருந்தது. “May I know who is this?”
அந்த செய்தியை படித்துவிட்டு நொந்தே போனாள் மதுரா. கண்ணீர் கைபேசியின் திரையை மறைத்தது. இந்த கேள்வியை அருளிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை போலும்.
குறைந்தபட்சம் நியாபகமாவது இருக்குமென்று நினைத்திருந்தாள். என்ன பதில் செய்தி அனுப்புவது என தெரியாமல் செல்லை அணைத்துவிட்டு தூங்க முயன்றாள். ஆனால் மூடிய கண்களில் அவனின் பிம்பம், அவனின் சிரிப்பு என அவளின் தூக்கத்தை தூர விரட்டியது. காதல் கொண்ட மனம் அவளை தூங்க விடவில்லை.
தன் செல்லை எடுத்தவள் பதில் செய்தி அனுப்பினாள். இரண்டு வருடங்களுக்கு முன் அவன் பிஎச்டி செய்து கொண்டிருக்கும் இடத்தில் தான் தானும் தன் கல்லூரி புராஜெக்ட் (Project) செய்ததாக சொன்னாள்.
ஆனாலும் அவனுக்கு நியாபகம் வரவில்லை. இந்த இரண்டு வருடங்களில் நிறைய மாணவர்களை பார்த்துவிட்டான். யாரோ தன் நண்பர்கள் தன்னிடம் விளையாடுவதாக நினைத்து “டேய் எவன்டா அது. பொண்ணு பேர்ல மெஸேஜ் பண்ணிட்டு இருக்கறது?”
ஹலோ சார். நிஜமாவே நியாபகமில்லையா?
அட எவண்டா இது. தூங்க விடாம மெசேஜ் பண்ணிட்டு இருக்குறது. போதும் டா முடியல என அவன் தன் செல்லை அணைத்துவிட்டான்.
அவன் தன்னை நம்பவில்லை என்றதும் அவனிடம் புராஜெக்ட் செய்த மற்ற மாணவர்கள் பற்றி கூறினாள். மேலும் அவனது பல்சர் வண்டியின் நம்பர், அவனுடன் பணியாற்றும் நண்பர்கள் என அவர்களுக்கு பொதுவானவர்களை கூறினாள்.
அவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. சிறிது நேரம் செல்லை பார்த்து கொண்டு இருந்தவள் பின் அதை அணைத்துவிட்டு கண்களை மூடினாள்.
மூடிய விழிகளுக்குள் எப்பொழுதும் போல் அவனின் உருவம். முதன்முதலில் அவனை சந்தித்த தினம் அன்று போல் இன்றும் பசுமையாய் விரிந்தது.
கல்லூரியின் கடைசி வருடம். இவர்கள் பயோடெக் என்பதால் அவர்களுக்கு கடைசி செமிஸ்டரில் புரோஜெக்ட் மட்டும் தான். அதுவும் அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் தான் செய்ய வேண்டுமென அவர்கள் டிபார்ட்மென்ட் எச்.ஓ.டி. சொல்லிவிட்டதால் மாணவர்கள் அதற்கான தேடலில் இருந்தனர்.
இன்னும் மூன்று நாட்களில் மாணவர்கள் தாங்கள் புரொஜக்ட் செய்யும் இடத்தை அவர்களின் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
பல இடங்களில் முயன்றும் மதுரா, காவ்யா மற்றும் கிருஷ்ணாவிற்கு புராஜெக்ட் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. கடைசியாக தோல் பதப்படுத்தும் அரசு நிறுவனத்தில் அங்குள்ள ஒரு துறையில் அனுமதி கிடைத்தது.
அவர்களின் கைட் சிவநேசனிடம் பேசிவிட்டு அனுமதி கிடைத்த சந்தோஷத்தில் தோழிகள் மூவரும் பேசிக்கொண்டே நடக்க, எதிரே வந்த அருளின் மேல் மதுரா மோதிவிட்டாள்.
மோதியவளுக்கோ என்னடா திடிர்னு மரத்து மேல மோதிட்டோமா என நினைத்து தலையை நிமிர்த்தினாள். மதுராவின் குரல் கேட்கமால் மற்ற இருவரும் திரும்பி பார்த்து வாயை பொத்தி சிரித்து கொண்டுருந்தனர். மோதியது மரத்தின் மேல் இல்லை மனிதன் தான் என உணர்ந்து சாரி சொல்ல வாய் திறந்தவளை முறைத்துவிட்டு அங்கிர்ந்து நகர்ந்தான் அருள்.
அவன் சென்று வெகு நேரமாகியும் தோழிகளின் சிரிப்பு அடங்கவில்லை. இப்போ எதுக்குடி ரெண்டு பேரும் இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க? அந்த பனமரம் என்னமோ நான் வேணும்னே அவன் மேல மோதின மாதிரி முறைச்சிட்டு போறான்.
ஆளு வளர்ந்தா மட்டும் போதுமா? மூளை வளர வேண்டாம்?
ச்சே! இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சனோ தெரியல. போறவன் வரவன்லா முறைக்குறான்.
தான் ஒரு நாள் அந்த முகத்திற்காக என்னவெல்லாம் செய்ய போகிறோம் என தெரியாமல் என அவனை அர்ச்சித்து கொண்டு வந்தாள்.
தேடல் தொடரும்….