காதலை தேடி….
இரண்டாம் அத்தியாயம் போட்டுட்டேன் பிரண்ட்ஸ்… கதை எப்படி இருக்குனு உங்க கருத்துக்களை சொல்லுங்க…
மதுரா, காவ்யா இருவரின் வீடும் அருகில் என்பதால் எப்பொழுதும் இருவரும் ஒன்றாக தான் ஸ்கூட்டியில் செல்வர். எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டு வரும் மதுரா, இன்று மிகவும் அமைதியாக வருவது காவ்யாவை மிகவும் யோசிக்க வைத்தது.
தன் வீடு வந்ததையும் கவனிக்காது இருந்தவளை, “மேடம் உங்க வீடு வந்துடுச்சு”. இப்போவே கல்யாண கனவா? இன்னும் ஒரு மணிநேரத்துல மாப்பிள்ளை வந்துடுவாரு. போய் ரெடியாகுற வழியப்பாருங்க. இப்போ வண்டியில இருந்து இறங்குறீங்களா? சீக்கிரம் வீட்டுக்கு வரலைனா எங்க ஆத்தா வையும்.
இவ ஒருத்தி என்னோட நிலைமை புரியாம கிண்டல் பண்ணிட்டு இருக்கா. பேசாம இவகிட்ட சொல்லிடலாமா? வேண்டாம். நமக்கே தெரியாத ஒன்ன இவகிட்ட சொல்லி என்ன பண்றது. சரி பார்த்துடலாம். நம்மள மீறி என்ன ஆகிட போகுது என மதுரா ஒரு பட்டிமன்றம் நடத்தி முடித்தாள்.
மதுராவை இறக்கி விட்ட காவ்யா தன் வீட்டுக்கு செல்லும் வழியெல்லாம் மதுராவை பற்றியே யோசித்து கொண்டு வர, எதிரே நின்ற வினோத் மேல் இடித்துவிட்டாள். ஐயோ அம்மா! என்ன கொல்ல பாக்குறாங்கா என வினோத் அலற “டேய் நெட்ட கொக்கு கண்ணு தெரியல? வண்டி மேல வந்து மோதுற”.
அடிப்பாவி! நீ கனவுல மிதந்துட்டே என் மேல இடிச்சிட்டு என்னையே திட்டுறியா? இந்த அநியாயத்த கேட்க ஆள் இல்லையா?
ஏன் இல்ல நாங்க இருக்கோம் என அங்கே ஆஜராகினர் வசந்தாவும், சரோஜாவும்.
ஏன் டீ எப்போ பாரு அந்த புள்ளகிட்டயே வம்பு இழுக்குற? என வினோத்திற்கு ஆதரவாக பேசினார் காவ்யாவின் அம்மா வசந்தா.
அப்படி கேளுங்க ஆன்ட்டி என அவருக்கு எடுத்து கொடுத்தவனை கொலை வெறியுடன் காவ்யா பார்த்து கொண்டு இருக்க, அவனை ஏண்டி முறைக்குற? உன்ன மாதிரியா அந்த புள்ள ஊர சுத்திட்டு வருது?
என்னது நா ஊர சுத்திட்டு வரேனா? ஏம்மா பொண்ணு ஆபீஸ்ல இருந்து டயர்டா வருவாளே. அவளுக்கு சூடா ஒரு காபி கொடுக்காமா இவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க?
இவன்தான் இருபத்தி மூணு வயசாகியும் வேலைக்கு போகமா படிக்கிறேன்னு எல்லோரையும் ஏமாத்திட்டு இருக்கான் என காவ்யா சொல்ல, அதுவரை அவளை வம்பிழுத்து கொண்டிருந்தவன் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர, தான் சொன்ன சொல்லை உணர்ந்தவள் தன் தவறை உணர்ந்து வினோத்தை அழைக்க அவன் திரும்பி பார்க்காமல் வீட்டிற்குள் சென்றான்.
சாரி ஆன்ட்டி, தெரியாம சொல்லிட்டேன். வினோத் வேற கோபமா போறான் என சரோஜாவிடம் மன்னிப்பு கேட்க, அட விடுமா. இது என்ன புதுசா? எப்போதான் அவன் மாறப்போறானோ.
ஏன் ஆன்ட்டி நீங்களாவது அங்கிள் கிட்ட சொல்ல கூடதா?
அந்த மனுஷன்ட்ட எவ்ளோவோ சொல்லி பார்த்துட்டேன் காவ்யா. அவரும் கேட்க மாட்டிங்கிறாரு இவனும் கேட்க மாற்றான்.
இப்படியே நின்னுகிட்டே இருக்கறதா ஐடியாவா? வீட்டுக்குள்ள வா என வசந்தா நகர காவ்யாவும் அவர் பின்னே சென்றாள்.
வினோத், காவ்யாவின் பக்கத்து வீடு. இருவரும் ஒரே வயதினர், நல்ல நண்பர்களும் கூட.
வினோத்தின் அப்பா சந்திரன், பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவரை எதிர்த்து பேச பயந்துகொண்டு தன் கனவான மருத்துவத்தையும் விடுத்து ஐ.ஏ.எஸ் தேர்விற்கு படித்து கொண்டிருக்கிறான்.
தன் கனவான அரசு வேலை கனவாகவே போய்விட, தன்னால் முடியாததை தன் மகனை வைத்து சாதிக்க நினைத்தார். ஆனால் அதில் தன் மகனின் கனவும் சிதைந்து போய்விடுமென மறந்துவிட்டார்.
விஜி, சீக்கிரம் ரெடியாகு. மாப்பிள்ளை வீட்லயிருந்து போன் பண்ணாங்க. இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவாங்கலாம் என சொல்லிவிட்டு மதுராவை பார்க்க சென்றார் அந்த வீட்டின் தலைவர் சண்முகம்.
மதுமா ரெடியாகிட்டியா? சீக்கிரம் கிளம்பு மா என சண்முகம் சொல்லிக்கொண்டிருக்க அவரின் கைபேசி சிணுங்கியது. அவர் வெளியே செல்ல, தன் கைபேசியில் சேமித்து வைத்துள்ள அவன் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
உங்க ரிசெர்ச் பேப்பர்ஸ் எந்த ஸ்டேஜ்ல இருக்கு? என தன் பிஎச்டி மாணவரான அருளிடம் கேட்டுகொண்டிருந்தார் ராஜன்.
இன்னும் ஒரு பத்து நாள்ல முடிச்சிட்டு உங்களுக்கு அனுப்பிடுறேன் சார் என சொல்லிவிட்டு மேலும் அடுத்த நாளிற்கான வேலையை பற்றி அவரிடம் விவாதித்து கொண்டிருந்தான்.
அருள் – இருபத்தேழு வயது இளைஞன். சொந்த ஊர் அபிராமிபுரம். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் வளர்ந்துவரும் ஊர். அப்பா கந்தசாமி, விவசாயி. அம்மா சுமதி. அருள் தன் பிஎச்டி படிப்பை சென்னையிலுள்ள அரசு நிறுவனத்தில் படித்து கொண்டிருக்கிறான்.
அதே சென்னையில் நம் மதுராவை இப்பொழுது பெண் பார்க்க மாப்பிளை வீட்டினர் வந்துள்ளனர்.
மதுரா கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டாள்.
விஜி, மதுராவை கூட்டிட்டு வா என சண்முகம் சொல்ல மதுரா அவர்கள் முன் நிறுத்தப்பட்டாள். வந்தவர்களை பார்த்து வணக்கம் சொன்னவளுக்கு அப்பாடா என்றிருந்தது. மாப்பிள்ளையின் அம்மா, அப்பா மற்றும் பாட்டி மட்டுமே வந்திருந்தனர். வந்தவர்கள் மதுராவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தங்களுக்கு பிடித்து இருக்கிறதென்றும் தங்கள் குடும்பத்தாரிடம் பேசிவிட்டு மாப்பிள்ளையை அழைத்து வருவதாக சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
அப்பாடா என்று தன் அறைக்கு வந்தவளுக்கு இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க போகிறோம் என தோன்ற தான் அடுத்து என்ன செய்வது என யோசித்து கொண்டுருந்தவள் “இனி யோசிச்சிட்டே இருந்தா சரிப்படாது” என தன் கைபேசியை எடுத்து முகநூல் சென்றாள். முகநூலில் அவனை கண்டுபிடிப்பது அத்தனை சிரமமாக இருக்கவில்லை. தன் தைரியத்தை திரட்டி ஒரு வழியாக அவனுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தாள்.
தேடல் தொடரும்…
கதையின் போக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்ல போர் அடிக்காதான்னு சொல்லுங்க மக்களே.. அப்போ தான் என் தவறுகளை திருத்திக்க முடியும்…