காதலை தேடி – 15
ஹாய் தோழிகளே… நான் வந்துட்டேன் வந்துட்டேன்!!! காதலை தேடி… அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். படிச்சிட்டு எல்லோரும் உங்கள் கமெண்ட்ஸ தட்டிவிடுங்க கண்மணிகளா….சின்ன எபி தான் டியர்ஸ்ஸ்ஸ்ஸ்… கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க….
அங்கே தீபக்கின் நண்பர்கள் அனைவரும் பார்ட்டி என்ற பெயரில் இன்றைய இளம் தலைமுறைகளை சீரழிக்கும் மதுவை அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை கண்ட தீபக், “டேய் என்னடா இது? யாரவது பார்த்தா என்ன ஆகும்?”
“அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க. நீயும் வா மச்சான்” – விஜய்
“டேய் விஜய்… தீபக்கை பத்தி தெரியாதா?
அவன் எப்போ குடிச்சிருக்கான்?” – தினேஷ்
“நீங்கலாம் திருந்த மாட்டிங்க. எனக்கு வேலை இருக்கு. சரி நீங்க இங்க இருக்கிங்க. பிரியாவும், ருத்ராவும் எங்க?”
பிரியா அவங்க சித்தி வீட்டுக்கு கிளம்பிட்டா – விஜய்
சரி ருத்ரா எங்க இருக்கா? – தீபக்
ஆமா… நா கூட சாப்பிடும் போது பார்த்தது. அதுக்கு அப்புறம் ருத்ராவை பார்க்கலையே என தினேஷ் கூற விஜய்யும் அதை ஆமோதித்தான்.
“உங்களை நம்பி ஒருவேளை கொடுத்தா அதை கூட உங்களால செய்யமுடியலை. ருத்ராவையும், பிரியாவும் கீழே இருக்க அறைல தானே தங்க வைக்க சொன்னேன்? சொன்ன ஒரு வேலைய கூட ஒழுங்கா செய்யாம இங்க வந்து குடிச்சிட்டு இருக்கீங்க” என திட்டியவன் அவர்களிடம் பேசி பயனில்லை என பிரியாவிற்கு அந்த நேரத்தில் அழைப்பது சரியில்லையென அவளிற்கு குறுந்செய்தி அனுப்பினான்.
ஒரு அரைமணி நேரம் கழித்து பிரியாவிடம் இருந்து பதில் வந்தது. தான் தன் சித்தி வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், ருத்ராவை சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டதாகவும் பதில் வந்தது.
பிரியாவின் பதிலை பார்த்துவிட்டு ருத்ராவிற்கு அழைத்தான். ஆனால் அவளின் கைபேசிக்கு அழைக்க அது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக சொல்ல மீண்டும் முயற்சித்து தொடர்பு கிடைக்காமல் என்ன செய்வதென தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
மணி நள்ளிரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்க தீபக்கின் தாய் கனகா, “தீபக் போய் தூங்குப்பா. காலைல முகூர்த்தம் ஒன்பது மணிக்கு தானே. கொஞ்சம் நேரம் போய் தூங்கு”.
“சரி மா என்று அறைக்கு வந்தவனால் தூங்கமுடியவில்லை. ருத்ராவிடமிருந்து ஏதாவது குறுந்செய்தி வந்துள்ளதா என நொடிக்கொரு முறை தன் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்தவன், தனியா எதுக்கு போகணும்? காலைல கல்யாணம் முடிச்சிட்டு போயிருக்கலாம். இந்த இராத்திரி நேரத்துல நல்லபடியா வீட்டுக்கு போகணும். எப்போ பாரு இவளுக்கு இதே வேலை. நம்மள பதறவச்சு வேடிக்கை பாக்கறதே பொழப்பா வச்சிட்டு இருப்பா போலிருக்கு என யோசனையில் இருந்தவனை ருத்ராவின் அழைப்பு வர அவசரமாக அதை உயிர்பித்தான்.
“ஹே ருத்ரா… உனக்கு எத்தனை முறை கால் பண்றது? இப்போ எந்த இடத்துல இருக்க? ஒன்னும் பிரச்சனை இல்லையே? நீ வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிடு. அப்போதான் என்னால நிம்மதியா இங்க வேலை செய்ய முடியும்…” என மூச்சு விடாமல் பேசியவனிடம் “எனக்கு ஒன்னும் பிச்சனை இல்லை தீபக். நாளைக்கு காலைல எங்க மாமா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்… நான் வீட்டுக்கு போனதும் உனக்கு தகவல் சொல்லிடுறேன்…” என பேச ஆரம்பித்தவர்கள் அழைப்பை துண்டிக்காமல் பேச்சை வளர்த்தனர். ஏதோ பெரிதாக சத்தம் கேட்கவும் “என்ன சத்தம் ருத்ரா?”
தெரியல தீபக்… வண்டி திடிர்னு நின்னுடுச்சு.. என்னாச்சுனு தெரியல..
ஓட்டுனரும், நடத்துனரும் கீழே இறங்கி சென்று பார்த்துவிட்டு வண்டி இதற்குமேல் செல்லாது என அறிவித்தனர். சகபயணிகள் சலசலப்புடன் பேசிக்கொண்டிருக்க, ருத்ரா நடத்துனரிடம் என்ன விபரம் என கேட்க அவர் வேறு வண்டி பிடித்து செல்லுமாறு கூறினார்.
பயணிகள் அனைவரும் திட்டியபடியே இறங்கினர். அது கல்யாணா நாள் என்பதால் வந்த அனைத்து வண்டிகளும் கூட்டமாக வர வேறு வழியில்லாமல் பாதி பேர் கூட்டமாக இருந்த வண்டியில் நின்றபடியே சென்றனர்.
இதையெல்லாம் மறுமுனையில் உள்ள தீபக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பலமுறை ஹலோ சொல்லியும் ருத்ரா இருந்த பதட்டத்தில் தீபக் இருப்பதை மறந்துபோனாள். அவளும் மற்ற பயணிகளுடன் வேறு பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்க அருகில் இருந்த முதியவர், “எங்கம்மா போகணும்?”
“சென்னைக்கு போகணும் தாத்தா”.
இந்த நடு காட்டில வந்து இப்படி இந்த பேருந்து நின்னுடுச்சே மா.. நாங்கல்லாம் எப்படியும் போயிடுவோம்.. நீ எப்படி போவ?
அவரிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தீபக்கிடமிருந்து மறுபடியும் அழைப்பு வர அப்போது தான் தீபக்கிடம் தான் பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
“ருத்ரா இப்போ நீ எங்க இருக்க?”
அந்த இராத்திரி வேளையில் அவளுக்கும் தான் எங்கே இருக்கிறோம் என தெரியவில்லை. எனக்கு தெரியல தீபக் என்றவளுக்கு தான் எப்படி சென்னைக்கு சென்று சேரப்போகிறோம் என்பதை நினைத்து கண்கள் பணிக்க அதை தீபக்கிடம் வெளிக்காட்டவில்லை.
“சரி அங்க யாரவது இருந்தா அவங்க கிட்ட கேளு”.
“ம்ம் சரி என அவள் நடத்துனரிடம் கேட்டு, தான் இருக்கும் இடத்தை கூறினாள்”.
“தீபக், இங்க நிறைய பேர் கூட இருக்காங்க. அதனால பயம் ஒண்ணுமில்லை. நான் பத்திரமா சென்னைக்கு போய் சேர்ந்திடுவேன். நீ கவலைபடாம அங்க கல்யாண வேலையை பாரு என கூறி கைபேசியை அணைத்தாள்”.
மறுபடியும் ஒரு அரை மணி நேரம் கழித்து ருத்ராவிற்கு அழைத்து பேருந்து கிடைத்ததா என கேட்க இன்னுமில்லை என்றாள்.
அவன் தூங்காமல் தனக்காக யோசித்து கொண்டிருப்பான் என சரியாக ஊகித்து பத்து நிமிடம் கழித்து தீபக்கிற்கு அழைத்து தனக்கு பேருந்து கிடைத்துவிட்டதாகவும் சென்னைக்கு போய் சேர்ந்ததும் கால் செய்வதாக கூறினாள்.
ஆனால் தீபக்கோ பேருந்து நின்றுவிட்டது என கூறிய பதினைந்து நிமிடத்தில் திருமண மண்டபத்தில் இருந்து தன் நண்பனின் மகிழுந்து (கார்) எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
தேடல் தொடரும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…