காதலை தேடி – 14
ஹாய் நட்புக்களே!!! காதலைத்தேடி அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க நட்பூஸ்…. இதோட அடுத்த பதிவு செவ்வாய்கிழமை போடுறேன்…
வினோத்தின் வார்த்தைகளே காதில் மறுபடியும் ஒலித்துக் கொண்டிருந்தது. ச்செ!! நான் தான் முட்டாள் மாதிரி அவனையே நினைச்சிட்டு இருக்கேன் போல. அவன் வேற யாரையோ காதலிக்கிறான். நான் தான் பைத்தியம் மாதிரி என்னை தான் காதலிக்கறான்னு நினைச்சிட்டு இருக்கேன் என மருகியவள் அதிகாலையில் தான் கண் அயர்ந்தாள்.
காலை பத்து மணி வரை தூங்கி கொண்டிருந்தவளை, “காவ்யா மணி என்னாச்சு ? இன்னும் என்ன தூக்கம்? சிக்கிரம் எழுந்திரு”.
“மா இராத்திரி ரொம்ப நேரம் முழிச்சிருந்தேன் மா. கொஞ்ச நேரம் தூங்குறேன் மா” என அவள் தூங்கி கொண்டிருக்க அங்கே வினோத்தின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது.
“இன்னைக்கு ஒரு நாளாவது சீக்கிரம் எழுந்திரு டி. குளிச்சிட்டு கோயிலுக்கு போய்ட்டு வா” என வசந்தா கூற, மெத்தையில் புரண்டு படுத்தவளுக்கு இரவு வினோத் கூறியது நினைவில் வர மீண்டும் அழபிடிக்காமல் எழுந்து குளியறைக்கு சென்றாள்.
எப்போதடா விடியும் காவ்யாவுடன் பேசலாம் என அவளின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்தவனை அறியாமல் இவள் இருக்க, “இன்னும் மெசேஜ் பார்க்காம என்ன பண்றா? பேசாம வீட்டுக்கே போயிடலாமா?” என இவன் பலவாறாக யோசித்து கொண்டிருக்க, குளித்து முடித்து வெளியே வந்த காவ்யாவை அவளின் கைபேசி அழைக்க எடுத்து பார்த்தால் கிருஷ்ணாவிடம் இருந்து புதுவருட வாழ்த்து செய்தி வந்திருந்தது.
பின் மற்ற செய்தியை பார்க்க வினோத்தின் செய்தியும் கண்ணில் பட, அதை படிக்காமல் கைபேசியை கட்டிலில் விட்டெறிந்தாள்.
மீண்டும் அவனிடமிருந்து மெசேஜ் வர அவனை திட்ட எண்ணி அவனின் மெசேஜை படித்தவளுக்கு சற்று நேரம் தான் காண்பது கனவா? நனவா? என குழப்பத்தில் இருந்தவளை வசந்தாவின் குரல் நிகழ்காலம் தான் என உணர்த்தியது.
அவனின் கவிதையை முதலில் படித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஒருமுறை படிக்க அதன் பொருள் விளங்க உதட்டில் சிரிப்பும், கண்களில் கண்ணீரும் வழிந்தது.
தன்னை அழ வைத்ததால் தானும் அவனிடம் விளையாட எண்ணி அவனின் எந்த அழைப்பிற்கும் அவள் பதில் அழைக்கவில்லை. அன்று முழுவதும் அவன் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள்.
வினோத்தின் நிலைமை தான் இன்னும் மோசமாயிற்று. அவனின் மெசேஜை படித்த பின்பும் காவ்யாவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவனிற்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
அடுத்த நாள் அலுவலகம் வந்த ருத்ரா, தோழிகளிடம் ஒரு திருமண அழைப்பிதழை நீட்டினாள். அதை வாங்கிய மதுரா, “இது தீபக் தங்கச்சி கல்யாண பத்திரிகை தானே? இப்ப எதுக்கு இத எடுத்துட்டு வந்துருக்க?”
“நான் இந்த கல்யாணத்துக்கு போறேன்”.
“என்ன விளையாடுறியா? கல்யாணம் எங்கன்னு தெரியும்ல? இங்கயிருந்து எப்படி பாண்டிசேரி வரைக்கும் தனியா போவ?” – கிருஷ்ணா
“நீங்க யாரவது கூட வரீங்களா?” – ருத்ரா
“நீயே போக வேண்டாம்னு நாங்க சொல்லிட்டு இருக்கோம். நீ எங்களை கூப்பிட்ற? நீ போகலான தீபக் கோவிச்சுக்க மாட்டான். முதல்ல நீ தனியா வரது தெரிஞ்சா அவனே நீ வரவேண்டாம்னு தான் சொல்வான்” – காவ்யா
“நீங்க யாரும் வரலைனா பரவாயில்லை. நான் போறேன். கூட எங்க டீம்ல இருந்து தினேஷ் வரேன்னு சொல்லியிருக்கான்”.
“எப்போ கிளம்புற?” – கிருஷ்ணா
“சனிக்கிழமை சாயங்காலம் கிளம்புறேன். ரிசப்ஷன்ல கலந்துக்கிட்டு அன்னைக்கு இராத்திரியே கிளம்பிடுவேன்”.
“ஏன் அப்படியே கல்யாணம் முடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தானே?” – மதுரா
“அடுத்த நாள் எங்க மாமா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். அதுனால இராத்திரி கிளம்புனா தான் சரியா இருக்கும்”.
“என் கூட நீங்களும் கூட வரிங்கனு அம்மாகிட்ட சொல்லிருக்கேன். அதுனால யாரும் என்னை போட்டு கொடுத்துடாதீங்க”.
“ருத்ரா, இவ்ளோ கஷ்ட்டப்பட்டு அம்மாகிட்ட பொய் சொல்லி போகணும்னு என்ன அவசியம்?” – காவ்யா
அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க, இதற்குமேல் தாங்கள் என்ன பேசினாலும் அவள் கேட்க மாட்டாள் என்பது புரிய தோழிகள் என்ன செய்வதென தெரியாமல் அமைதிகாத்தனர்.
இந்த ஐந்து நாட்களாக தோழிகள் எத்தனையோ வழிகளில் முயன்றும் ருத்ராவின் பயணத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவள் ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள் என்பதும் தெரியவில்லை.
அன்று தீபக், ருத்ரா அழைத்ததும் தன் பயணத்தையும் ஒதுக்கி விட்டு அவளுக்கு ஒரு பிரச்சனை என்றதும் ஓடோடி வந்ததும், உரிமையோடு அவளை திட்டியதும் இன்று நினைத்தாலும் மனதில் இனிமை பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஆனால் தீபக் மனதில் என்ன உள்ளது என்பதை அவளால் கணிக்க முடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு தீபக் அவளிடம் சில சமயங்களில் நெருங்குவது போல் தோன்றினாலும் அடுத்த நிமிடமே அவளது கற்பனை என்பதை போல் சகஜமாக பேசுவான்.
அவனின் செயலால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.
இந்த ஒரு மாதத்தில் நண்பனாய் இருந்தவன் காதலனாய் மாறி இருந்தான். அவளுடைய காதலை சொல்வதில் அவளுக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை. ஆனால் தன்னுடைய காதலால் அவனுடைய நட்பை இழந்துவிடுவோமோ என்ற பயம் இருந்தது. அவனின் மனதை தெளிவாக தெரியாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல அவள் தயங்கிக் கொண்டிருந்தாள்.
சனிக்கிழமை காலை தன் பயணத்திற்கு தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்த ருத்ராவை அவள் அன்னை பார்வதி, “கண்டிப்பா இன்னைக்கு நீ போகணுமா?”
“மா, நீங்க தான அன்னைக்கு போகவானு கேட்டதுக்கு போன்னு சொன்னிங்க. இன்னைக்கு போகணுமான்னு கேட்ட எப்படி மா?”
” நிச்சயதார்த்தத்துக்கு சரியா வந்துடுவேன் மா”.
சென்னையிலிருந்து மாலை மூன்று மணிக்கு பாண்டிசேரி செல்லும் பேருந்தில் ஏறிய ருத்ராவும், தினேஷும் இரவு ஏழு மணிக்கு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்களை பார்த்த மற்ற நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள ருத்ராவின் கண்கள் தீபக்கை தேடிக் கொண்டிருந்தது. தங்கையின் கல்யாணம் என்பதால் தீபக் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்க ருத்ராவால் தீபக்கை காண முடியவில்லை.
வந்து ஒரு மணிநேரமாகியும் தீபக்கை காணாமல் தவித்தவளின் கண்களுக்கு தரிசனம் தந்தவன் அப்படியே சிலையென நின்றுவிட்டான். ருத்ராவை அங்கு சற்றும் எதிர்பார்க்காதவன் அதிலும் அவளை சேலையில் கண்டவுடன் மெய் மறந்து நின்றான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் பார்த்த நொடி ருத்ராவும் அவனை பார்க்க, இருவரது விழிகளும் தங்களது இணையை பார்த்த மகிழ்ச்சியில் சுற்றுப்புறம் மறந்து இருந்தனர்.
நண்பர்களின் சிரிப்பு சத்தத்தில் தங்களை மீட்டு கொண்டவர்களால் எதுவும் பேசமுடியவில்லை. ஆனால் இருவரது பார்வையும் தங்களவர்களை விட்டு நகரவில்லை.
நண்பர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிட செல்ல அதற்கு மேல் அவளால் தீபக்கை காண முடியவில்லை.
இரவு பத்து மணி போல் சென்னைக்கு கிளம்பலாம் என தினேஷை தேட, அவன் எங்கு போனான் என்று தெரியாமல் அவனிற்கு கைபேசியில் அழைப்புவிடுத்தாள். இருமுறை அழைத்தும் எடுக்காமல் போக தன் டீம்மில் உள்ள பிரியா கிளம்புவதாக சொல்ல “சென்னைக்கு தனியாவா போகப்போற? கொஞ்சம் இரு. தினேஷும் வரேன்னு சொன்னான். எல்லாரும் சேர்ந்து போகலாம்”.
நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே தினேஷை பார்த்தேன். அவன் ஏதோ பார்ட்டி இருக்குனு சொன்னான். அதுவுமில்லாம கல்யாணம் முடிஞ்சு தான் கிளம்புவேன்னு சொன்னான்.
“அய்யயோ இவனை நம்பி நான் வேற தனியா வந்துட்டனே. இவன் கூட வருவான்னு தான் நான் வந்தேன்”.
“நான் சென்னைக்கு போகல. இங்க எங்க சித்தி வீடு இருக்கு. அங்க தான் போகப்போறேன்”.
“நீயும் என் கூட வந்து இராத்திரி தங்கிட்டு காலைல கிளம்பு. இந்த நேரத்துல தனியா போக வேண்டாம்”.
“இல்ல பிரியா. நாளைக்கு எங்க மாமா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். அதுக்கு கண்டிப்பா போயாகணும். நீ என்னை பேருந்து மட்டும் ஏத்தி விட்டுடுறியா?”
“சரி கிளம்பு. என்னோட அண்ணா வெளிய நிக்குறாங்க. நாங்க போற வழியில உன்னை விட்டுடுறோம்”.
“ஒரு நிமிஷம் இரு. தீபக்கை பார்த்து சொல்லிட்டு வந்துடுறேன் என சென்றவளால் தீபக்கை காண முடியவில்லை. பிரியாவை வேறு காக்கவைக்க முடியாமல் தீபக்கிடம் சொல்லாது வந்துவிட்டாள்”.
தேடல் தொடரும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…